வலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-1
வணக்கங்களுடன் ஆ.ஞானசேகரன்,
ஒரு சாமானியனின் உணர்வுகளின் சங்கமமாக இருப்பதுதான் இந்த வலைஉலகம். சாதாரண உணர்வுகள் மட்டுமில்லாமல் சமுக கருத்துக்கலமாக சமீபத்தில் பதிவுகள் காணமுடிகின்றது. இது ஒரு பொதுசன ஊடகங்களுக்கு மிக பெரிய சாவாலாக இருக்கதான் செய்கின்றது. நாளும் ஒரு புதிய பதிவர்கள் புதிய புதிய இடுக்கைகள் வந்தவண்ணம் இருக்கின்றது. அவற்றையெல்லாம் ஓரே முறையில் பார்வையிட முடியாவிட்டாலும் சில அறிமுகங்கள் தேவைப்படுகின்றது. அப்படிப்பட்ட அறிமுகம் இந்த வலைச்சரம் செய்துவருவது பாராட்டகூடியது. இவர்களின் சேவைக்கு நண்பர்கள் சார்பாக ஒரு சலூட்....
1. பொதுசன ஊடகங்களில் இல்லாத சுதந்திர காற்று இந்த பதிவர் வட்டத்தில் இருக்கின்றது. கருத்தாழாமிக்க பதிவுகள் வந்தவண்ணம் இருக்கின்றது இவற்றை எல்லாம் ஊடகங்களில் அங்கிகாரம் கிடைக்கின்றனவா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இவற்றை பொதுசன ஊடங்களுக்கு கொண்டு செல்லவேண்டிய கடமை பதிவர்களுக்கு இருக்கின்றது அப்படி ஓர் முயற்சியாக இருப்பது மணற்கேணி 2009 சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி இந்த போட்டியை பற்றிய அனைத்து நடவடிக்கைகளை சொல்ல வந்த பதிவுதான் சிங்கபூர் தமிழ் பதிவர்கள் குழுமம் இந்த தளத்தை பார்க்க கீழேயுள்ள படத்தை தட்டுங்கள்
பதிவுகள் நட்புகள் என்று நாம் தினம் இணையத்தை கட்டிக்கொண்டு இருந்து விடுகின்றோமா? பதிவுகளுக்கு நாம் அடிமையாகி விடுகின்றோமா? அதனால் நாம் சாதாரண வாழ்க்கையை இழந்துவிட வாய்ப்புகள் இருக்கின்றவா? என்ற கேள்விகள் பல பதிவர்களுக்கு இருக்கின்றது. இந்த கருத்திற்கு ஆம் சில நேரங்களில் இருக்கதான் செய்கின்றது. ஆனால் இதை முறையாக பயன்படுத்தாத குறை பதிவர்களாகிய நம்மிடத்தில்தான் இருக்கின்றது. இப்படி சிலர் மனகுழப்பத்தில் பதிவுகளை குறைந்து கொள்ளவும் பலர் இதிலிருந்து விலகியும், முடியாமலும் இருக்கின்றனர். அவர்களையும் இதில் அறிமுகம் செய்வதன் மூலம் ஊக்கம் கொடுக்குமேயானால் மகிழ்ச்சிதான்..... பதிவுகள் என்பது உணர்வுகளின் சங்கமம். உணர்ச்சிகளின் வடிகால் முறையாக பயன்படுத்துவதன் மூலம் பயன் ஆயிரம்...
2.இவர் ஒரு திரைப்பட எழுத்தாளர் மற்றும் இயக்குனர் தனது 58 வயதிலும் இளமை துடிப்புடன் எழுதிவருகின்றார். நான் நான்குமுறை அலைபேசியில் பேசியுள்ளேன், இவர் பேச்சில் ஒரு கனிவு இருக்கும். இந்த சமுகத்திற்கு நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதேபோல் இவரின் எழுத்தில் ஒரு ஆழுமை இருக்கும், உணர்வுகளை அப்படியே எழுத்தில் வெளிக்கொண்டுவரும் பாங்கு மிக அருமை. இவரை நான் அறிமுகம் செய்வது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் எல்லோரும் பார்க்க வேண்டிய தளம் என்பதால் இங்கு சொல்லுகின்றேன். அவர்தான் ஷண்முகப்ரியன் அவரின் தளம் ஷண்முகப்ரியனின் 'படித்துறை' அவரின் தளத்தை பார்க்க படத்தை தட்டவும்.
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.ஓர் உண்மை சம்பவம், அதனால் எத்தனை திருப்பங்கள்
2.கன்னிகா (எட்டாம் பாகம்)
3.புத்தாண்டு வாழ்த்துகளும்,சில கேள்விகளும்
4. திறனாய்வுகளைப் பற்றிய ஒரு திறனாய்வு
3. இவர் வயதில் சிறியவர் என்றாலும் இவரின் கவிதைகள் எல்லோருடைய மனதிலும் குடிகொண்டது. பார்க்கும் பொருள்கள், காட்சிகள் எல்லாம் இவரிடம் கவிதையாகிவிடும் அப்படி பட்ட கவிதைகளில் பூச்சாண்டியும் ஒன்று. அதே போல் கட்டுரைகளில் வர்ணணைகள் அதிகமாக இருக்கும். எல்லாமே ருசியுடன் இருக்கும். நான் அவரிடன் கண்டது இளமையின் துடிப்பு அதே போல சமுக அக்கறையுள்ள கரு இருந்தால் காலத்தில் அழியா படைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம். சமீபக் காலமாக எழுதுவதை நிறுத்தியுள்ளார் உங்களின் பின்னூட்டங்கள் அவரை தட்டி எழுப்பலாம் என்ற நம்பிக்கையுள்ளது. அவர்தான் குழந்தை ஓவியம் ஆதவா. அவருடைய தளத்தை பார்க்க படத்தை தட்டவும்....
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.குழந்தைகளின் உலகம்
2.பாரதியும் வான்காவும்-மிகவும் பிடித்தவர்கள்
3.பூச்சாண்டிகள்
4.கொல்லப்படும் புத்தன் -ஈழக் குறுங்கவிதைகள்
4.இவரைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை பதிவர்கள் அனைவரும் அறிந்த முகம். இவரின் இரக்க குணம் இவரின் இடுக்கைகளில் புரிந்துவிடும். பதிவர்களால் அக்கா என்று அழைக்கப்படும் ரம்யா அக்காதான். அவர்களிடம் மின்னஞ்சல் மற்றும் சாட்டில் பேசியுள்ளேன். பின்னூட்டங்களின் ஒரு ரசனை இருக்கும். அதே சமையம் கலகலப்பான நல்ல நண்பியாக இருப்பார். இவரின் தளம் Will to love. இவரின் தளத்தை பார்க்க படத்தை தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.ஆதரவற்ற குழந்தைகளும் முதியவர்களும்
2.ஏழைக்கு செல்வம் கிடைத்தால்!!
3.மறுபடியும் குட்டீஸ் கார்நெர்!!
4.என் சகோதரியின் மீளா சோகம்!!
5. இவர் எனக்கு பின்னூட்டங்களிலும் இடுக்கைகளிலும் மட்டுமே தெரியும். இவரின் பின்னூட்டங்களில் சமூக அக்கரையும், வாழ்வின் எதார்த்தங்களும் புரிந்துவிடும். நல்ல இலக்கிய சிந்தனை மிக்கவர், இவரின் படைப்புகள் அதிகம் சமுகம் சார்ந்தவையாக இருக்கும். மிகுதியாக உணர்ச்சிவசப்படக் கூடியவராக தெரிகின்றது. இவரின் பல இடுக்கைகளை நான் படித்துள்ளேன். சாத்தூரில் வசிப்பவராக தெரிகின்றது. அவர்தான் காமராஜ் அடர் கருப்பு என்ற தளத்தில் இருக்கின்றார். அவரின் தளம் பார்க்க படத்தை தட்டவும்..
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.குபேரன் விளையாட்டுப்பிராயத்தைக் களவுகொடுத்தவன்
2.அதிர்ச்சிகள் நிறைந்த ஆவணகாப்பகம் கருப்புதாய்
3.நெருக்கி வரும் பழைய குலக்கல்விமுறை
4. மனித குல வரலாற்றை கண்டுபிடித்தர்
6. இவரை பற்றியும் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் அவரின் கவிதைகள் உங்களின் பார்வைக்கு வைக்கவேண்டும் என்ற ஆசையில் அறிமுகம் வைக்கின்றேன். சென்ற வாரம் வலைச்சரத்தில் கலக்கியவர். அன்பின் தோழி தமிழரசிதான். இவரை பற்றி இடுக்கை மற்றும் பின்னூட்டகளிதான் தெரியும் என்றாலும் கவிதைகளில் வாழ்கின்றவர். இவர் எல்லாமே கவிதையாக வடிக்கும் திறன் கொண்டவர். இன்னும் சமுகம்நலம் மற்றும் எதார்த்தங்கள் சேர்த்துகொண்டால் நாடு போற்றும் கவிஞராக வரலாம் என்பதுதான் என் எண்ணம். இவர் எழுத்தோசை என்ற தளத்தில் இருக்கின்றார், இந்த தளத்தை பார்க்க படத்தை தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.செல்லமாய்..
2.மறுத்தது ஏன் மறவேனே?
3. நன்றி நவில்கிறேம் நட் "பூ"க்களே
4. குண்டோசையும் கூக்குரலோசையும்
7. இவர் ஒரு மருத்துவர் மேலும் ஒரு சிறந்த நீதிபதியின் மகன். இவரின் பதிவுகளின் இவரின் அனுபவங்கள் தெரியும். தன்னுடைய அனுபவங்களை விட்டு செல்ல வேண்டும் என்ற ஆசையில் பதிவெழுதுகின்றார். இவருடன் பதிவுகளிலும் பின்னூட்டங்களில் மட்டுமே எனக்கு தெரியும் என்றாலும், நல்ல மனிதர் என்பதில் சந்தேகம் இல்லை. இவர் தனது பெயரிலேயே முனியப்பன் பக்கங்கள் என்ற தளத்தில் எழுதுகின்றார். இவர் தளத்தை பார்க்க படத்தை தட்டவும்..
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.முனியப்பனும் கட்டு விரியனும்
2.டேய் மரத்தை வெட்டாதடா
3.அப்பா உன்னிடம் படித்தது
4.நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (தவசி)
8. இவரிடம் பழகுவது எழிது, திருப்பூரில் Fashion துறையில் வேலைச்செய்கின்றார். திருச்சியில் பதிவர் சந்திப்பில் பேசியுள்ளேன். அரசியலில் ஆர்வவம் உள்ளவர். அதேபோல் சமுக அக்கரை இவரின் பேச்சிலும் இடுக்கையிலும் காணலாம். இப்படி இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இடுக்கைதான் குறைவாக இடுவார், உங்களின் பின்னூட்டம் ஊக்கப்படுத்தும் என்று நினைக்கின்றேன். இவர்தான் சொல்லரசன் தளத்தின் பெயரும் சொல்லரசந்தான். அவரின் தளம் பார்க்க படத்தை தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.சாதிகள் இல்லையடி பாப்பா
2.உண்மைத் தொண்டனின் குமுறல்
3.கலாச்சார சீரழிவு
4.நட்பு என்பது யாதேனில்
9. இவரிடம் மின்னஞ்சல் மற்றும் சாட்டில் பேசியுள்ளேன். அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.திருநாவுகரசு சுவாமிகள் வரலாறு
2.சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்
3.வாழும்கலை
4.சிந்தனைகள்
10.பதிவர் வட்டத்திலேயே இவர்தான் சிறியவர் என்று நினைக்கின்றேன். இவரின் புகைப்படம் மட்டும் பார்த்துள்ளேன். என் இடுக்கைளை எல்லாம் படித்துவிட்டு பின்னூட்டம் போட்டுவிடுவார். இவரின் பதிவுகளில் இளமை தெரியும், நீங்களே பாருங்கள். அவர்தான் அன்புமதி, OPEN HEART என்ற தளத்தில் எழுதுகின்றார். இவரின் தளத்தை பார்க்க படத்தை தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் தத்துவம்,கவிதை
2.காலில் விழுந்தது ஏன்?
3.விஜய்யின் மார்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்
4.காதல் ஒழிக
இன்னும் வரும் அதுவரை
அன்புடன்
ஆ,ஞானசேகரன்
அருமையான அறிமுகங்கள். ரொம்ப அழகாக இருக்கிறது. தொடருங்கள்.
ReplyDelete// கடையம் ஆனந்த் said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள். ரொம்ப அழகாக இருக்கிறது. தொடருங்கள்.//
மிக்க நன்றி நண்பா
வித்தியாசமா வலைப்பதிவுகளின் படங்களோட பதிவு செஞ்சுருக்கீங்க... அருமையா இருக்கு :)
ReplyDeleteஅறிமுகம் செய்திருக்கும் முறை அசத்தலாக உள்ளது சபாஷ் போ்ட வைக்கிறது !
ReplyDeleteகலக்கல் வாழ்த்துக்கள்!!
// ச.பிரேம்குமார் said...
ReplyDeleteவித்தியாசமா வலைப்பதிவுகளின் படங்களோட பதிவு செஞ்சுருக்கீங்க... அருமையா இருக்கு :)//
நன்றி நண்பா
// ஜீவன் said...
ReplyDeleteஅறிமுகம் செய்திருக்கும் முறை அசத்தலாக உள்ளது சபாஷ் போ்ட வைக்கிறது !
கலக்கல் வாழ்த்துக்கள்!//
நன்றி நண்பரே
வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தொடருங்கள்
//அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்
அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தொடருங்கள்//
மிக்க நன்றிங்க
அருமையாக தொகுத்திருக்கீங்க ஞானசேகரன்...........
ReplyDeleteஆசிரியருக்கு இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்........
ReplyDeletecongrats dude
ReplyDeleteகலந்து கட்டிய தொகுப்பு, நல்லா இருக்கிறது.
ReplyDeleteஉங்களின் உழைப்பு தெரியுது பதிவினில்
ReplyDeleteநல்ல முறையில் அறிமுகம்
வாழ்த்துகள்!
வலைச்சர ஆசிரியருக்கு இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் சேகரன் சார்
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக அருமையான நேர்த்தியான தொகுப்பு. அவரவர் வலைப்பூக்களின் முகப்பினையே படமாகத் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. வாழ்த்துக்கள் ஞானசேகரன்.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஅருமையாக தொகுத்தது
வழங்கியுள்ளீர்கள்
எப்படி சொல்வது என்று தெரியவில்லை
அத்தனை அருமை
// செந்தழல் ரவி said...
ReplyDeleteஅருமையாக தொகுத்திருக்கீங்க ஞானசேகரன்...........//
மிக்க நன்றி நண்பா
// பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteஆசிரியருக்கு இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்........//
நன்றிங்க
// தமிழ்நெஞ்சம் said...
ReplyDeletecongrats dude//
நன்றி தமிழ்நெஞ்சம்
// அப்பாவி முரு said...
ReplyDeleteகலந்து கட்டிய தொகுப்பு, நல்லா இருக்கிறது.//
நன்றி நண்பா
// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஉங்களின் உழைப்பு தெரியுது பதிவினில்
நல்ல முறையில் அறிமுகம்
வாழ்த்துகள்!//
மிக்க நன்றி நண்பா
// sakthi said...
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்//
//அருமையான அறிமுகங்கள் சேகரன் சார்//
//அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்//
மிக்க நன்றீ சக்தி
// ராமலக்ஷ்மி said...
ReplyDeleteமிக அருமையான நேர்த்தியான தொகுப்பு. அவரவர் வலைப்பூக்களின் முகப்பினையே படமாகத் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. வாழ்த்துக்கள் ஞானசேகரன்.//
நன்றிங்க
// திகழ்மிளிர் said...
ReplyDeleteவாழ்த்துகள்
அருமையாக தொகுத்தது
வழங்கியுள்ளீர்கள்
எப்படி சொல்வது என்று தெரியவில்லை
அத்தனை அருமை//
மிக்க நன்றி
அறிமுகங்கள் குறித்து அசத்தலா எழுதி இருக்கீங்க.
ReplyDeleteமேலும் அசத்துங்க வாழ்த்துக்கள்!!
அன்பின் ஞானசேகரன்
ReplyDeleteபுதிய சிந்தனையுடன் புதுமையாக பதிவர்களை அறிமுகம் செய்வது பாராட்டுக்குரியது. அவர்களின் வலைப்பூவின் பட்த்தினையே சுட்டியாக அளிப்பது நன்றாக இருக்கிறது.
அறிமுகப்படுத்திய பதிவர் அனைவருமே சிறந்தவர்கள்.
நல்வாழ்த்துகள்
அன்பின் இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்.அறிமுகம் அனைத்தும் நன்றாக உள்ளது.......தொடரட்டும் நும் பணி
ReplyDelete// RAMYA said...
ReplyDeleteஅறிமுகங்கள் குறித்து அசத்தலா எழுதி இருக்கீங்க.
மேலும் அசத்துங்க வாழ்த்துக்கள்!!//
நன்றிங்க ரம்யா
// cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் ஞானசேகரன்
புதிய சிந்தனையுடன் புதுமையாக பதிவர்களை அறிமுகம் செய்வது பாராட்டுக்குரியது. அவர்களின் வலைப்பூவின் பட்த்தினையே சுட்டியாக அளிப்பது நன்றாக இருக்கிறது.
அறிமுகப்படுத்திய பதிவர் அனைவருமே சிறந்தவர்கள்.
நல்வாழ்த்துகள்//
மிக்க நன்றி ஐயா
// முனைவர் சே.கல்பனா said...
ReplyDeleteஅன்பின் இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்.அறிமுகம் அனைத்தும் நன்றாக உள்ளது.......தொடரட்டும் நும் பணி//
மிக்க நன்றிங்க
வாழ்த்துக்கள் சேகர்...
ReplyDeleteதலத்தின் தலைப்பை படமாயிட்டு நன்றே படைத்துள்ளீர் பதிவர்களின் திறனையும்...
வார்த்தைகளின் பரிமாற்றமும் இங்கே வளமாகவே உள்ளது.. ரம்யா கல்பனா நம்ம ஆதவா தவிர மற்றவர்கள் புதியவர்கள் இனி தொடர்வேன் அவர்களை....
// தமிழரசி said...
ReplyDeleteவாழ்த்துக்கள் சேகர்...
தலத்தின் தலைப்பை படமாயிட்டு நன்றே படைத்துள்ளீர் பதிவர்களின் திறனையும்...
வார்த்தைகளின் பரிமாற்றமும் இங்கே வளமாகவே உள்ளது.. ரம்யா கல்பனா நம்ம ஆதவா தவிர மற்றவர்கள் புதியவர்கள் இனி தொடர்வேன் அவர்களை....//
நன்றிங்க
ஹைய்யா வலைச்சரத்தில் நானும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளேன்..
ReplyDeleteஉண்மையிலேயே நான் இதற்கு தகுதியானவளா என வியப்பு தான் இருந்தாலும் ஹைய்யோ சந்தோஷமே சந்தோஷம்...என்னுடைய நிறைகளை சொன்னதோடு இனி நான் கருத்தில் கொள்ளவேண்டியதையும் சொல்லியிருக்கீங்க சேகர்...சமூகம் சார்ந்த பதிவுகள் பல நான் கொடுத்திருந்தாலும் இன்னும் நிறைய எழுதனும் என்ற நினைப்பை நீங்கள் அதிகரித்துள்ளீர்கள் இது என் நண்பர்களின் அறிவுறுத்தலும் கூட...முதல்லேயே நான் எப்பவும் சிரிச்சிக்கிட்டு இருப்பேன் இன்று இந்த சந்தோஷம் இன்று முழுவதும் வெறும் ஹிஹிஹிஹி ....... நன்றி சேகர்....
இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து என் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். தொடருங்கள்
ReplyDelete//தமிழரசி said...
ReplyDeleteஹைய்யா வலைச்சரத்தில் நானும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளேன்..
உண்மையிலேயே நான் இதற்கு தகுதியானவளா என வியப்பு தான் இருந்தாலும் ஹைய்யோ சந்தோஷமே சந்தோஷம்...என்னுடைய நிறைகளை சொன்னதோடு இனி நான் கருத்தில் கொள்ளவேண்டியதையும் சொல்லியிருக்கீங்க சேகர்...சமூகம் சார்ந்த பதிவுகள் பல நான் கொடுத்திருந்தாலும் இன்னும் நிறைய எழுதனும் என்ற நினைப்பை நீங்கள் அதிகரித்துள்ளீர்கள் இது என் நண்பர்களின் அறிவுறுத்தலும் கூட...முதல்லேயே நான் எப்பவும் சிரிச்சிக்கிட்டு இருப்பேன் இன்று இந்த சந்தோஷம் இன்று முழுவதும் வெறும் ஹிஹிஹிஹி ....... நன்றி சேகர்....///
ம்ம்ம்ம் நன்றி நன்றி
// அமுதா said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். தொடருங்கள்//
நன்றிங்க
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் ஞானசேகரன். மிகச் சிறந்த முறையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபடித்துறை ஷன்முகப்பிரியன் ஐயாவை சென்னையில் பார்த்து பேசி இருக்கிறேன். அவருக்கு அது நினைவில் இருக்கிறதான்னு தெரியவில்லை
ReplyDelete// பதிவர்களால் அக்கா என்று அழைக்கப்படும் ரம்யா அக்காதான். //
ReplyDeleteஎங்கூரு பக்கம் பாட்டின்னு சொன்னாங்களே, அது வேற ரம்யாவா இருக்குமோ!
ஏம்பா அந்த சின்னபுள்ளைய அக்கான்னு கூப்பிட்டு டரியல் ஆக்குறிங்க!
அறிமுகப்படுத்தப்பட்ட வலைத்தளங்களில் சில நான் படிக்காதவையாக உள்ளன. பார்த்துவிடுகிறேன். அறிமுகப்படுத்திய தங்களுக்கும், அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல தொகுப்பு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள். நீங்கள் அறிமுகம் செய்த பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteS.A. நவாஸுதீன் said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள் ஞானசேகரன். மிகச் சிறந்த முறையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நவாஸ் நீங்க இன்னும் எழுத்தோசைக்கு வந்தில்லை வாங்க வந்து படியுங்கோ...
அருமையான அறிமுகங்கள். ரொம்ப அழகாக இருக்கிறது.
ReplyDeleteஅறிமுகம் நன்றாகவுள்ளது...
ReplyDeleteஇப்பதிவர்களை நான் முன்பே அறிவேன் ஆயினும் இன்று பல புதியவர்களும் அறிந்து கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள்........
மிக்க மகிழ்ச்சி.........
அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிதுறேன்.......
ஷண்முகப்ரியனின் 'படித்துறை' யை நேரம் கிடைக்கும் போது படிப்பதுண்டு. நல்ல எழுத்து அவருடையது. இவருடைய சினிமா குறித்த பதிவுகள் அருமையாக இருக்கும். அவருடன் தொடர்பு இல்லை.
ReplyDeleteஆனால் ஆதவாவின் குழந்தை ஓவியம் அடிக்கடி படிப்பதுண்டு. மின்னஞ்சலில் அவருடன் எப்பொழுதாவது பேசுவதுண்டு. இவருடைய எழுத்தும் நன்றாக இருக்கும். மற்ற அனைவரும் எனக்கு புதியவர்கள்.
நல்ல பதிவு தொடருங்கள்...
தமிழரசி said...
ReplyDeleteS.A. நவாஸுதீன் said...
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் ஞானசேகரன். மிகச் சிறந்த முறையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நவாஸ் நீங்க இன்னும் எழுத்தோசைக்கு வந்தில்லை வாங்க வந்து படியுங்கோ...
ஹலோ, ஹலோ, ஹலோ, ச்சே என்ன சத்தத்தையே காணோம். ஒரு வேலை ராங் நம்பெரா இருக்குமோ. ஹலோ ஹலோ ஹலோ. டொக்.
// S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள் ஞானசேகரன். மிகச் சிறந்த முறையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க நண்பரே
// கோவி.கண்ணன் said...
ReplyDeleteபடித்துறை ஷன்முகப்பிரியன் ஐயாவை சென்னையில் பார்த்து பேசி இருக்கிறேன். அவருக்கு அது நினைவில் இருக்கிறதான்னு தெரியவில்லை//
வணக்கம் கண்ணன்..
அவர் தற்பொழுது busy என்று நினைக்கின்றேன். எனவேதான் அவரின் பின்னூட்டம் வரவில்லை
//வால்பையன் said...
ReplyDelete// பதிவர்களால் அக்கா என்று அழைக்கப்படும் ரம்யா அக்காதான். //
எங்கூரு பக்கம் பாட்டின்னு சொன்னாங்களே, அது வேற ரம்யாவா இருக்குமோ!
ஏம்பா அந்த சின்னபுள்ளைய அக்கான்னு கூப்பிட்டு டரியல் ஆக்குறிங்க!//
வாங்க நண்பா..
ஒரு மரியாதைக்காக சொல்வதாக இருக்கட்டுமே
// குடந்தை அன்புமணி said...
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட வலைத்தளங்களில் சில நான் படிக்காதவையாக உள்ளன. பார்த்துவிடுகிறேன். அறிமுகப்படுத்திய தங்களுக்கும், அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கும் வாழ்த்துகள்.//
வணக்கம் நண்பா
மிக்க நன்றிங்க
// " உழவன் " " Uzhavan " said...
ReplyDeleteநல்ல தொகுப்பு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//
நன்றி நண்பா
// ஜெஸ்வந்தி said...
ReplyDeleteஅழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள். நீங்கள் அறிமுகம் செய்த பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி நண்பரே
Blogger தமிழரசி said...
ReplyDelete// S.A. நவாஸுதீன் said...
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் ஞானசேகரன். மிகச் சிறந்த முறையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நவாஸ் நீங்க இன்னும் எழுத்தோசைக்கு வந்தில்லை வாங்க வந்து படியுங்கோ...//
கண்டிப்பாக இன்று வருவார்
// Suresh Kumar said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள். ரொம்ப அழகாக இருக்கிறது.//
நன்றி நண்பா
// முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteஅறிமுகம் நன்றாகவுள்ளது...
இப்பதிவர்களை நான் முன்பே அறிவேன் ஆயினும் இன்று பல புதியவர்களும் அறிந்து கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள்........
மிக்க மகிழ்ச்சி.........
அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிதுறேன்....//
மிக்க மகிழ்ச்சி நண்பரே
உங்களின் பாராட்டுக்கு நன்றிங்க
// Krishna Prabhu said...
ReplyDeleteஷண்முகப்ரியனின் 'படித்துறை' யை நேரம் கிடைக்கும் போது படிப்பதுண்டு. நல்ல எழுத்து அவருடையது. இவருடைய சினிமா குறித்த பதிவுகள் அருமையாக இருக்கும். அவருடன் தொடர்பு இல்லை.
ஆனால் ஆதவாவின் குழந்தை ஓவியம் அடிக்கடி படிப்பதுண்டு. மின்னஞ்சலில் அவருடன் எப்பொழுதாவது பேசுவதுண்டு. இவருடைய எழுத்தும் நன்றாக இருக்கும். மற்ற அனைவரும் எனக்கு புதியவர்கள்.
நல்ல பதிவு தொடருங்கள்..//
மிக்க நன்றி நண்பரே.
உண்மையில் உணர்ச்சிவயமாக இருக்கிறது,
ReplyDeleteநன்றி நண்பா. வாழ்த்துக்கள் உங்கள்
ஆசிரியப்பணி சிறக்கும்.
//காமராஜ் said...
ReplyDeleteஉண்மையில் உணர்ச்சிவயமாக இருக்கிறது,
நன்றி நண்பா. வாழ்த்துக்கள் உங்கள்
ஆசிரியப்பணி சிறக்கும்.//
மிக்க நன்றி நண்பா
கோவி.கண்ணன் said...
ReplyDeleteபடித்துறை ஷன்முகப்பிரியன் ஐயாவை சென்னையில் பார்த்து பேசி இருக்கிறேன். அவருக்கு அது நினைவில் இருக்கிறதான்னு தெரியவில்லை//
நிச்சயம் நினைவில் இருக்கிறது,கண்ணன்.ஆனால் அவசர,அவ்சரமாகப் பேசி விடைபெற்றதில் சந்திப்பின் அர்த்தங்கள் நிகழவில்லை.மீண்டும் சந்திப்போம்,கண்ணன்.//
Krishna Prabhu said...
ஷண்முகப்ரியனின் 'படித்துறை' யை நேரம் கிடைக்கும் போது படிப்பதுண்டு. நல்ல எழுத்து அவருடையது. இவருடைய சினிமா குறித்த பதிவுகள் அருமையாக இருக்கும். அவருடன் தொடர்பு இல்லை.//
பாராட்டுக்கு நன்றி,கிருஷ்ண பிரபு.வாய்ப்பு வரும் போது தொடர்பு கொள்வோம்.//
ஞானசேகரன் அறிமுகப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
அவர்கள் நடுவில் என்னையும் சேர்த்ததிற்கு தனிப் பட்ட முறையில் அவர் என்னிடம் காட்டும் நட்பே காரணம் என்று கருதுகிறேன்.
இளைஞர்கள் நடுவில் நானும் இடம் பெறுவதற்கு நான் படித்துருகிய ஞானிகளே காரணம் என்பதனால் உங்கள்பாராட்டுக்களையும்,அன்பையும் அவர்களது திருவடிகளுக்கே சமர்ப்பிக்கிறேன்.
மனமார்ந்த நன்றிகள்,ஞானசேகரன்.
கோவி.கண்ணன் said...
ReplyDeleteபடித்துறை ஷன்முகப்பிரியன் ஐயாவை சென்னையில் பார்த்து பேசி இருக்கிறேன். அவருக்கு அது நினைவில் இருக்கிறதான்னு தெரியவில்லை//
நிச்சயம் நினைவில் இருக்கிறது,கண்ணன்.ஆனால் அவசர,அவ்சரமாகப் பேசி விடைபெற்றதில் சந்திப்பின் அர்த்தங்கள் நிகழவில்லை.மீண்டும் சந்திப்போம்,கண்ணன்.//
Krishna Prabhu said...
ஷண்முகப்ரியனின் 'படித்துறை' யை நேரம் கிடைக்கும் போது படிப்பதுண்டு. நல்ல எழுத்து அவருடையது. இவருடைய சினிமா குறித்த பதிவுகள் அருமையாக இருக்கும். அவருடன் தொடர்பு இல்லை.//
பாராட்டுக்கு நன்றி,கிருஷ்ண பிரபு.வாய்ப்பு வரும் போது தொடர்பு கொள்வோம்.//
ஞானசேகரன் அறிமுகப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
அவர்கள் நடுவில் என்னையும் சேர்த்ததிற்கு தனிப் பட்ட முறையில் அவர் என்னிடம் காட்டும் நட்பே காரணம் என்று கருதுகிறேன்.
இளைஞர்கள் நடுவில் நானும் இடம் பெறுவதற்கு நான் படித்துருகிய ஞானிகளே காரணம் என்பதனால் உங்கள்பாராட்டுக்களையும்,அன்பையும் அவர்களது திருவடிகளுக்கே சமர்ப்பிக்கிறேன்.
மனமார்ந்த நன்றிகள்,ஞானசேகரன்.