Sunday, July 12, 2009

தமிழரசிக்கு நன்றி - ஞானசேகரனுக்கு வரவேற்பு

அன்பின் சக பதிவர்களே !

கடந்த ஒரு வார காலமாக வலைச்சரத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற தமிழரசி - ஏற்ற பொறுப்பினை அருமையாக நிறைவேற்றி மனமகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார். தவிர்க்க இயலாத காரணங்களினால் ஐந்தே ஐந்து இடுகைகள் இட்டு ஏறத்தாழ அறுநூறுக்கும் மேற்பட்ட மறுமொழிகள் பெற்று மனம் மகிழ்ந்தார். அவரது இடுகைகள் அனைத்தும் அருமையான இடுகைகள். விதி முறையின் படி ஏறத்தாழ முப்பத்து மூன்று பதிவர்க்ளையும் நூறுக்கு மேற்பட்ட இடுகைகளுக்கான சுட்டிகளையும் அறிமுகப் படுத்தி உள்ளார். படங்கள் பலப்பல இட்டு படிப்பவர்களை பரவச்ப் படுத்தி விட்டார்.


தமிழரசிக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி விடையளிக்கிறோம்.



அடுத்து 13ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் ஆ.ஞானசேகரன். இவர் நான் பிறந்த தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து, திருச்சியில் வளர்ந்து வாழும் இவர், டற்போது சிங்கையில் பணி புரிகிறார். "அம்மா அப்பா " என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். 50 பதிவர்கள் இவரை பின் தொடருகின்றனர். ஏறத்தாழ 160 இடுகைகள் இட்டுள்ளார்.

நண்பர் ஞான சேகரனை வருக வருக என வரவேற்று நல்வாழ்த்து கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சீனா

----------





7 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நன்றிகள் தமிழரசி!
    வாழ்த்துக்கள் ஞானசேகரன்!

    ReplyDelete
  3. //நன்றிகள் தமிழரசி!
    வாழ்த்துக்கள் ஞானசேகரன்!//

    ரிப்பீட்டேய்

    ReplyDelete
  4. தமிழரசிக்கு நன்றிகள்

    ஞானசேகரனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. உங்கள் பாராட்டுக்கு மெத்த மகிழ்கிறேன் அண்ணா..இந்த பாராட்டுக்கள் அனைத்தும் என்னை ஊக்குவித்த என் நண்பர்களுக்கு சமர்பிக்கிறேன்.... மீண்டும் வாய்ப்புக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் அண்ணா..வணக்கம்...வாழ்த்துக்கள் சேகர்...செவ்வனே விளங்கட்டும் உங்கள் பணி....

    ReplyDelete
  6. வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  7. தமிழுக்கு நன்றிகள்

    ReplyDelete