Saturday, July 11, 2009

விருந்தளித்து விடைப்பெறுகிறேன்

பாரதியும் வள்ளுவனும்

பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம்
பயங்கொள்ள காதாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
துன்பம் நெருங்கிவந்த போதும் நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்த தெயவமுண்டு துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
****

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு..



அன்புள்ள நண்பர்களுக்கு எனக்கு அளிக்கப்பட்ட இந்த ஆசிரியர் பணியில் நான் என் அனைத்து நண்பர்களையும் இங்கு அறிமுகப்படுத்தவே எண்ணினேன் ஆனால் எதிர்பாராத விதமாய் திரு.சிந்தா நதி அவர்களின் மறைவால் இரண்டு நாட்கள் பதிவிட முடியாமல் போனது..அதனால் விடு பட்ட என் நண்பர்கள் என்னை தவறாக எண்ண வேண்டாம் இதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்...மற்றும் இன்றைய அறிமுகங்கள் பலரும் எனக்கு வெறும் பதிவில் மற்றும் அவர்கள் எழுத்துக்களுடனே நட்பு மட்டுமே என்பதால் மேலும் அவர்களை பற்றி விரிவாக எடுத்தியம்ப இயலவில்லை.. அனைத்து நண்பர்களும் சிறந்த எழுத்து மற்றும் அனைத்திலும் சிறப்பு மிக்கவர்கள் என்பதால் அனைவரையும் இங்கு சிறப்பு செய்ய எண்ணினேன்..அதனால் என்னால் தனித்து எந்த இடுகையும் இடமுடியவில்லை..இந்த வாய்ப்பு அளித்த சீனா அண்ணா அவர்களுக்கு என்றும் நன்றியுடையவளாய் இருப்பேன்...இங்கு யாரேனும் வருந்தத்தக்க வகையில் நான் எடுத்துரைத்திருந்தாலோ இல்லை பிழைகள் இழைத்திருந்தாலோ அருள் கூர்ந்து நம் தமிழ் தானே என பொருந்தருளவும் என்னை ஊக்கப்படுத்திய அனைத்து நட்பு நெஞ்சங்களுக்கும் அன்பார்ந்த நட்பும் அன்புடன் நன்றிகள் பல கூறி விடைபெறுகிறேன்.இனி வழக்கப்படி எழுத்தோசையில் சந்திப்போம்...மீண்டுமான்னு நீங்க அலறுவது கேட்கிறது வேற வழியேயில்லை வந்து சேருங்கள் தோழமைகளே..........



இலங்கையின் இலக்கிய குயில் இவர்.இவர் பாடல்கள் அனைத்தும் பாரதியார் பாடல்களை நினைவுக்கூறும்.என் எழுத்துக்களை பாராட்டி ஊக்கம் அளித்தவர்களில் இவரும் ஒருவர்.எனக்கென ஒரு பாடலை எழுதியுள்ளார்.தமிழ் மொழியின் பால் அதிகம் நாட்டம் உள்ளவர்.எனக்கு சிறந்த நண்பரும் கூட.இவர் பாடலிகளின் சுவையை நீங்களும் அருந்துங்களேன்.இவர் தான் தணிகாஷ் அனுபவம்
எனும் வலைப்பூவை கொண்டவர்
அத்தைக்கே நன்றி சொல்வேன்!
சாமி நீயே வரங்கொடடி
பாட்டுக்குயில்
"மலர் அல்லது மானம்"




அனைத்து தலைப்புகளிலும் அலசியவர்.இவர் சமிபத்தில் எழுதிய கதை ஒன்று ராஜேஷ்குமாரின் நாவலை நினைவு கூறும் அளவுக்கு விறுவிறுப்பும் சுவராஸ்யமும் கொண்டிருந்தது.மிக அதிகமான பணிச்சுமையின் போதும் நேரம் கிடைத்தால் போதும் அவசியம் பதிவுகளை படித்து பின்னுட்டம் இட்டு விடுவார்.புகைவண்டிக்கு இணையாயிருக்கும் இவரது எண்ண ஒட்டம்.அவர் தான் ராம்.C.M.இவரது தலம் மீசைக்காரி.இவரது சில பதிவுகள்

திண்டுக்கல் டூ விருதுநகர்
பிச்சையா...போடாதீங்க.!
"இறுதியாய் ஒரு க‌டித‌ம்".
















வலைப்பூ உலகினரால் அன்பாய் அண்ணா என அழைக்கபடுவார்.அனைவரின் அன்பிற்க்கும் உரியவர்.அதே அன்பால் அனைவரையும் நேசிப்பவர்.சிரிக்க சிரிக்க பேசுவார் எல்லோரும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.அவர் தான் நம்ம ராகவன் அண்ணா.இவருடைய சரணாகதி எனும் பதிவை படியுங்களேன். நீங்களும் சரணாகதி தான். நட்புகளுக்கு முதலிடம் தருவதில் இவருக்கு நிகர் இவரே.

சரணாகதி..........!!!
நட்பு என்பது வார்த்தையல்ல வாழ்க்கை













காலையில் இவர் பதிவை படித்து விட்டால் அன்றைய தினம் முழுக்க சிரித்து கொண்டேயிருக்கலாம்.அத்தனை நகைச்சுவை இவருடைய கதைகள்.அனைத்து தலைப்புகளிலும் அசத்தியிருக்கிறார்.அவர் தான் நம்ம என் கனவில் தென்பட்டது நசரேயன்.படிச்சிட்டு நீங்களும் சிரியுங்கள்.
மென்துறையிலே வெளிநாட்டு பயணம்
பெண் பார்க்க போறேன்



இளமை,துள்ளல்,அட்டகாசம்,கதைனயம், நகைச்சுவை,தலங்கள்,சினிமா என எல்லா பதிவுகளையும் இட்டு வட்டமிட்டவர் நம்ம
ஜுலைகாற்றில் வினோத்கெளத்தம்.இவரை நீங்கள் எல்லொரும் அறிந்திருப்பிர்கள் அதில் வியப்பில்லை.இவருடைய தளம் ஒன்று தொலைந்து போனது வருந்த தக்கது.இவருடைய சில பதிவுகள்
வேலைக்கு போறவங்க Vs வேலையே இல்லாத வெட்டிபய..
மழைக்கால இரவுகள்..



பதிவுலக நண்பர்களில் இவரும் ஒருவர்..... நமது குரலென தமது குரலில் கவிதையின் குரலை நம் செவியீர்க்கச் செய்தவர்.ஆம் அவர் தான் குடந்தை அன்புமணி.இவருடைய இரு தலங்களிலான கவிதைகுரல்
இலக்கியா வில் இருந்து ஒவ்வொரு பதிவை இங்கு அளித்துள்ளேன்.

காதலின் வலிமை
நிம்மதி ( உரையாடல் போட்டிக்கான சிறுகதை)













இவருடைய ஒரு வலைப்பூ கானாமல் போனது வருத்ததுக்கூறியது.தற்போது பென்சில் கொண்டு தன் பதிவுகளை எழுதி வருகிறார்.பின்நவீனம் கொண்ட கவிதைகள் எழுதுவதிலும் சிறந்தவர்.இவரது சில பதிவுகள் இங்கு
தங்கம் இட்லிக் கடை (போட்டிச் சிறுகதை)
கனவுகளை வெளியெறிதல்.



மனம் மெளனத்தால் பேசும் போது இவர் வார்த்தையை எண்ணங்கள் கொண்ட எழுத்தால் பேசுவார்.எனது பதிவுகளை படிக்கும் நண்பர்களில் இவரும் ஒருவர்.இவர் தான் குமரை நிலாவன் மனம் பேசும் மெளனங்கள் தலத்தை கொண்டவர்.






நான் சமீபமாய் அறிந்தவர்.இவரும் வலைப்பூவில் விரைவில் சிறந்த பதிவராய் வலம் வர இருப்பவர்.அனைத்து தலைப்புகளையும் கையாண்டு கொண்டிருகிறார்.ஆனந்த விகடனிலும் இவரது பதிவு வெளிவந்துள்ளது இவர் எழுத்து திறமைக்கு ஒரு சான்று இவரை மேலும் நாமும் ஊக்குவிப்போம்.இவர் தான் சாரதி
பெண்கள் இல்லாத தேசத்தில் யாரும் குடியிருக்க வேண்டாம்..
தாவணியில் வந்த ஒரு நந்தவனமா?












பெயருக்கு ஏற்றார்ப் போல் கலகலப்பானவர் கலைகள் பல அறிந்தவர். நகச்சுவையாய் பின்னுட்டம் இடுவதில் சிறந்தவர்.அனைவரும் அறிந்தவரே இவர் என எண்ணுகிறேன்.இவரும் எல்லா தலைப்புகளில் எழுத வல்லவர்.இவர் தான் கலையரசன். வடலுரான் எனும் வலைப்பூவை கொண்டவர்
இதை படிச்சுட்டு பெண்கள் முறைபாங்க! ஆண்கள் சிரிப்பாங்க
ஒரிஜினல் உலகவுட்டும்! உல்டா கோலிவுட்டும்!!


71 comments:

  1. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு...\\


    சிறப்பான மேற்கோள் ...

    ReplyDelete
  2. வேற வழியேயில்லை வந்து சேருங்கள் தோழமைகளே..........\\

    அதெல்லாம் வந்துருவோம்ல ..,

    ReplyDelete
  3. தமிழ்,
    நிஜமாகவே மற்றவர்களின் தளங்களை உன்னிப்புடன் பார்வையிட்டு அவர்களை பற்றி மிகவும் தெளிவாக அழகாக மற்றவர்களின் கவனத்திற்கு கொண்டுப்போய் சேர்திர்கள்..நீங்கள் அதற்கு செலவழித்த நேரமும் கண்டிப்பாக அதிகமாக இருக்கும்..
    இவ்வளவு அக்கறையுடனும் பொறுப்புடனும் ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராக பணியாற்றிய உங்களுக்கு ஒரு Hats off..

    ReplyDelete
  4. "இன்றோடு முடிவதில்லை வானம்,

    நாளை தரும் நல்ல நேரம்,

    எப்போதும் என் வாழ்த்துக்கள் வந்து சேரும்,

    முப்போதும் வாழ்க நீ என்னாளும்."


    உங்களின் இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.

    க்ளாப்ஸ் & பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  5. வலைச்சரத்தில் கலக்கிய தமிழுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம்
    பயங்கொள்ள காதாது பாப்பா
    மோதி மிதித்து விடு பாப்பா அவர்
    முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
    துன்பம் நெருங்கிவந்த போதும்//

    பாரதி வழியில் பயத்தை உதறியெறிந்த தமிழுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  7. இனி வழக்கப்படி எழுத்தோசையில் சந்திப்போம்...மீண்டுமான்னு நீங்க அலறுவது கேட்கிறது வேற வழியேயில்லை வந்து சேருங்கள் தோழமைகளே..........//

    கட்டி இழுத்துக்கிட்டுப் போறியே!! இது நியாயமா தாயீ!

    ReplyDelete
  8. நட்புடன் ஜமால் said...
    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு...\\


    சிறப்பான மேற்கோள் ...

    ஆம் நட்பை விட சிறந்த உறவேது...

    ReplyDelete
  9. நட்புடன் ஜமால் said...
    வேற வழியேயில்லை வந்து சேருங்கள் தோழமைகளே..........\\

    அதெல்லாம் வந்துருவோம்ல ..,

    போனாலும் விடமாட்டோம்ல...அழுது ஆர்பாட்டம் பண்ணி அடம்பிடிச்சி கவிதை எழுதி பதிவு போட்டாவது ஹிஹிஹி நினைக்கத் தெரிந்த மனங்களுக்கு மறக்கத்தெரியாதன்றோ.....

    ReplyDelete
  10. வினோத்கெளதம் said...
    தமிழ்,
    நிஜமாகவே மற்றவர்களின் தளங்களை உன்னிப்புடன் பார்வையிட்டு அவர்களை பற்றி மிகவும் தெளிவாக அழகாக மற்றவர்களின் கவனத்திற்கு கொண்டுப்போய் சேர்திர்கள்..நீங்கள் அதற்கு செலவழித்த நேரமும் கண்டிப்பாக அதிகமாக இருக்கும்..
    இவ்வளவு அக்கறையுடனும் பொறுப்புடனும் ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராக பணியாற்றிய உங்களுக்கு ஒரு Hats off..

    உன் மனமுவந்த பாராட்டுக்கு நன்றி வினு..எல்லாம் என் நண்பர்களை சிறப்பிக்க எண்ணும் போது இது குறைவே....அதிலும் எனக்கு இரு நாட்கள் குறைவு...

    ReplyDelete
  11. ரங்கன் said...
    "இன்றோடு முடிவதில்லை வானம்,

    நாளை தரும் நல்ல நேரம்,

    எப்போதும் என் வாழ்த்துக்கள் வந்து சேரும்,

    முப்போதும் வாழ்க நீ என்னாளும்."


    உங்களின் இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.

    க்ளாப்ஸ் & பாராட்டுக்கள்!!

    நன்றி ரங்கா....வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்...

    ReplyDelete
  12. தேவன் மாயம் said...
    இனி வழக்கப்படி எழுத்தோசையில் சந்திப்போம்...மீண்டுமான்னு நீங்க அலறுவது கேட்கிறது வேற வழியேயில்லை வந்து சேருங்கள் தோழமைகளே..........//

    கட்டி இழுத்துக்கிட்டுப் போறியே!! இது நியாயமா தாயீ!

    ம்ம்ம்ம்ம்ம் அது எல்லாம் பேசப்படாது உங்களை விட்டா வேறு யார் இருக்கா? விட மாட்டா இந்த மொம்மாயி......

    ReplyDelete
  13. தேவன் மாயம் said...
    வலைச்சரத்தில் கலக்கிய தமிழுக்கு வாழ்த்துக்கள்!!

    நன்றிங்க....

    ReplyDelete
  14. இனிய விருந்து படைத்த எங்கள் நட்ப்பிர்க்கினிய தமிழ்ரசியாருக்கு வாழ்த்துக்கள்..தொடருட்டும் உங்கள் சேவை!! எழட்டும் எங்கள் மகிழூட்டும் எழுத்தோசை.

    ReplyDelete
  15. இன்றைய விருந்தினர்கள் தணிகாஷ், ராம், ராகவன் அண்ணா, நசரேயன், வினோத்கெளத்தம், குடந்தை அன்புமணி, ஆ.முத்துராமலிங்கம்,குமரை நிலாவன், சாரதி, மற்றும் கலையரசன் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. //மீண்டுமான்னு நீங்க அலறுவது கேட்கிறது வேற வழியேயில்லை வந்து சேருங்கள் தோழமைகளே..........//

    ஹலோ அமைதியா, வரிசையா வாங்கப்பா

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. வாழ்த்துகள் தோழி...

    ReplyDelete
  19. அடுத்து உங்களை தொடர்கின்றேன்...

    ReplyDelete
  20. நல்ல பதார்த்தங்களை காட்டி பசியை தூண்டிவிட்டீர்கள்...

    ReplyDelete
  21. நீங்கள் பதிவுலக நன்பர்களை அறிமுகப்படுத்திய விதம், உபயோகப்படுத்திய சொற்றொடர், அதர்க்கேற்ற படங்கள், மிகவும் நன்றாக இருந்தது. உங்களுடைய PRESENTATION SKILLS அதனை பாராட்டியே ஆக வேண்டும்.

    ReplyDelete
  22. //ஷ‌ஃபிக்ஸ் said...

    நீங்கள் பதிவுலக நன்பர்களை அறிமுகப்படுத்திய விதம், உபயோகப்படுத்திய சொற்றொடர், அதர்க்கேற்ற படங்கள், மிகவும் நன்றாக இருந்தது. உங்களுடைய PRESENTATION SKILLS அதனை பாராட்டியே ஆக வேண்டும்
    //

    நிச்சயமா நானும் கூவிக்கிறேன்

    நன்று நன்றிங்கோ

    வாழ்த்துக்கள் அழகான தொகுப்புக்கு

    ReplyDelete
  23. //இன்றைய விருந்தினர்கள் தணிகாஷ், ராம், ராகவன் அண்ணா, நசரேயன், வினோத்கெளத்தம், குடந்தை அன்புமணி, ஆ.முத்துராமலிங்கம்,குமரை நிலாவன், சாரதி, மற்றும் கலையரசன் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்கள்

    புதியவர்களான ராம், தணிகாஷ், குமரை நிலாவன் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. //உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு//

    ஆமா ஆமா

    ReplyDelete
  25. //வேற வழியேயில்லை வந்து சேருங்கள் தோழமைகளே..........//

    அறியக்கிடைக்கும் கவிதைகளை மிஸ்பண்ணுவோமா வந்துடுவோம்

    ReplyDelete
  26. வினோத்கெளதம் said...

    தமிழ்,
    நிஜமாகவே மற்றவர்களின் தளங்களை உன்னிப்புடன் பார்வையிட்டு அவர்களை பற்றி மிகவும் தெளிவாக அழகாக மற்றவர்களின் கவனத்திற்கு கொண்டுப்போய் சேர்திர்கள்..நீங்கள் அதற்கு செலவழித்த நேரமும் கண்டிப்பாக அதிகமாக இருக்கும்..
    இவ்வளவு அக்கறையுடனும் பொறுப்புடனும் ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராக பணியாற்றிய உங்களுக்கு ஒரு Hats off..

    ரீப்பிட்டுகிறேன் தமிழ் அக்கா

    ReplyDelete
  27. மீண்டுமான்னு நீங்க அலறுவது கேட்கிறது வேற வழியேயில்லை வந்து சேருங்கள் தோழமைகளே........

    வேற வழி

    வந்து தானே ஆகனும்

    ReplyDelete
  28. வலைச்சரத்தில் கலக்கிய தமிழுக்கு வாழ்த்துக்கள்!!

    நானும் கூவிக்கிறேன்

    ReplyDelete
  29. கவிதை ரெடியா? நாங்க ரெடி!!

    நாங்கள்ளால் இடிதாங்கி!!

    ReplyDelete
  30. இரண்டு தினங்கள் குறைவாக இருந்தபோதும், கிடைத்த குறைந்த நாட்களில் மிக அதிகமான, அதே சமயம் அழகிய அறிமுகம் கொடுத்து வலைச்சரத்தில் ஒரு பிரகாசம் ஏற்படுத்திய தமிழரசிக்கு வாழ்த்துக்கள் கோடி. ஒவ்வொரு பதிவரைப் பற்றிய அறிமுகம் மிக சிறப்பாக இருந்தது மட்டுமல்லாமல் நிறைவாகவும் இருந்தது.

    ReplyDelete
  31. இன்றைய பிரபலங்கள் தணிகாஷ், ராம், ராகவன் அண்ணா, நசரேயன், வினோத்கெளதம், குடந்தை அன்புமணி, ஆ.முத்துராமலிங்கம்,குமரை நிலாவன், சாரதி, மற்றும் கலையரசன் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. இனி வழக்கப்படி எழுத்தோசையில் சந்திப்போம்...மீண்டுமான்னு நீங்க அலறுவது கேட்கிறது

    கேட்டுச்சா. போச்சுடா. அப்புறம் எங்க தப்பிக்கிறது. வந்துடறோம் தாயி. வேற வழி.

    ReplyDelete
  33. உங்கள் சுவையான விருந்துக்கு நன்றி தோழி.
    உங்கள் சிறப்பான வாரத்துக்கு என் பாராட்டுகள்.

    ReplyDelete
  34. சாரதி - வலைப்பூவில் விரைவில் சிறந்த பதிவராய் வலம் வர இருப்பவர்.அனைத்து தலைப்புகளையும் கையாண்டு கொண்டிருகிறார்.ஆனந்த விகடனிலும் இவரது பதிவு வெளிவந்துள்ளது இவர் எழுத்து திறமைக்கு ஒரு சான்று.

    இவர் தொடர்ந்து அதிகம் எழுதவேண்டும் என்பதே என் விருப்பம்.

    ReplyDelete
  35. வாழ்த்துகள்! chellam kodutha velaya olunga senji mudichita

    ReplyDelete
  36. என்னையும் பதிவரா மதிச்சு, உங்க இடுகை என்னை எழுதிய..
    'பதிவுலக பன்பரசி',
    'எங்களன்புக்கு அன்பரசி',
    'தமிழுலக தமிழரசி' க்கு

    "நன்றிசொல்வே உனக்கு, என் தோழி வார்தையில்லையே.!"

    ReplyDelete
  37. விருந்து முடிஞ்சுது, மொய் இங்கேயேவா இல்ல எழுத்தோசையில் வந்து எழுதனுமா?

    ReplyDelete
  38. சிறப்பான முறையில் பல பதிவர்களை மனதில் நிற்குமாறு அறிமுகம் செய்து நிறைவு செய்யும் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  39. சிறப்பான முறையில் பல பதிவர்களை மனதில் நிற்குமாறு அறிமுகம் செய்து நிறைவு செய்யும் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  40. இடுகை எங்கே கண்ணுக்கு தெரியுது?சாப்பாட்டு படங்கள் கண்ணைக் கொல்லுதே.

    இப்படிக்கு
    ஒரு சாப்பாட்டுப் பிரியன்.

    ReplyDelete
  41. உங்க பந்தில எனக்கும் ஒரு இலை போட்டதுக்கு நன்றி..

    //இவரை மேலும் நாமும் ஊக்குவிப்போம்//

    சும்மாவா சொன்னாரு வாலி..

    சரியான ஊக்குவிப்போர் இருந்தால்
    "ஊக்கு" விற்பவன் கூட ஒருகாலத்துல
    "தேக்கு" விற்பானாம்.

    நாங்கெல்லாம் எப்போ "தேக்கு" விற்க போறோமோ தெரியலை...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  42. // S.A. நவாஸுதீன் said...
    இவர் தொடர்ந்து அதிகம் எழுதவேண்டும் என்பதே என் விருப்பம்//

    கண்டிப்பா முயற்சி
    பண்றேன்.

    நன்றி நவாஸ்...

    ReplyDelete
  43. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  44. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  45. //
    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு...
    //

    அருமையான மேற்கோள் காட்டி இருக்கீங்க தோழி!

    உண்மைதான் நானும் வழிமொழிகின்றேன்!

    ReplyDelete
  46. கொடுத்த பொறுப்பை செவ்வனே போற்றும் வகையில் செய்து முடித்த தமிழுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  47. //
    வேற வழியேயில்லை வந்து சேருங்கள் தோழமைகளே..........
    //

    நான் கொஞ்சம் லேட்ஆ வருவேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க தமிழ் :)

    ReplyDelete
  48. //
    வேற வழியேயில்லை வந்து சேருங்கள் தோழமைகளே..........
    //

    நான் கொஞ்சம் லேட்ஆ வருவேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க தமிழ் :)

    ReplyDelete
  49. எதுவுமே சாப்பிடாம உக்காந்துருக்கேன்.

    இங்க வந்தா ஒரே விருந்தா...அட போங்கக்கா..

    வலைச்சரம் பணியை செவ்வனே நிறைவேற்றி வரலாற்றில் இடம் பெற்று விட்டீர்கள்.

    நன்றிகளும் வாழ்த்துகளும்.....

    ReplyDelete
  50. கிளாஸ் முடுஞ்சதா டீச்சர்?

    விருந்துகள் பிரமாதாம்

    வாழ்த்துக்கள் தமிழ்............

    ReplyDelete
  51. ஷ‌ஃபிக்ஸ் said...
    இனிய விருந்து படைத்த எங்கள் நட்ப்பிர்க்கினிய தமிழ்ரசியாருக்கு வாழ்த்துக்கள்..தொடருட்டும் உங்கள் சேவை!! எழட்டும் எங்கள் மகிழூட்டும் எழுத்தோசை.

    பண்பட்ட உங்கள் வாழ்த்து பரவசமுட்டுகிறது தோழா..எழுத்தோசையில் எழுத்துக்கள் செழிக்க வாழ்த்தவும் நன்றி ஷ்ஃபி

    ReplyDelete
  52. ஷ‌ஃபிக்ஸ் said...
    //மீண்டுமான்னு நீங்க அலறுவது கேட்கிறது வேற வழியேயில்லை வந்து சேருங்கள் தோழமைகளே..........//

    ஹலோ அமைதியா, வரிசையா வாங்கப்பா

    இது நல்ல புள்ளைக்கு அழகு ,,,,

    ReplyDelete
  53. ஆ.ஞானசேகரன் said...
    அடுத்து உங்களை தொடர்கின்றேன்


    வாழ்த்துக்கள் சேகர்..

    ReplyDelete
  54. ஆ.ஞானசேகரன் said...
    நல்ல பதார்த்தங்களை காட்டி பசியை தூண்டிவிட்டீர்கள்...


    ஒரு ரகசியம் யாருக்கும் சொல்லாதீங்க...இந்த படங்களை போட்டு பதிவை நிறைவு செய்துவிட்டு வீட்டில் அனைவரும் ஹோட்டலுக்கும் சென்று விருந்துண்டு வந்தோம் ஆமா பசிக்க ஆரம்பித்து விட்டது இதையெல்லாம் பார்த்தவுடன்..

    ReplyDelete
  55. அபுஅஃப்ஸர் said...
    //ஷ‌ஃபிக்ஸ் said...

    நீங்கள் பதிவுலக நன்பர்களை அறிமுகப்படுத்திய விதம், உபயோகப்படுத்திய சொற்றொடர், அதர்க்கேற்ற படங்கள், மிகவும் நன்றாக இருந்தது. உங்களுடைய PRESENTATION SKILLS அதனை பாராட்டியே ஆக வேண்டும்
    //

    நிச்சயமா நானும் கூவிக்கிறேன்

    நன்று நன்றிங்கோ

    வாழ்த்துக்கள் அழகான தொகுப்புக்கு

    ஹேய் ரொம்ப சந்தோஷமாயிருக்கு உங்கள் அனைவரின் அன்பும் பார்க்கையில்...

    ReplyDelete
  56. அபுஅஃப்ஸர் said...
    //வேற வழியேயில்லை வந்து சேருங்கள் தோழமைகளே..........//

    அறியக்கிடைக்கும் கவிதைகளை மிஸ்பண்ணுவோமா வந்துடுவோம்


    அபுதான் ரொம்ப நல்லவரு வல்லவரு என்னையும் என் கவிதையையும் திட்டாத ஒருவர்...வாழ்க அபு..

    ReplyDelete
  57. sakthi said...
    மீண்டுமான்னு நீங்க அலறுவது கேட்கிறது வேற வழியேயில்லை வந்து சேருங்கள் தோழமைகளே........

    வேற வழி

    வந்து தானே ஆகனும்

    ஆமாமா வந்துடுங்கோ....

    ReplyDelete
  58. தேவன் மாயம் said...
    கவிதை ரெடியா? நாங்க ரெடி!!

    நாங்கள்ளால் இடிதாங்கி!!

    ஹஹ்ஹஹா..அப்ப என் கவிதைகள்.......? சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

    ReplyDelete
  59. S.A. நவாஸுதீன் said...
    இரண்டு தினங்கள் குறைவாக இருந்தபோதும், கிடைத்த குறைந்த நாட்களில் மிக அதிகமான, அதே சமயம் அழகிய அறிமுகம் கொடுத்து வலைச்சரத்தில் ஒரு பிரகாசம் ஏற்படுத்திய தமிழரசிக்கு வாழ்த்துக்கள் கோடி. ஒவ்வொரு பதிவரைப் பற்றிய அறிமுகம் மிக சிறப்பாக இருந்தது மட்டுமல்லாமல் நிறைவாகவும் இருந்தது.


    ஹேய் என்னப்பா நன்றியெல்லாம்...அதுவும் கோடி அந்த அளவுக்கு நான் என்னப்பா பண்ணேன்....ஹிஹிஹி நன்றி நானும் சொல்லிக்கிறேன் நவாஸ்...

    ReplyDelete
  60. S.A. நவாஸுதீன் said...
    இனி வழக்கப்படி எழுத்தோசையில் சந்திப்போம்...மீண்டுமான்னு நீங்க அலறுவது கேட்கிறது

    கேட்டுச்சா. போச்சுடா. அப்புறம் எங்க தப்பிக்கிறது. வந்துடறோம் தாயி. வேற வழி.

    வரலைன்னா பின் விளைவுகள் அறிந்து விட்டீரா? ஹஹஹஹஹா

    ReplyDelete
  61. ஜெஸ்வந்தி said...
    உங்கள் சுவையான விருந்துக்கு நன்றி தோழி.
    உங்கள் சிறப்பான வாரத்துக்கு என் பாராட்டுகள்.

    நன்றி ஜெஸ்,,,,,

    ReplyDelete
  62. கலையரசன் said...
    என்னையும் பதிவரா மதிச்சு, உங்க இடுகை என்னை எழுதிய..
    'பதிவுலக பன்பரசி',
    'எங்களன்புக்கு அன்பரசி',
    'தமிழுலக தமிழரசி' க்கு

    "நன்றிசொல்வே உனக்கு, என் தோழி வார்தையில்லையே.!"

    ஹைய்யோ போதும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    நாம் எல்லாம் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நமக்குள் ஏன் நன்றியெல்லாம் அப்படியே என்னை பாராட்டனுமா எழுத்தோசை வாங்க ....ஹஹஹ்ஹா எப்படி என் ராஜ தந்திரம் இதுக்கு நன்றியே தேவலாமுன்னு தோனுமே....

    ReplyDelete
  63. ஷ‌ஃபிக்ஸ் said...
    விருந்து முடிஞ்சுது, மொய் இங்கேயேவா இல்ல எழுத்தோசையில் வந்து எழுதனுமா?

    ஆம் உங்கள் மொய்யை மொழியாக எழுத்தோசையில் தாருங்கள் தோழா...

    ReplyDelete
  64. முனைவர்.இரா.குணசீலன் said...
    சிறப்பான முறையில் பல பதிவர்களை மனதில் நிற்குமாறு அறிமுகம் செய்து நிறைவு செய்யும் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்....

    நன்றி குணா..

    ReplyDelete
  65. ராஜ நடராஜன் said...
    இடுகை எங்கே கண்ணுக்கு தெரியுது?சாப்பாட்டு படங்கள் கண்ணைக் கொல்லுதே.

    இப்படிக்கு
    ஒரு சாப்பாட்டுப் பிரியன்.

    அட உங்களைத் தெரியாமல் போச்சே தெரிந்திருந்தால் விருந்தாகியிருப்பீரே....

    ReplyDelete
  66. sarathy said...
    உங்க பந்தில எனக்கும் ஒரு இலை போட்டதுக்கு நன்றி..

    //இவரை மேலும் நாமும் ஊக்குவிப்போம்//

    சும்மாவா சொன்னாரு வாலி..

    சரியான ஊக்குவிப்போர் இருந்தால்
    "ஊக்கு" விற்பவன் கூட ஒருகாலத்துல
    "தேக்கு" விற்பானாம்.

    நாங்கெல்லாம் எப்போ "தேக்கு" விற்க போறோமோ தெரியலை...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று சொல்வாங்க உங்க வளர்ச்சி தான் ஆரம்பத்தில் ஆனந்தவிகடனே அங்கீகரித்து விட்டதே இனி நாங்களும் உங்களை ஊக்குவிப்போம் சாரதி...

    ReplyDelete
  67. RAMYA said...
    //
    வேற வழியேயில்லை வந்து சேருங்கள் தோழமைகளே..........
    //

    நான் கொஞ்சம் லேட்ஆ வருவேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க தமிழ்

    ஹஹஹா நீ வராவிட்டாலும் உன் உள்ளம் என்னை வாசிக்கும் அறிவேன் ரம்யா நன்றி....

    ReplyDelete
  68. அ.மு.செய்யது said...
    எதுவுமே சாப்பிடாம உக்காந்துருக்கேன்.

    இங்க வந்தா ஒரே விருந்தா...அட போங்கக்கா..

    வலைச்சரம் பணியை செவ்வனே நிறைவேற்றி வரலாற்றில் இடம் பெற்று விட்டீர்கள்.

    நன்றிகளும் வாழ்த்துகளும்.....

    இன்னும் தம்பிக்கிட்ட பாஸ் மார்க் வாங்கலையே....சரி சாப்பிடு அபு வந்தா கிடைக்காது....

    ReplyDelete
  69. பிரியமுடன்.........வசந்த் said...
    கிளாஸ் முடுஞ்சதா டீச்சர்?

    விருந்துகள் பிரமாதாம்

    வாழ்த்துக்கள் தமிழ்............

    ஆமாம்பா அனைத்து வகுப்புக்கும் வந்த வசந்துக்கு ஒரு ஓ.....

    ReplyDelete
  70. நம்ம மச்சான்ஸ் பதிவுகள் வந்தது ரொம்ப ரொம்ப ஆனந்தம்

    ReplyDelete