Tuesday, July 28, 2009

எழுத்து நிறைந்த காடு

முன்னேபின்னே அறிந்திராத யாரோ ஒருவரின் எழுத்துக்கள் நமக்கு, புன்னகையை, அழுகையை, வியப்பை, ரசனையை, என எல்லாவிதமான உணர்வுகளையும் தருகின்றன. எப்படி இந்த பந்தங்கள் உருவாகின்றன? பால்யவயது முதலே பழகின நண்பனைப் போன்ற உணர்வு எப்படி வலைஞர்களை அல்லது எழுத்தாளர்களைச் சந்திக்கும் பொழுது ஏற்படுகின்றன? ஆச்சரியமான விஷயம்...

நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் தங்கை திருமணத்தின்போது சொல்லரசனும்  நானும் மதுரைக்குக் கிளம்பிச் சென்றோம். (இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்களென்பதாலும்,) செல்லும் வழியெங்கும் இருவரது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டோம். முன்பின் அறியாத மனிதர், அதற்கு முன்பு ஒருமுறை மட்டுமே அவரைப் பார்த்திருக்கிறேன். Buying House மேலாளர் என்பதால் என்னைப் போன்ற Designer கள் எளிதில் நுழைந்து நேரடியாக பேசிவிட இயலாது. அதைப் போன்று சென்னையில் உள்ள இணைய நண்பர்களுள் ஒருவர் ஒரு பெரிய துறையில் வேலை செய்கிறார். (பல காரணங்களால் பெயர் மறைக்கப்பட்டது) அவருடன் சேப்பாக்கம் மைதானத்தைத் தொட்டவாறு சேப்பாக்கம் கிளப்பில் அமர்ந்து உணவு உட்கொண்டதை நினைக்கும் பொழுது, எழுத்து எவ்வளவு பெரிய மனிதரையும் எளிமையாக்கிவிடுகிறது என்பதை உணர்ந்து கொள்ள நேர்ந்தது. எழுத்துக்கள் நிறைந்த காட்டில்தான் நமது பயணங்கள் நிகழ்கின்றன. அவ்வப்போது சில இளைப்பாறல்கள் (குழந்தை ஓவியம் போன்று ) காட்டு மரத்தின் மேல் நிகழ்கிறது. நன்கு அடர்த்தியான இக்காட்டில் திக்கற்று அலைவதுதான் எல்லோருக்கும் விருப்பமாக இருக்கிறது. இங்கே உயர்வுதாழ்வு எதுவும் இருப்பதில்லை.

1. நான் அடிக்கடி படித்து வியக்கும் வலைத்தளம் மோகன்தாஸின் செப்புப்பட்டயம்  சிலரின் எழுத்துக்கள் ரசிக்க வைப்பனவாக இருக்கும் ; வெகுசிலரது, சீரியஸ்னஸ், தேவையான பொழுது எடுத்து படித்துக் கொள்ளலாம்.. மிகச்சிலரது எழுத்துக்கள் கவர்ந்திழுப்பவையாகவும் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியனவாகவும் இருக்கும். மோகன்தாஸ் அப்படியொரு எழுத்தாளர். மலரினும் மெல்லிய காமம்  எனும் தொடர்(?)கதைக்காக அவரைப் படிக்க ஆரம்பித்தேன். படிக்கப்படிக்க கதையின் உள்ளே (தொபுகடீரென்று) விழுந்து தொலைந்தேன். அவ்வளவு நெருக்கமான, இயல்பான எழுத்துக்கள். அப்படியொரு யதார்த்தம் நிறைந்த வசனங்களை காமம் தோய்ந்த எழுத்துக்களில் அதற்கு முன்னர் படித்தது கிடையாது. (நாம படிச்சதே கம்மிதான்!!) காமத்தின் கரை தொட்டுத் தொட்டு வந்ததைப் போன்று.... இது ஒரு விளையாட்டாகத் தோன்றியது. தொடர்ந்து காதலாகி யாசிக்கிறேன் இல்  காதல், காமம் ஆகிய இரு விளையாட்டுக்கும் நடுவில் எழுத்தாகி அவர் ஊருவதை உணரமுடிந்தது. Very well impressed. தொடர்ந்து இக்கதைகள் முடிவற்ற முடிவோடு வெளிவரவில்லை.. காதலாகி யாசிக்கிறேனில் என்னைக் கவர்ந்தது இன்னுமொரு அம்சம் ஜீ-டாக் சாட் களை கதைக்குப் பயன்படுத்திக் கொண்டது (அவர் பேசியதா என்று அவரிடம்தான் கேட்கவேண்டும்..) தொடர்ந்து, கவிதைகளும் சிறப்பாக எழுதுகிறார். மோகனின் தளத்தில் கவிதையைக் காட்டிலும் கதைகளே எனக்கு விருப்பப் பிரதானமாக இருக்கிறது. திரை விமர்சனம் தனக்கேயுரிய பாணியில் சிறப்பாக செய்கிறார். இவரது எழுத்தைப் படிப்பவர்கள் நிச்சயம் பின் தொடர்வார்கள். அப்படியொரு மந்திரம் அவரது வலைத்தளத்தில் உள்ளது.


2. வலைத்தளங்களுக்கு அப்பாற்பட்ட இணையங்களில் தொடர்புள்ள பதிவர்களில் பூமகளும்  ஒருவர், கதை, கவிதை, அனுபவம், விமர்சனம், சினிமா, அலசல், விவாதம் என பலபடிகளில் பயணிக்கும் இவரது பூக்களம் பல வண்ணங்கள் பூசப்பட்ட எழுத்துக்களின் குவியலாக இருக்கிறது. எதிர்கவிதைகள், பதில்கவிதைகள், விமர்சனக் கவிதைகள் என பலவேறாக இவர் எழுதுவதைக் கண்டிருக்கிறேன். சமீபத்தில் "சர்தார்ஜியுடன் ஒரு பயணம்"  அவரது அனுபவக்கட்டுரைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. யாமம் நாவல்  குறித்த புத்தக விமர்சனம் அவரது இலக்கிய ஆர்வத்திற்கு குறைவில்லாத எழுத்துக்கும் சான்றாக இருக்கிறது. பெரும்பாலும் எழுதுவதைக் குறைத்துக் கொண்டாலும் நிறைந்த எழுத்துக்களே வலையில் மின்னுகின்றன. அதிகம் யாராலும் வாசிக்கப்படாத, மனம்கவரும் வலைத்தளங்களுள் பூமகளின் வலைத்தளமும் அடக்கம்.

3. எங்கெங்கோ பறந்து வந்த புறா, களைத்திருப்பவன் கரங்களில் தவழ்வதைப் போன்றே கடல்புறா  தளம் எனக்குப் பட்டது. அதிகம் யாரையும் சென்றடையாத, சிறந்த படைப்புகள் மிகுந்த பல தளங்களுள் கடல்புறாவும் ஒன்று. அதன் படைப்பாளி பாலா, மிகச் சிறந்ததில் சிறந்தவற்றை உவமையாக்கி கவிதைகள் எழுதுவதை குறிக்கோளாகக் கொண்டிருப்பார் போலும். சங்கமம்  எனும் அவரது கவிதையின் முதல் வரிதான் அவரது தளத்தை என்னுள் ஈர்த்தது.

நிலாத்துண்டொன்று நழுவி 
இலையில் ஒழுகி 
சாளரம் வழி விழுந்து விட்டிருந்த 
அன்று


காட்சிபடுத்துதலில் ஆகச்சிறந்த இவ்வரிகளினூடாக கடல்புறாவைக் கொஞ்ச வேண்டியிருந்தது. இன்னொன்று சைட் அடித்தல் தவம்  சிக்கலில் விழுந்துவிட்ட எழுத்துக்களை ஒவ்வொன்றாகக் கோர்ப்பது போல முதலில் தலை கவிழ்ந்து உள்ளுள் நுழைந்து கவிதை படித்தேன். சிறு சிறு நிகழ்வுகளை எழுத்தின் மேல் எழுத்தென அடுக்கி வரையப்பட்டதென கவிதை இருந்தது. தலைப்பற்றவன்  கவிதையின் முடிவில் நம்மை பின்னோக்கி நகர்த்தலுக்கான ஆயத்தம் நிச்சயம் இருக்கிறது. எளிதில் பிரித்தெடுக்க முடியாத வகைகளை (Label) கவிதைகளுக்குக் கொடுக்கிறார். அதை மாற்றிவிட இச்சமயத்திலொரு அவருக்கு கோரிக்கை!!

மீண்டும்.....

25 comments:

  1. இரண்டாம் நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இந்த பந்தங்கள் உருவாகின்றன? பால்யவயது முதலே பழகின நண்பனைப் போன்ற உணர்வு எப்படி வலைஞர்களை அல்லது எழுத்தாளர்களைச் சந்திக்கும் பொழுது ஏற்படுகின்றன]]


    உண்மை தான் ஆதவா!

    எம்பூட்டு யோசித்தாலும் விளங்கலை.

    ReplyDelete
  3. நிலாத்துண்டொன்று நழுவி
    இலையில் ஒழுகி
    சாளரம் வழி விழுந்து விட்டிருந்த
    அன்று
    ]]

    மிகவும் இலயித்த வரிகள் இவை.

    ReplyDelete
  4. செப்புபட்டயம் தெரியும் அதிகம் போவதில்லை.

    கடல்புறா மிக நெருக்கம்.

    பூமகளை இனி பார்த்திடுவோம்.

    நன்றி ஆதவா!

    ReplyDelete
  5. மிக்க நன்றி ஆதவன்
    என்னையும் தங்கள் எழுத்தினூடாக அறிமுகப்படுத்தியமைக்கு

    ReplyDelete
  6. இரண்டாம் நாள் வாழ்த்துகள்... உங்கள் அறிமுகங்களை சமயம் கிடைக்கும்பொழுது பார்கின்றேன்...
    பாராட்டுகள்

    ReplyDelete
  7. இரண்டாம் நாள் வாழ்த்துகள் ஆதவா.

    ReplyDelete
  8. ஆதவன் - அருமையாகச் செல்கிறது வலைச்சரம் - அறிமுகப்படுத்தும் பதிவர்களை - இடுகைகளை ஆழ்ந்து படித்து ரசித்து அனுபவித்து அறிமுகப் படுத்துதல் பாராட்டுக்குரியது.

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  9. வாழ்த்துகள்

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி.

    பழகின நண்பனைப் போன்ற உணர்வு எப்படி வலைஞர்களை அல்லது எழுத்தாளர்களைச் சந்திக்கும் பொழுது ஏற்படுகின்றன //

    ஆச்சரியம் தான்

    ReplyDelete
  11. இரண்டாம் நாள் வாழ்த்துகள் ஆதவா.

    ReplyDelete
  12. //எழுத்துக்கள் நிறைந்த காட்டில்தான் நமது பயணங்கள் நிகழ்கின்றன. அவ்வப்போது சில இளைப்பாறல்கள் (குழந்தை ஓவியம் போன்று ) காட்டு மரத்தின் மேல் நிகழ்கிறது. நன்கு அடர்த்தியான இக்காட்டில் திக்கற்று அலைவதுதான் எல்லோருக்கும் விருப்பமாக இருக்கிறது. இங்கே உயர்வுதாழ்வு எதுவும் இருப்பதில்லை.//

    அருமை ஆதவன்...அந்த இளைப்பாறல்கள் தான் எத்தனை சுகம் ??

    இங்கு கடல்புறா பாலாவைப் பற்றி குறிப்பிட்டதில் மிக்க மகிழ்ச்சி !!! அதிகம் கவனிக்கப்படாத, கவனிக்கப்
    படவேண்டிய ஒரு கவிஞன் பாலா.

    மற்ற அறிமுகங்களையும் வாசிக்க வேண்டும்.நன்றி !!!!

    ReplyDelete
  13. அறிமுகங்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நீங்கள் சொன்ன வலைத்தளங்கள் அருமையாக இருந்தது.

    அறிமுகப் படுத்தியதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. எல்லாம் பெரிய தலைகள் உங்களைப்போலவே!

    ReplyDelete
  16. பகிர்வுக்கு நன்றி...இரண்டாம் நாள் வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  17. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் ஆதவா

    ReplyDelete
  18. செப்புப் பட்டயமும் பூமகளும் புதிய அறிமுகங்கள்

    ReplyDelete
  19. இந்த வலையுலகத்தின் எனது ஆசிரியரே பாலா தான் ...
    அவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஆதவா

    ReplyDelete
  20. பாலாவை தவிர அனைவரும் புதியவர்கள்

    செப்புப்பட்டயம் பட்டயம் கிளப்புது

    தொடருங்க ஆதவா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. நல்ல பகிர்வு ஆதவா..
    //
    நிலாத்துண்டொன்று நழுவி
    இலையில் ஒழுகி
    சாளரம் வழி விழுந்து விட்டிருந்த
    அன்று//

    ரொம்ப அருமையான வரிகள்..

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் ஆதவா.கண்டிப்பாக காண வேண்டிய நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  23. என்னையும் இவ்வலைப்பூ உலகிற்கு அறிமுகப் படுத்தி பெருமை சேர்த்தமைக்கு உளமார்ந்த நன்றிகள் ஆதவா.

    இது போன்ற ஊக்கங்களால் பல தடைகளையும் உடைத்து எழுதும் உத்வேகம் பிறக்கிறது.

    உங்களின் ரசனைகளுக்கு தீனியாக என் எழுத்துகள் வளமாக்க முனைகிறேன்.

    நன்றிகளுடன்,
    பூமகள்.

    ReplyDelete
  24. நல்ல அறிமுங்களை செய்கின்றீர்கள் ஆதவா.
    மேலும் நீங்கள் சொல்லுவது போல் எழுத்து அறிமுகமற்ற நட்பையும் நல்ல அறிமுகங்களைய்யும் உருவாக்குகின்றது.

    ReplyDelete
  25. இரண்டாம் நாள் வாழ்த்துகள்.

    அறிமுகம் செய்யும் விதம் அருமையாக உள்ளது ஆதவா!

    ReplyDelete