இந்த பாதை நகர்ந்து
சென்றுகொண்டிருக்கிறது.
நாம்
நின்று கொண்டிருக்கிறோம்.
- ஆதவா.
நண்பர் கவிஞர் "அகநாழிகை" பொன்.வாசுதேவன் அவர்களோடு ஆரம்பம் முதற்கொண்டு நல்ல தொடர்பிருக்கிறது. அவ்வப்போது படைப்பு எப்படி எழுதவேண்டும், படைப்புகள் எப்படி இருக்கிறது, எப்படி எழுதுகிறார்கள் போன்ற "எப்படி"களைப் பற்றி நிறைய பேசியதுண்டு. தன்னை நோக்கி, "எப்படி" என்று கேட்பவர்கள் தனக்குள்ளான படைப்பின் மாற்றத்தை நிச்சயம் உணர்வார்கள். கவனிக்க, தன்னைத்தானே யார் என்று கேட்பது தன்னை ஆராய்தல்... எப்படி என்று கேட்பது தன் படைப்பை ஆராய்தல்.. (ஏன் என்று கேட்பது தனது சூழ்நிலையை ஆராய்தல்) சிலரோடு பேசியபிறகு எழும் மெல்லிய புன்னகை இவரோடு பேசும்பொழுதிலும் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. பேச்சுக்கள், எழுத்தைக் குறிப்பதாகவே இருக்கிறது. எழுத்துக்கள் பேச்சைக் குறீப்பதாக இருக்கிறது. இரண்டுக்குமிடையே எழுத்தாளன் இருக்கிறான்.
வலைஞர்கள் தாங்கள் சந்திக்கும் பொழுது, முதல் சந்திப்பில் பலர் ஏமாற்றமடைகின்றனர். எழுத்தைக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளும் மனப்பிம்பங்கள் யாராலும் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் மிகப்பெரிய முரண்பாடும், வித்தியாசமும் இருக்கிறது. எழுத்தெல்லாம் எழுத்தாளனாகிவிடுவதில்லை. பேனாவுக்கு முன்னர் வரைதான் எழுத்துக்கள் ஒருவனுக்குச் சொந்தமாகிறது. காகிதத்தை அடைந்ததும் எழுத்துக்கள் பரத்தையாகிவிடுகின்றன. நான் என்றுமே மனப்பிம்பங்களை சுமந்து திரிவது கிடையாது. ஏனெனில் ஏமாற்றம் எனக்குப் பிடிக்காதது. அதனால்தான் என்னவோ, வலைஞர்களைச் சந்திக்கும் ஆவல் அவ்வளவாக எழுவதில்லை...
1
கவிதைகளின் நீட்சி, சிறுகதைகள். கவிதைகள் எப்படி பரிணாமப்பாதையில் கடந்து வந்தனவோ அவை போன்றே கதைகளும் கடந்து வந்திருக்கின்றன. வெகு சில கதைகளைப் படிக்கும்பொழுது அதனுள்ளேயே நாமும் ஒரு பாத்திரமாக அமர்ந்திருப்பதைப் போன்று உணர்வு எழும். சில கதைகள் மனதில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றன. கவிதைகளைக் காட்டிலும் கதை எழுதுவது சிரமமானது. அதிலும் சொல்லவருவதை குறுக்கி, குறுங்கதையாகவோ, சிறுகதையாகவோ சொல்லுவது இன்னும் கடினம்.
த.ஜார்ஜ் இன் என் நினைவாகச் செய்யுங்கள் எனும் கதை, வலைத்தள கதைஞர்களுள் ஒரு நல்ல சிறப்பிடத்தைக் காண்பிக்கும் எழுத்து. கதைகளுக்கான இவரது யுக்தி இறுதி முடிச்சவிழ்ப்பது போன்ற யுக்தியைப் போன்று தெரிந்தாலும் சற்றே வித்தியாசமானது. பேருந்தில் பயணம் செய்யும் பொழுது கதை சொல்லப்படுவ்தாக இருப்பின், நமது இறக்கம் (Stop) வந்த பின்னும் பேருந்தோடே பயணிக்கும் கதை யுக்தி. முடிவின் முடிச்சை அவிழ்த்துவிட்டு, நம்மைத் தேடவைக்கும் யுக்தி. த.ஜார்ஜ் கதைஞர் மட்டுமல்ல, நல்ல கவிஞரும் கூட. (அவரது கவிதைகள் வலையில் காணப்படவில்லை) நண்பனோடு நடந்து செல்லுகையில் கதை கேட்கும் உணர்வு இவரது கதைகள் படித்த பிறகு எழுவதை தவிர்க்க முடியாது. மறக்காமல் நான் வாசிக்கும் "கதை" தளங்களுள் " த.ஜார்ஜ் கதைகள்" வலைத்தளமும் ஒன்று.
2.
கதை, கவிதை, விமர்சனம் என பலதுறைகளிலும் கலக்கும் வெங்கிராஜா ஒரு பாதசாரி, பால்வெளியில் பயணிப்பதாகச் சொல்லுகிறார். அவரது எழுத்துக்களும் அப்படியொரு பயணத்தில் இருப்பதை பறைசாற்றவே செய்கின்றன. சமீபத்தில்தான் வலையுலக அறிமுகம் என்றாலும் நிறைவான புதுமுகம். ஆங்கிலப்படங்கள் நிறைய (குறிப்பாக எனக்கும் பிடித்த) பார்த்தும், விமர்சித்தும் வருகிறார். Vicky Christina Barcelona எனும் படத்திற்கான விமர்சனம் ஒன்றே போதுமானது
பாதசாரியின் எழுத்துக்களில் சிலமுறை எளிமை இருக்கும். சிலமுறை புரியாத வகையிலான நவீனத்துவம் இருக்கும். இன்னதென்று விமர்சித்து ஒரு கட்டத்தில் அடைத்துவிடமுடியாத எழுத்தாளுமையைக் கொண்டிருக்கிறார். அவரது வலைத்தளமும், பாதசாரி எனும் படமும் அழகாக இருக்கின்றன. புகைப்படக் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான இவரது தளத்தில் அலைபேசியில் எடுத்த புகைப்படங்களை வெகு அழகான எடுத்து நமக்காகக் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் தமிழில் புகைப்படக் கலை வலைத்தளத்தில் ஒரு பின்னூட்டத்தின் வாயிலாக அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
பூச்சிகளின்
ரம்மியமான உலகத்தில்
மனிதர்கள் அருவருப்பானவைகள்.
இந்த (ஹைக்கூ) கவிதையில் என்னை மிகவும் யோசிக்க வைத்துவிட்டார். நுண்ணிய கவிப்பார்வை இவருக்கு உள்ளது. வளைக்கரம் எனும் இக்கவிதையில் நினைவின் மீளுமை, இன்மையின் இருப்பு, மற்றும் நெகிழ்ந்த பாசம் கலந்து இருக்கிறது. வெங்கிராஜா தவறாமல் படிக்கவேண்டிய பதிவர்களில் ஒருவர்.
3. Intresting Blogger விருது கொடுக்கப்பட்டதிலிருந்துதான் விதூஷை எனக்குத் தெரியும். வீட்டில் தன்னை விதூஷ் என்று அழைப்பதாகக் கூறும் வித்யாவின் பக்கோடா பேப்பர்கள் ஆச்சரியமான சுவையில் இருக்கின்றன. ஒவ்வொருமுறையும் பதிவைப் படிக்கும் பொழுது வித்தியாசமான கண்ணோட்டத்தில் படிப்பதாக உணர்கிறேன். நம்மைப் பொறுத்தவரை சில வறட்டு விதிகள் உண்டு.. First look is best look என்று சொல்வார்கள். அதன்படி விதூஷின் விரும்பாத கவிதை முதன்முதலாக நான் படித்த மிகப் பிடித்த அவருடைய படைப்பு. கவிஞர். அகநாழிகை பொன்.வாசுதேவன் அதற்கு முதல் பின்னூட்டத்தில்
//கடல் மறுத்த மணல் போல தாகமுள்ள கனவுகள்//
//இருக்கும் நிறங்கள் எல்லாம் வானில்//
//நீண்டதொரு இரவில் ஊமையாய் ஒற்றை நட்சத்திரம்//
//கருப்பும் வெள்ளையுமாய் உடைந்த நிலவு//
//யாருமே செலுத்தாமல் அலையாடும் படகு//
இவ்வரிகளை வாசிக்கையில் உணர்வலைகள் மீட்டப்படுகிறது
என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வரிகளை வைத்து மற்ற வரிகள் மூடியிருந்தது போன்று எனக்குப் பட்டது. என்னைப் பொறுத்தவரையில் கவிதையில் பொருள் எடுத்தல், உணர்வு மீளுதல், கவிதையின் அழகெடுத்தல், சொல்லெடுத்தல் எனும் விதிகளில் வாசிக்கிறேன். விதூஷின் சில கவிதைகளில் அழகெடுத்தல் அமைந்திருக்கிறது. சில கவிதைகளில் சொல்லாளுமை அழகாக இருக்கிறது. "கனவு" எனும் இக்கவிதையில் இறுதி வரிகள் மிகவும் பிடித்திருந்தது. தலைப்பை அவர் யூகிப்பதைப் போன்று மாற்றியமைத்திருக்கலாம். சமீப அறிமுகமான இவரது பல பதிவுகள் என் பார்வைக்கு அகப்படாமல்தான் இன்னும் இருக்கிறது.
நாளை மீண்டும்....
மூன்றாம் நாள் வாழ்த்துகள்.
ReplyDelete"அகநாழிகை" பொன்.வாசுதேவன் - சொல்லுவதற்கு இல்லை. இவருடைய கட்டுரைகளை தவறாமல் படிப்பேன்.
ReplyDeleteவெங்கிராஜா - இவருடைய பாதசாரியின் பால் வீதி நல்ல பதிவுகள் அடங்கிய வலைப்பூ. இவர் சங்கமம் பேருந்து சிறு கதைகளுக்கான போட்டியில் முதற்பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா பற்றிய பதிவினை ஆங்கிலத்திலும் எழுதுகிறார். பல நல்ல இந்திய சினிமாவைப் பற்றியும் இந்திய குறும்படங்களைப் பற்றியும் எழுதினால் நன்றாக இருக்கும்.
த.ஜார்ஜ் மற்றும் விதூஷ் - இன்று தான் அறிமுகம் கண்டிப்பாக படிக்கிறேன்.
மற்ற படி நல்ல அறிமுகங்கள் ஆதவா... தொடருங்கள்...
நல்ல வாசிப்பு உங்களுடையது. இந்த மூன்று தினங்களில் நிறைய அறிமுகங்கள் எனக்கு. தொடர்ந்து மிளிருங்கள் ஆதவன். வாழ்த்துகள்.
ReplyDeleteஅனுஜன்யா
உங்களின் சுயமதிப்பீட்டு கருத்தோடு நானும் ஆமோதிக்கிறேன்.
ReplyDeleteகாகிதத்தில் ஏறிய பின் பரத்தையாகும் எழுத்துக்கள் இந்த வரியை வெகுவாக ரசித்தேன்.
மேலும் வெங்கிராஜாவின்
அலைபேசி புகைப்படங்களுக்கு நான் எப்போதும் ரசிகன். விதூஷ் கடந்த சில வாரங்களாக படித்து வருகிறேன்.
மற்ற படி,ஜார்ஜ் இன்னும் வாசிக்கவில்லை.பகிர்வுக்கு நன்றி !!!
இன்றைய இடுகை நேற்றைப் போல் அல்லாமல் ஆதவன் பாணியிலே வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி !!!!
ஆதவா,
ReplyDeleteவழக்கம்போலவே தனித்தன்மையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
சில புதிய அறிமுகங்கள்.. நன்றி நண்பா.. தொடருங்கள்..
ReplyDeleteஅட ஆச்சரியமே! இங்கே நானா??
ReplyDeleteதிரும்ப திரும்ப சொன்னாலும், எழுதுவதை படிக்க ஆளே இல்லாமல் வெறும் என் பர்சனல் டைரியில் எழுதி வந்த என்னை, சிறுகதை போட்டி மூலம் மீண்டு(ம்) எழுத வைத்த "பைத்தியக்காரன்" அவர்களுக்கே என் நன்றிகள் சேரும்.
"நாமே வெளியீட்டாளர்கள்" என்று இப்போதான் இரண்டு மூன்று நாள் முன்ன யாரோ தன் ப்ளாகில் எழுதியதை படித்தேன். (மன்னிக்க - எங்கே படித்தேன் என்று மறந்து விட்டது). இந்த ஒரே கான்செப்ட்-காகவும், என் டைரிகள் கடையில் போடப்பட்டு விட்டதாலும் மட்டுமே (இந்நேரம் நிஜமாகவே பக்கோடா பேப்பர்களாக ஆகியிருக்கும்) இங்கு வந்தேன். நன்றி ஆதவா என்னையும் எலிவேட்டரில் கூட்டிப் போவதற்கு.(நகரும் பாதை!!!)
அருமையான அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு. ரசிக்கக் கூடியதாக இருந்தது.
ReplyDelete''எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் மிகப்பெரிய முரண்பாடும், வித்தியாசமும் இருக்கிறது. எழுத்தெல்லாம் எழுத்தாளனாகிவிடுவதில்லை''
இது ஒரு நிசப்தமான உண்மை. வாழ்த்துக்கள் ஆதவா
விதூஷை அதிகம் பரிச்சியம் இல்லை
ReplyDeleteஇன்று தான் படித்தேன்
பகிர்வுக்கு நன்றி ஆதவா!
ஜார்ஜ் கதைகள் இப்போ தான் பார்த்தேன்
ReplyDeleteஇரசிக்கம்படியாக இருந்தது.
அருமையான - புதிய பதிவர்களைப் பற்றிய அறிமுகம்
ReplyDeleteஅவர்களின் பக்கங்களுக்கும் சென்று வருகிறேன்
நல்வாழ்த்துகள் ஆதவா
நகரும் பாதை- அழகான சொல்லாட்சி
நாம் நிறக பாதை நகருகிறது - புதுமையான சிந்தனை
விதூஷ் (வித்யா) ப்லாக் பரிச்சயமுண்டு. மற்ற இருவரையும் படிக்கவேண்டும்.
ReplyDeleteகாகிதத்தை அடைந்ததும் எழுத்துக்கள் பரத்தையாகிவிடுகின்றன. நான் என்றுமே மனப்பிம்பங்களை சுமந்து திரிவது கிடையாது. ஏனெனில் ஏமாற்றம் எனக்குப் பிடிக்காதது. அதனால்தான் என்னவோ, வலைஞர்களைச் சந்திக்கும் ஆவல் அவ்வளவாக எழுவதில்லை...
:)
வாழ்த்துகள் ஆதவா. சிறப்பாக செய்கின்றீர்கள்
ReplyDeleteஎனக்கு புதிய அறிமுகங்கள் மிக்க நன்றிபா
மூன்றாம் நாள் வாழ்த்துகள். ஆதவா.
ReplyDeleteஅசத்தலான நடையில் அறிமுகங்கள்.
தங்கள் அறிமுகத்தில் ஜார்ஜ் மட்டும் அறிமுகமில்லை. இனி படிக்கிறேன்.
நல்ல அறிமுகங்கள்... தொடரட்டுன் உமது பணி...
ReplyDeleteஆதவா வாழ்த்துக்கள்.
ReplyDeletego ahead
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையானவலைதளங்களை
உங்களுக்கு உரிய எழுத்துநடையில் விவரித்தது அருமை, அனைவருக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ஆதவா. (பணிச்சுமை அதான் ஓடி விடுகின்றேன்)
ReplyDeleteவாழ்த்துகள். தொடருங்கள்
ReplyDeleteநண்பர்களே, தொடர்ந்து நெருக்கி வரும் பணிப்பளுவினால் யாருக்கும் தனியே நன்றி சொல்லவும் நேரம் அமையவில்லை. ஆகவே மன்னிக்கவும்...
ReplyDeleteமனம் நிறைந்த நன்றிகள் நண்பர்களே!!!
வாழ்த்துக்கள் ஆதவா...
ReplyDeleteஇதில் அக நாழிகை அவர்களுடைய பதிவுகளை தவறாமல் படிப்பதுண்டு..
மற்றவர்களை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றிகள்..
மூன்றாம் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிமுகங்கள் நன்றாக உள்ளன. நாள் பகிர்விற்கு நன்றி ஆதவா.
என்னையும் இழுத்துக் கொண்டு இங்கே நகர்ந்து வந்தமைக்கு நன்றி ஆதவா.
ReplyDeleteவிரிவான பயணி நீங்கள் என்பது புரிகிறது.
தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்துகிற உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.
புதிய அறிமுகங்களோடு கைகுலுக்க தயாராகிவிட்டேன்.