கடந்த ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்று - அருமையாகப் பணியாற்றி இன்று விடை பெறும் அருமை நண்பர் ஆதவா அவர்களுக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பினை மனம் மகிழ முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி விடை பெறுகிறார். அவர் ஆறு இடுகைகள் இட்டு 125 மறுமொழிகள் பெற்று - ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட பதிவர்களை - கவிஞர்களை அறிமுகம் செய்து - அவர்களின் அருமையான கவிதைகளை ஆராய்ந்து விமர்சித்து பாராட்டி சுட்டியும் கொடுத்து - பணியினைச் செவ்வனே செய்திருக்கிறார்.
பணிச்சுமையின் காரணமாக அதிக இடுகைகள் இட இயலாத நிலையில் இருந்திருக்கிறார்.
நல்வாழ்த்துகள் நண்பர் ஆதவா
------------------------------------------------------------------
நாளை ஆகஸ்டுத் திங்கள் மூன்றாம் நாள் முதல் ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் பழமைபேசி. இவர் "எழிலாய் பழமை பேச " என்னும் வலைப்பூவினில் எழுதி வருகிறார். அமெரிக்க நாட்டில் மென்பொருள் கட்டுமானத் துறையில் பணியாற்றுகிறார். மேலும் "மலர்கள்" என்ற பதிவிலும், "வருங்கால முதல்வர்" என்ற குழுப்பதிவிலும் எழுதி வருகிறார்.
- தமிழ் கற்பது
- கற்றதை எழுதுவது
- தகவல் சேகரிப்பு என இன்னும் பலவற்றைக் கொள்கையாகக் கொண்டு இடுகைகள் இட்டு வருகிறார்.
தினம் ஒரு இடுகை இடுவதை வழக்கமாகக் கொண்டு 2009ம் ஆண்டு மட்டும் இதுவரை 217 இடுகைகள் இட்டுள்ளார். பன்முகம் காட்டுவதில் வல்லவர்.
அவரை வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறோம்
சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteநன்றி ஆதவா!
ReplyDeleteவாழ்த்துகள் பழமைபேசி
பழமை பேசி வருகையா?
ReplyDeleteவருக!! வருக!!
//நட்புடன் ஜமால்//
ReplyDelete//தேவன் மாயம்//
மிக்க நன்றி!
பழமை பேசி,
ReplyDeleteவாழ்த்துகள் !
நட்பாய் ஒரு அப்பா! பெரிய வரம் அது.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeleteநன்றி ஆதவா...
ReplyDeleteவாங்க பழமைபேசியாரே