ஆசானை எவ்விடத்தும் அப்படியே - வாச
மனையாளைப் பஞ்சணையில், மைந்தர்தமை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்!
வணக்கம்! பல எழுத்தாளர்கள் பணி புரிந்துவிட்டுச் சென்ற இடத்தில் இந்த சொற்பனுக்கும் இரு இடம் வாய்த்ததில் உள்ளபடியே பெரு மகிழ்வு கொள்கிறேன். நேற்றைக்குத்தான் நல்லதொரு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு, எனது சலிப்பை வெகுவாகவே வெளிப்படுத்தி இருந்தேன்.
ஆம், இன்றைய சூழலின் பொதுவாழ்வில் 1980களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கும், அந்த காலகட்டத்திற்கு முன் பிறந்தவர்களுக்கும் மிகப் பெரிய வேறுபாடு காணப்படுகிறது. மூத்தவர்களின் எண்ணங்கள் கிடந்த கிடப்பிலேயே இருக்கிறது. நான் எல்லோரையும் குறிப்பிடவில்லை; ஆனால் பெரும்பாலானோர் அப்படியே இருக்கிறார்கள் என்பது திண்ணம்.
இளையவர்களை அடக்கி ஆள்வது, எல்லை வகுப்பது, மட்டம் தட்டுவது இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அடுத்த தலைமுறையினரின் ஆற்றல் குறித்து சஞ்சலம் அடைகிறார்கள், காழ்ப்புக் கொள்கிறார்கள். ஆனால் 1980களுக்குப் பிறகு பிறந்தவர்கள் மிகவும் அகன்ற பார்வையில், தீர்க்கமாக இருக்கிறார்கள் என்பதே நான அவர்களது எழுத்தின் வாயிலாக உணர்ந்தது.
எனது நிலைப்பாடு இப்படி இருக்கையில், வளரும் பதிவர்களை இனங்கண்டு அடையாளம் காண்பிக்கும் முகமாக வலைச்சரத்தை உண்டுபண்ணி, அதை செவ்வனே பராமரித்து வரும் மேன்மைமிகு சீனா ஐயா அவர்கள் மற்றும் கயல்விழி முத்துலட்சுமி, பொன்ஸ் பூர்ணா ஆகியோருக்கு எமது உளங்கனிந்த நன்றியினைக் காணிக்கை ஆக்குகிறேன். மேலும் சிந்தாநதி அவர்களின் புகழும் நினைவும் என்றும் நம்முடன் இருக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.
அதன் பொருட்டே அவ்வையாரின் பாடல் முகப்பிலே இடம் பெற்றிருக்கிறது. நாம் பாராட்டும் குணத்தை வெகுவாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லி, மேலும் யாரை எப்படிப் பாராட்டுவது என்பதே அப்பாடல்.
நண்பனை அவன் இல்லாதவிடத்திலே பாராட்ட வேண்டும். ஆசான் சீனா போன்றோரை அவ்வப்போதே நெஞ்சாரப் பாராட்டுதல் வேண்டும். அகத்தாளை அவளிடத்தே பாராட்ட வேண்டும். பெற்ற மக்களை தம் நெஞ்சில் மட்டுமே, வேலையாளை வேலை முடிந்த பின் பாராட்ட வேண்டுமென்கிறார் அவ்வை. ஆகவேதான் இத்தளத்தை உருவாக்கி, நடத்திவரும் குழுமத்தாரை பாராட்டும் பேறு பெறுகிறேன்.
நேற்றைய இளைஞனுக்கு மூத்தோரே எல்லை!
இன்றைய இளைஞனுக்கு வானமே எல்லை!!
நாளைய இளைஞனுக்கு எல்லையே இல்லை!!!
என்கிற சிந்தனையோடு, எல்லையற்று செறிவான படைப்புகள் படைத்து வரும் படைப்பாளிகள் சிலரின் அறிமுகத்தோடு நாளை மீண்டும் உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன்.
பணிவுடன்,
பழமைபேசி.
முதல் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஆசான் சீனா போன்றோரை அவ்வப்போதே நெஞ்சாரப் பாராட்டுதல் வேண்டும்]]
ReplyDeleteஉண்மைதான்
பாராட்டுகள் ஐயா!
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துகள்.
//
அதிவேகத்தில் வாழ்த்துரைத்த அன்பருக்கு நன்றியுடையேன்!
மக்களே எல்லை என்பது வேறு; சுய கட்டுப்பாடு என்பது வேறு என்பதையும் கருத்தினில் கொள்ளவும்!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteநேற்றைய இளைஞனுக்கு மூத்தோரே எல்லை!
ReplyDeleteஇன்றைய இளைஞனுக்கு வானமே எல்லை!!
நாளைய இளைஞனுக்கு எல்லையே இல்லை!!!
அருமை
வணக்கம் பழமைபேசி...
ReplyDelete/-- அடுத்த தலைமுறையினரின் ஆற்றல் குறித்து சஞ்சலம் அடைகிறார்கள், காழ்ப்புக் கொள்கிறார்கள். ஆனால் 1980களுக்குப் பிறகு பிறந்தவர்கள் மிகவும் அகன்ற பார்வையில், தீர்க்கமாக இருக்கிறார்கள் என்பதே நான் அவர்களது எழுத்தின் வாயிலாக உணர்ந்தது. --/
புரியவில்லை... ஒரு வேலை நீங்கள் படித்தவர்கள் அனைவரும் அப்படி இருக்கிறார்களோ!. நீங்கள் படித்த அது போன்ற பதிவுகளை எனக்குக் கொடுக்க முடியுமா? நானும் படித்துப் பார்க்கிறேனே... எனக்கு என்னவோ, 1980களுக்குப் பிறகு பிறந்த நம் தலைமுறையிடம் தான் பிரச்சனை இருக்கிறதோ என்று தோன்றுகிறது.
1980களுக்கு முன் பிறந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு துறையில் ஆழ்ந்த அறிவு இருக்கும். இப்போது உள்ளவர்களுக்கு அது இல்லையோ என்பது என்னுடைய அபிப்ராயம்.
சாலை முழுவதும் வேகத்தடை இருந்தாலும் பிரச்சனை. வேகத்தடையே இல்லை என்றாலும் பிரச்சனை. சரியான இடத்தில் நமது தேவையில்லாத வேகத்தை மட்டுப் படுத்தும் நல்ல விஷயமாக அவர்களை என் நினைக்கக்கூடாது?
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
முதல் நாள் வாழ்த்துகள் பழமை.
ReplyDeleteவாங்க வாங்க
ReplyDelete//முத்துலட்சுமிபொன்ஸ், பூர்ணாசிந்தாநதி //
முத்துலட்சுமி, பொன்ஸ் பூர்ணா, சிந்தாநதி ன்னு இருக்கணும்.
வாழ்த்துகள் சார்!
ReplyDeleteஇந்த வாரமும் அறிமுகங்களை எதிர்நோக்கி...
முதல் நாள் வாழ்த்துகள் பழமை பேசி. காத்திருக்கிறோம்... தாங்கள் அறிமுகப்படுத்தப் போகும் வலையுலக நண்பர்களுக்காக...
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்.
"இக்காலப் பசங்களுக்கு சொகுசே பிரதானமாகி விட்டது, சுத்தமா மரியாதையே இல்லை. அரசைத் துச்சமாக நினைக்கிறார்கள். தேகப் பயிற்சி செய்வதை விட வாய்க்கு அதிகப் பயிற்சி கொடுத்து வம்பு பேசவே ஆசைப்படுகிறார்கள். குழந்தைகள் கொடுங்கோலர்களாகி விட்டார்கள். வீட்டுக்கு அடங்குவதில்லை. தாய் தந்தையரை எதிர்த்து பேசுகின்றனர். பெரியவர்கள் வந்தால் மரியாதையாக எழுந்து நிற்பதையே விட்டு விட்டனர். நாசூக்கிலாமல் வாயில் உணவை அடைத்துக் கொள்கின்றனர். ஆசிரியர்களிடம் அடாவடி செய்கின்றனர்."
ReplyDeleteமேலே இருப்பது சமீபத்தில் கி.மு. 399-ல் காலமான சாக்ரட்டீஸ் கூறியதாக இப்போது அறியப்படுகிறது. இல்லை, இது சாக்ரட்டீஸ் சொன்னது இல்லை என்று சிலர் வாது புரிய தயாராகலாம். சரி, சாக்ரட்டீஸ் சொல்லவில்லை. யாரோ பொல்லோனியஸ் கூறியிருப்பார், அரிஸ்டாட்டிலாகக் கூட இருக்கலாம்.
பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_05.html
என்ன, இங்கே சற்றே ரிவர்ஸில் போகிறீர்கள். இருப்பினும் விஷயம் என்னவோ ஒன்றுதான். அதுதான் தலைமுறை இடைவெளி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முதல் நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பின் பழமைபேசி
ReplyDeleteவலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறந்ததொரு பாடலுடன் முதல் இடுகையினை துவங்கியது நன்று.
தலைமுறை இடைவெளி என்பது தவிர்க்க இயலாதது. இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்தும் 2010க்கு முன் - 2010க்குப் பின் என தலைமுறை இடைவெளி காணப்படும்.
துவக்கமே சிறப்பாக அமைந்துள்ளது மகிழ்ச்சி
நல்வாழ்த்துகள்
முதல்நாள் வாழ்த்துகள் நண்பா
ReplyDeleteவலைச்சரத்தில் காரசாரமான விவாதம்!!!
ReplyDeleteசிறப்பு:)
தமிழர்களிடம் ஒத்த கருத்து என எதுவுமே இல்லை என ஆகிவிட்டது!!!
ReplyDeleteவணக்கம்!வருக!வாழ்த்துகள்!
ReplyDelete//சிந்தாநதி //
ReplyDeleteமறைந்த சிந்தாநதி :(
வணக்கமும் நன்றியும் மக்களே! வேலைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறேன். மாலையில் உங்களை எல்லாம் சந்தித்து விவாதிக்க அறிமுகங்களோடு வருகிறேன்!
ReplyDelete//எம்.எம்.அப்துல்லா said...
ReplyDelete//சிந்தாநதி //
மறைந்த சிந்தாநதி :(
//
மறைந்தும் நம்மோடு அவர் வாழ்கிறார் என்பது போலல்லவா உள்ளது. எனினும் எனக்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி.
அன்னாரது புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டிக் கொள்கிறேன்.
முதல் நாள் வாழ்த்துக்கள்..சார்...
ReplyDeleteவாழ்த்துகள் தல!
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteகிருஷ்ணப்பிரபு கூறுவது போல் "வேகத்தை மட்டுப் படுத்தும் நல்ல விஷயமாக அவர்களை என் நினைக்கக்கூடாது" என்ற கருத்தோடு ஒத்துப் போகிறேன்.
முதல்நாள் வாழ்த்துக்கள் ஆசிரியரே
ReplyDelete@@Krishna Prabhu
ReplyDeleteபிரபு, பெரியவர்கள் கூடாது என்பதல்ல, அவர்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்துதல் வேண்டும் என்பதே என் ஆதங்கம்!
@@சின்ன அம்மிணி
காலத்தே உதவி செய்த உங்களுக்கு மிக்க நன்றி!
@@dondu
உங்கள் இடுகையை மிகவும் இரசித்தேன்...நன்றி!
@@திகழ்மிளிர்
@@பாலா.
@@வெங்கிராஜா
@@Suresh Kumar
@@cheena (சீனா)
@@ஆ.ஞானசேகரன்
@@அப்பாவி முரு
@@எம்.எம்.அப்துல்லா
@@குடந்தை அன்புமணி
@@அதிரை அபூபக்கர்
@@வால்பையன்
@@RR
@@அமுதா
@@பிரியமுடன்.........வசந்த்
அனைவருக்கும் நன்றிங்க!