வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Monday, August 17, 2009
சுய அறிமுகம்
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்..
வலைச்சரம், நல்ல நல்ல வலை பூக்களை தன்னிடத்தே கொண்ட ஒரு வலைப்பூச்சரம். இதில் இதுவரை பல திறமைசாலிகள், அனுபவம் மிக்கவர்கள் பூத்தொடுத்திருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து பூத்தொடுக்க இந்த சிறுவனையும் பெரிய மனதுடன் அழைத்த சீனா அய்யா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் கருத்துக்களை அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் இல்லாமல் சொக்கட்டான் ஆடுவதை போன்றதாகும் என்கிறார் திருவள்ளுவர்.
என் நிலையும் கிட்டத்தட்ட அதுதான். பல அனுபவசாலிகள் எழுதிய இந்த தளத்தில் எழுதுவது மிகப்பெரிய பெருமை என்றாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டுமே என்ற பயமும், மிகுந்த தயக்கமும் உள்ளது.
இந்த வலைச்சரத்தின் பெருமைக்கு, குறைவு வைக்காமல் எழுத எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு என்னை பற்றிய சிறிய அறிமுகம்..
எனது பெயர் லோகு.. உலகுக்கே உள்ளாடை கொடுக்கும் டாலர் நகரத்தை சேர்ந்தவன். அச்சம் தவிர் என்ற வலைப்பூவில் கிட்டத்தட்ட 7 மாதங்களாகவும், காதல் மழை என்ற வலைப்பூவில் ஒரு மாதமாகவும் எழுதி வருகின்றேன்.. மொத்த பதிவுகள் 80 யை தாண்டினாலும், சொல்லிக்கொள்ளும் படி எதுவும் எழுதவில்லை.
இருந்தாலும் இதுவரை எழுதியதில் எனக்கு ஓரளவு திருப்தி அளித்தவை இவை தான்..
சொல்லாத காதல்,
தந்தை மகற்காற்றும் உதவி,
தண்ணீர் தேசம்
யார் இந்த தேவதை
பிரிவின் வலி
தேவதை வம்சம் நீயே
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்..
வலையுலகை பொறுத்தவரை நிறைய பதிவர்களோடு பழ்க்கம் இல்லாவிடிலும், அவர்களின் பதிவுகளோடு நல்ல பழ்க்கம் உண்டு. நிறைய படித்து ரசிக்கிறேன் தினமும்.. என்னை கவர்ந்த பல பேரில் சிலரை இனி வரும் இடுகைகளில் பார்ப்போம்..
இந்த வாரத்தை வெற்றிகரமாக முடிக்க ஆசிர்வாதங்களும், அறிவுரைகளும் வழங்குங்கள்!!
நன்றி.. மீண்டும் சந்திப்போம்...
நட்புடன்,
:)
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள் லோகு.
ReplyDeleteதொகுப்புகளை தொடருங்கள்.
சுயம் - சுகம்.
வாழ்த்துகள் திரு லோகு.
ReplyDeleteவாழ்த்துகள் லோகு
ReplyDeleteஏம்ப்பா... சொல்லவே இல்ல? வாழ்த்துகள்.. கலக்குங்க
ReplyDeleteநன்றி ராஜூ (டக்ளஸ்) நண்பா..
ReplyDeleteநன்றி திகழ்மிளிர் அவர்களே..
நன்றி ஜமால் அண்ணா..
நன்றி இராகவன் அண்ணா..
நன்றி வெயிலான் அண்ணா..
நன்றி கார்த்திக் அண்ணா...
வாழ்த்துக்கள் மச்சான்..
ReplyDeleteவாழ்த்துகள் லோகு..கலக்குங்க
ReplyDeleteவாழ்த்துகள் லோகு
ReplyDeleteadichu aadu... machi...
ReplyDeleteவாங்க வாங்க வந்து கலக்குங்க!
ReplyDeleteநன்றி அன்பு மாப்ள..
ReplyDeleteநன்றி தேவன் மாயம் அவர்களே..
நன்றி சொல் அண்ணா..
நன்றி நையாண்டி நண்பா..
நன்றி வால்பையன் அவர்களே..
வாழ்த்துக்கள் லோகு
ReplyDeleteநல்வாழ்த்துகள் நண்ப லோகநாதன்
ReplyDeleteலோகு, வாழ்த்துக்கள்...
ReplyDeleteபயமும் தயக்கமும் கலைந்து, அடித்து ஆட என் பிராத்தனைகள்.
லோகு வாழ்த்துக்கள்மா........
ReplyDeleteஅச்சம் தவிர் கொஞ்சம்தான் பிடிக்கும்
ஆனா காதல் மழையின் ஒவ்வொரு வரிகளும் என்னோட லேப்டாப்பில் அப்டேட் ஆ ஸ்டோர் ஆகிக்கிட்டே இருக்கு.....
கலக்குங்க நண்பா..
ReplyDeleteநன்றி அத்திரி அவர்களே,
ReplyDeleteநன்றி சீனா அய்யா..
நன்றி பீர் அண்ணா..
நன்றி வசந்த் அண்ணா..
நன்றி பட்டிக்காட்டான் அவர்களே..