அன்பின் பதிவர்களே
கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் ஸ்ரீ நான்கு இடுகைகள் இட்டு பல பதிவர்களை அறிமுகப்படுத்தி ஏறத்தாழ அறுபது மறுமொழிகள் பெற்று - ஏற்ற பணியினை குறைவின்றி மன நிறைவுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
அவருக்கு வலைச்சரம் குழுவினரின் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
17 ஆக்ஸ்டுத் திங்கள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் லோகு ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் வயதினில் மிகவும் இளையவர். திருப்பூரில் வசிக்கிறார். மூன்று வலைப்பூக்கள் வைத்திருக்கிறார். இவர் வெள்ளைச்சோறு, புள்ளைப்பூச்சி, அப்பாவி, நல்ல பையன் என ஊரிலே நல்ல பெயர் எடுத்திருந்தாலும் இவர் மிகக் கெட்டவராம். சொல்கிறார்.
பதிவுகளின் முகப்புகள் அலங்காரமாக அமைத்திருக்கிறார். பிடித்த வண்ணங்கள் இரத்தச் சிகப்பும் குளிர்ச்சியான நீலமும். காதல் கவிதைகள் எழுதுவதில் சமர்த்தர்.
அச்சம் தவிர் என்ற பெயரினில் தன்னம்பிக்கையுடன் பதிவு வைத்திருக்கிறார். காதல் மழை என்றொரு பதிவினிலும் கவிதைகளாகக் கலக்குகிறார்.
நண்பர் லோகுவினை வருக வருக - நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்துக - என நல்வாழ்த்துகள் கூறி வரவேறபதில் பெருமை அடைகிறேன்.
சோதனை மறுமொழி
ReplyDeleteநண்பர் ஸ்ரீ தன் கடமையை திறம்பட செய்தமைக்கு நன்றி!!!
ReplyDeleteபாசமிகு தம்பி லொகு விற்கு வாழ்த்துக்கள். ஆசிரியர் பொறுப்பிற்கு தகுதியானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இருவருமே நான் அறிந்தவர்கள், என்னை அறிந்தவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
நன்றி.
ஸ்ரீ அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteலோகுவிற்கு வாழ்த்துகள்.
congrates to SHREE AND a warm welcome to LOGU
ReplyDeleteவாய்ப்பிற்கும் வரவேற்கும் நன்றி அய்யா..
ReplyDeleteநன்றி பீர் அண்ணா..
நன்றி ஜமால் அண்ணா.
நன்றி நையாண்டி நண்பா..
லோகுவிற்கு வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி கார்த்திக் அண்ணா..
ReplyDelete