வலைச்சரத்திலே இரண்டாம் நாள் என் பணியை இனிதே துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி என்றும் போல் இன்றும் எல்லோர் வாழ்விலும் வசந்தம் பூக்க வாழ்த்தி என் பணியை துவக்குகிறேன் .
வந்தமா பதிவுகள் போட்டமா இல்ல நண்பர்களின் பதிவுகளை படித்தமா பின்னூட்டமிட்டமா என்றில்லாமல் ஆக்கபூர்வமான செயல்களை வலை பதிவாளர்கள் செய்கிறார்கள் என்று நினைக்கும் பொது நெகிழ செய்கிறது . வலை பதிவுகள் எழுதுவதில் எத்தனை பேரின் முகத்தை நாம் பார்த்திருப்போம் ? எத்தனை பேருடன் நாம் பேசியிருப்போம் ? வலை பதிவுகள் தந்த வாய்ப்பை பயன் படுத்தி நல்ல நண்பர்களாக நாம் இருக்கிறோம் . நண்பர்களின் இன்ப துன்பங்களில் நேரடியாக பங்குபெற முடியவில்லைஎன்றாலும் வாழ்த்த வேண்டிய நேரத்தில் வலை பதிவினூடாக நாம் வாழ்த்த தவறவில்லை . ஆறுதல் கூற வேண்டிய நேரத்தில் ஆறுதல் கூற தவறவில்லை .
சக பதிவருக்கு ஆபத்து என்றால் இயற்கையாகவே அனைவரும் பதறி போகிறோம் . இப்போது வலைப்பதிவுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியிருப்பது சிங்கை பதிவர் செந்தில் நாதனின் உடல் நலத்தை பற்றி தான் . இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் செந்தில் நாதனுக்கு தேவையான பணத்தில் பெரும் பகுதி வலைப்பதிவாளர்களின் வழியாக சென்றிருக்கிறது என்றால் இந்த நட்பு மிகவும் சக்தி வாய்ந்தது . இன்னும் மீதி தொகையை கூட பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறோம் .
செந்தில் நாதனுக்கு 27 ஆம் தேதி ஏழு மணி நேரம் கொண்ட ஒரு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது அதற்காக பிராத்தனை செய்ய வேண்டியிருக்கிறார்கள் அதை பற்றிய சுட்டி கேவிஆர் பக்கங்கள் தளத்தில் விரிவாக சொல்லியிருக்கிறார்கள்
மேலும் பண உதவி செய்பவர்களை இந்த சுட்டியில் சென்று உங்களது மேலான உதவிகளை செய்யுங்கள் பதிவர் சிங்கை நாதனுக்கு உதவுங்கள் - Very Urgent
நான் இணைய தளத்தை அதிக நேரம் பயன் படுத்த துவங்கியது ஆர்குட் தளத்தில் அதில் எனக்கு முதலில் நண்பனாக வந்த மதிபாலா அவர்கள் . பின்னர் நான் பதிவுலகத்திற்கு வந்த பின்னரும் நண்பனாக தொடர்ந்தார் . அவரின் பதிவுகள் சிலவற்றில் எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அவருடைய பல பதிவுகளை நான் ரசித்திருக்கிறேன் . அவர் மதிபாலா பக்கங்கள் என்ற தளத்தில் எழுதி வருகிறார் அவற்றில் சிலவற்றை உங்களுக்காக நான் தருகிறேன் . அவர் சமீபத்தில் இந்தோனேசியாவை பற்றி எழுத்தினார் இந்தோனேசியாவை பற்றி தெரியாதவர்களுக்கு அந்த நாட்டின் கலாசாரம் , அந்த நாட்டின் தனி தன்மைகள் போன்றவற்றை அழகாக அவருடைய நடையில் எழுதியிருக்கிறார் இந்தோனேஷியா - கடவுளின் குழந்தை....!
இந்தோனேஷியா - கடவுளின் குழந்தை....! பகுதி - 2 .(Indonesia) மற்றும் அவர் பதிவுகளில் என்னை கவர்ந்த குன்னுடையா கவுண்டன் கதை எமன் வாரறதுக்குள்ள பாத்துட்டு சாகணுமுடா - எங்க அம்மத்தா!
யூத் புல் விகடனில் நமது பதிவுகள் வருவது ஒரு அங்கீகாரமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது . இங்கே நான் அறிமுக படுத்தும் நண்பரின் பெரும்பாலான பதிவுகள் விகடன் தளத்தில் பிரசுரமானவை . அது தான் செந்திலின் பக்கங்கள் நல்ல ஒரு எழுத்தாளர் அவருடைய பதிவுகளில் சில உங்கள் பார்வைக்கு எங்க வேண்டுகோளையும் சேர்க்கச் சொல்லுங்க!! - புறா
அன்றாடம் வரும் செய்திகளும் அதற்கான எதிர் கருத்துக்களும் தன் பதிவிலே நறுக்குன்னு போட்டு வருகிறார் பாலா அவர்கள் இப்போது வானம் பாடிகள் என பெயர் மாற்றியிருக்கிறார் அவருடைய பதிவு பாமரன் பக்கங்கள் என்ற தலைப்பில் இருக்கிறது . இவர் நறுக்குன்னு நாலு வார்த்தை என்றே 98 பதிவுகள் போட்டு விட்டார் மிக விரைவில் நறுக்குன்னு நாலு வார்த்தையில் சதமடிப்பார் . இவருடையை ஒவ்வெரு நறுக்குகளும் நச்சென்றே இருக்கும் என்பதில் ஐய்யமில்லை . இவருடைய பதிவுகளில் நான் பரிந்துரைக்கும் பதிவுகள்
நகைசுவையாகவும் கிண்டலாகவும் பதிவுகள் போடுவதில் மிகவும் கெட்டி காரரான இவர் நல்ல நண்பரும் கூட நேரில் பார்க்கவில்லை என்றாலும் அலைபேசி வாயிலாக பேசியிருக்கிறேன் . இவருடைய பதிவின் தலைப்பே குறை ஒன்றும் இல்லை . ராஜகுமாரன் பெயருக்கு குறை ஒன்றும் இல்லாத ராஜா இவருடைய பதிவுகளிளுருந்து சில உங்கள் பார்வைக்கு
இன்றைய நாளை இத்துடன் முடித்து கொள்கிறேன் நாளை மீண்டும் அறிமுகங்கள் தொடரும் அதுவரை உங்கள் தோழன் . உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகூட்ட உதவும் எதிர் பார்கிறேன் நன்றி
அனைவரும் அறிந்த அறிமுகங்கள் செந்தில்,பாலா,ராஜ் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்களும்
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் சுரேஷ்
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்!
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்கள் சுரேஷ்!
அன்பின் சுரேஷ்
ReplyDeleteசிங்கை நாதனுக்காகக் கூட்டுப் பிரார்த்தனை வேண்டுகோளை முதலில் எழுதி பிறகு வழக்கமான பணியினைத் துவங்கியது பாராட்டுக்குரியது நண்பா - நன்றி
பதிவர்கள் தனது பலத்தினைக் காட்டத் துவங்கி விட்டார்கள்
நல்ல இடுகை - நல்வாழ்த்துகள்
பிரியமுடன்...வசந்த் said...
ReplyDeleteஅனைவரும் அறிந்த அறிமுகங்கள் செந்தில்,பாலா,ராஜ் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இரண்டாம் நாள் வாழ்த்துக்களும்////////////
நன்றி வசந்த்
பிரார்த்தனைகள் தொடரும்
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள்.
sakthi said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள் சுரேஷ்/////////////
நன்றி சக்தி
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்!
தொடர்ந்து கலக்குங்கள் சுரேஷ்!//////////
நன்றி ஜோதி பாரதி
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் சுரேஷ்
சிங்கை நாதனுக்காகக் கூட்டுப் பிரார்த்தனை வேண்டுகோளை முதலில் எழுதி பிறகு வழக்கமான பணியினைத் துவங்கியது பாராட்டுக்குரியது நண்பா - நன்றி
பதிவர்கள் தனது பலத்தினைக் காட்டத் துவங்கி விட்டார்கள்
நல்ல இடுகை - நல்வாழ்த்துகள்///////////////
நன்றி அய்யா
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteபிரார்த்தனைகள் தொடரும்
இரண்டாம் நாள் வாழ்த்துகள்.//////////////
பிரார்த்தனைகள் தொடருவோம் நன்றி ஜமால் அண்ணா
வாழ்த்துக்கள்!!! ரொம்ப நன்றிங்க..
ReplyDeleteவலைச்சர வாழ்த்துக்கள் சுரேஷ்...
ReplyDeleteகருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் , நட்பு வேறு என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
உங்கள் அறிமுகம் கண்டு கண்கள் பணித்தது...இதயம் இனித்தது..
நன்றி...நன்றி...
குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDeleteவாழ்த்துக்கள்!!! ரொம்ப நன்றிங்க..///////////
உங்களுக்குக்கும் வாழ்த்துக்கள் நண்பா நன்றி வருகைக்கு
மதிபாலா said...
ReplyDeleteவலைச்சர வாழ்த்துக்கள் சுரேஷ்...
கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் , நட்பு வேறு என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
உங்கள் அறிமுகம் கண்டு கண்கள் பணித்தது...இதயம் இனித்தது..
நன்றி...நன்றி ///////////////////
நன்றி நண்பரே என்றுமே முரண்பாடுகளை தாண்டியும் நாம் நண்பர்களாக இருக்க விரும்புகிறேன்
சிறந்த அறிமுகங்கள் சுரேஷ்...வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். வலைச்சர வாழ்த்துக்கள்.
ReplyDeleteதமிழரசி said...
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள் சுரேஷ்...வாழ்த்துக்கள்..//////////////////
நன்றி தமிழரசி அக்கா
ஜெஸ்வந்தி said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். வலைச்சர வாழ்த்துக்கள்.///////
நன்றி ஜெஸ்வந்தி
அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நண்பர் திரு.செந்தில்நாதன் சீக்கிரம் நலம்பெற்று வீடு திரும்ப இருக்கும் இடத்திலிருந்து எல்லோரும் செய்வோம் ஒரு கூட்டுப்பிரார்த்தனை. http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_24.html
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் சிலர் எனக்கு புதியவர்கள்,... சிங்கை நாதனை பற்றி சொல்லி நெகிழவைத்துவிட்டீர்கள்... அவர் நலபெற எல்லோருடைய சார்பிலும் வாழ்த்துகள்...
ReplyDeleteDear SK
ReplyDeleteThanks a lot. Hope you are the one coordinated from Europe.
Regards
Singai Nathan