Thursday, September 24, 2009

இயக்குநர் பேரரசுவுடன் பதிவர்கள் சந்திப்பு - 2

(இப்பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கு கிளிக்கவும்)

பேரரசு : கதையெல்லாம் ரெடியா இருக்குப்பா..ஓபன் பண்ணினா..ஷ்ரேயாவும் நானும் காலேஜ்ல முதல்தடவையா சந்திக்கிறோம்..அப்ப ஒரு கவிதை..

கதிர் : அட நம்ம ஏரியா..”இரத்தம் சிலிர்த்துக் கொண்டு இருக்கிறது..செதுக்கப்பட்ட கற்கள் கொண்டு..”

பேரரசு : அய்ய..என்னப்பா கவிதை இது..நான் ஒன்னு எழுதியிருக்கேன் பாரு….”தயிர்சாதாம் இந்தாங்க..வடுமாங்காய் ஊறுதுங்கோ..”

என்ன கொடுமை சார் : என்ன கொடுமை சார்….

பேரரசு: யோவ்..என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா..

என்ன கொடுமை சார் : ஐயோ சார்..நான் என்பெயரை சொன்னேன் சார்..

(நான் ஆதவன் ஏதோ சொல்லுவதற்கு வாயைத் திறக்க)

பேரரசு : நீங்க..எதுவும் பேசாதீங்க..விட்டா, வடு மாங்காய்க்கும் பதிவு போடுவீங்க..

அப்பாவி முருகன்: யோவ்..என்னையா இங்க நடக்குது..அந்தப் பக்கம் பார்த்தா, தாமரை அப்படி எழுதுறாங்க..நீங்க தயிர்சாதம் கேக்குறீங்க..என்ன தமிழன்னா இழிச்சவாயனா..

சூரியன் : சார், தயிர்சாதத்துக்கு சைட்டிஷ் என்ன..சரக்குதானே..

பேரரசு : அடப்பாவி..தயிர்சாதத்துக்கு சைட்டிஷ்ஷா..எனக்கு இந்தப் படத்துல கேட்சியா ஏதாவது பஞ்ச் டயலாக் வேணுமேயா..

இராகவன் நைஜீரியா : பிப்ரவரிக்கு அப்புறம் மார்ச்..சூரியனுக்கு எதுக்குயா டார்ச்..

பேரரசு : எங்கயா புடிக்கிறீங்க, இதெல்லாம்

இராகவன் நைஜீரியா : வேறெங்க..பதிவர் சந்திப்புலதான்..சார்..நீங்க ஸ்டண்ட் சீன் எதுவும் எடுக்க வேணாம்..பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்றதுக்கு முன்னாடி ரூமுல எங்கயாவது கேமிராவை ஒளிச்சி வைச்சிருவோம்..ஆக்சன் எல்லாம் செமையா இருக்கும்..செலவு மிச்சம்..

“கண்டுபிடிச்சுடேன்..சும்மா விட மாட்டேன்..இப்படி துரோகம் பண்ணிட்டாயிங்களே..” என்ற குரல் கேட்டு எல்லாரும் திரும்புகின்றனர்..

(கையில் பிரிண்ட் அவுட்டுக்களுடன் உண்மைத் தமிழன்)

உண்மைத் தமிழன் : சார்..நாந்தான் சார்..ரெண்டு மூணு ஸ்கிரீன்ஷாட் எடுக்கறதுல கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு..ஆதாரங்களை பிரிண்ட் அவுட் வேற எடுக்கனும் பாருங்க..ஜெராக்ஸ் கடையில பதிவர்கள் கூட்டம் வேற ஜாஸ்தி ஆகிடுச்சு..

பேரரசு : (தலையை சொரிந்து கொண்டு) ஒன்னும் புரியலையே..ஆபிஸ் வேலையெல்லாம் இப்ப எதுக்கு பார்க்குறீங்க..நீங்க பதிவுலகத்துலதானே இருக்கீங்க..

தாரு(பெரும்படை அய்யனார்) : இது வேற..வேணாம் விட்டிறுங்க..ஏற்கனவே பிரச்சனையாகி கிடக்கு..விடுங்கண்ணே..பிரபல பதிவர்னாலே இப்படித்தான் கஷ்டபட வேண்டியிருக்கும்.

உண்மைத்தமிழன் : அவரு மட்டும் அந்த டாபிக்கை பத்தி எழுதாம இருந்திருந்தா, இவ்வளவு பேச்சு வந்திருக்காது..

வால்பையன் : நீங்க யாரைச் சொல்லுறீங்கன்னு தெரிஞ்சு போச்சு..லக்கி, இது பத்தி உங்க கருத்து என்ன..

லக்கிலுக் : ஆளப்பிறந்தவன்..ஆத்திரப்படமாட்டேன்..

பேரரசு : ஆஹா..சூப்பர் டைட்டில் கிடைச்சுருச்சு..

லக்கிலுக் : ஆஹா..கேப்புல கடா வெட்டுறாரே,,,என்னைப் படிக்கும் ஏழரை லட்சம் வாசகர்களுக்கு நான் என்ன…

பரிசல்காரன் : ஆ..உங்களை படிக்கிறவங்களுக்கு ஏழரையா..வால்பையன் இவர் என்னங்க சொல்லுறாரு..

(வால் பையன் ஏதோ சொல்ல வர)

லக்கிலுக் : ஏ இருப்பா..நானே சொல்லிடுறேன்..ஏழரை லட்சம் வாசகர்களை சொன்னேன்..

அப்பாவி முருகன்(அப்பாவியாய்): ஏண்ணே..தமிழ்நாட்டுல மொத்தம் இன்டெர்நெட் படிக்கிறதே ஒரு லட்சம்தான் ஒரு ஆய்வு சொல்றதே..இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க

ராம்ஜி யாகூ : முருகன்..தெலுங்கு, கன்னட, மலையாள இந்தி வாசகர்களை சேர்த்தா ஏழு லட்சம் வருதே..

டோண்டு : ஸ்,..,அப்பா..என்ன வெயிலு..ஒரு நாளைக்கு எத்தனை கேள்வி..பதில் சொல்லியே மாய்ஞ்சு போயிட்டேம்பா….

லக்கிலுக் : பின்ன..இருக்காதா..அம்புட்டு கேள்வியையும் எழுதிட்டு, பதிலும் எழுதுறது கஷ்டம்தானே..

(வால்பையன் திரும்பவும் ஏதோ சொல்லவர)

லக்கிலுக் : ஏ இருப்பா..நான் சும்மா ஜோக்குக்கு சொன்னேன்..

பேரரசு : அய்யா..என் படத்துக்கு ஐடியா கேட்டது தப்பாயா..ஒருத்தரும் நல்ல ஐடியா சொல்ல மாட்டிங்குறாயிங்க..சரி...எல்லாம் பசியில இருப்பீங்க போல..இருங்க கொரிக்க வேர்க்கடலையும், போலியும் கொண்டு வரச் சொல்லுறேன்..

“போலியா…” எல்லாரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்

(அலும்பு நாளை தொடரும்..)

22 comments:

  1. ஹா ஹா ஹா.. தொடருங்க தொடருங்க.. :-)

    ReplyDelete
  2. நல்லா இருக்கு ...தொடரவும்...

    ReplyDelete
  3. அழிம்பின் உச்சக்கட்டம். அசத்துறீங்க ராஜா.

    ReplyDelete
  4. நல்லா இருக்கு ராசா :)

    ReplyDelete
  5. //(அலும்பு நாளை தொடரும்..)//

    ஆகா!

    ReplyDelete
  6. நான் ஆதவன்: [ ஏதோ சொல்ல வர..]
    //பேரரசு : நீங்க..எதுவும் பேசாதீங்க..விட்டா, வடு மாங்காய்க்கும் பதிவு போடுவீங்க..//
    பெசிர பப்புவுக்கே இவ்ளோ terror ஆ?
    //நான் ஆதவன்: நாளைக்கு இன்னொரு வித்தியாசமான டிஷ் பண்றேன்//
    நாளைக்கு இருக்கு ராசா உங்களுக்கு... ஆதவன்-ண்ணே அந்த டிஷ் எ ஆவலோடு எதிர் பாக்குறோம் .... கமான் குவிக்... [நன்றி UPO மோகன் லால்]

    அலும்புக்கு வாழ்த்துக்கள் ராசா அண்ணே..

    ReplyDelete
  7. //….”தயிர்சாதாம் இந்தாங்க..வடுமாங்காய் ஊறுதுங்கோ//

    பேரரசுக்கே கவிதை சொல்லச்சொன்னா எப்டீங்க ராசா...

    அடையாளப் படுத்தியமைக்கு நன்றிகள் பல

    பின்னி எடுக்கிறீங்க

    அநேகமா அடுத்தபட கதாநாயகன் நீங்களாக்கூட இருக்கலாம்

    ReplyDelete
  8. ராசா, கலக்கு கலக்குன்னு கலக்குறீங்களே...

    வாழ்த்துகள். . .

    ReplyDelete
  9. ஹஹஹ...

    கலக்குங்க :)

    ReplyDelete
  10. கடைச்வரைக்கும் நான் சொல்லவேயில்லையா!

    அவ்வ்வ்வ்வ்வ்!

    சூப்பர் தல!
    மீண்டும் ஒருமுறை சொல்லி கொள்கிறேன்

    வித்தியாசமான முயற்சி!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அழி(>?>) ன் உச்சக்கட்டம்

    ReplyDelete
  12. ///////////////////
    சென்ஷி said...
    ஹா ஹா ஹா.. தொடருங்க தொடருங்க.. :-)
    September 24, 2009 10:31:00 AM IST
    /////////////////////
    நன்றி சென்ஷி..

    ReplyDelete
  13. /////////////////
    அமுதா கிருஷ்ணா said...
    நல்லா இருக்கு ...தொடரவும்...

    September 24, 2009 10:48:00 AM IST
    /////////////////
    நன்றி அமுதா..

    ReplyDelete
  14. ///////////////
    வானம்பாடிகள் said...
    அழிம்பின் உச்சக்கட்டம். அசத்துறீங்க ராஜா.

    September 24, 2009 11:31:00 AM IST
    ///////////////
    நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  15. //////////////////
    ☀நான் ஆதவன்☀ said...
    நல்லா இருக்கு ராசா :)

    September 24, 2009 11:32:00 AM IST
    //////////////////
    நன்றி ஆதவன்..

    ReplyDelete
  16. ////////////////
    taaru said...
    நான் ஆதவன்: [ ஏதோ சொல்ல வர..]
    //பேரரசு : நீங்க..எதுவும் பேசாதீங்க..விட்டா, வடு மாங்காய்க்கும் பதிவு போடுவீங்க..//
    பெசிர பப்புவுக்கே இவ்ளோ terror ஆ?
    //நான் ஆதவன்: நாளைக்கு இன்னொரு வித்தியாசமான டிஷ் பண்றேன்//
    நாளைக்கு இருக்கு ராசா உங்களுக்கு... ஆதவன்-ண்ணே அந்த டிஷ் எ ஆவலோடு எதிர் பாக்குறோம் .... கமான் குவிக்... [நன்றி UPO மோகன் லால்]

    அலும்புக்கு வாழ்த்துக்கள் ராசா அண்ணே..

    September 24, 2009 11:48:00 AM IST
    /////////////////////
    நன்றி தாரு..

    ReplyDelete
  17. /////////////////
    கதிர் - ஈரோடு said...
    //….”தயிர்சாதாம் இந்தாங்க..வடுமாங்காய் ஊறுதுங்கோ//

    பேரரசுக்கே கவிதை சொல்லச்சொன்னா எப்டீங்க ராசா...

    அடையாளப் படுத்தியமைக்கு நன்றிகள் பல

    பின்னி எடுக்கிறீங்க

    அநேகமா அடுத்தபட கதாநாயகன் நீங்களாக்கூட இருக்கலாம்

    September 24, 2009 12:30:00 PM IST
    ///////////////////////
    ஹீரோவா..ஆத்தாடி..ஏன் இந்த கொலைவெறி..

    ReplyDelete
  18. /////////////////////
    அப்பாவி முரு said...
    ராசா, கலக்கு கலக்குன்னு கலக்குறீங்களே...

    வாழ்த்துகள். . .

    September 24, 2009 8:04:00 PM IST

    /////////////////////
    நன்றி முருகன்..

    ReplyDelete
  19. /////////////////
    Mãstän said...
    ஹஹஹ...

    கலக்குங்க :)

    September 24, 2009 10:50:00 PM IST


    வால்பையன் said...
    கடைச்வரைக்கும் நான் சொல்லவேயில்லையா!

    அவ்வ்வ்வ்வ்வ்!

    சூப்பர் தல!
    மீண்டும் ஒருமுறை சொல்லி கொள்கிறேன்

    வித்தியாசமான முயற்சி!

    வாழ்த்துக்கள்!

    September 24, 2009 10:56:00 PM IST


    Suresh said...
    Waiting sema

    September 24, 2009 11:59:00 PM IST


    ஜோதிஜி. தேவியர் இல்
    ////////////////////
    நன்றி மஸ்தான், சுரேஷ், வால்பையன்..ஜோதி..

    ReplyDelete
  20. முடியல அய்யா சாமி

    ReplyDelete