முதல்நாள் மாதிரி இல்லாமல்,
இரண்டாம் நாள் லேட்டாவந்ததற்கு பரிகாரமா
மூனாவதுநாள் அதிகாலையிலேயே வந்து
உங்களை குசிபடுத்தின சந்தோசத்தோட
நான்காம் நாளான இன்றைய படையலை கவனிப்போமா..
இன்று நமது அறிமுக நாயகர்கள் ஆறுபேரில் 33.33 சதவிகிதத்தினர் அதாவது இருவர் தங்களின் வலைப்பூவிற்கு ஃபாலோவர்களே வேண்டாம் என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை..
அவர்களின் வலைப்பூவில் அதற்கான விட்ஜெட்டே வைக்கவில்லை..
இதன் காரணமாகவே அவர்களை இங்கு அறிமுகப்படுத்தவா வேண்டாமா என்றொரு சந்தேகம் எழுந்தது..
இங்கு அறிமுகப்படுத்தப்படும் வலைப்பூக்களை நம் வலைச்சர வாசகர்கள் சென்று கண்டு ஃபாலோவராகவிரும்பினாலும் அதற்கான வாய்ப்பு அங்குஇல்லைஎன அறிந்து வருத்தப்படுவார்களோ என்ற ஒரு சிறிய சந்தேகத்தினாலேயே அந்த வலைப்பூக்களை அறிமுகப்படுத்த சற்று யோசித்தேன்..
இப்படி ஃபாலோவர் ஆவதற்கான விட்ஜெட் இல்லையென்ற ஒரே காரணத்திற்காக இந்த வலைப்பூக்களை ஒதுக்கிவைக்க மனம் வரவில்லை..
அதனால் இன்றைய அறிமுக நாயகர்களில் 3.33 சதவிகித நாயகர்களின் வலைப்பூக்கள் ஃபாலோவர் விட்ஜெட் இல்லாத வலைப்பூக்களாய் நமது இன்றைய படையலில்..
வாருங்கள் இன்றைய படையலை ருசிக்கலாம்..
நேற்று மிக நேரத்தில் வந்து உங்களை மகிழ்வித்ததால் ஏற்கனவே ஒரு புன்சிரிப்போடுதான் உள்ளீர்கள் என்பதால், இன்று முதல் பதார்த்தமாய் கதைகள் நிறைந்ததொரு வலைப்பூவினை பதம் பார்ப்போம்..
கேட்ச் பிடி'னா என்ன..? பிடி பிடி'னு அர்த்தமா.. இல்லை, கேட்ச் கேட்ச்'னு அர்த்தமா..
எதுக்கு ஒன்னையே ரெண்டுதபா சொல்றோம்..
அதே மாதிரிதான் இவரும்..
இவரோட வலைப்பூவினை நிலாவின் பக்கங்கள்னு சொல்லிருக்கலாம்.. இல்லைனா, மதியின் பக்கங்கள்னு சொல்லிருக்கலாம்..
ஆனா இவரோ தனது வலைப்பூவினை நிலாமதியின் பக்கங்கள்.'னு சொல்றார்..
இவரின் வலைப்பூ முகவரி http://mathinilaa.blogspot.com
ஏப்ரல் மாதத்திலிருந்து எழுததுவங்கயுள்ள இவர் இடையில் இரண்டு மாதங்கள் காணாமல் போய்விட்டு மீண்டும் வந்துள்ளார்..
மொத்தம் இம்மாதத்தையும் சேர்த்து நான்கு மாதங்களில் 41 இடுகைகளிட்டுள்ளார்..
தளராமல் கதைகள் பலவற்றால் தனது வலைப்பூவினை அலங்கரித்துவரும் இவரை, அவரின் வலைப்பூ சென்று வலைச்சரம் சார்பாக உற்சாகப்படுத்துங்களேன்..
இவரின் வலைப்பூவின் பெரும்பகுதி கதைகளாகவே நிரம்பி வழிகின்றன..
இவரின் கதைகளை ஒவ்வொன்றாக விமர்சித்தால் நாளைய ஆசிரியர் பணிக்கு நேரிடையாக சென்று அமர்ந்துகொள்ளவேண்டிய அளவிற்கு நேரம் தேவைப்படும் என்பதால், இங்கு இவரைப்பற்றி இத்தோடு நிப்பாட்டிங்.. மீதியை அங்கு சென்று காணவும்..
அடுத்து, பகீரதனின் ஆகாய கங்கை என்ற வலைப்பூவினை காண்போம்..
இவரின் வலைப்பூ முகவரி http://bakeera.blogspot.com/
இவர் இறுதியாக கோப்பியை சுவையுங்கள் ....கப்பை அல்ல என்றொரு சிறுகதை மூலம் வாழ்க்கையை வாழும் முறையை தத்துவமாக ஒரு குட்டிக்கதையின் மூலம் விளக்கியுள்ளார்.
இலங்கை பதிவர் சந்திப்பைப்பற்றி பல புகைப்படங்களுடன் அழகாக விவரித்துள்ள பதிந்தோம் சந்தித்தோம்....! என்ற இடுகைக்கு பாவம் இதுவரை யாரும் கருத்து தெரிவிக்கவில்லை..
அந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்களாச்சும் இவரை உற்சாகப்படுத்தி இருக்கலாம்..
இவரின் வலைப்பூவில் எனக்கு இதுகொஞ்சம் வருத்தமளிக்கும் ஒன்றாக அமைந்துவிட்டது..
இப்போது நேரமின்மையால் அவரின் வலைப்பூ சென்று உற்சாகப்படுத்த இயலவில்லை எனினும், இங்கு அறிமுகப்படுத்தியதோடு விரைவில் நானும் பின்னூட்டம் மூலம் அவரை உற்சாகப்படுத்த உத்தேசித்துள்ளேன்..
வலைச்சர நண்பர்களே.. நீங்கள் என்ன செய்வதாய் உத்தேசம்..
இன்னும் பல சுவாரசியமான இடுகைகள் கொண்டுள்ள இவரின் வலைப்பூ சென்று அவரை உற்சாகப்படுத்துங்கள் நண்பர்களே..
அடுத்து..
ஆட்டோ ஓட்டுறவன் ஆட்டோகாரன்..
காரில் செல்பவன் கார்க்காரன்..
அப்படியெனில்,
கடற்கரைக்காரனாய் இருக்க என்ன வைத்திருக்கவேண்டும்..?
இவரின் வலைப்பூ பெயர்கடற்கரைக்காரன்..
வலைப்பூ முகவரி http://enmaganezhilan.blogspot.com/
இவர் படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் சில பல இடுகைகளிட்டுள்ளார்..
அவற்றில் சிலது சாப்பிட சென்ற இடத்தில் மடித்துக்கொடுக்க பயன்படுத்திய துண்டு பேப்பரில் உள்ளவற்றை படித்ததையும் பகிர்ந்துள்ளார்..
அவற்றின் சுட்டி இணைப்புகளை இங்கு கொடுத்தால் இந்த இடுகையே ஒரு மினி கடற்கரைக்காரன் ஆகிவிடும்.. அவ்வளவு சுட்டிகள் தரவேண்டி இருக்கும்.. அவ்வளவு இருக்கு..
இதுபோக, இவர் தனது பயண அனுபவங்கள், உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக ஒரு கதை என்று பலவற்றை பகிர்ந்துள்ளார்..
இப்படி பலவகைப்பட்ட இடுகைகளைகொண்ட இவரின் வலைப்பூவினை என்னவென்று வகைப்படுத்துவதென தெரியவில்லை.. அதனால் இதனை பொது என்ற வகையில் சேர்க்க உத்தேசித்துள்ளேன்..
நான் முன்னமே தெரிவித்த ஃபாலோவர் விட்ஜெட் இணைக்கப்படாத உயர்ந்த உள்ளங்களில் இவருடையதும் ஒன்று..
அது இணைப்பது இணைக்காதது அவரின் விருப்பம்.. நம் விருப்பம் அவரை மேலும் பல இடுகைகளிட உற்சாகப்படுத்துவது.. வாருங்கள் நண்பர்களே.. நாம் நம் கடமையை செய்வோம்.. அவரை உற்சாகப்படுத்துவோம்..
என்ன நண்பர்களே.. ரொம்ப போரடிச்சிட்டேனா..
சரி.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க இந்தவார பதார்த்தங்களில் முதல் முறையாக திரைப்படம் தொடர்பானதொரு வலைப்பூவினை அறிமுகப்படுத்துகிறேன்..
இந்த வலைப்பூ நண்பரும் நம்மை ரிலாக்'ஷாத்தான் இருக்க சொல்லுவார்போலும்.. இதற்காகவே தனது வலைப்பூவிற்கு ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று பெயர் சூட்டியுள்ளார்..
வலையுலகில் எனக்கு ரொம்ம்ம்ப சீனியரான இவர், 2008'ல் இருந்து இதுவரை பல திரைப்படங்களை மானாவாரியாக அலசிஎடுத்துள்ளார்..
இவரின் வலைப்பூ முகவரி http://timeforsomelove.blogspot.com/
வலைச்சர வாகர்களுக்கு இவரின் வலைப்பூவில் மீ தி ஃபஸ்ட்டேய் போடுவதற்காக ஃபாலோவர் விட்ஜெட் காத்துக்கொண்டுள்ளது..
இவரின் வலைப்பூ பிடித்திருந்தால் ஃபாலோவர் விட்ஜெட்டில் மீ தி ஃபஸ்ட்டேய் போடுங்களேன்..
சரி.. ரிலாக்ஸ் பண்ணியாச்சுல்ல..
அப்டியே இன்னும்கொஞ்சம் ஒருபடிமேலேபோய் சிரிக்க, நகைச்சுவை பக்கம் செல்வோம்..
செல்வனூரான் இவன் பச்சைத் தமிழன் என்ற வலைப்பூவினில் எழுதிவரும் இவர் கடந்த மாதமே எழுதத்தொடங்கிய நெம்ப புதிய பதிவர்..
இவரின் வலைப்பூ முகவரி http://selvanuran.blogspot.com
கடந்த ஆகஸ்ட்டு மாதத்தில் பல நகைச்சுவை இடுகைகளுடன் (படிச்சா சிரிப்பு வருமான்னு தெரியலை.. ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க..) கலக்கிஎடுத்துள்ள நண்பர், இம்மாதம் கணினி தொடர்பான Excel சூத்திரங்கள் என்ற தலைப்பில் இரண்டு இடுகைகளிட்டுள்ளார்..
இவரும் ஃபாலோவர் விட்ஜெட் இணைக்காத நல்லுள்ளங்களில் ஒருவராக உள்ளார்..
வழக்கம்போல் நாம் நம் கடமையைஆற்றுவோம்.. வாருங்கள் அவரின் வலைப்பூவிற்கு..
அடுத்து கணினி மென்பொருள் தொடர்பான வலைப்பூ..
இவரும் 2008'லேயே எழுத தொடங்கிவிட்ட வலையுலக சீனியர்தான்..
இவருக்கு மென்பொருள்களைக்கொண்டு புதியதொரு யுகத்தினை அமைக்க உத்தேசம்போலும்..
அதனால்தானோ என்னவோ இவர் தனது வலைப்பூவிற்கு புதிய யுகம் என்றே பெயரிட்டுள்ளார்..
இவரின் வலைப்பூ முகவரி http://pudhiyayugam.blogspot.com/
வெகு சமீபத்திய குறுஇடுகையாக அறிமுகம் நோக்கியா நெட் புக் என்ற தலைப்பில் நோக்கியா நெட் புக் ஒன்றைப்பற்றின கான்பிகுரேசன் மற்றும் அந்த நெட்புக்கிலுள்ள வசதிகளைப்பற்றி சுருக்கமாக கூறியுள்ளார்..
மென்பொருள் தொடர்பான இடுகைகளுக்கு இடையில் ஓஷோ தியானமுறைகள், ஐ.பி.எல் - ஆட்டமா பித்தலாட்டமா!! போன்ற வேறு துறைகள் சார்ந்த இடுகைகளும் இட்டுள்ளார்..
வலைச்சர நண்பர்களே.. அவர் அவரின் கடமையை ஒழுங்காக செய்கிறார் போலும்.. வாருங்கள் அவரின் வலைப்பூ சென்று நாமும் நம் கடமையை சிறப்பாய்ஆற்றுவோம்.. அவரை உற்சாகப்படுத்துவோம்..
சரி நண்பர்களே.. இன்றைய கடமையை, பணியை நல்லமுறையில் முடித்திருப்பேன் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்..
மீண்டும் நாளை சந்திப்போம்.. நன்றி..
கடுமையான களப்பணி எழுத்தில் தெரிகிறது.
ReplyDeleteஅறிமுகப்படுத்தியவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்கள்.
முயற்சிக்கிறேன்.
மீ த பஸ்ட்டுடன், வாழ்த்திகிறேன்
அன்பின் சுரேஷ்
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை - கடும் உழைப்பு - அதிகாலை - நள்ளிரவு முடிவு - பலன் பயன் தரக்கூடிய அறிமுகங்கள் - உடல் நலனைப் பார்த்துக் கொள்
நல்வாழ்த்துகள்
சீனா அண்ணே சொன்னமாதிரி ஒடம்ப பார்த்துக்கோ ராசா
ReplyDeleteநான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் !!
ReplyDeleteராசா உனக்கு இம்புட்டு பலமா? கடுமையான உழைப்புதான்.
ReplyDeleteஒத்துக்கறேன் :))
எப்பூடி இப்படி ???
சுரேஷ்!
ReplyDeleteஇப்படித்தான் புதியவர்களை அறிமுகப்படுத்த வேண்டும்!!!வாழ்த்துக்கள்!!
ம்ம்ம்.. புதியவர்கள் அனைவரையும் முடிந்தவரை படித்து விடுகிறேன்.
ReplyDeleteநன்றி புது அறிமுகங்களுக்கு!!
நான்காம் நாள் வாழ்த்துக்கள் சுரெஷ்
ReplyDeleteகடுமையான களப்பணி எழுத்தில் தெரிகிறது.
ReplyDelete//
ரிப்பீட்டேய்ய்
எல்லாம் சொல்லிட்டாங்க இன்னும் நான் என்ன சொல்ல...அவங்களை அறிமுகப் படுத்திதாவது தெரியுமா? இதை படித்து விட்டாவது ஃப்ளோயர்ஸ் விட்ஜெட் போடறாங்களான்னு பார்கலாம்.. வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்று பல்சுவை பலகாரம்!
ReplyDelete//முதல்நாள் மாதிரி இல்லாமல்,
ReplyDeleteஇரண்டாம் நாள் லேட்டாவந்ததற்கு பரிகாரமா
மூனாவதுநாள் அதிகாலையிலேயே வந்து
உங்களை குசிபடுத்தின சந்தோசத்தோட
நான்காம் நாளான இன்றைய படையலை கவனிப்போமா//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆ!
இப்பவே கண்ணைக் கட்டுதே!
இப்படியே போச்சுன்னா ஏழாவது நாள்ல இந்த பாராவே ஒரு பதிவா போடுவீங்களா?
கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
ReplyDeleteசுரேசின் சாதனைகளை மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள்!
நான்காம் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteமிகவும் வித்தியாசமான பார்வையோடு
ReplyDeleteபுதியவர்களாய் அறிமுகம்
வாழ்த்துகள்ப்பா.
நான்காம் நாள் வலைச்சரம் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபுது புதுப் பதிவர்கள் அறிமுகம். நன்றாக இருக்கின்றது. நன்றியுடன் வாழ்த்துகளும்.
//
ReplyDeleteஅப்பாவி முரு said...
கடுமையான களப்பணி எழுத்தில் தெரிகிறது.
அறிமுகப்படுத்தியவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்கள்.
முயற்சிக்கிறேன்.
மீ த பஸ்ட்டுடன், வாழ்த்திகிறேன்
//
ரொம்ப நன்றிங்க அப்பாவி முரு..
மீதமுள்ள மூன்று நாற்களுக்கும் கண்டிப்பாக வாருங்கள்..
//
ReplyDeletecheena (சீனா) said...
அன்பின் சுரேஷ்
அறிமுகங்கள் அருமை - கடும் உழைப்பு - அதிகாலை - நள்ளிரவு முடிவு - பலன் பயன் தரக்கூடிய அறிமுகங்கள் - உடல் நலனைப் பார்த்துக் கொள்
நல்வாழ்த்துகள்
//
இப்டியே சொல்லிட்டு இருந்தா நெசமாவே ஒடம்புக்கு ஏதாவது வந்திடுமோன்னு யோசிச்சு யோசிச்சே வாத்தி வேலைய பாக்கமுடியாம போய்டும் ஆமா..
//
ReplyDeleteபாலா said...
சீனா அண்ணே சொன்னமாதிரி ஒடம்ப பார்த்துக்கோ ராசா
//
கண்டீப்பா பாலா..
அன்புக்கு நன்றி..
//
ReplyDeleteRAMYA said...
நான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் !!
//
நன்றி அக்கா..
நாளைக்கு வாழ்த்த வரமுடியாதுல.. சரி.. பத்திரமா போய்ட்டு வாங்க..
//
ReplyDeleteRAMYA said...
ராசா உனக்கு இம்புட்டு பலமா? கடுமையான உழைப்புதான்.
ஒத்துக்கறேன் :))
எப்பூடி இப்படி ???
//
எல்லாம் உங்களைப்போன்றோரின் ஆதரவினால் தானாக வருவதுதான்..
//
ReplyDeleteதேவன் மாயம் said...
சுரேஷ்!
இப்படித்தான் புதியவர்களை அறிமுகப்படுத்த வேண்டும்!!!வாழ்த்துக்கள்!!
//
நன்றி தேவன் மாயம்..
மீதமுள்ள மூன்று நாற்களுக்கும் வந்து ஆதரவுதாருங்கள்..
//
ReplyDeleteS.A. நவாஸுதீன் said...
நான்காம் நாள் வாழ்த்துக்கள் சுரெஷ்
//
வாழ்த்துக்களுக்கும் ஃபாலோவர் ஆனதற்கும் நன்றிகள் S.A. நவாஸுதீன்..
//
ReplyDeleteமின்னுது மின்னல் said...
கடுமையான களப்பணி எழுத்தில் தெரிகிறது.
//
ரிப்பீட்டேய்ய்
//
நெம்ப நன்றி மின்னலு..
//
ReplyDeleteதமிழரசி said...
எல்லாம் சொல்லிட்டாங்க இன்னும் நான் என்ன சொல்ல...அவங்களை அறிமுகப் படுத்திதாவது தெரியுமா? இதை படித்து விட்டாவது ஃப்ளோயர்ஸ் விட்ஜெட் போடறாங்களான்னு பார்கலாம்.. வாழ்த்துக்கள்...
//
ம்ம்.. இனியாவது போடுராங்கலானு பார்ப்போம்..
நன்றி அக்கா..
ஒன்னும் சொல்லுறாப்ல இல்லை..
ஏன் இன்னைக்கு இவ்ளோ லேட்டா வந்திருக்கீங்க..
//
ReplyDeleteவால்பையன் said...
இன்று பல்சுவை பலகாரம்!
//
பலகாரத்தை சுவைத்தமைக்கு நன்றி வால்பையன்..
//
ReplyDeleteநாமக்கல் சிபி said...
//முதல்நாள் மாதிரி இல்லாமல்,
இரண்டாம் நாள் லேட்டாவந்ததற்கு பரிகாரமா
மூனாவதுநாள் அதிகாலையிலேயே வந்து
உங்களை குசிபடுத்தின சந்தோசத்தோட
நான்காம் நாளான இன்றைய படையலை கவனிப்போமா//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆ!
இப்பவே கண்ணைக் கட்டுதே!
இப்படியே போச்சுன்னா ஏழாவது நாள்ல இந்த பாராவே ஒரு பதிவா போடுவீங்களா?
//
அத ஏழாவது நாள் அன்னைக்கு யோசிப்போம்..
அன்னைக்கு ஞாயிறுவேறு.. எப்படி வலைச்சர வேலைக்கு வரபோறேனு தெரியலை..
//
ReplyDeleteநாமக்கல் சிபி said...
கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
சுரேசின் சாதனைகளை மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள்!
//
எவ்ளோ நேரம்தான் நானும் வலிக்காதமாதிரியே நடிக்கறது.. போதும்யா சாமி..
//
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
நான்காம் நாள் வாழ்த்துகள்.
//
வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா..
//
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
மிகவும் வித்தியாசமான பார்வையோடு
புதியவர்களாய் அறிமுகம்
வாழ்த்துகள்ப்பா.
//
மீண்டுமொருமுறை நன்றிகள்பல ஜமால் அண்ணா..
//
ReplyDeleteஇராகவன் நைஜிரியா said...
நான்காம் நாள் வலைச்சரம் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.
புது புதுப் பதிவர்கள் அறிமுகம். நன்றாக இருக்கின்றது. நன்றியுடன் வாழ்த்துகளும்.
//
கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி இராகவன் அண்ணா..
அடங்கொன்னியா..
ReplyDeleteநீங்கல்லாம் கமன்ட் பண்ணிருக்கற அழகா பார்த்தா, எனக்கென்னவோ இன்னைக்கு யாரும் போஸ்ட்ட முழுசா படிச்சு கமென்ட் போட்டாமாதிரி தெரியலையே..
கொஞ்சம் லேட் மாமு...(நாங்க வாத்தியாரையெல்லாம் அப்பிடித்தான் கூப்பிடுவோம்)
ReplyDeleteநான்காம் நாள் வாழ்த்துக்கள்
//
ReplyDeleteபிரியமுடன்...வசந்த் said...
கொஞ்சம் லேட் மாமு...(நாங்க வாத்தியாரையெல்லாம் அப்பிடித்தான் கூப்பிடுவோம்)
நான்காம் நாள் வாழ்த்துக்கள்
//
லேட்டாவந்து லேட்டஸ்ட்டா கூப்டுரிங்களோ..
வாழ்த்துக்களுக்கு நன்றி வசந்த்..
நாளைக்காச்சும் நேரத்துலவாங்க..
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
என் வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி
ReplyDeleteதொடருட்டும் உங்கள் சேவை.