பிறந்த மண்ணைவிட்டுவிட்டு வேலைக்காக வேறு ஊரில் இருப்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத கொடுமை...என்னதான் வேலை செய்கிற ஊரில் இருந்தாலும் நம்ம ஊர்லே வேலையில் இருந்தால் நல்லா இருக்குமே என்ற எண்ணம் மனதின் ஒரு ஓரத்தில் எப்போதும் இருக்கும்..குறிப்பா பண்டிகை காலங்களில் நம் மனது சொந்த ஊரைத்தான் நினைக்கும்....பதிவுலகிலும் அப்படித்தான் நம்ம ஊர்க்காரங்க யாரும் இருக்க மாட்டாங்களா என்ற விசாரிப்பு இங்கேயும் உண்டு. எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம் என்றாலும் மதுரையிலிருந்தே எனது ஊரை கணக்கில் எடுத்திருக்கிறேன்......
பதிவுலகில் தங்கமணி என்றாலே ஆதி அண்ணன் தான் ஞாபகத்திற்கு வருவார்....தற்போது அச்சு ஊடகத்துறையிலும் கலக்கி வருகிறார்...அன்றாட வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையில் நிகழும் சம்பவங்களை நகைச்சுவையோடு எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே.......
பதிவு 1
பதிவு 2
கடையம் ஆனந்த் எனது ஊருக்கு மிக அருகில் உள்ளவர்..என்னோட மாப்பிள்ளை...எந்த விசயத்தையும் மென்மையாக எழுதக்கூடியவன்..
பதிவு 1
பதிவு 2
புளியங்குடி புயல் நசரேயன் அண்ணாச்சி அமெரிக்காவில் இருந்தாலும் இவர் பதிவில் எங்க ஊர்வாசம் தூக்கலா இருக்கும்
பதிவு 1
பதிவு 2
துபாய் ராஜா இவரின் கவிதைகள் மிக அருமையாக இருக்கும்.........
பதிவு 1
பதிவு 2
ஆடுமாடு இவரின் கதைகளில் நெல்லை மாவட்டத்து வட்டார மொழி கலகலக்கும்.
பதிவு 1
பதிவு 2
ராமலஷ்மி அக்கா கதை கவிதை என கலக்குவார்
பதிவு 1
பதிவு 2
நையாண்டி நைனா பெயருக்கேற்றார்போல் நையாண்டியில் கலக்குபவர் மும்பையில் இருந்தாலும் சொந்த ஊர் நெல்லை..
பதிவு 1
பதிவு 2
கா.பா என்று அன்போடு அழைக்கப்படும் அன்பு நண்பர் பன்முகப்பதிவர்
பதிவு 1
பதிவு 2
அறிவிழி தற்போது இவர் எழுதுவதில்லை.....இவரின் அரசியல் பதிவுகளில் தீப்பொறி பறக்கும்
பதிவு 1
பதிவு 2
ஸ்ரீ இவரும் பன்முகப்பதிவர்தான்
பதிவு 1
பதிவு 2
டக்ளஸ் கதை கவிதை நையாண்டி என்று கலந்து கட்டி எழுதுபவர்
பதிவு 1
பதிவு 2
அன்பு மதி--- பயபுள்ள கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு இவன்தான் உதாரணம்.......எதிர்காலத்தில் பிரபலமாகக்கூடிய அளவுக்கு திறமை இருக்கு இந்த சிவகாசி பொடியனிடம்
பதிவு 1
பதிவு 2
hello test
ReplyDeleteநான்காம் நாள் வலைச்சரம் ஆசிரியர் பதவிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅத்திரி,அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்.உங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதற்கண் வலைச்சரம் தொகுக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇங்கே ஒருசிலர் நம்ம ஊர் என முன்பே தெரிந்திருந்தாலும், மற்றவர்களும் {ஹி, உங்களையும் சேர்த்து) அப்படியே என இப்போதுதான் தெரிகிறது எனக்கு. நெல்லைச் சீமையிலிருந்து பதிவுலகம் வந்தவர்கள் லிஸ்ட் இன்னும் ரொம்ப நீளம்தான் அத்திரி. நமக்குப் பெருமைதானே.
என்னையும் சிறப்பித்தமைக்கு நன்றிகள்.
\\\எதிர்காலத்தில் பிரபலமாகக்கூடிய அளவுக்கு திறமை இருக்கு இந்த சிவகாசி பொடியனிடம்\\\
ReplyDeleteஇதில எதுவும் உள்குத்து இல்லையே அண்ணா..
என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அண்ணா..
ReplyDeleteநெஞ்சார்ந்த நெல்லையை நிகரற்ற நெல்லையாக மாற்றிய
ReplyDeleteமூத்த முன்னோடி பதிவர் டுபுக்கு அவர்களை விட்டுடிங்க.
2004 லையே தங்கமணி என்ற வார்த்தையை அறிமுக படுத்தியவர் ஆச்சே அவர்.
அறிமுகத்திற்கு நன்றி 'அத்திரி' ராஜேஷ் கண்ணா...
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த கவிதைகளையே நீங்களும் தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சி.
நம்ம ஊரு பதிவர்களை பத்தி எழுதனும்னா நிச்சயம் பக்கம் போதாது.
தற்போது அடக்கி வாசிக்கும் நெல்லை பதிவர்கள் டுபுக்கு,நிலவு நண்பன் ஆகியோர் பதிவுகளை படித்த ஆர்வத்தில்தான் 2004-05ல் நானெல்லாம் வலை உலகிற்கே வந்தேன்.
தற்போதைய இளைய பதிவர்களில் நமது நெல்லையை சேர்ந்த இரும்புதிரை அரவிந்த் கலக்கி வருகிறார்.
பதிவர் ஸ்டார்ஜனும் நம்மூர்காரர்தான்.
இன்னும் எவ்வளவோ நெல்லை நண்பர்கள் வலை உலகில் வளைய வந்து கொண்டிருக்கிரார்கள்.
4-வது நாள் வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள் அத்திரி.
ReplyDeleteஎன்னையும் 6 மாசம் முன்னால கூப்பிட்டு வலைச்சரம் தொகுக்க சொன்னாங்க. ஒருமாசாம எல்லாத்தையும் மேய்ஞ்சு செலக்ட் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிட்டு.
என்னமோ போங்க.வாழ்த்துகள்
ஹலோ அத்திரி முனிவரே, ஆழ்வார்க்குறிச்சி பக்கத்துல எந்த ஊரு?
ReplyDeleteகோயிந்த பேரி, சிவசைலம், செட்டிக்குளம்,
கருத்தப்பிள்ளையூர்?
ஏலே... மக்கா... அசதிட்டலே.. நீயி...
ReplyDeleteஎங்கே எவன் நிக்கான்னு சரியா சொல்லிட்டே மக்கா...
நன்றி ராகவன் அண்ணாச்சி
ReplyDeleteநன்றி ஹேமா
நன்றி ராமலக்ஷ்மி அக்கா
//Anbu said...
ReplyDelete\\\எதிர்காலத்தில் பிரபலமாகக்கூடிய அளவுக்கு திறமை இருக்கு இந்த சிவகாசி பொடியனிடம்\\\
இதில எதுவும் உள்குத்து இல்லையே அண்ணா..//
சத்தியமா கிடையாது தம்பி
அன்பின் அத்திரி
ReplyDeleteஅருமையான அறிமுகம் - நன்று நன்று
நல்வாழ்த்துகள்
பல மதுரைப் பதிவர்கள் அறிமுகம்
தகவலுக்கு நன்றி ராம்ஜி
ReplyDeleteநன்றி துபாய் ராஜா
நன்றி மாப்ளே
நன்றி ஆடுமாடு.....எனது ஊர் சிவசைலம்-புதுக்குடியிருப்பு
நன்றி நையாண்டி நைனா
நன்றி சீனா ஐயா
ReplyDeleteஎல்லா நம்ம ஊருக்கார மக்கள்.. நடத்துங்க.. அறிமுகத்துக்கு நன்றிப்பா..
ReplyDeleteமுக்கியமான பெருந்தலைகளான அண்ணாச்சிமார்கள் ஆசிஃப், வடகரை வேலன் இவர்களே இல்லையானால் இந்த லிஸ்ட் எவ்வளவு சிறிது என உணரலாம்.. ஹிஹி..
ReplyDeleteநன்றி காபா
ReplyDeleteநன்றி ஆதி அண்ணே