Monday, September 21, 2009

விடை அளித்தலும் வரவேற்றலும்

அன்பின் சக பதிவர்களே

சென்ற ஒரு வார காலமாக, நண்பர் அத்திரி ஆசிரியப் பொறுப்பேற்று, ஏழு இடுகைகள் இட்டு , ஏறத்தாழ எண்பதுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்று, பல புதிய பதிவர்களையும் - பல் இடுகைகளையும் அறிமுகப் படுத்தி, மன மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

அவருக்கும் வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்து இன்று துவங்கும் வாரத்திற்கு அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ராஜா ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் அவிய்ங்க என்னும் பதிவினில் எழுதி வருகிறார். ஆறுமாத காலத்தில் ஏறத்தாழ அறுபதுக்கும் மேலாக இடுகைகள் இட்டுள்ளார். ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்டோர் இவரைப் பின் தொடர்கின்றனர்.

அன்பர் ராஜா வினை வலைச்சரம் சார்பினில் வரூக வருக - பதிவர்களை அறிமுகப்படுத்துக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.

நல் வாழ்த்துகள் ராஜா


3 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. முழுமையாக ஒரு வார காலம் சிறப்பான அறியப்படாத பல பதிவுகள் வாசிக்கத்தந்த பதிவர் அத்திரிக்கு நன்றிகள்..

    புதிதாக ஆசிரியப்பொறுப்பேற்கும் அவிய்ங்க ராஜாவையும் வரவேற்கின்றேன்!

    ReplyDelete
  3. வாழ்த்துகள்.

    ReplyDelete