Tuesday, September 22, 2009

நானும் வாத்தியார் ஆகிட்டேன்

இதுதான் முதல்முறை, இப்படி ஆசிரியர் பணி ஏற்பது..இந்தப் பொறுப்பினை எனக்கு கொடுத்த நண்பர் சீனா அவர்களுக்கு ம்தல் நன்றி. எழுத வந்து ஆறு ஏழு மாதங்கள் இருக்கும் என் நினைக்கிறேன்..நடந்ததெல்லாம் கனவு போல் இருக்கிறது..முன்பெல்லாம் கூகிளில் என் பெயர் தட்டிப் பார்ப்பேன்..நான் தான் எதுவும் செய்யவில்லை..என் பெயரிலாவது யாரவது ஏதாவது செய்திருக்கிறீர்களா என்று..ஓரே ஒரு பக்கத்திற்கு ரிசல்ட் வரும்.

இப்பொது தட்டிப்பார்த்தால் 10 பக்கம் வருகிறது..10 பக்கம் வரைக்கும் வளந்திருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிற சமயத்தில் பயமாகவும் இருக்கிறது..ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமோ என்று

இந்த ஆசிரியர் பணியை முந்தைய பதிவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள்..கண்டிப்பாக என்னால் அந்த அளவுக்கு செய்ய முடியாது..பிற பதிவர்களை ஊக்கப்படுத்துவதில்லை, பின்னூட்டம் போடுவதில்லை என்று நண்பர்கள் உரிமையுடன் கேட்டிருந்தார்கள்..கண்டிப்பாக என் தவறுதான்..அதற்கு பரிகாரமாக எனக்கு இந்த ஆசிரியர் பணி இருக்கட்டும்..நான் படிக்கும் பதிவர்களை அறிமுகம் செய்ய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றே கருதுகிறேன்..

உண்மையைச் சொல்லப்போனால், நான் கணினித் துறையில் இருந்தாலும், பதிவுலகம் என்பதைப்பற்றி ஒன்று கூடத் தெரியாது. என் நண்பன் “பிரதீப்” மூலமாகத்தான் அப்படி ஒன்று இருப்பதே தெரியவந்தது..அவனுடைய பதிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்து போனேன்..எவ்வளவு அழகாக எழுதுகிறான்..படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கவே , நம்மளும் எழுதித்தான் பார்ப்போமே என்று வந்த ஆவலே என் பதிவுகள்…என் நண்பன் “ரஜினிகாந்த்(சீ..சீ..அவர் இல்லீங்க)” அறிமுகம் செய்த பதிவர்கள் இன்னும் எழுதத் தூண்டியது..

முதலில் எழுதிய “என் முதல் பதிவும் ஏர்டெல் சூப்பர் சிங்கரும்” ஏதோ ஒரு ஆர்வத்தில் எழுதியது..

என்னோட எழுத்துகளில் எனக்குப் பிடித்தது

1. என் ஓட்டு அம்மாவுக்குதாண்ணே

2. இந்திப் படிக்காத்தது தப்புங்களாயா

3. “மரியாதையாய்” ஓடிப்போயிடு

4. “எல்லாரும் பார்த்துங்கப்பா, நாங்களும் என்.ஆர்.ஐ..தான்”

5. பிரபல பதிவர்களோடு ஒரு படகுப்பயணம்

6. நாறிப் போன பதிவுலகம்

7. கருப்பனுங்க

ஏண்டா எழுதினேன்னு நினைத்தது

1. ஆணவம்=திமிரு=கர்வம்

2. அன்புள்ள செந்தழல் ரவி

3. தமிழ்மணத்தில் அதிக ஓட்டு வாங்குவது எப்படி

4. பிரபல பதிவர்களிம் ஸ்கூல் அனுபவங்கள்

நாளை பார்ப்போமா..???


15 comments:

  1. அன்பின் ராஜா

    அருமையான அறிமுகம் - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. ஆஹா. எங்க வாத்தியாருக்கு வாழ்த்துகள். அசத்துங்க ராசா

    ReplyDelete
  3. உங்களுக்கு பதிவை அறிமுகம் செய்த “பிரதீப் குமாரின்” பதிவுகளை வாசித்தேன். அருமையாக எழுதுகிறார்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் வாத்யாரே

    ReplyDelete
  5. வரலாறு முக்கியம் வாத்தி...
    வாழ்ந்து காட்டுங்கள்..
    வாழ்த்துக்களுடன்,
    அய்யனார்.

    ReplyDelete
  6. நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  8. //////////////////

    cheena (சீனா) said...
    அன்பின் ராஜா

    அருமையான அறிமுகம் - நல்வாழ்த்துகள்

    September 22, 2009
    /////////////////
    நன்றி சீனா சார்,.,,வாய்ப்பு கொடுத்த உங்களுக்குதான் முதல் நன்றி

    ReplyDelete
  9. //////////////////
    வானம்பாடிகள் said...
    ஆஹா. எங்க வாத்தியாருக்கு வாழ்த்துகள். அசத்துங்க ராசா

    September 22, 2009 9:24:00 AM IST
    ///////////////////
    கண்டிப்பா வாத்தியாரே..)) வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. ///////////////////
    Krishna Prabhu said...
    உங்களுக்கு பதிவை அறிமுகம் செய்த “பிரதீப் குமாரின்” பதிவுகளை வாசித்தேன். அருமையாக எழுதுகிறார்.

    September 22, 2009 10:35:00 AM IST
    /////////////////
    ஆமாண்ணே..அமைதியான எழுத்தாளன் பிரதீப்..

    ReplyDelete
  11. ///////////////
    கதிர் - ஈரோடு said...
    வாழ்த்துகள் வாத்யாரே

    September 22, 2009 10:48:00 AM IST
    ////////////////
    நன்றி கதிர்..

    ReplyDelete
  12. ///////////////
    TAARU said...
    வரலாறு முக்கியம் வாத்தி...
    வாழ்ந்து காட்டுங்கள்..
    வாழ்த்துக்களுடன்,
    அய்யனார்.

    September 22, 2009 11:11:00 AM IST
    /////////////////
    நன்றி அய்யனாரே..உங்கள் பிளாக் லிங்க் எங்கே..)))

    ReplyDelete
  13. ////////////////
    Suresh Kumar said...
    நல்வாழ்த்துகள்

    September 22, 2009 11:17:00 AM IST
    //////////////////
    நன்றி சுரேஷ்

    ReplyDelete
  14. /////////////////
    வால்பையன் said...
    வாழ்த்துக்கள் நண்பரே!

    September 22, 2009 4:13:00 PM IST
    ////////////////////
    வருகைக்கு நன்றி வால்பையன்..

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete