Monday, October 12, 2009

வலைச்சரத்தில் கு.ஜ.மு.க வாக்கு சேகரிப்பு.

கிளுகிளுப்பை என்ற பெயரில் பதிவெழத நினைத்து, ஏற்கனவே அந்த பெயரில் பிளாக்ஸ்பாட் இருந்ததால் குடுகுடுப்பை என்ற பெயரில் பதிவெழுத ஆரம்பித்தேன், பின்னர் வருங்கால முதல்வராக ஆசைப்பட்டு அனைவரையும் போல மிக எளிதில் வருங்கால முதல்வராக ஆகினேன்.பொதுவாக வருங்கால முதல்வராக ஆசைப்படுபவர்கள் உடனடியாக கட்சி ஆரம்பித்துவிடுவார்கள். உலகத்தில் முதன்முறையாக வருங்கால முதல்வராக ஆன பின்னர் சாதிசங்கம் போல் இருந்த குடுகுடுப்பையை கு.ஜ.மு.க என்ற கட்சியாக மாற்றினேன். இந்தக்கட்சியின் ஒரே நோக்கம் நானும் என் குடும்பமும் மட்டுமே. சொல்லின் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் தமிழரசு கழகத்தில் எத்தனை உறுப்பினர் என்று கேட்டால், தன்னுடைய வளமான மீசையை முறுக்குவாராம், ஆனால் கு.ஜ.மு.க பொதுச்செயலாலர் குடுகுடுப்பைக்கு மீசையும் இல்லாததால் கு.ஜ.மு.க ஒரு ஓர் உறுப்பினர் கட்சி, இதற்கு கிளைகளோ, வேறு உறுப்பினர்களோ இல்லை என்பதை வலைச்சரத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.

கு.ஜ.மு.கவை மதித்து எழுத்துரிமை அளித்த ’சீனா’வுக்கு நன்றி.கட்சியின் சீரிய கொள்கையின் படி எனக்குப்பிடித்த என்னுடைய சில பதிவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். தமிழ்மண நட்சத்திரமாக இருந்த காலத்தில் நான் எழுதிய
வரலாறுபிக்சன் என்ற பதிவு நிறைய பேருக்குப்பிடிக்கும் என நினைத்தேன், ஆனால் ஏனோ சரியான அளவு சென்றடையவில்லை. இப்போது வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை பாருங்கள்.

பதிவெழுத வந்த புதிதில் எழுதிய பதிவு, மருந்து உட்கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஒரு உண்மைச்சம்பத்தை வைத்து எழுதிய

மீண்டும் நடக்கப்பழகினான்என்ற பதிவு, இதற்கு முன்னர் படிக்கவில்லையெனில் கண்டிப்பாக படிக்கவும்.

கிராமத்தில் விவசாயம் செய்யும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் கிடைத்த இந்த தொன்னை அனுபவம். அங்கே கட்டிய சில வீடுகளின் கலவையால் கிடைத்த ஒரு உரையாடல் கதை வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்.

ஒரு முருங்கைமரத்தை ஹீரோவாக வைத்து சொன்ன ஒரு அறிவுரைக்கதை
நொண்டி முருங்கை மரம்

வருங்கால முதல்வரில விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் சரியா, தவறா விவாதம்

நேரமிருப்பின் சினிமா மற்றும் பயணம் பதிவுகளையும் இந்த லிங்குகளில் படிக்கவும்.

சினிமா
பயணம்
கல்லூரி சாலை

தொடர்ந்து நான் படிக்கும்/படிக்காத சில பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.

16 comments:

  1. முதல் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே!! கலக்குங்க!!

    ReplyDelete
  3. தவற விட்ட பதிவுகளை படிப்பதற்கு ஒரு வாய்ப்பு..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தொடர்ந்து படிக்கிறோம்....
    அப்பிடியே எங்களையும் கொஞ்சம் அடுத்தவங்க படிக்கிறமாதிரி ,, பண்ணப்படாதா...!!!???

    ReplyDelete
  5. முதல் நாள் வாழ்த்துகள் வலைச்சர ஆசிரியர்!

    ReplyDelete
  6. நல்வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  7. அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  8. ஆசிரியர் வேடம் தரித்த குடுகுடுப்பையார் வாழ்க!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் தல!

    ReplyDelete
  10. என்னுடைய நிரந்தரக் கட்சி கு.ஜ.மு.க

    :)

    ReplyDelete
  11. வாழ்த்துகள் குடுகுடுப்பையார்!! :-)

    ReplyDelete
  12. வலைச்சர ஆசிரியர் பதவி ஏற்றிருக்கும் உடன்பிறப்பு குடுகுடுப்பைக்கு வாழ்த்துகள்!

    தொடர்ந்து அடிச்சு ஆ(ட்)டுங்க

    ReplyDelete
  13. "வலைச்சரத்தில் கு.ஜ.மு.க வாக்கு சேகரிப்பு."//

    அப்படியா!

    நாங்கள்ளாம் பிரியானிக்கு ஓட்டு போடுற ச(இ)னம்.

    பிரியானி போடுவியளா!

    ReplyDelete
  14. எம்.எம்.அப்துல்லா said...
    என்னுடைய நிரந்தரக் கட்சி கு.ஜ.மு.க

    :)
    //

    இரண்டாவது உ(ரு)றுப்பினரா அண்ணன் அப்துல்லா சேந்திருக்காரு!

    எங்களையெல்லாம் சேக்கனும்னு எதும் ஆசையிருக்கா இல்லையா?

    ReplyDelete
  15. கு.ஜ.மு.க.வின் கொள்கை "தலை இருக்க ஆள் எல்லாம் தலைவர்தான்" சரிதானே குடுகுடுப்பையாரே.... :))

    ReplyDelete