Sunday, October 18, 2009

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே

வலைச்சரத்தின் ஆசிரியராக கடந்த ஒரு வார காலம் பொறுப்பு வகித்த நண்பர் குடுகுடுப்பை - ஏற்ற பொறுப்பினை நல்ல முறையில் செயல்படுத்தி - ஆறு இடுகைகள் இட்டு - பல பதிவர்களை அறிமுகம் செய்து - இன்று மன மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரையும், வலைச்சரத்தின் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

19ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நமது இயற்கை மகள். இவர் ஈரோடு அருகே உள்ள ஒரு புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியில் ஆசிரியையாகப் பணீயாற்றி வருகிறார். 2009 ஜனவரி முதல் நாளிலிருந்து இடுகைகள் இட்டு வருகிறார். இது வரை அறுபத்தெட்டு இடுகைகள் இட்டிருக்கிறார். இவரை நூறு பதிவர்கள் பின் தொடர்கின்றனர்.கவிதை கதை எனக் கலக்குகிறார். இருபதுக்கும் மேற்பட்ட இடுகைகள் இளமை விகடனில் நல்ல இடுகைகளாக அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன.

இவரை வலைச்சரம் சார்பினில் வருக வருக - ஏற்ற பணியினைச் சிறப்புறச் செய்க என வாழ்த்தி வரவேற்பதில் பெருமை கலந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சீனா

13 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. ராஜி வாழ்த்துக்கள்

    உண்மையான ஆசிரியரா?

    அப்போ நாங்கல்லாம் ஃபெயிலா? அவ்வ்வ்வ்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ராஜி

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  5. வாழ்த்துகள் நண்பர்களே!

    ReplyDelete
  6. டீச்சர்.. வலைச்சரத்துல ஏ ஃபார் ஆப்பிள்னு ஆரம்பிச்சுடாதீங்க..ஹாஹாஹா..!

    வாழ்த்துக்கள் ராஜீ..கலக்குங்க..!!

    ReplyDelete
  7. வாங்க வசந்த். உங்களுக்கு கிரேஸ் மார்க் போட்டு பாஸ் பண்ண வைக்கிறேன். கவலைப்படாதீங்க‌:-)))

    ReplyDelete
  8. @ T.V.R. நன்றிங்க அண்ணா

    ReplyDelete
  9. நன்றிங்க சின்ன அம்மிணி

    ReplyDelete
  10. நன்றிங்க ஆ.ஞானசேகரன்

    ReplyDelete