Sunday, October 25, 2009

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !

சென்ற வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ராஜி என்னும் இயற்கை மகள் தன்னுடைய பொறுப்பினை உணர்ந்து - கடமையினைச் செவ்வனே ஆற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ ஐம்பது பதிவர்களை அறிமுகப் படுத்தி -ஏறத்தாழ எண்ணூற்று அறுபது மறுமொழிகளும் பெற்றிருக்கிறார்.

அவரையும் அவரது உழைப்பினையும் பாராட்டி - நன்றி கலந்த நல்வாழ்த்துகளயும் வலைச்சரக் குழுவினர் சார்பினில் தெரிவித்து விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

26ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு நண்பர் ஜீவன் ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் கண்ணாடி என்னும் வலைப்பதிவினில் எழுதி வருகிறார். இவர் ஓராண்டிற்கும் மேலாக பதிவினில் எழுதி வருகிறார். எண்பதற்கும் மேலாக இடுகைகள் இட்டுள்ளார்.

இவரை வருக வருக - என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஜீவன்

நட்புடன் சீனா

13 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நன்றி..! திரு, சீனா அய்யா அவர்களே..!

    ReplyDelete
  3. வாழ்த்துகள்!!

    ReplyDelete
  4. வாய்ப்பிற்கு நன்றி. நல்வாழ்த்துக்கள் ஜீவன் அவர்களே

    ReplyDelete
  5. வாழ்த்துகள் ஜீவன். அசத்துங்க.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் ஜீவன் அண்ணே.

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ஜீவன்!!

    ReplyDelete
  8. வாழ்த்துகள் தமிழ் அமுதன் aka ஜீவன்!

    ReplyDelete
  9. நல்வாழ்த்துக்கள் ஜீவன்!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் "தலீவா"..........

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் தல. ஸ்டார்ட் மியூசிக்

    ReplyDelete
  12. இயற்கை மகள் ராஜிக்கு தைலம் அனுப்பி வைங்க சங்கம் சார்பா. சலிக்காம எல்லா பின்னூட்டத்துக்கும் பதில் கொடுத்ததற்காக. பாவம் கை வலிக்கப்போகுது

    ReplyDelete