Monday, November 9, 2009

இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்..


வணக்கம் வலையுலக நண்பர்களே..

நலமா? நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இந்த அறிமுக பதிவைத் தொடங்குகிறேன். அதற்கு முன், எனக்கு வலைச்சரத்தில் எழுத வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கு என் மனமார்ந்த நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்.

மலேசிய திருநாட்டில் மலாக்கா எனும் மாநிலத்தில் குடிகொண்டிருக்கும் எனது பெயர் சுபாஷினி. என்னதான் மலேசியா எனது பிறந்த ஊராக இருந்தாலும் எனது முன்னோர் தோன்றிய இந்திய மண்ணோடு தொடர்பு வைத்துக்கொள்வதை நான் பெருமையாகவே நினைக்கிறேன். அதனாலேயே எனது மணவாளனும் இந்திய மண்ணின் மைந்தராக அமைந்தாரோ என்னவோ :)

சீனா ஐயா சொன்னதைப் போலவே நான்கு ஆண்டுகள் வங்கியில் பணிப்புரிந்த பின்னர் உள்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறேன். ஆசிரியப்பணியில் மேல் இருந்த அளவிலா காதலே இந்த பணி மாற்றத்திக்குக் காரணம்.
இப்போது என் வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆசிரியர்களைப் பற்றி நான் எழுதிய பதிவு ஒன்றை இங்கே சென்று காணவும்.

நான் தமிழ் வலையுலக வாசம் கொண்டது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல்தான். சில நேரங்களில் பணியின் காரணமாக அதிகமாக எழுதமுடியாவிட்டாலும் வலையுலக வாசத்தை நான் முகர்ந்து கொண்டேதான் இருக்கிறேன். அப்படி சில நேரங்களில் நான் எழுதிய, கடல் கன்னிகள், அன்னையர் தினம் - ஒரு நாள் போதுமா? , நட்பின் எல்லை என்பது எதுவரை? , ஏன் சண்டை போடறோம்? ஆகிய பதிவுகளை நிறைய நண்பர்கள் படித்துள்ளார்கள் என்றே நினைக்கிறேன்.

சரி நண்பர்களே...என்னைப் பற்றிய அறிமுகம் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். நாளை முதல் சில முத்தான பதிவுகளோடு உங்களைச் சந்திக்கிறேன். என்னை வரவேற்ப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இன்று விடைப்பெறுகிறேன்.

18 comments:

  1. நல்வாழ்த்துகள்... கலக்குங்க...

    ReplyDelete
  2. நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. சிதம்பரத்தை ஆண்டு கொண்டு இருப்பவருக்கு மீண்டு நன்றி.

    நல்ல ஆளுமையான பெண்மணியை தேர்ந்து எடுத்தமைக்கு.

    வணங்கும் கரங்களில் உள்ள பொன்னும் மணியும் பூட்டி மகிழ்ச்சியுடன்,வரவேற்பது நல்ல பொருத்தம்.

    கரங்களில் மாட்டி உள்ளதை வைத்து வாழும் வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முடியும்.

    வணங்கிய கைகளுக்கு சொந்தகாரரின் முகத்தை வைத்து ஆளுமையை உணர்ந்து கொள்ள முடியும்.

    இரண்டுமே ஒருங்கே இருக்கும் சுபா வுக்கு இக்கரையில் இருந்து வாழ்த்துக்கள்.

    தேவியர் இல்ல பூங்கொத்து.

    ReplyDelete
  4. வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. வலைச்சர ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. குட் மார்னிங்க் டீச்சர்... வாழ்த்துகள் டீச்சர்.. :)

    ReplyDelete
  7. வாழ்த்துகள்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்...............வரும் நாட்களில் நல்ல அறிமுகங்களை கொடுக்க ஒரு முறை கூட வாழ்த்துகிறேன்.............

    ReplyDelete
  9. வாழ்த்துகள்

    ReplyDelete
  10. வணக்கம் ஆசிரியரே!

    உங்களது அறிமுகங்களையும் அறிய ஆவலாய் இருக்கிறேன்!

    (தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்)

    ReplyDelete
  11. அன்பின் சுபா

    சுய அறிமுக இடுகை அருமை

    தொடர்க - பதிவர் அறிமுகம் தொடர்க

    நல்வாழ்த்துகள் சுபா

    ReplyDelete
  12. வருக...நல்ல பதிவுகள் பல தருக...

    ReplyDelete
  13. வாழ்த்தி வரவேற்ற அனைவருக்கும் என் நன்றி :)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்... நல்ல பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  15. வலைச்சர ஆசிரியருக்கு என் முதல்நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete