அனைவருக்கும் என் இனிய வணக்கம்.
அறிமுகத்துக்குப் பின் இன்று முதன் முதலாக எழுதும்போது, இந்த இனிய கானம்தான் என் நினைவுக்கு வருகிறது...முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று வேராக உன்னை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்! நான் புதிதாக தேடிய இந்த பூக்கள் வேராக என்னையும் உங்களையும் மாற்றுமா..இல்லை...எதிராக நடக்குமா? விடை விரைவில் தெரியும் :)
இன்று நாம் நம்மைச் சிந்திக்க வைக்கும் விஷயங்களை தொகுத்து வழங்கும் கதம்பமான வலைப்பூக்கள் சிலவற்றை உலாவ இருக்கிறோம். இவற்றில் பெரும்பாலான விஷயங்கள் நம்மைச் சுற்றி நடக்கும் அவலங்களை நமக்குப் புரிய வைக்கும் நோக்கிலேயே எழுதப்பட்டுள்ளன என்றால் மிகையில்லை.
பெண்களுக்கு எதிரான சில சமூக வன்முறைகளை இங்கே காணலாம். பெண்ணியம் எனும் இந்த பூவில் நிறைய சிந்திக்க தூண்டும் கருத்துக்கள் இருந்தாலும் இதை எழுதுபவர் யார் என்று தெரியவில்லை. எழுதுபவர் யாராக இருந்தாலும் எழுத்து சொல்லும் கருத்து முக்கியம் என்பதால் இப்பூவை நான் அடிக்கடி படித்து வருகிறேன்.
இந்த தேடலில் நான் பார்த்த இன்னுமொரு பூ, மானிடள். இது தமிழ் இலக்கியம் பற்றியும் மேலும் பல விஷயங்களைப் பற்றியும் சிந்திக்க வைக்கிறது. வாழ்க்கையில் நமக்குத் தெரியாத பல தகவல்களை மேற்கோளுடன் அழகான உரைநடையில் நமக்குத் தருபவர் முனைவர் திரு பழனியப்பன்.
பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவதற்கு தன்னால் ஆன தகவல்களை இப்பூவில் மாலையாக தொடுத்திருக்கிறார் கிராமத்துப் பையன். இவற்றைப் பற்றி நாமும் தெரிந்துவைத்துக்கொண்டால், நாளை ஒரு சகோதரியைக் காப்பாற்றும் வாய்ப்புக் கிடைக்கலாம் இல்லையா?
தினசரி வாழ்வில் நடக்கும் விஷயங்களில் நமக்குத் தெரியாதவற்றை விளக்கங்களுடன் கொடுக்கும் வலைப்பூ, தாசானுதாசன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் நோக்கில், தான் படித்தவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இவர்.
அகற்றுவோம் அறியாமையை என்கிறது அடுத்து வரும் பூ. பெயரிலேயே இப்பூவை எழுதும் பிரதீப்பின் நோக்கம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். பூவைச் சுற்றும் வண்டுக்கு அச்சாரமாக, சற்று உள்ளே போய் தேனெடுத்துவிட்டுதான் வாங்களேன்.
இன்று இந்த பட்டியல் போதும் என்றும் நினைக்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போம் நண்பர்களே..
அசத்தல்...ரொம்பவும் அழகான அறிமுகம் :-)
ReplyDeleteமிக அழகிய பாடலுடன் ஆரம்பித்து கவிதை போல எல்லோரையும் அறிமுகப்படுத்தியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு என் இரெண்டாம் நாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅசத்தல் அறிமுகங்கள்! அருமை!!
ReplyDeleteவாழ்த்துக்கள் சுபா...
ReplyDeleteஅறிமுகப்படுத்தப் பட்ட பதிவர்கள் அனைவருமே புதுமுகங்கள் - நல்வாழ்த்துகள் சுபா
ReplyDeleteஇனி புனிதா மேடம் பதிவுக்கும் லின்க் வருமா?
ReplyDeleteபடித்ததற்கும் , பலருக்கு என்னை அறிமுகபடுதியதற்கும் நன்றி சுபா அவர்களே.
ReplyDeleteபிரதீப்
நல்ல அறிமுகங்கள். நன்றி
ReplyDelete