Thursday, November 12, 2009

வலைப்பூக்கள் பட்டியல்

வணக்கம் நண்பர்களே...

நான் இந்த 2 நாள்களில் அறிமுகப்படுத்திய பதிவுகளுக்கு வரவேற்ப்பு இல்லாததால், இன்று வெறும் வலைப்பூக்களின் பட்டியலோடு என் பதிவை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.

1. தமிழால் இணைவோம்.
2. தீப்பெட்டி.
3.ஹாய் நலமா?

நன்றி நண்பர்களே!

20 comments:

  1. வருத்தமேனடி சகி... இன்றைய அறிமுகம் நாளைய உதயம் :-)

    ReplyDelete
  2. அன்பின் சுபா

    எழுதுவது வரவேற்பினை எதிர்பார்த்து அல்ல - அமைதியாகப் படித்து ஆக்கபூர்வமான வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வலைப்பூக்களுக்கும் சென்று அங்கும் படிப்பவர்கள் பல்ர் இருக்கிறார்கள். கவலை வேண்டாம் -

    கடமையைச் செய் - பலனை எதிர்பாராதே - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. சுபா அவர்களே:

    மறுமொழி கொடுப்பவர்கள் எல்லோரும் படிக்கிறார்கள் என்றும் இல்லை; படித்தவர் மறுமொழி கொடுப்பார் என்றும் இல்லை.

    வெறும் ":-)" என்றும், "கலக்கல்" என்றும் ஒற்றை வார்த்தையில் 70, 80 மறுமொழி வந்தால் குதூகலிக்கும் வலைக் கூட்டத்தில் நீங்களும் சேரணுமா ?

    நீங்கள் படித்து ரசித்த தளங்களை இதுவரை செவ்வனே அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். வலைச்சரம் தளப்பொறுப்பாளர்கள் நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் கொடுத்த பொறுப்பை மனம் தளராமல் சிறப்பாக தொடருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.
      எழுதுவோர் வாசகர் வரவைக் கணக்குப் பார்க்காமல், சொல்ல வரும் செய்திகளை, அறிமுகங்களைக் கணக்குப் பார்க்கலாமே!
      நன்றி.
      யாழ்பாவாணன்

      Delete
  4. சுபா அவர்களே...

    பார்ப்பவர் அனைவரும் கமெண்ட் போடுவதில்லை... கமெண்ட் போடுபவர் அனைவரும் பதிவை முழுதுமாக படிப்பதும் இல்லை...

    நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள், பலனை எதிர்பாராது...

    பலன் ஒரு நாள் கிட்டும்...

    தோழமையே தயங்காதே...

    வீறு கொண்டு வெற்றி நடை போட்டு முன்னேறு...

    வாழ்த்துக்கள் சுபா...

    ReplyDelete
  5. cheena (சீனா) said...
    அன்பின் சுபா

    எழுதுவது வரவேற்பினை எதிர்பார்த்து அல்ல - அமைதியாகப் படித்து ஆக்கபூர்வமான வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வலைப்பூக்களுக்கும் சென்று அங்கும் படிப்பவர்கள் பல்ர் இருக்கிறார்கள். கவலை வேண்டாம் -

    கடமையைச் செய் - பலனை எதிர்பாராதே - நல்வாழ்த்துகள்

    உண்மை இது தோழியே...வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி செவ்வனே..

    ReplyDelete
  6. உங்கள் எண்ணம் எல்லாருக்கும் வரும் பொதுப் படையான எண்ணமே வரவேற்பு இல்லைன்னு ஒதுங்கிடாதீங்க...வரப்பண்ணுவதில் தான் நம் திறமை இருக்கு..முயன்றால் முடியாததில்லை...மத்தவங்களாக நீங்கள் வேண்டாம் உங்களுக்காக நீங்கள் உங்கள் நிறைவுக்காக எடுத்த பணியை செவ்வனே செய்யுங்கள் பா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. என்ன டீச்சர் ..இப்பிடி சொல்லிட்டீங்க. மறுமொழி இடாமல் வாசிப்பவர்கள் தான் வலையுலகில் அதிகம் தோழி.

    நீங்கள் ஒருவரது வலைப்பூவை அறிமுகப்படுத்துவது, அவர்களை மிகவும் ஊக்கப்படுத்தும் செயல்.

    தங்கள் எழுத்து வன்மையை இங்கேயும் காண்பியுங்கள் தோழி

    ReplyDelete
  8. படிக்கிற எல்லாரும் கமெண்ட் போடறது இல்லை சுபா.அந்த கூட்டத்தில் நானும் ஒருத்தி :(. பெரும்பாலும் ரீடரில் படிக்கிறவங்கதான் அதிகம். கவலைபடாம கடமையை செய்யுங்க தோழி

    ReplyDelete
  9. அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  10. மூன்றுமே புதிய வலைத்தளங்கள் எனக்கு... நன்றி அக்கா அறிமுகத்திற்கு.. :)))

    ReplyDelete
  11. அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கும் உங்கள் ஸ்டார்ஜன்

    ReplyDelete
  12. நல்ல அறிமுகங்கள் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் .இதை நீங்கள் செய்யும் சேவையாக நினைத்து செய்யுங்கள்

    ReplyDelete
  13. படிக்கிற எல்லாரும் கமெண்ட் போடறது இல்லை .அந்த கூட்டத்தில் நானும்.!

    ReplyDelete
  14. ///Blogger சென்ஷி said...

    அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கிறேன்.///

    ......நானும் !

    ReplyDelete
  15. படிப்பவர்கள் அனைவரும் பின்னுட்டம் போடுவதில்லை.அதில் நானும் ஒருத்தி.நல்ல தளங்களை அறிமுகபடுத்தி இருக்கிங்க.கடமையை செய்யுங்கள் தோழி!!

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  16. என்னங்க இது. சில நேரம் இரண்டு மூன்று இடுகைக்கு சேர்த்து போடுவோங்க. அதும் இப்படி வலைப்பூ அறிமுகம்னா விட்டு போயிட்டாலும் திரும்ப போடுவோம். நிறுத்தாதீங்க.

    ReplyDelete
  17. என்னாங்க இப்படி சொல்லிடிங்க!

    பின்னூட்டம் இட நேரமில்லையென்றாலும் மறக்காமல் வாசித்து விட்டு தானே செல்வோம்!

    சீனா ஐயா எங்களை அப்படி தானே வளர்த்திருக்கார்!

    ReplyDelete
  18. :-) இதோ என் பணியை மீண்டும் ஆரம்பிக்கிறேன்.

    ReplyDelete
  19. நன்றி அன்பின் சுபா. என்னை அறிமுகபடுத்திய நீங்கள் இன்னும் பல பேரை அறிமுகப்படுத்த வேண்டும்.

    ReplyDelete