சக பதிவர்கள்,
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
பள்ளிப்படிப்பை முடித்து ஆறு வருடங்களே ஆன ஒரு மாணவனை ஆசிரியராக்கி பார்க்கும் அழகு உள்ளம் கொண்ட அன்பு நண்பர் சீனா அவர்களுக்கும், ப்ளாக் என்னும் ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகப்படுத்திய கல்லூரி நண்பர் கொல்கத்தா ஜிம்ஜி என்கிற ஏழுமலைக்கும் நன்றிகள் !!!!
சிவந்த மென்பாதங்கள் தரை தொடுமுன், கண்களை அகல விரித்து உலகை வியக்கும் சிறுகுழந்தையாகத் தான் என்னை பாவித்து வழி நடத்தி செல்கிறது வலையுலகம்.பொழுதுபோக்கு,சினிமா,அரசியல் போன்ற வழக்கமான இத்யாதிகளுக்கு அப்பாற்பட்டு கலை,இலக்கியம்,அறிவியல்,மருத்துவம்,சமூக சிந்தனைகள்,உதவிக்கரம் என்று பல பரிமாணங்களைக் காட்டி,என்னைப் போன்ற குழந்தைகளை தன் உள்ளங்கையில் வைத்து செல்லங்கொஞ்சிக் கொண்டிருக்கிறது.
நிறைய எதிர்பார்ப்புகளுடனும்,கனவுகளுடனும் எழுத்துலகில் மேற்கொள்ள வேண்டிய ஐந்தாண்டு திட்டங்களுக்காகவும் "மழைக்கு ஒதுங்கியவை" தொடங்கி,காத்து வாங்கி கொண்டிருந்த ஆரம்ப நாட்களில் முதன் முதலாக நட்புக்கரம் நீட்டி,ஒரு ஏணியாக இருந்து என்னை ஊக்குவித்தவர் அண்ணன் நட்புடன் ஜமால் அவர்கள்.வலைச்சரத்தில் ஆரம்பித்து,சளைக்காமல் ஒவ்வொரு பதிவராக சென்று என் வலைப்பக்கத்தின் சுட்டியை கொடுத்து எட்டிப்பார்க்க வைத்தவர்.இன்றளவும் என்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும்
மிகுந்த அக்கறை கொள்பவர்.
பிறகு அன்புடன் வாலு என்கிற ஆஷா ஜலால் அவர்களின் அறிமுகத்திற்கு பின் அவர்களோடு சேர்ந்து உருவாக்கிய என்னுடைய மற்றொரு வலைப்பூ இஸ்லாம் வாழ்வியல் வழிகாட்டி.
தடாகத்தில் எறிந்த கல்லாய், ஜமாலுடைய அறிமுகத்திற்கு பின் ரம்யா,சக்தி,அபுஅஃப்ஸர்,நவாஸூதீன்,எம்.எம்.அப்துல்லா,ராகவன் நைஜீரியா,வால்பையன்,தமிழரசி,ஷஃபி என்று எழுத்துலகை தாண்டி எங்களுடைய நட்பு வட்டம் அன்பின் நிழலில் விரிவடைய துவங்கியது.
பிறகு அமிர்தவர்ஷினி அம்மா,ஆதிமூலகிருஷ்ணன்,பாலா,கார்த்திகை பாண்டியன்,பீர்,லேகா,கிருஷ்ணபிரபு,பா.ராஜாராம் என்று ஒரு நட்பு, இலக்கிய ரசனை,வாசிப்பானுபவம் நிறைந்த ஒரு பாசக்கார கூட்டம் என்னை முழுமையாக ஆக்கிரமித்து மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது.
நண்பர்களின் அறிமுகங்களோடு நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்த வேண்டிய ஆவலும் எதிர்பார்ப்பும் இருக்கிறது.இணைந்திருங்கள் !!!
வாழ்த்துக்கள் செய்யது
ReplyDelete/-- அமிர்தவர்ஷினி அம்மா,ஆதிமூலகிருஷ்ணன்,பாலா,கார்த்திகை பாண்டியன்,பீர்,லேகா,கிருஷ்ணபிரபு,பா.ராஜாராம் --/
ReplyDeleteஇவர்களுடன் நானுமா? மிக்க மகிழ்ச்சி...
ஓகே ஸ்ட்ரார்ட் மியுசிக்
ReplyDeleteவாழ்த்துகள் ..இனிய வாரமாக அமையட்டும்! :-)
ReplyDeleteவாழ்த்துக்கள் செய்யது, தங்களை வலைச்சரத்தின் ஆசிர்யராக காண்பதில் மகிழ்ச்சி. ஆம், வலைப்பூ உலகம் தரும் நட்புக்களின் அனுபவம் புதுமையும் அருமையும் கூட. இவ்வார வலைச்சர பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteஅட, நம்ம செய்யது!!
ReplyDeleteவாழ்த்துக்கள், சந்தோஷம்.
வாழ்த்துக்கள் செய்யது
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்ற எங்கள் தங்கம் பிரியமுள்ள அ.மு.செ. வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் என் தளம் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து உற்சாகப்படுத்திய உங்க க்ளாஸ் கட் அடிக்காம டெய்லி வருவேன் சார்.
//ஒரு ஏணியாக இருந்து என்னை ஊக்குவித்தவர் அண்ணன் நட்புடன் ஜமால் அவர்கள்.//
ReplyDeleteஉங்களுக்கும் எனக்கும் மாதிரி நிரைய பேருக்கு இவர் வலைத்தள ஏணிதான்
வாழ்த்துகள் செய்யது. புகைப்படம் அருமை. இந்த வாரம் கலாட்டாதான்.
ReplyDeleteஅனுஜன்யா
வலைச்சரத்தில் செய்யதா!!!கலக்குங்க!!
ReplyDeleteவாழ்த்துக்கள் செய்யது
ReplyDeleteசெய்யது!!!என்ன எழுதப்போகிறீர்கள் என்று ஆவலுடன் இருக்கிறேன்!!
ReplyDeleteவாழ்த்துகள் அ.மு.செய்யது
ReplyDeleteதம்பி செய்யது.. முதல் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஆரம்பமே அட்டகாசம்.
வாழ்த்துகள் ராஸா
ReplyDeleteவாழ்த்துக்கள் செய்யது...கலக்குங்க..
ReplyDeleteவாழ்த்துக்கள் செய்யது!
ReplyDeleteம்... இந்தவாரம் கலைகட்டபோகுது..
ReplyDeleteமீண்டும் வாழ்த்துக்கள் :)
உங்களை இங்கே காண்பதற்கு மிக்க மகிழ்ச்சி செய்யது.
ReplyDeleteஅட்டகாசமான வாரமாய் அமைய வாழ்த்துக்கள்.
எப்போதும் இணைந்திருப்போம்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.. திரு.செய்யது அவர்களே.. தொடருங்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteசெய்யது பீடிகை நன்று!
தொடர்ந்து ஒரு கிழமைக்கு கலக்குங்க!
வாழ்த்துக்கள் செய்யது!
ReplyDeleteவாழ்த்துக்கள் செய்யது. ஆரம்பமே அசத்தல்!!
ReplyDeleteஅட்டகாசமா ஆரம்பிச்சிருக்கீங்க
வெற்றியுடன் தொடருங்கள் உங்கள் வலைச்சரப் பணியை!!
இனிமையான ஆசரியர் பணி தொடரவும் வாழ்த்துக்கள் செய்யது!!
ReplyDeleteGOOD INTRODUCTION SYED....keep on rocking
ReplyDeleteநானும் உங்களோட வட்டத்துக்குள்ளே இருக்கேன் என்பதில் ரொம்ப சந்தோஷம்...
ReplyDelete//என்னை ஊக்குவித்தவர் அண்ணன் நட்புடன் ஜமால் அவர்கள்.//
ReplyDeleteஉண்மைதான், ஆனால் ஏனோ இப்போ அவர் ஒதுங்கி இருக்கிறார், புலி பதுங்குவது பாய்வதற்குதானோ
அருமை நண்பரே. உங்கள் எழுத்தின் மீது எனக்கு என்றும் நம்பிக்கை உண்டு.
ReplyDeleteஉங்கள் எழுத்தின் எதிர்காலத்தை நீங்கள் திட்டமிட்டே உருவாக்கி வருகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
VISA
நன்று தம்பி.. வாழ்த்துகள்.!
ReplyDeleteவாத்தியாரே வருக!வாழ்க!வெல்க!
ReplyDelete:)
வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் அ.மு.செய்யது
ReplyDeleteவாழ்த்துக்கள்...:)
ReplyDeleteஏம்பா தம்பி சொல்லிட்டு வரமாட்டியா இங்க...பார் அக்கா எவ்ளோ லேட்டா பாராட்டி வாழ்த்தறேன்...வாழ்த்துக்கள் இங்கு நட்புக்களையும் சிறப்பித்து இருக்கிறாய் இதான் செய்யது....
ReplyDeleteஎல்லோரும் அம்னேஷியாவுக்குப் போயிட்டீங்களா?
ReplyDeleteகும்மிஅடிக்கிறதையே மறந்திட்டீங்களே!!
ஜமால் படை பட்டாளங்களெல்லாம் எங்கேப்பா!!
ReplyDeleteவாழ்த்துக்கள் செய்யது. போட்டுத்தாக்குங்க..,
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துக்கள் செய்ய்து.கலக்குங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் செய்யது!!
ReplyDeleteவாழ்த்துக்கள்ப்பா...
ReplyDelete45 மறுமொழிகளா - செய்யது - நல்வாழ்த்துகள் - நல்லதொரு இடுகை - சுய அறிமுகம் அருமை
ReplyDeleteஎங்கே ஜமாலும் அவரது கும்மி டீமும் - காணவில்லையே
வாங்க தல!
ReplyDeleteசீனா ஐயா அவர்களுக்கு மீண்டும் நன்றிகள் !!!!
ReplyDeleteநண்பர்களின் வரவேற்பை பார்த்து வியந்து நிற்கிறேன்.இத்தனை தூரம்
வந்து வாழ்த்தியவர்களுக்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டவர்களுக்கும்
ஆயிரம் நன்றிகள் சொல்ல கடமை பட்டுள்ளேன் !!!!
வாழ்த்துகள்!
ReplyDeleteகும்மியடி நல்லா கும்மியடி.... செய்யது மாப்பிள்ளை ...வர்ராரு
ReplyDeleteவாழ்த்துக்கள் காதர்
ReplyDeleteவாழ்த்துக்கள் செய்யது
ReplyDeleteஅருமை மகனுக்கு அம்மா வாப்பாவின் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் செய்யது.
ReplyDeleteவாழ்த்துக்கள் செய்யது!!
ReplyDeleteதூள் கிளப்புங்க!