வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Wednesday, November 18, 2009
கடிதங்களும் சில நினைவுகளும்..!
இப்போதெல்லாம் மழை கூட சலிப்பை ஏற்படுத்துகிறது.எப்போது பார்த்தாலும் நொச நொசவென்று பெய்து தொலைக்கிறது.நமக்காகவே பார்த்து பார்த்து பெய்கிறதென சிலாகிப்பதற்கு நீ இல்லாத ஒரு காரணத்தாலும் அல்லது அந்த ஒரே காரணத்தாலும் இந்த வெறுமை தோன்றியிருக்கலாம்.மழையைக் கூட பழிக்க ஆரம்பித்து விட்டேன் என்று உனக்கு தெரிய வந்தால் கோபப்படாதே.அல்லது கோபப்படு.சேறும் சகதியுமாக நாட்கள் ஆகி விட்ட பின்,மழையை குறை சொல்லி பயனில்லை என்று நீயும் உணர்ந்திருக்கக் கூடும்.மழையைத் தூற்றவும் ஆரம்பித்திருப்பாய்.நினைவுகளில் தூசி படர்ந்து மனவெளியெங்கும் மங்கலாக தெரிய ஆரம்பித்திருக்கும் உன் பிம்பத்தில் இன்றளவும் ஈரப்படுத்தி கொண்டிருப்பது நம் மழை மட்டுமே.ஏதோ ஒரு மூலையில் இறுக்கி வைக்கப்பட்டிருக்கும் உனதுருவம் கால சுழற்சியில் பிடி தளர முனைப்படும் போது நிச்சயம் வானம் வெறித்திருக்கும்.
இரவெல்லாம் பனிபெய்து கண்ணாடி சன்னல்களில் படிந்திருக்கும் வெண்புகை மண்டலத்தின் ஈரத்தைப்போல இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது உன் நினைவுகள்.ஏதோ ஒரு மழை நாளில் சாலையில் அடிபட்டு இறந்து கிடக்கும் பறவையை பார்க்கும் போதெல்லாம் நிராதரவாகிப் போன நம் காதல் நினைவுக்கு வருகிறது.
இப்படித்தான் ஆரம்பிக்கின்றன நினைவுகளை பிழியும் கடிதங்கள்.கதறி அழ வேண்டும் போலிருக்கும் நேரங்களில்,தன் மடியில் கிடத்தி காதலுடன் தலையை கோதும் விரல்கள் கடிதங்களே.எல்லா உணர்வுகளுக்கும் வடிகாலாக அமையும் கடிதங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரே ஒற்றுமை,கடிதம் எழுதப்பட்ட பெறுநர் எப்போதுமே அதை வாசிப்பதில்லை.
அழகான நினைவுகளையும் இழையோடும் மெல்லிய சோகத்தையும் காதில் ரகசியமாய்ச் சொன்ன கடிதங்களின் தொகுப்பு இந்த பதிவு.
*******************
"கங்காவின் கடிதங்கள்,ஹேமா தன் சாய்வான எழுத்துக்களில் எனக்கெழுதிய நூற்று சொச்ச கடிதங்கள், என் அப்பாவின் உடைந்த கையெழுத்து, என் அண்ணனின் கொம்பில்லாத எழுத்துக்கள், வீணாவிடமிருந்து வந்த வாழ்த்து அட்டைகள், அபூர்வமாய் சங்கமித்ரா எழுதிய ஒரே ஓர் கடிதம், கல்லூரி நண்பர்கள்,பள்ளி நண்பர்கள் எனக்கனுப்பிய வாழ்த்து அட்டைகள், “ஏதாவது வேல அங்க கெடைக்குமா மச்சான்” கள் தீபாவளி பொங்கல் வாழ்த்துக்கள் என குவிந்திருக்கும் பெட்டியினை இப்போதெல்லாம் திறக்க அவகாசம் கிடைப்பதில்லை."
அய்யனாரின் "கடிதங்களை சேகரிப்பவனின் முதல் கடிதம்" சொல்லும் உணர்வுகள் அலாதியானவை.
"நாட் எக்ஸிஸ்ட்,புல்ஷிட்,சுயநலம், ஃபார் த சேக் ஆஃப் செக்ஸ்,என்றெல்லாம் ஒரு பாறையின் மீதேறி சத்தமாய் பிரசிங்கித்துக்கொண்டிருந்த என் தோள் தொட்டு திருப்பினாய் இடைவிடாது சொற்களைக் கொட்டியபடியிருந்த என் உதடுகளில் மிகுந்த தவிப்புகளோடு நீ முத்தமிட்ட கணத்தில் சகலமும் உறைந்து போனது.என் விரல்களை பிடித்துக்கொண்டபடி நீ முன்னால நடந்துபோகிறாய்.."
*******
"பேசிக்கொண்டிருக்கும் போதே என் கைகளை உன் கைகளில் எடுத்துக் கொண்டு விரல்களில் நீ சொடுக்கெடுக்கும் சுகம் அலாதியானது."
வித்யாவின் "முதல் கடிதம்" ஆள் அரவமில்லா ஒரு நிசப்த இரவை கடத்த இந்த ஒரு கடிதம் போதுமானதாக இருந்திருக்கலாம்.
******
"ஒரு முறை பேசிப்பாரேன் ஒரே ஒரு முறை பேசிப்பார்..பேசும் போது நான் மறுப்பது போலத் தான் நடிப்பேன் ஆமாண்டா உன் காதலின் ஆழம் எனக்கு நீ காட்டுவாய் என்று நான் மறுப்பேன்.."
தொலைந்து போன காதலனை விழுங்க விழுங்க கேள்வி கேட்ட தமிழரசியின் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்" மரண வலி.!
******
இன்னும் சில பழைய ஞாபகங்கள்
1.நிலவுநண்பனின் மறக்க முடியாத ஆகஸ்ட் மாதங்கள்"
2.சுகாவின் "திருநவேலி"
3.எதிரொலி நிஜாமின் தூர்தர்ஷன் பொன்விழா நினைவுகள்"
மீண்டும் இணைவோம்..
*********************************************************************
அருமை. வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள். படிக்கறவங்க எல்லோருக்கும் கண்டிப்பா கொசுவ்த்தி சுத்திடும்.
ReplyDeleteநன்றியும் வாழ்த்துகளும்
ReplyDeleteஎனக்குத் தெரிஞ்ச ஒரே லெட்டர்...
ReplyDeleteகண்மணி அன்போட காதலன்
நான்..நான் எழுதும் லெட்டர்
:)
wow rasanaiye top pa irukku mavhi
ReplyDeleteexcellent !!!!!!!!!
ReplyDeleteஅருமையான கலெக்ஷன் செய்யது. பாலா சொன்னதுதான். உங்க ரசனையே ரசனை.
ReplyDeleteடெஸ்ட் மேட்ச்ல 20/20 ரேஞ்சுக்கு அடிச்சி ஆடுறீங்க மக்கா. வாழ்த்துக்கள்
வைரமுத்து எழுதிய "காதலித்துப்பார் தபால்காரன் தெய்வமாவான்" என்ற வரிகளுக்கு இமெயில், குறுஞ்செய்திகளால் இப்போவெல்லம் விடைகொடுத்தாகிவிட்டது. கடிதம் எழுதி பதிலுக்காக காத்திருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது
ReplyDeleteசெய்யது அதை அழகா தொகுத்திருக்கீங்க, ரொம்ப நல்லாயிருக்கு தல
//மடியில் கிடத்தி காதலுடன் தலையை கோதும் விரல்கள் கடிதங்களே//
ReplyDeleteமுற்றிலும் ஆமோதிக்கிறேன்
இதெல்லாம் சோ நு மழை பெய்யும்போது அதை ரசித்துக்கொண்டே எழுதும் வரிகள் இவை, இங்கே வெயில்லே மண்டைகாயுது
ReplyDeleteஅழகான எழுத்துக்களால் ஒரு மழையை ரசித்த திருப்தி செய்யது
உள்ளேன் ஐய்யா !
ReplyDeleteஎழுத்துலக மேதை, வலையுலக ஜாம்பவான், மிக பிரபலமான எழுத்தாளர் செல்லதுரையின் கை வண்ணத்தில் உருவான காலத்தால் அழிக்க முடியாத, படிப்போர் நெஞ்சை உருக்கும் காதல் காவியம், "முதல் காதல்" படிக்க இங்கே செல்லுங்கள்....
ReplyDeletehttp://www.idhayame.blogspot.சொம்/
வால்பையன் அவர்களின் ஆதரவு பெற்ற ஒரே எழுத்தாளர்...
//வால்பையன் அவர்களின் ஆதரவு பெற்ற ஒரே எழுத்தாளர்..//
ReplyDeleteஆமாம்யா,
அவரு கட்சி நடத்துறாரு, நான் ஆதரவு கொடுக்குறேன்!
அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியில எனக்கே ஆப்பா!?
முதல் பத்தியில் அபாரமான எழுத்து. மழையை போல் மனதுக்குள் மெல்ல உயிர் விட்டு கசிகிறது கடிதங்களின் நினைவுகள். இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் நிறைய எழுதியிருக்கலாமே என்ற் தோன்றுகிறது
ReplyDelete//வால்பையன் அவர்களின் ஆதரவு பெற்ற ஒரே எழுத்தாளர்...
ReplyDelete//
எனக்கு எதுல சிரிக்கரதுன்னு தெரியல !
அனைத்து கடிதங்களும் அருமை!
ReplyDeleteபகிரங்க கடிதங்களை ஏன் லிஸ்டில் சேர்த்து கொள்ளவில்லை!
மிக அருமை.. வாழ்த்துக்கள்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete//சொம்" இல்லைங்க " சொம்பு "
ReplyDeleteஎங்க சொல்லுங்க பாக்கலாம்! //
செல்லத்துரை கம்பெடுத்துட்டு வரப்போறாரு!
//அட கம்பு இல்லைங்க , சொம்பெடுத்துட்டு வரப்போறாரு!//
ReplyDeleteகாட்டு வழி போற பொண்ணே
கவலை படாதே!
செல்லத்துரை பேரை சொன்னா
புலி ஒதுங்கும் பாரு!
seedless!?
//வால்பையன் said...
ReplyDelete//வால்பையன் அவர்களின் ஆதரவு பெற்ற ஒரே எழுத்தாளர்..//
ஆமாம்யா,
அவரு கட்சி நடத்துறாரு, நான் ஆதரவு கொடுக்குறேன்!
அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியில எனக்கே ஆப்பா!?//
ஆப்பு வைக்கறதுன்னு முடிவு பண்ணப்புறம் "தலை" என்ன "வால்" என்ன? எல்லாத்துக்கும் வைக்க வேண்டியது தான்...
அட்டகாசமான கதைக்கான சரியான லிங்க் இதோ...
http://www.idhayame.blogspot.com
This comment has been removed by a blog administrator.
ReplyDelete//அட்டகாசமான கதைக்கான சரியான லிங்க் இதோ...//
ReplyDeleteநல்லா சர்காஸ் பண்றே மேன் நீ!
//
ReplyDeleteஆப்பு வைக்கறதுன்னு முடிவு பண்ணப்புறம் "தலை" என்ன "வால்" என்ன? எல்லாத்துக்கும் வைக்க வேண்டியது தான்...//
செல்லத்துரை சொந்த செலவில் சூனியம் வச்சுகாதிங்க!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//அட்டகாசமான கதைக்கான சரியான லிங்க் இதோ...//
ReplyDeleteநல்லா சர்காஸ் பண்றே மேன் நீ! //
முதல்ல உங்க அட்டகாசத்தை நிறுத்துங்க செல்லத்துரை!, தாங்க முடியல!
பிரபலம்னாலே பெரிய பிராபளம்யா!
செய்யது இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteகடிதங்கள் தந்த மனநிறைவுகளை நினைவலைகளாக்குகிறீர்கள்.
ஆகா!!! எழுத்து பிரமாதம் செய்யது!!
ReplyDeleteஅருமையான கடிதங்கள். :)
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி.
-வித்யா
அருமையான கடிதங்கள், அருமையான நினைவுகள். கலக்கல்
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு.....
ReplyDeleteமனதை பாதித்தது........
அருமை.
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி செய்யது. வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமை.. வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநம்மையும் நினைவு கூர்ந்ததற்கு நன்றி செய்யத்.
ReplyDeleteமூன்றாம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களின் இன்றைய எழுத்து நடையை படிக்கும்போது ஒரு ரசனை மிக்க இளைஞனின் எழுத்துக்களைப் படிக்கின்றாய் என்று என் உள்ளுணர்வு கூறியது.
ReplyDeleteஅந்த உள்ளுணர்வைத்தான் எழுத்தின் ஆளுமை எனச்சொல்லலாம்.
அருமை...
முதலில் ரசித்து, ரசனையை உள்வாங்கி அதனைச் சொற்களாக வடிப்பதும் ஒரு கலைதானே!
அப்புறம் அறிமுகங்களும் தெரிந்தவர்களே ஆனாலும் தங்களின் எழுத்தில் மேலும் மின்னுகிறார்கள்.
அன்பின் செய்யது
ReplyDeleteஉண்மையிலேயே கொசுவத்தி சுத்த வச்சீட்டீங்க
நல்வாழத்துகள் செய்யது
என்னப்பா நீ இப்படி அறிமுக உரையிலேயே இப்படி கட்டிப் போட்டு விடுகிறாய்...இந்த மழைய எப்படி திட்டறதுன்னு யோசித்து கொண்டிருந்த வேளையில் பகிரங்கமான இந்த சாடல் உன்னால் மட்டுமே முடியும் காதலின் நினைவை துணைக்கழைத்து மழை சாடல் கவிதையாய் தெரிந்தெனக்கு ஆமாம் பலமுறை படித்தேன் ஜுன் பத்தை போல இதையும் ஏனோ மனதை இந்த உரை வலிக்க செய்தது...உன்னால் எழுதபட்டதால் இந்த வார்த்தைகள் மேலும் மெருகூட்டப்படுகிறது இன்னும் என்னென்னவோ சொல்லி பாராட்ட நினைக்கிறேன் நிஜமாவே தெரியலை செய்யது எப்படி பாராட்டுவது என்று...
ReplyDeleteவலைசரத்தில் பதிவுகள் கதை கடிதம் என பிரிக்கப்பட்டு சொல்லும் விதம் நல்லா இருக்கு...
ReplyDeleteபதிவர்களின் அறிமுகம் சுகம்...கடிதத்தின் சிறந்த வரிகளை இங்கு இட்டு அதை மேம்படுத்திய விதமும் நன்று..
அதில் நானும் ஒரு அதிர்ஷ்டசாலியாய்..ஆமாம் செய்யது பாராட்டுவதென்றால் சும்மா....இன்னும் கூட நான் பதிவெழுதும் போதெல்லாம் உன்னையும் வால் பையனையும் நினைவில் கொண்டு தான் எழுதுவேன்....
மேலுன் உன் எழுத்து திறமை வெளிபட வலைச்சரம் ஒரு காரணமாக இருந்ததற்கு சீனா அண்ணாவிற்கு நன்றி..வாழ்த்துக்கள் செய்யது...
ReplyDeleteஎன் தம்பி என்று சொல்லிக்கொள்வதில் மேலும் பெருமைபடுகிறேன்..
//இன்னும் கூட நான் பதிவெழுதும் போதெல்லாம் உன்னையும் வால் பையனையும் நினைவில் கொண்டு தான் எழுதுவேன்....//
ReplyDeleteஅதனாலதான் அடிக்கடி விக்குதா!?
அருமையான இடுகை. நல்ல ரசனை செய்யது.
ReplyDeleteஅனுஜன்யா
எனக்காக இவ்வளவு தூரம் வந்து கருத்து சொன்ன அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் !!
ReplyDeleteஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.