வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Thursday, November 19, 2009
திகட்டத் திகட்ட புத்தகங்களும் இலக்கியமும்..!
"ஒரு புத்தகம் எனது கனவு
ஒரு புத்தகம் எனது நிஜத்தின் நிழல்
ஒரு புத்தகம் திரியைத் தூண்டும் விரல்
ஒரு புத்தகம் ஆசிரியரின் பிரம்பு
ஒரு புத்தகம் கண்ணாடி
ஒரு புத்தகம் புன்னகை
ஒரு புத்தகம் காணாமல் போன என் தேசம்..!"
புத்தகங்களோடே வாழ்ந்து கொண்டிருக்கும் வெகு சிலரைப் பற்றிய பதிவு இது.
*********
1.கிருஷ்ண பிரபுவின் "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்"
இப்பதிவை நான் எழுதி முடிக்க தன் முழு உழைப்பையும் பரிசளித்த புத்தகப்பிரியர், சென்னை இலக்கியவாதி பதிவர் கிருஷ்ண பிரபுவுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.கிருஷ்ண பிரபு சென்னை தனியார் நிறுவனமொன்றில் வெப் டிசைனிங் துறையில் பணிபுரிகிறார்.தேடி தேடி புத்தகங்களை வாங்கிப் படிக்கும் இவர்,தன் சக நண்பர்களுக்கும் புத்தகங்களையே பரிசளிக்கிறார்.புத்தக வெளியீட்டு விழாக்கள்,கேணி போன்ற இலக்கிய கூட்டங்கள் என எழுத்து சம்பந்தப்பட்ட எல்லா இடங்களிலும் காணக்கிடைப்பார்.
கேணி இலக்கிய சந்திப்பு குறித்த இவரது கட்டுரைகளை வாசிக்க, "கதைகள் மற்றும் கட்டுரைகள்" வலைதளம் பாருங்கள்.
****
2.அழியாச் சுடர்கள்
நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் அரிய படைப்பு பொக்கிஷங்கள் இத்தளம் முழுதும் காணக்கிடைக்கின்றன.புதுமைப்பித்தன்,ஜெயகாந்தன்,கி.ரா போன்ற பழைய ஜாம்பவான்களிலிருந்து தொடங்கி,கந்தர்வன்,மெளனி,சுந்தர ராமசாமி வழியே பயணித்து இன்றைய ஜெயமோகன்,மனுஷ்யபுத்திரன் வரை ஏராளமான எழுத்தாளர்களின் ஆக்கங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் அழியாச்சுடரில் காணலாம்.மேலும் தமிழின் முதல் சிறுகதை என்று அரியப்படும் 'குளத்தங்கரை அரச மரம்' உள்ளிட்ட அரிய பல தொகுப்புகள் இத்தளத்தில் புதைந்திருக்கின்றன.
****
3.வே.சபாநாயகத்தின் "நினைவுத்தடங்கள்"
"சிறுகதையின் உருவம் கொஞ்சம் விசித்திரமானது. அது முதலில் வாலைத்தான் காண்பிக்கும்; கடைசியில் தான் தெரியும் தலை!" கி.ரா.வின் எழுத்துக்கலை பற்றி குறிப்பிடும் இந்தப் பதிவோடு கடித இலக்கியம், நினைவுத்தடங்கள்,பயணக்கட்டுரைகள் என்று இலக்கியம் குறித்த ஒரு முழுமையான தொகுப்புகளை எழுதி வரும் முதுநிலை விரிவுரையாளரான திரு.வே.சபாநாயகம் அவர்கள் "அக்கரைப் பச்சை,அன்பின் மகத்துவம் என்று குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
****
4.சேரலின் "புத்தகம்"
நவீன கவிஞர் என்றறியப்படும் சேரல் என்கிற சேரலாதன் என்னும் இளைஞரால் நிர்வகித்து,எழுதப்பட்டு வரும் புத்தகங்கள் குறித்த இவ்வலைத்தளத்தில் ஞானசேகர்,பீ'மோர்கன் என்று பலர் தான் வாசித்த புத்தகங்கள்,சிறுகதை தொகுப்புகள்,புதினங்கள் குறித்து நேர்த்தியான நடையில் எழுதி வருகின்றனர்.எழுதப்பட்ட 51 பதிவுகள் ஒவ்வொன்றுமே முத்துக்கள் என்றாலும் நான் மிகவும் ரசித்த பதிவுகள்,
வண்ணதாசனின் "பெய்தலும் ஓய்தலும்" பற்றிய சேரலின் கட்டுரை
பீமோர்கனின் "மெளனியின் கதைகள்" குறித்த கட்டுரை
****
5.ராமஸ்வாமி வைத்யநாதன் & பக்ஸின் "கூட்டாஞ்சோறு"
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்த நண்பர்களான ராமஸ்வாமி வைத்யநாதன் மற்றும் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் இருவரும் தங்களுடைய அனுபவங்களையும்,புத்தகம் மற்றும் சினிமா பற்றியும் எழுதுகிறார்கள்.இவர்கள் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் நூவார்க் நகரில் அருகருகே வசிக்கிறார்கள்.பக்ஸ் பற்றி குறிப்பிடும் போது ராமஸ்வாமி இப்படி சொல்கிறார்."இந்த ப்ளாக்குக்கு தான் ஒரு guest author என்று அவன் நினைக்கிறான், co-author என்று நான் நினைக்கிறேன்!".
****
6.லேகாவின் "யாழிசை ஓர் இலக்கிய பயணம்"
தமிழ் இலக்கிய நாவல்கள்,சிறுகதை தொகுப்புகள் பற்றி வலையுலகில் நான் முதன் முதலாக அறிந்து கொள்ள காரணமாயிருந்தது லேகாவின் இவ்வலைப்பூ.மதுரையை தாயகமாக கொண்ட லேகா, சென்னையில் பணிபுரிகிறார்.நான் முன்பு வேலை செய்த பழைய மென்பொருள் நிறுவனத்தில் தான் அவர் இப்போது பணிபுரிகிறார் என்ற உண்மை அந்நிறுவனத்தை விட்டு நான் வெளிவந்தவுடன் தான் தெரிய வந்தது.தன் தந்தை வாயிலாக தமிழ் இலக்கியத்தின் மீது தீராக்காதல் கொண்ட லேகா,வாசித்த புதினங்கள்,சிறுகதை தொகுப்புகள்,உலக சினிமா என்று சிலாகித்து எழுதுகிறார்.எஸ்.ரா வின் சிறந்த வலைப்பூக்கள் பட்டியலில் லேகாவின் "யாழிசையும்" ஒன்று.
****
இன்னும் சில புத்தக வலைப்பூக்கள்
அ) விருபாவின் வலைப்பக்கம் தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு
ஆ) வடகரை வேலனின் "நூல்நயம்"
இ) மா.சிவகுமாரின் புரட்டிப் போட்ட படைப்புகள்"
ஈ) நிழலின் "தமிழ் புத்தகம்"
*****
Please visit here for a outstanding LOVE STORY - "MUDHAL KADHAL" from World Famous Mass Writer CHELLADURAI
ReplyDeletehttp://www.idhayame.blogspot.com/
நான்காம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteமெல்ல படிக்கிறேன்ப்பா
செல்லத்தொர !!! இன்னிக்கு அந்த "முதல் காதல்" அ எப்படியாவது ரூம் போட்டாவது
ReplyDeleteபடிச்சிர்றேன்..!!! முடியல..ப்ளீஸ்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!!!
யாரோ செல்லதுரை-ய வச்சு காமெடி பண்றாங்க பா..
ReplyDeleteசெய்யது, ரெம்ப நல்ல பதிவுகள மனிதர்கள அறிமுக படுத்திருகிங்க!! நன்றிகள் பல!!
//World Famous Mass Writer //
ReplyDeleteடே! நீ இன்னும் திருந்தலையா!?
இந்த கமெண்ட் குறிப்பா செய்யது ஆசிரியரா இருக்கும் போது மட்டும் வருதே!
ReplyDeleteஏன்!
செய்யது எதாவது டகால்டி வேலை செய்யுறாரா!?
தல பதிவு நல்லாருக்கு!
ReplyDeleteஆனா நான் சாருவோட புத்தகங்களை தவிர வேறு எதுவும் படிக்கிறதில்ல!
ஏன்னா எங்க ஊர்ல மேட்டர் புக் கிடைக்கிறதில்ல!
யாரோ!
ReplyDeleteஉலக புகை ஸாரி புகழ் செல்லதொர பதிவுல என் பேர்ல அதர் ஆப்சன் கமெண்ட் போட்றுக்காங்க!
நல்லா பாருங்க மக்களே நான் இந்த பழி பாவத்துகெல்லாம் ஆளாக மாட்டேன்!
அருமையான அறிமுகங்கள் செய்யது. அழியாச் சுடர்கள் எனக்கு புதுசு. ரொம்ப நன்றிங்க.
ReplyDeleteவித்யா
ஒஹ் இன்றைய முக்கியத்துவம் புத்தகமா? நல்லா வரிசைப்படுத்தி தொகுத்துக் கொண்டிருக்கிறாய் செய்யது..இன்று அறிமுக பதிவர்கள் எல்லாம் புதிவர்கள் எனக்கு..கண்டிப்பா படிக்கிறேன்...
ReplyDeleteSHORT SMART CUTE.....
வாழ்த்துக்கள்ப்பா...
லேகா வலைப்பூ பற்றி எல்லோருக்கும் தெரியும். வேலன் துவங்கினார். வேலை பளுவில் அவரால் தொடர முடியவில்லை என்று நினைக்கிறேன். மற்ற அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteஅனுஜன்யா
சரியான அறிமுகங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் செய்யது அவர்களே
புக்மார்க் செஞ்சு ஒவ்வொண்ணா படிக்கணும். அறிமுகத்திற்கு நன்றி செய்யது.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
இவையனைத்தும் நான் நேரம் கிடைக்கும் போது வாசிக்கும் பதிவுகள். நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதால் இது போன்ற பதிவுகளை நான் மிகவும் விரும்புவேன். என்னைப் பற்றி கொஞ்சம் அதிகமாக சொல்லிவிட்டீர்களோ என்று தோன்றுகிறது.
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி செய்யது...
நல்ல சுட்டிகள். நன்றி
ReplyDelete//World Famous Mass Writer CHELLADURAI
ReplyDelete//
நீ கெட்டவன் இல்ல!
கேவலமானவன் ..
நாலஞ்சு நாளா நானும் பாத்துட்டே இருக்கேன்..
ReplyDeleteஉங்கள மாதிரி நாலு பேர் சேந்து வசை பாடினா மட்டும் அவரோட புகழ் மங்கிப் போயிடாது..
செல்லத்துரை தான் யாருன்னு காட்டப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை
//செல்லத்துரை தான் யாருன்னு காட்டப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை //
ReplyDeleteஹே ஹே ஹே!
தூங்கிகிட்டு இருக்குற சிங்கத்தை யாரோ சொறிஞ்சு விட்டுடாங்க போல, செல்லதொரைக்கு கோபம் வந்துருச்சோ, அடுத்து ஒரு காவிய கதை எழுதி கொல்வார்!
(எழுத்து பிழையெல்லாம் இல்லை)
//நாலஞ்சு நாளா நானும் பாத்துட்டே இருக்கேன்.. //
ReplyDeleteதம்பி இந்த டயலாக் நாங்க சொல்லவேண்டியது!
இந்த சினிமாகாரனுங்க தான் விளம்பர மோகத்துல திரியுறானுங்க, அவனுக்கு அவனுங்களே போஸ்டர் அடிச்சி பொரட்சி தளபதி, பொரட்சி சிங்கம், பொரட்சி புலின்னு பேர் வச்சிகிறானுங்க!
உனக்கும் ஏன் இந்த சொறிதல்,
ஒழுங்கா துபாய்ல வேலையை பாரு, இல்லைனா பெட்டக்ஸ்ல அடிச்சி தொரத்திருவானுங்க!
//உங்கள மாதிரி நாலு பேர் சேந்து வசை பாடினா மட்டும் அவரோட புகழ் மங்கிப் போயிடாது..//
ReplyDeleteபுகழ், புகழ்னு சொல்றியே, அப்படினா என்ன?
உனக்கு மறைகீது கழண்டுருச்சா!?
என் வேலை பற்றி எனக்குத் தெரியும்... வால்களும் , ரா.ராக்களும் கவலை கொள்ள தேவை இல்லை
ReplyDeleteதுபாய்ல அப்பிடி என்ன தான் வேல பாக்கறீங்க ?
ReplyDelete//இனி அவர் கைல தான் எல்லாரும் முத்தம் கொடுக்கணும் ! //
ReplyDeleteபன்றி காய்ச்சல் மாஸ்க் விலை இனி பிச்சிக்கும்!
//என் வேலை பற்றி எனக்குத் தெரியும்... வால்களும் , ரா.ராக்களும் கவலை கொள்ள தேவை இல்லை //
ReplyDeleteதவளை தன் வாயால் தான் தான் செல்லதொரை என்பதை ஒப்புகொண்டது!
இதுக்கு தானே போட்டோம் பிட்டு!
//துபாய்ல அப்பிடி என்ன தான் வேல பாக்கறீங்க ? //
ReplyDeleteகேக்குறான், மேய்கிறான் கம்பேனியா இருக்கும்!
நல்ல அறிமுகங்களுக்கு நன்றி
ReplyDeleteஅட! நம்ம கிருஷ்ணா!!!!!!
ReplyDeleterajan RADHAMANALAN@
ReplyDeleteராஜன் உங்கள் பின்னூட்டங்கள் வரம்பு மீறி செல்வதால் உங்கள் பின்னூட்டங்கள்
நேற்றைக்கு போல இப்பதிவிலிருந்து நீக்கப்படுகின்றன.
இடுகைக்கு சம்பந்தமான கருத்துகள் மட்டும் இனிமேல் ஏற்றுக் கொள்ளப்படும் என தாழ்வன்புடன்
தெரிவித்து கொள்கிறேன்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete"அழியாச் சுடர்கள்" அறிமுகத்துக்கும் சிபாரிசுக்கும் நன்றி..
ReplyDeleteசில புதிய அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான தொகுப்பு.
ஆசிரியப்பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றீர்கள் செய்யது. பாராட்டுக்கள்.
ReplyDeleteகொடுத்திருக்கும் தளங்கள் அனைத்திற்கும் நேரம் கிடைக்கும்போது சென்று கண்டிப்பாக வாசிக்கிறேன்
நல்ல அறிமுகம். இப்போது மக்களுக்கு நூல்களை படிக்க பொறுமை இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.
ReplyDeleteஉண்மையில் வலை தளங்கள் புத்தகங்கள் படிப்பதில் சோம்பி போய் எழுத்து உலகமே மறந்து போன
பலருக்கு புது அறிமுகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. என் போன்றோர் தொடர்ந்து எழுத இதுவே ஒரு காரணம்.
உங்கள் அறிமுகங்கள் அருமை. தொடருங்கள்.
அருமையான தொகுப்பு, சேமித்து வைத்துக்கொண்டேன்.
ReplyDeleteகிருஷ்ணபிரபு பழகுவதற்கு இனிமையான நண்பர். அவரைப் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அவர் திட்டிவாசல் என்ற பதிவும் வைத்திருக்கிறார். அதில் கேணியின் எல்லா சந்திப்புகளும், அதற்கொத்த லிங்க்குகளோடு பதிவாகியிருக்கும்.
வலையை மேய ஆரம்பித்தபிறகு புத்தகம் ஒரு புதிராகவே இருக்கிறது. புத்தகப்பிரியரான கிருஷ்னபிரபு போல் சில ஆட்களால் இன்றும் அதன் நிலையை தன்னகத்தே கொண்டுள்ளன
ReplyDeleteஅருமையான தொகுப்பு செய்யது, உங்க ஆசிரியர் வேலை ஒரு வித்தியாசமாக இருக்கிறது
தொடருங்கள்
அன்பின் செய்யது
ReplyDeleteஅருமையான முறையில் அறிமுகம் செய்கிறீர்கள் - வாழ்க தங்கள் பணி
நல்வாழ்த்துகள்
நான்காம் நாள் வலைச்சர ஆசிரியரே வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநல்ல சுட்டிகள் கொடுத்து உங்கள் வலைச்சர ஆசரியர் பணியை செவ்வனே செய்து நான்காம் நாள் பணியை முடித்து விட்டீர்கள்.
மேலும் வலைச்சரத்தில் மிளிர நல்வாழ்த்துக்கள்.
:D... one more entry...! attendance poattukkonga..!
ReplyDeleteஎனக்காக இவ்வளவு தூரம் வந்து கருத்து சொன்ன அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் !!
ReplyDeleteஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.
அறிமுகத்துக்கு நன்றி தோழரே! மற்ற அறிமுகங்களையும் வாசிக்கிறேன்.
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்