மாற்றம் ஒன்றே மாறாதது - அப்படின்னு சொல்லுவாங்க. அது மட்டுமில்ல இந்த பழமொழியும் எப்பவும் மாறாமதான் இருக்கு. எல்லா இடத்திலும் எல்லா துறையிலும் நாம கத்துக்க வேண்டிய விஷயங்கள் இருந்துட்டேதான் இருக்கு. தெரிஞ்சது மவுஸ் அளவு தெரியாதது சிபியூ அளவாதான் நமக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. தனக்கு தெரிஞ்ச விஷயங்களை கத்துக்குடுக்கிற வள்ளல்கள்தான் இவங்க எல்லாரும்.
தேவையான அளவுக்கு பாடம் சம்பந்தமான அறிவு இருக்குது. அதை எப்படி பிராக்டிக்கலா உபயோகப்படுத்தலாம் அப்படின்ற அறிவும் இருக்குது. ஆனா இங்கிலீஷ் சரியா பேசவராது. இந்த ஒரு காரணத்தாலயே வேலை கிடைக்காதவங்களை நான் நிறைய பார்த்து இருக்கேன்.நானும் அனுபவிச்சும் இருக்கேன். ஆங்கிலம் இங்க வந்து பாருங்க. இங்கிலீஷ் ஈஸியா சொல்லி தரார் அருண்.
அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டுல இருக்கிறவங்களுக்கு எக்ஸெல் எம்பூட்டு முக்கியம் தெரியுமா. ஸ்டேட்மெண்ட் பிரிப்பேர் செஞ்சு விரல் எல்லாம் தேய்ஞ்சு போயிடும். ஒரளவுக்காவது எக்ஸெல் தெரியலைன்னா கண்டிப்பா எங்க டிபார்மெண்டுல குப்பை கொட்ட முடியாது. கற்றது எக்ஸெல் அப்படின்னு எக்ஸெலை எக்ஸலெண்டா சொல்லி தர்ற வர்றார் சங்கர்.
கம்யூட்டர் சம்பந்தமான நிறைய டிப்ஸ் தந்துகிட்டு இருக்கார் .அது மட்டுமில்லாம குழந்தைகளுக்கான நிறைய தளங்களையும் பரிந்துரைக்கிறார் மகேந்திரன். அதையெல்லாம் பாக்க தமிழ்கணினி -க்கு வாங்க.
முக்கியமான விஷயம் இவங்க எல்லாரும் ரொம்ப எளிமையா எல்லாருக்கும் புரியறது போல சொல்லி தர்றாங்க. போய் நம்மளும் அவங்க சொல்லி தர்றதை கத்துகிட்டு அவங்க எல்லாருக்கும் ஒரு நன்றி சொல்லிட்டு வரலாம் வாங்க
'ஆங்கிலம்' இங்க வந்து பாருங்க. இணைப்பை சரி பண்ணுங்க நண்பரே... நாளைய அறிமுக பதிவுகளுக்கு ஆவலுடன் இருக்கிறேன்.
ReplyDeleteநன்றி கிருஷ்ணபிரபு லிங்க் சரி செஞ்சுட்டேன். நன்றி
ReplyDeleteகலக்கல் அக்கோவ்..நேத்து சிரிக்க வைச்சுட்டு இன்னைக்கு சிந்திச்சு படிக்க வைக்கிறீங்க.. சூப்பர்.
ReplyDeleteஉபயோகமான பதிவு.நல்ல பகிர்தலுக்கு நன்றி.
ReplyDeleteடெக்னிகல் ப்ளாக் இன்னும் நிறைய இருக்குங்க....!!!! எல்லாத்தையும்
ReplyDeleteவெளிய கொண்டு வாங்க..!!
சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள் !!
:") super. Thanks for sharing.
ReplyDelete-vidhya
//வேலை கிடைக்காதவங்களை நான் நிறைய பார்த்து இருக்கேன்.நானும் அனுபவிச்சும் இருக்கேன்//
ReplyDeleteஉபயோகமான பதிவு.......
//இங்கிலீஷ் சரியா பேசவராது. இந்த ஒரு காரணத்தாலயே வேலை கிடைக்காதவங்களை நான் நிறைய பார்த்து இருக்கேன்.நானும் அனுபவிச்சும் இருக்கேன்.//
ReplyDeleteரொம்ப உபயோகமான வலைப்பூ....
உபயோகமான அறிமுகங்கள்,நன்றி தாரணிபிரியா.
ReplyDeleteஆங்கிலம் வலைப்பூ மிகவும் உபயோகமான தளம். மற்றதை தெரிந்துகொள்கிறேன். அதே போல் மின்னல் கணிதம்னு ஒரு தளம் கூட இருக்கு.
ReplyDeleteகுட்மார்னிங் டீச்சர்!
ReplyDeleteஒழுங்கா எல்லா பாடத்தையும் கத்துகிறேன் டீச்சர்!
மூன்றாம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteடீச்சர் நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் டீச்சர்!
ReplyDeleteநீங்க அறிமுகப் படுத்தி இருக்கும் எல்லா வலைகளையும் பாக்குறேன் டீச்சர்!
அறிமுகப் படுத்தியதிற்கு ஒரு சின்ன நன்றி டீச்சர்:)
இனிமேல் ஒழுங்கா வகுப்பை அட்டென்ட் பண்ணி பரீச்சை எல்லாம் எழுதறேன் டீச்சர்!
தப்பா எழுதினா அடிக்க மாட்டீங்களே:)
அறிமுகத்துக்கு மிக்க நன்றிங்க தாரணி, நான் கற்றதை மத்தவங்களுக்கும் சொல்லலாம்னு தான்
ReplyDeleteஉபயோகமான பதிவு....வாழ்த்துக்கள்!!
ReplyDeleteUseful Technical blog introduction. Personally I used the Excel blog today.
ReplyDeleteKeep it up.
Expecting more from you
அன்பின் தாரணி
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்
நல்வாழ்த்துகள்
அட இவங்கள எனக்கு தெரியாதே!!! நன்றிங்க அக்கவுண்டண்ட்
ReplyDeleteநான் எட்டிகூட பார்க்காத பெட்டையா இருக்கும் போலிருக்கே, போய்ப் பார்க்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ப்ரியா.. நல்ல அறிமுகங்கள் அவசியம் படிக்கிறேன்...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteஅடடடே இங்கே கொடுத்தாச்சா எக்ஸெல் - இதை கவணிக்காமல் இன்றைய பதிவில் சுட்டி குடுத்துட்டேன் - மன்னியுங்கள்.
ReplyDeleteநன்றி தாரணி,
ReplyDeleteஆனா என்ன விட பெரிய வள்ளல்கள் இருந்ததாலதான் நான் குட்டி வள்ளல் ஆனேன்னு பணிவோட சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.