எல்லாருக்கும் வணக்கம்.
நேத்து பின்னூட்டத்துல அமித்து அம்மா இந்த பதிவு பத்தி சொல்லி இருந்தாங்க. செல்வா மின்னல் வேகத்தில கணக்கு போட இங்கு சொல்லி தர்றார்.
வேலைவாய்ப்பும் உயர்கல்வி தகவல்களும் பத்தின தகவல்களை தர்ற வலைபூக்கள்ல எனக்கு தெரிஞ்சதை இங்கு சொல்லறேன். உங்களுக்கும் இது தவிர வேற இது போல வலைபதிவுகள் ஏதாவது தெரிஞ்சா பின்னூட்டத்தில சொல்லிட்டு போங்க நண்பர்களே.
வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் இது எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச பதிவாதான் இருக்கும். வேலை வாய்ப்பு, வெளிநாட்டு குடியுரிமை பத்தின தகவல்கள் நிறைய இருக்கு. இது தவிர என்ன தொழில் செய்யலாம் அப்படின்னும் அனுபவம் நிறைஞ்சவங்க ஆலோசனை சொல்லிகிட்டு இருக்காங்க.
ஏணிப்படிகள் இதுல மாணவர்களுக்கான உயர்கல்வி சம்பந்தமான தகவல்கள் மற்றும் உதவித்தொகைக்கான அறிவிப்புகள் பத்தி சொல்லறாங்க. இந்த வலைபதிவர் குமார் நிறைய பாராட்டபட வேண்டிய ஒருத்தர். எப்ப உதவித்தொகை பத்தின அறிவிப்பை ஏதாவது ஒரு நிறுவனம் வெளியிட்டாலும் உடனே அதை வலையேத்தறது மட்டுமில்லாம் என்னை போல கல்லூரிகள்ல வேலை செய்யறவங்க மெயில் ஐடிக்கும் உங்க காலேஜ் நோட்டீஸ் போர்டுல இந்த அறிவிப்பை போடுங்க அப்படின்னு அனுப்பி வைப்பார்.
அப்புறம் நம்ம சகா கார்க்கி இப்ப இளம் தொழிலதிபர் ஆகியிருக்கார் தானே. அவர் வலையிலும் ஹாட் ஜாப்ஸ் அப்படின்னு ஒரு பகுதி ஆரம்பிச்சு அங்க வேலை வாய்ப்பு தகவல்களை பதிஞ்சுட்டு வர்றார்
Good :)
ReplyDeleteரொம்ப யூஸ்ஃபுல்லான வலைத்தளங்களாக இருக்கு...
ReplyDelete:-)
நல்ல சுட்டிகள் - நன்றி.
ReplyDeleteExcel கற்க
நேற்றைய பதிவில் நான் மேலே குடுத்துல்ல சுட்டியை அறிமுகம் செய்துட்டாங்க - இப்ப தான பார்த்தேன். மன்னியுங்கள்.
ReplyDeleteபயனுள்ள தகவல்களா பொறுப்பா தர்றிங்களே!
ReplyDeleteஎப்பயிருந்து எப்படி மாறுனிங்க!?
வலைச்சர ஆசிரியருக்கு நான்காம் நாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteபயனுள்ள சுட்டிகள் அனைவருக்கும் பயன் தரும் நன்றி!
ReplyDeleteஅன்பின் தாரணி பிரியா
ReplyDeleteஅருமையான் அறிமுகங்கள்
நல்வாழ்த்துகள்
கண்டிப்பா யூஸ் ஆகும். நன்றி. :)
ReplyDelete//அப்புறம் நம்ம சகா கார்க்கி இப்ப இளம் தொழிலதிபர் ஆகியிருக்கார் தானே.
சஞ்சய் ராமசாமி?
நன்று.
ReplyDeleteநல்ல சுட்டிகள்
ReplyDelete////அப்புறம் நம்ம சகா கார்க்கி இப்ப இளம் தொழிலதிபர் ஆகியிருக்கார் தானே//
ReplyDeleteசஞ்சய் ராமசாமி?//
ங்கொக்கமக்கா.. மண்டைல அடிவாங்கனும்ன்னு ஆசைப்படறீங்க. அப்ப கூட அடிச்சவன மறந்தாலும் உன்னை மறக்க மாட்டேன் கார்த்திக் :))
யக்கோவ்.. இதுவரைக்கும் நிறையப் பேரு எனக்கு வலைச்சரத்துல லின்க் கொடுத்தாலும் இப்படி நல்லவிதமா யாருமே சொன்னதில்ல.. ஒரே பீலிங்க்ஸ் ஆயிடுச்சு
ஆகா... பயனுள்ள தளங்கள்....
ReplyDelete