-லியோ டால்ஸ்டாய்
அனைவருக்கும் என் பணிவான வணக்கம். வலைச்சரத்தில் இன்று முதல் ஒருவாரத்துக்கு நானும் ஒரு பூவாய் இணைந்திருக்கிறேன். முதலாய் நிகழும் எந்த ஒரு விஷயமும் நம் நெஞ்சைவிட்டு அகலாமல் பசுமையாய் இறுதிவரை இருந்தினிக்கும். முதல் பயணம், முதல் நட்பு, முதல் காதல், முதல் முத்தம், முதல் சினிமா, முதல் வேலை, முதல் ஆசிரியர்... என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வகையில் இன்று என் ஆசான் வானம்பாடிகள் அய்யாவின் ஆசிகளை மானசீகமாய் பெற்றுக்கொண்டு, சீனா அய்யாவின் அன்புக்கட்டளைக்கு இணங்கி, இதோ இன்று 'முதல்' ஆசிரியராய் ஒரு வாரத்திற்கு என்னுடைய எண்ணங்களை பகிர்ந்துகொண்டு உங்களோடு எழுத்தாட இருக்கிறேன். உங்களின் அன்பான ஆதரவினையும், என்னை செம்மைப்படுத்தும் கருத்துக்களையும் எதிர்நோக்கி இதோ ஆரம்பிக்கிறேன்.
எனக்கு எழுதுவதை விட படிக்கத்தான் நிறைய பிடிக்கும், மிக எளிதான ஒன்று என்பதால். வாழ்விலேயே எளிதான விஷயங்களை சொல் என எவரேனும் என்னைக்கேட்டால் சட்டென இரண்டை சொல்லுவேன். முதலாவதாய் அறிவுறை சொல்லுவது அடுத்ததாய் விமர்சிப்பது. கடினமான விஷயங்கள் எனக்கேட்டால் அறிவுரை கேட்பது, விமர்சனங்களை தாங்கிக்கொள்வது. எனக்கு இந்த கடினமான இரண்டும் மிகப் பிடிக்கும் என்பதால் தயக்கமின்றி அறுவுறுத்துங்கள், விமர்சியுங்கள்.
எழுத வந்து எட்டு மாதங்களை முடித்திருக்கிறேன், உங்களின் மேலான அன்போடும் ஆதரவோடும். இந்த வலையுலகில் எனக்கு கிடைத்த உறவுகள்தான் இடுகையெழுத வந்ததில் கிடைத்திட்ட பொக்கிஷங்கள் என்பேன்.
வாழ்க்கை வாழ்வதற்கே வலைப்பூவில் நினைவுகளின் குறிப்பேடாய் எண்ணத்தை கிளர்ந்து எழுதியும், எண்ணத்தை எழுதுகிறேன் வலைப்பூவில் சம நிகழ்வுகளைப் பற்றியும் எழுதி வருகிறேன். சினிமா விமர்சனங்கள் மற்றும் மற்றவர்களை புண்படுத்தும் எதையும் எழுதுவதைத் தவிர்த்து வருகிறேன்.
எனது இடுகைகளில் பிடித்ததாய் சொல்லவேண்டுமென்றால் மூன்று இடுகைகளை சொல்லுவேன். முதலாவதாய் எனது முதல் ஆசிரியருக்கு குரு வணக்கமாய் 'நின்னு போச்சு ரயில் வண்டி' என் முதல் ஆசானை நினைவு கூறுவதாயும், எங்களுக்குள் இருந்த பரஸ்பர அன்பையும் சொல்லுவதாய் இருக்கும்.
அடுத்ததாய் என்னை சுதந்திரமாய் வளர்த்து இன்றும் எனது முதல் நண்பனாய் இருக்கும் எனது தந்தைக்காக எழுதிய அப்பாவுக்கு பிறந்த நாள் இடுகை, எனக்கும் அவருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை சொல்வதாய் இருக்கும்.
மூன்றாவதாய் எனக்கு நிகழ்ந்த ஒரு பேயோடு சம்மந்தமான பேயைப்பார்த்த கதை எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவச்சிதறலாயும் இருக்கும், இதில் வரும் கோவிந்து உங்களை நிறைய கவர்வார்.
என்னைக் கவர்ந்தவர்களை வகைப்படுத்தி சொல்ல ஆசைப்படுகிறேன். முடிந்த வரையில் கடந்த மூன்று மாதங்களில் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியவர்களை தவிர்க்க முயல்கிறேன். நிறைய பிடித்த சிலரை குறிப்பிட இதனை மீறவும் வாய்ப்பிருக்கிறது, அதற்காக ஆரம்பத்திலேயே என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வரிசையில் எழுதுபவர்களை குறிப்பிட்டு எழுத எண்ணம்...
- சமுதாய சிந்தனையோடு எழுதுபவர்கள்
- நகைச்சுவையாய் எழுதுபவர்கள்
- கவிதையால் நம்மை களிப்புறச்செய்பவர்கள்
- சிறுகதைகள் பற்றிய ஒரு தொகுப்பு
- தகவல் தொழில்நுட்பம், இலக்கியம், சமையல் குறிப்புகள்
மேலும் இந்த எழுதும் வாரத்தில் இதையெல்லாம் செயல்படுத்தவும் எண்ணம்.
- ஒவ்வொரு நாளும் ஒரு தகவல்.
- நாளுக்கு குறைந்தது ஐவராய், ஒரு முப்பது பேரை அறிமுகப்படுத்துதல்.
- ஒவ்வொருவரை அறிமுகப்படுத்தி அவரைப்பற்றி சொல்லி அதே சமயம் அவர்களிடம் எனது எதிர்ப்பார்ப்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் சொல்லல்...
வலைச்சரத்தின் பூவாகி
வாசம் வீசும் ஏழுநாட்கள்
வாழ்நாளின் வசந்தமான
ஒளிநிறை இன்பப்பூக்கள்.
அறிமுகம் போதும், நாளை சந்திப்போமா?
வாங்க வாங்க.
ReplyDeleteநல்ல தொடக்கம்....வாழ்த்துக்கள் பிரபா
ReplyDeleteவாழ்த்துகள் பிரபாகர்..பணி சிறக்கட்டும்
ReplyDeleteஎதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற பதிவு.
ReplyDeleteஆவலோடு காத்திருக்கிறோம்
ReplyDeleteபுயல்களின் அறிமுகத்திற்காய்..:))
வாங்க பிரபாகர்.... வாழ்த்துகள் !!
ReplyDeleteநல்ல தொடக்கம்....
வாழ்த்துக்கள் தல. ஆரம்பமே அசத்தலா இருக்கு. தொடருங்கள்...
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரபா..
ReplyDeleteநல்வரவு.
ReplyDeleteஜமாய்ங்க!
ஆமாம்.....சரித்திரம் சொல்பவர்களைச் 'சரித்திரம்' ஆக்கிருவீங்களா:-)
அறிமுகமே அசத்தல்.
ReplyDeleteஅன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்
மனமார்ந்த வாழ்த்துகள் பிரபாகர்
ReplyDeleteமிக சிறப்பான வாரமாக அமையட்டும்
உங்க பேயைப் பார்த்த கதை மறக்க முடியாத ஒன்று
ReplyDeleteவாழ்த்துகள் பிரபா
சிறப்பான வாரத்துக்கு வாழ்த்துகள் பிரபாகர்.
ReplyDeleteசிங்கப்பூரிலிருந்து வந்த சிங்கம், அண்ணன் பிரபாகர், வாழ்க வாழ்க
ReplyDeleteவாழ்த்துகள் பிரபாகர் :))
ReplyDeleteவாழ்த்துகள் சகா.. கலக்குங்க
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே..
ReplyDeleteவாங்க தோழரே....
ReplyDeleteவாழ்த்துக்கள்...
கமான் பிரபாகர் கமான் :-)
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteசிந்தனை தரும் பொன்மொழியுடன் ஆரம்பமே அசத்தல்.
ReplyDeleteபின்னூட்ட பிரபாகர் இன்று பிரபல பதிவர் பிரபாகராய் மின்னுவதில் ஆச்சர்யம் இல்லை. தங்களின் உழைப்பும் அன்பும் இவ்வளவு தூரம் உங்களைத் தூக்கி வந்திருக்கிறது.
தொடர்ந்து நல்ல மலராய் இங்கும் வாசம் வீசுங்கள்.
தம்பியின் வாழ்த்துகள். _/|\_
:-)
வாழ்த்துகள் பிரபாகர் :)
ReplyDeleteவருக வருகவே......
தொடருங்கள்
வாங்க தலைவரே... வாழ்த்துக்கள்...முதல் இடுகையே அசத்தல்...
ReplyDeleteவாழ்த்துக்கள்டா தம்பி. கலக்கு!!
ReplyDeleteவாழ்த்துக்கள்.. உங்க ப்ளான் அருமையா இருக்கு. நிறைய எதிர் பார்க்க வைக்குது
ReplyDeletewaiting for u
ReplyDeleteவாழ்த்துக்கள் ப்ரபா..! மகிழ்வாய் இருக்கிறது.
ReplyDeleteஇந்த இடுகை யாருங்க சாமி மைனஸ் ஓட்டு போட்டது
ReplyDeleteயாருன்னு தமிழ்மணக் கடவுளக் கேட்டா இவங்கதான் ஓட்டுப் போட்டவங்கன்னு சொல்லுது...
//இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்
prabhagar aruran SHANKAR ktmjamal pulavanpulikesi kathir lathananth vaanampadigal velanss thisaikaati balasee //
ஆமா... இதுல கட்ட வெரல கமுத்திப்போட்ட புண்ணியவான் யாருங்க சாமி
....சீக்கிரம் சொல்லுங்கப்பா...
ஆனா எனக்குத் தெரியும் நான் ஓட்டுபோட்ட பிறகு 6/6 என்று இருந்தது
எட்டு மாதம் என்பது ஆச்சரியமே.. நான் பல வருடங்கள் என எண்ணியிருந்தேன்..
ReplyDeleteஆரம்பமே அட்டகாசம்.கலக்குங்கள் பிரபாகர்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteவிஜய்
ஆரம்பமே அசத்தல்.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள் அண்ணா...! ரொம்ப சிறப்பா எழுதி இருக்கீங்க... அப்டியே தொடருங்கள்...
ReplyDeleteவாழ்த்துகள் பிராபகர்
ReplyDeleteவாங்க பிரபாகர்,... வாழ்த்துகள்
ReplyDeleteகலக்குங்கோ
வாழ்த்துக்கள் பிரபா.
ReplyDeleteஅருமையான ஆரம்பம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தொடரும் பிரபா.
வலைச்சர முதல் நாள் வாழ்த்துக்கள். ஆரம்பம் அழகாக அளவோடிருக்கிறது.
ReplyDeleteஎழுத எடுத்துக் கொண்ட தலைப்புகளும் நன்று. இனியென்ன? கலக்கல் தான் பாக்கி.
//
ReplyDeleteசின்ன அம்மிணி said...
வாங்க வாங்க.
//
நன்றிங்க அம்மணி...
//
ஆரூரன் விசுவநாதன் said...
நல்ல தொடக்கம்....வாழ்த்துக்கள் பிரபா
//
நன்றி ஆரூரன்...
//
T.V.Radhakrishnan.. said...
வாழ்த்துகள் பிரபாகர்..பணி சிறக்கட்டும்
//
நன்றிங்கய்யா, உங்களின் ஆசியோடு கண்டிப்பாய்...
//
தாராபுரத்தான் said...
எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற பதிவு.
//
நன்றிங்க, கண்டிப்பாய் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்...
//
ReplyDeleteபலா பட்டறை said...
ஆவலோடு காத்திருக்கிறோம்
புயல்களின் அறிமுகத்திற்காய்..:))
//
எதிர்பார்ப்பு கொஞ்சம் பயத்தை கிளப்பினாலும்... சமாளிப்போம் எனும் தெம்பு இருக்கிறது. நன்றி நண்பா!
//
Mahesh said...
வாங்க பிரபாகர்.... வாழ்த்துகள் !!
நல்ல தொடக்கம்....
//
நன்றி மகேஷ்...
//
புலவன் புலிகேசி said...
வாழ்த்துக்கள் தல. ஆரம்பமே அசத்தலா இருக்கு. தொடருங்கள்...
//
நன்றி புலிகேசி, உங்கள் அன்பு இருக்கும் வரை எல்லாம் சாத்தியம்!
//
நட்புடன் ஜமால் said...
முதல் நாள் வாழ்த்துகள்.
//
ரொம்ப நன்றிங்க! மகிழ்ச்சியா இருக்கு...
//
ReplyDeleteCable Sankar said...
வாழ்த்துக்கள் பிரபா..
//
நன்றிங்கண்ணா, உங்களின் அன்பிற்கு, ஆதரவிற்கு...
//
துளசி கோபால் said...
நல்வரவு.
ஜமாய்ங்க!
ஆமாம்.....சரித்திரம் சொல்பவர்களைச் 'சரித்திரம்' ஆக்கிருவீங்களா:-)
//
இல்லைங்க மேடம், சொல்லப்போறேன். அறிவுறுத்தலுக்கு நன்றி...
//
க.நா.சாந்தி லெட்சுமணன். said...
அறிமுகமே அசத்தல்.
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்
//
ரொம்ப நன்றிங்க, அன்பிறு, ஆதரவிற்கு...
//
நேசமித்ரன் said...
மனமார்ந்த வாழ்த்துகள் பிரபாகர்
மிக சிறப்பான வாரமாக அமையட்டும்
//
ரொம்ப நன்றிங்க நேசமித்திரன்...
//
ReplyDeleteஈரோடு கதிர் said...
உங்க பேயைப் பார்த்த கதை மறக்க முடியாத ஒன்று
வாழ்த்துகள் பிரபா
//
மிக்க நன்றி கதிர்!
//
வானம்பாடிகள் said...
சிறப்பான வாரத்துக்கு வாழ்த்துகள் பிரபாகர்.
//
வாழ்த்துக்கு நன்றிங்கய்யா...
//
சங்கர் said...
சிங்கப்பூரிலிருந்து வந்த சிங்கம், அண்ணன் பிரபாகர், வாழ்க வாழ்க
//
நன்றி என் அன்பு தம்பி சங்கர்!
//
ச.செந்தில்வேலன் said...
வாழ்த்துகள் பிரபாகர் :))
//
ரொம்ப நன்றிங்க!
//
ReplyDeleteகார்க்கி said...
வாழ்த்துகள் சகா.. கலக்குங்க
//
நன்றிங்க சகா!
//
முனைவர்.இரா.குணசீலன் said...
வாழ்த்துக்கள் நண்பரே..
//
நன்றிங்க அய்யா!
//
Sangkavi said...
வாங்க தோழரே....
வாழ்த்துக்கள்...
//
நன்றி அன்பு தோழா!
//
யுவகிருஷ்ணா said...
கமான் பிரபாகர் கமான் :-)
//
நன்றி குருஜி, எல்லாம் உங்களில் ஆரம்பித்தது...
//
ReplyDeleteSabarinathan Arthanari said...
வாழ்த்துக்கள்
//
ரொம்ப நன்றிங்க...
//
ரோஸ்விக் said...
சிந்தனை தரும் பொன்மொழியுடன் ஆரம்பமே அசத்தல்.
பின்னூட்ட பிரபாகர் இன்று பிரபல பதிவர் பிரபாகராய் மின்னுவதில் ஆச்சர்யம் இல்லை. தங்களின் உழைப்பும் அன்பும் இவ்வளவு தூரம் உங்களைத் தூக்கி வந்திருக்கிறது.
தொடர்ந்து நல்ல மலராய் இங்கும் வாசம் வீசுங்கள்.
தம்பியின் வாழ்த்துகள். _/|\_
:-)
//
தம்பியுடையான் படைக்கஞ்சான்! உண்மைதான், எத்தனை அன்பு உங்களுக்கு!
//
றமேஸ்-Ramesh said...
வாழ்த்துகள் பிரபாகர் :)
வருக வருகவே......
தொடருங்கள்
//
நன்றி றமேஷ்...
//
க.பாலாசி said...
வாங்க தலைவரே... வாழ்த்துக்கள்...முதல் இடுகையே அசத்தல்...
//
நன்றி என் அன்பு இளவல்...
//
ReplyDeleteதண்டோரா ...... said...
வாழ்த்துக்கள்டா தம்பி. கலக்கு!!
//
அன்புக்கு நன்றிங்கண்ணா!
//
மோகன் குமார் said...
வாழ்த்துக்கள்.. உங்க ப்ளான் அருமையா இருக்கு. நிறைய எதிர் பார்க்க வைக்குது
//
உங்க எதிர்பார்ப்பும் என்னை நல்லா எழுதனும்னு தூண்டுதுங்க! ரொம்ப நன்றி...
//
மதார் said...
waiting for u
//
Sure, I will write my level best.
//
நாகா said...
வாழ்த்துக்கள் ப்ரபா..! மகிழ்வாய் இருக்கிறது.
//
வாங்க நாகா! ரொம்ப சந்தோஷம்!
//
ReplyDeleteஈரோடு கதிர் said...
இந்த இடுகை யாருங்க சாமி மைனஸ் ஓட்டு போட்டது
யாருன்னு தமிழ்மணக் கடவுளக் கேட்டா இவங்கதான் ஓட்டுப் போட்டவங்கன்னு சொல்லுது...
//இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்
prabhagar aruran SHANKAR ktmjamal pulavanpulikesi kathir lathananth vaanampadigal velanss thisaikaati balasee //
ஆமா... இதுல கட்ட வெரல கமுத்திப்போட்ட புண்ணியவான் யாருங்க சாமி
....சீக்கிரம் சொல்லுங்கப்பா...
ஆனா எனக்குத் தெரியும் நான் ஓட்டுபோட்ட பிறகு 6/6 என்று இருந்தது
//
இதுக்கு மேல சொல்லனுமா என்ன? நன்றி சி.பி.ஐ. கதிர்! உள்ளங்கை நெல்லிக்கனி.
//
D.R.Ashok said...
எட்டு மாதம் என்பது ஆச்சரியமே.. நான் பல வருடங்கள் என எண்ணியிருந்தேன்..
//
ரொம்ப நன்றிங்க D.R.Ashok !
//
அபுல் பசர் said...
ஆரம்பமே அட்டகாசம்.கலக்குங்கள் பிரபாகர்.
வாழ்த்துக்கள்.
//
நன்றி அபுல் பசர். ரொம்ப சந்தோஷம்!
//
விஜய் said...
வாழ்த்துக்கள் நண்பா
விஜய்
//
மிக்க நன்றி விஜய்!
//
ReplyDeleteChitra said...
ஆரம்பமே அசத்தல்.
//
நன்றிங்க சித்ரா...
//
கோவி.கண்ணன் said...
வாழ்த்துகள்
//
அன்புக்கு நன்றிங்கண்ணா...
//
கலகலப்ரியா said...
வாழ்த்துகள் அண்ணா...! ரொம்ப சிறப்பா எழுதி இருக்கீங்க... அப்டியே தொடருங்கள்...
//
கண்டிப்பாய் சகோதரி! அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி...
//
இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துகள் பிராபகர்
//
நன்றிங்கண்ணா, ரொம்ப ரொம்ப சந்தோஷம்...
//
ReplyDeleteஆ.ஞானசேகரன் said...
வாங்க பிரபாகர்,... வாழ்த்துகள்
கலக்குங்கோ
//
நன்றிங்கண்ணா, கலக்கிடுவோம்...
//
செ.சரவணக்குமார் said...
வாழ்த்துக்கள் பிரபா.
//
நன்றி சரவணக்குமார்!
//
ஹேமா said...
அருமையான ஆரம்பம்.
வாழ்த்துக்கள் தொடரும் பிரபா.
//
எனது நன்றிகளும் அன்பு சகோதரி...
//
ஜெஸ்வந்தி said...
வலைச்சர முதல் நாள் வாழ்த்துக்கள். ஆரம்பம் அழகாக அளவோடிருக்கிறது.
எழுத எடுத்துக் கொண்ட தலைப்புகளும் நன்று. இனியென்ன? கலக்கல் தான் பாக்கி.
//
ரொம்ப நன்றிங்க. கண்டிப்பா சிறப்பாக இருக்க முயற்சிக்கிறேன்...
முதல் நாள் வாழ்த்துகள் சகோ...
ReplyDeleteநாளின் தொடக்கமே அருமையாக ஆரம்பித்திருக்கிறது வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் பிரபாகர்.
ReplyDeleteவாழ்த்துகள் பிரபாகர்
ReplyDeleteஅசத்தலான அறிமுகம் பிரபா
ReplyDeleteகலக்கிட்டீங்க .
முதல் நாள் வாழ்த்துக்கள் .
பின்னூட்டம் இட தாமதமாகி விட்டது .
ReplyDeleteவாழ்த்துகள் பிரபாகர்.
ReplyDeleteஅன்பின் பிரபாகர்
ReplyDeleteஅருமையான சுய அறிமுகம்
அப்பாவைப் பற்றியும் ஆசானைப் பற்றியும் அருமையான இடுகைகளைப் பகிர்ந்தமை நன்று
நல்வாழ்த்துகள் பிரபாகர்
//
ReplyDeleteMrs.Menagasathia said...
முதல் நாள் வாழ்த்துகள் சகோ...
//
ரொம்ப நன்றிங்க சகோதரி!
//
மாதேவி said...
நாளின் தொடக்கமே அருமையாக ஆரம்பித்திருக்கிறது வாழ்த்துக்கள்.
//
நன்றி சகோதரி, மற்ற நாட்களிலும் நன்றாக தர முயற்சிக்கிறேன்.
//
முகிலன் said...
வாழ்த்துகள் பிரபாகர்.
//
நன்றி முகிலன்...
//
ரிஷபன் said...
வாழ்த்துகள் பிரபாகர்
//
நன்றி ரிஷபன்...
//
ReplyDeleteStarjan ( ஸ்டார்ஜன் ) said...
அசத்தலான அறிமுகம் பிரபா
கலக்கிட்டீங்க .
முதல் நாள் வாழ்த்துக்கள் .
//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
பின்னூட்டம் இட தாமதமாகி விட்டது .
//
நன்றி நண்பா, அதனாலென்ன?
//
அக்பர் said...
வாழ்த்துகள் பிரபாகர்.
//
நன்றி சினேகிதா!
//
cheena (சீனா) said...
அன்பின் பிரபாகர்
அருமையான சுய அறிமுகம்
அப்பாவைப் பற்றியும் ஆசானைப் பற்றியும் அருமையான இடுகைகளைப் பகிர்ந்தமை நன்று
நல்வாழ்த்துகள் பிரபாகர்
//
நன்றிங்கய்யா! எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்...
அழகான பிரிவுகளாய் பிரித்து அமர்க்களமாக ஆரம்பித்தத்ற்கு முதற்கண் வாழ்த்துக்கள். ஒரு நாள் ஒரு தகவல் அறிய ஆவல்.
ReplyDeleteஇன்று தான் உங்கள் இடுகையை படிக்க கிடைத்தது.. மன்னிக்கவும்...வாசம் வீசும் எழு நாட்கள் அல்ல ஏழேழு .....ஜென்மங்களுக்கும் நிறைந்திருக்கும் உங்கள் பதிவு......மலர்ந்து மணம் பரப்ப வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆரம்பமே சுவையாக இருக்கிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள்