நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை.
-விட்மன்
வலைச்சரத்தில் இன்று ஆறாம் நாள், விடைபெறுவதற்கு முந்தைய நாள். அதேபோல் நேற்று கலகலவென காமெடி வலைப்பூக்களைப் பார்த்த நாம் இன்று இலக்கியம், தொழில்நுட்பம், சமையல் குறிப்புகள், நினைவோடைகள், நடப்பு நிகழ்வுகள் என கதம்பமாக பார்க்கலாமே?
அறிவியல் சார்ந்த பதிவுகளை எழுதுவதற்கு தனியான திறமை வேண்டும். சாதாரணமாய் ஒரு விஷயத்தை சொல்லிவிட முடியாது. அதனைப்பற்றி ஆழ்ந்த அறிவு, அதனை படிக்கும் சாதாரண நபருக்கும் புரியும்படியான விளக்கம் என நிறைய விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழ்நுட்பம் எனும் வலைப்பூவில் நமக்கு தேவையான தகவல்கள் யாவும் நிறைய கொட்டிக்கிடக்கிறது, உபயோகப்படுத்துவது எப்படி என்ற எளிய விளக்கங்களுடன். பயர்பாக்ஸ் கூகிள் குரோம் உபயோகித்தாலும் இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரை எப்படி அதனுள்ளே உபயோகிப்பது என்பதற்கு இந்த இடுகையை பாருங்களேன்...
ஜெய் எனும் பெயர் கொண்ட தம்பி தனது ஸ்ரீ.கிருஷ்ணா வலைத்தலத்தில் நிறைய தொழில்நுட்பத்தகவல்களை தந்த வண்ணம் இருக்கிறார். கிரிக்கெட்டிலும் அலாதி பிரியம் என்பதால் எந்த ஒரு மேட்சுக்கும் இணையத்தில் நேரடியாய் பார்க்கும் வலை முகவரியை கொடுத்துக் கொண்டிருப்பார். இவரின் இடுகையில் இவர் தந்திருந்த கணிணியை புதிதாக வாங்கிய போது இருந்த வேகத்தில் இயங்கவைப்பது எப்படி? யை படித்து அதனை உபயோகித்து அசந்து போனேன்.
இவர் குறிப்பிட்ட அந்த Free Registry Cleaner எவ்வளவு உபயோகமாய் இருக்கிறது தெரியுமா? இதன் மூலம் தேவையில்லாத ரெஜிஸ்ட்ரிகளை அழித்துவிடலாம்; கணனியின் நினைவகத்தை சுத்தப்படுத்திவிடலாம், Startup Manager, Uninstall Manager, Process Manager, Video Converter என எல்லாம் இதில். இதையெல்லாம் அவரது இடுகையில் குறிப்பிட்டிருந்தால் இன்னும் அருமையாய் இருந்திருக்கும். இறுதியாண்டு, நேரமின்மையால் விட்டிருக்கிறார்.
ஏற்கனவே சொன்னதுபோல் தமிழின் பால் ஆர்வந்தானே தவிர அவ்வளவாய் இலக்கணத் தமிழறிவு கிடையாது. இதனை நிவர்த்தி செய்ய நிறைய தமிழ்சார்ந்த விடயங்களை படித்து நிவர்த்தி செய்துகொள்வதோடு சரி. முனைவர் குணசீலன் அய்யாவில் ஆரம்பித்து இன்னும் பலரை தொடர்கிறேன். இவரைப்பற்றி வானம்பாடிகள் அய்யா ஏற்கனவே சொல்லிவிட்டதால் மற்றும் சிலரைப்பற்றி பார்ப்போம்.
முனைவர் அய்யா நா. இளங்கோ அவர்களின் காதலியின் பேச்சு போல் ஹைக்கூ எனும் இந்த இடுகையைப் பாருங்கள், என்ன அழகான ஒரு விளக்கம். படித்து எழுதினால் நம் எழுதும் ஹைக்கூ இன்னும் சிறப்புறும்.
முனைவர் கல்பனாசேக்கிழார் அவர்களின் இடுகையை பார்க்க நேர்கையில் கலித்தொகை - பதிப்புகள் எனும் இடுகை என்னை வெகுவாக கவர்ந்தது. கலித்தொகை எவ்வாறெல்லாம் பதிப்புகளை கண்டது என்பதை தெளிவாய் விளக்கியிருக்கிறார். படித்துப்பாருங்களேன்... (துளசி மேடம், வரலாற்றைப்பற்றி எழுதுபவர்களைப் பற்றி தேர்ந்தெடுத்து எழுத பணிச்சுமையால் இயலவில்லை, இதனை வரலாற்றோடு சம்மந்தப் படுத்திக்கொண்டு என்னை மன்னிக்க)
சமையல் குறிப்புக்களை கீதா ஆச்சல் அவர்கள் என் சமயல் அறையில் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார். முன்னதாக செய்யப்போகும் பதார்த்தத்தில் என்னென சத்துக்கள் இருக்கின்றன, அது நமது உடல் நலத்துக்கு எவ்வாறு உகந்தது என்றெல்லாம் எழுதி அருமையாக விளக்குவார். சமையலில் ஆர்வமுள்ள என்போன்றோருக்கு இவ் வலைப்பூ ஒரு அருமையான வழிகாட்டி. உதாரணத்திற்கு இவர் எழுதிய புடலங்காய் புட்டு பற்றிய ஒரு இடுகையைப் பாருங்களேன்....
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காய்கறியை பிடிக்கும், அதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். சொர்ணம் அவர்கள் தன் என் மன வானில் எனும் வலைப்பூவில் அப்பாவுக்கு பிடித்த பாகற்காயும்... நார்த்தங்காயும் !!! என ஒரு இடுகையை எழுதியிருக்கிறார். படித்துப்பாருங்கள், பாகலும் இனிக்கும்.
கிராமங்களில் இருப்பவர்கள் கண்டிப்பாய் சுமைதாங்கிகளையும் சில வருடங்களுக்கு முன் பெரும்பாலான வீடுகளில் இருந்த திண்ணைகளையும் மறக்க இயலுமா? மீன் துள்ளியான், இவரது சுமை தாங்கி கற்களும் திண்ணைகளும் எனும் இடுகையை படித்துப்பாருங்கள், தெரிந்த விஷயம்தான், அழகாய் பதித்திருக்கிறார். இவரின் எல்லா இடுகையிலும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது, படித்துப்பாருங்கள்.
விதூஷ் என்னும் வலைப்பூவில் வித்யா என்பவர் பெண்ணே நீயும் பெண்ணா என ஒரு தொடர் இடுகையினை நண்பர் பலா பட்டறை சங்கர் படிக்கச் சொல்ல, சென்று படித்து வியந்தேன்... பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவற்றை எப்படி சமாளிப்பது என மிகத் தெளிவாய் சொல்லியிருக்கிறார். நிறைய விஷய ஞானம் உள்ளவர், அருமையாய் எழுதி வருகிறார், படித்துப் பாருங்களேன்....
அய்யா இட்ட பணியினை மன நிறைவுடன் உங்களின் ஆதரவோடு ஆறு நாட்களுக்கு முடித்திருக்கிறேன். இறுதி நாளான நாளை சந்திப்போமா?
கதம்பம் நிறைவு நண்பா
ReplyDeleteஉங்கள் அறிமுகங்கள் சார்பற்றும் நேர்த்தியாகவும் தகுதி உள்ளவையாகவும் இருந்தன
மணக்கும் கலவை மலர்களால் நிறைந்துள்ளது இந்த கதம்பம்.
ReplyDeleteஆசிரியருக்கு பாராட்டுகள்.
அறிமுகங்களுக்கு நன்றி. இனித்தான் படிக்க வேண்டும்.
ReplyDeleteromba menakkettu.. manasu vachchu panni irukkeenga.. prammaadham..!
ReplyDeleteஆறாம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteபல புதியவர்களை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் பிரபா
ReplyDeleteநிறைவான வாரந்தாங்க..வலைச்சரத்திற்கு வாழ்த்துடன் விடைதருகிறேன்ங்கோ.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி....
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு ரொம்ப நன்றி. மீண்டும் ஒரு முறை என்னை ப்ளாக்கரில் தொடர்ந்து வரும்படி செய்து, பல வருடங்கள் கழித்து மீண்டும் எழுதச் செய்த 'பைத்தியக்காரன்' சிவராமனுக்கும், எழுத்து பற்றிய வழிகாட்டலைக் கொடுத்து வரும் அகநாழிகை வாசுவுக்கும் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறேன்.
ReplyDelete--வித்யா
மீன் துள்ளியான் மற்றும் ஜெய் (ஸ்ரீ கிருஷ்ணா) இருவரும் எனக்கு புதிது. மிகவும் நேர்த்தியான எழுத்துக்கள். இவர்கள் எழுத்தைப் படிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDelete-வித்யா
மிக மிக அருமையான தொகுப்பு பிரபா...
ReplyDeleteவாழ்த்துகள்
கதம்பம் அறிமுகங்கள் கலக்கல்.
ReplyDeleteநிறைவான அறிமுகங்கள், தள பகிர்வுகள், மிக்க நன்றி பிரபாகர்..:))
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரபா..
ReplyDeleteஆறாம் நாள் வாழ்த்துகள்!!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களும் அருமை....
ReplyDeleteநன்றி பிரபா
ReplyDeletenice writeup and intros. congrats praba:)
ReplyDeleteபின்னூட்டமிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றி.
ReplyDeleteபிரபாகர்.