Sunday, January 31, 2010

வலைச்சரத்தில் இறுதிநாள் : நன்றியும் வணக்கமும்.

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

சுவாமி விவேகானந்தர்:

நிறைய இடுகையாளர்களை குறிப்பிடவேண்டும் என எண்ணியிருந்தாலும், அதற்கெல்லாம் நமக்கு தகுதி இருக்கிறதா எனும் கேள்வி ஒருபுறம், அறிமுகப்படுத்தாதவர்களை, புதியவர்களை நிறைய சொல்லவேண்டும் எனும் எண்ணம் மறுபுறம் என இருந்ததால் நிறைய பேரை சொல்ல இயலவில்லை.

அடுத்து வானம்பாடிகள் அய்யா குறிப்பிட்ட நூற்றுக் கணக்கானோரை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தினால் கொஞ்சமல்ல நிறைய கூடுதல் சுமையாகவே இருந்தது. இருப்பினும் எனது முந்தைய இடுகையான எனக்கு பிடித்த இடுகையாளர்களை படித்தீர்களானால் மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு பிடித்தவர்களைப் பட்டியலிட்டிருந்தேன்.

இன்று வலைச்சரத்தின் வாயிலாக இன்னும் பலரை சொல்லவும், நிறைய இடுகையாளர்களை புதிதாய் படிக்கவும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. எழுதிய இந்த ஒரு வாரத்தினை எனது வாழ்வின் சந்தோஷ தருணங்களாய் எண்ணி இயன்ற அளவு அனுபவித்து எழுதி வந்திருக்கிறேன்.

இந்த இடத்தில் என்னை வலைப்பூவை ஆரம்பிக்க ஊக்குவித்து எனது நண்பராக, முன்னோடியாக இருக்கும் லக்கி எனும் என் குருஜி கிருஷ்ணாவுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆரூரன், கேபிள் அண்ணா, பட்டர்ஃப்ளை சூர்யா, தண்டோரா, நர்சிம், அப்துல்லா அண்ணன், ஆதி, சகா கார்க்கி, நண்பர் ஜோதிஜி, இளவல் பாலாசிகோவி அண்ணாஞானசேகரன் அண்ணா, தம்பிகள் நாஞ்சில் பிரதாப், புலிகேசி, ஜெட்லி அன் கோரோஸ்விக் மற்றும் அறிமுகப்படுத்தியுள்ள எல்லா நண்பர்கள், மற்றும் எழுத மறந்த எல்லோருக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

பெண்பதிவர்கள் இன்று வலையுலகில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். நிறைய பேரை படித்து வருகிறேன், அவர்களின் எழுத்துக்களின் வாசகனாயும் இருக்கிறேன். துளசி கோபால்,சின்ன அம்மணி, நிலாமதி, மாதேவி, ஜெஸ்வந்தி, Mrs.Menagasathia,கண்ணகி, அன்புடன் அருணா என இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த வலைச்சரத்தின் வாயிலாய் எனக்கு பல புதிய உறவுகளை கிடைக்கப் பெற்றிருக்கிறேன். அதற்கெல்லாம் முக்கிய காரணமாய் இருக்கும், நம்பி எழுத ஊக்குவித்த சீனா அய்யா மற்றும் வலைச்சர குழுவினருக்கும், வலைச்சரத்தில் பங் கேற்ற, பங்கேற்கப்போகும் அனைத்து வலையுலக அன்பர்களுக்கும், என்னைக் குட்டி தவறுகளை சரிசெய்து என்னை செம்மைப்படுத்தும் என் ஆசான் வானம்பாடிகள் அய்யாவிற்கும், உரிமையாய் என்னை தோள்கொடுத்து தாங்கும் அன்பு கதிருக்கும், ’சேம் ப்ளட்’ என ஊக்குவிக்கும் அன்பு நண்பர் சங்கருக்கும், ஏனைய வலையுலக நண்பர்களுக்கும், பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்திய அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றியினை காணிக்கையாக்கி, பணித்த கண்களுடன் விடைபெறுகிறேன். மற்றுமொரு தருணத்தில் சந்திப்போம், நன்றி, வணக்கம், வாழ்க்கை வாழ்வதற்கே...

22 comments:

  1. அருமையான வாரமாய் அமைத்துவிட்டீர்கள்..நன்றி

    ReplyDelete
  2. அறிமுகம் ஏராளமான புதிய பதிவர்களுக்குக் கிடைத்தது மனமகிழ்ச்சி.

    வலைச்சரத்தில் நோக்கமே இதுதான். சரியானமுறையில் பயன்படுத்திக் கொண்ட உமக்கு எங்கள் இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  3. நன்றி நன்றி!!!!

    வாழ்த்துகள் பிரபாகர்
    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  4. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி பிரபாகர்..:))

    மிகவும் நிறைவாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்..:)

    ReplyDelete
  5. /இந்த ஒரு வாரத்தினை எனது வாழ்வின் சந்தோஷ தருணங்களாய் எண்ணி இயன்ற அளவு அனுபவித்து எழுதி வந்திருக்கிறேன்./
    ஆஹா...இது இதுதான் சந்தோஷம்!என் பதிவுகளையும் இணைத்துக் கொண்டதில் சந்தோஷம்...நன்றி!

    ReplyDelete
  6. வலைச்சரப் பணிகளை சிறாப்பா முடிச்சிட்டீங்க தல, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்
    நன்றி

    ReplyDelete
  8. எடுத்த பணியை அழகாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அருமையான பல அறிமுகங்கள் இந்த வாரத்தில். கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களைப் பற்றியும் சொல்லிவிட்டீர்கள் என நினைக்கிறேன். நன்றி பிரபாகர்.

    ReplyDelete
  10. பல தளங்களை பற்றிய அறிமுகம் கிடைத்தது ..
    நன்றியுடன்
    தேவராஜ் விட்டலன்
    http://vittalankavithaigal.blogspot.com

    ReplyDelete
  11. நண்பரே,

    "வலைச்சரத்தின் இறுதி நாள்" என்பது சரியல்ல.

    "வலைச்சரத்தில் இறுதி நாள்" என்பதே சரி.

    ReplyDelete
  12. :))

    உலகநாதன் சார் சொன்னத கவனிங்க சகா

    ReplyDelete
  13. மிகச் சிறப்பாக பல பதிவர்களை அறிமுகப்படுதினீர்கள் பிரபா. பாராட்டுகள்.

    ReplyDelete
  14. எடுத்த பணியை அழகாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வாழ்த்துகள் பிரபா. உங்கள் வலையத்திலும் எங்கள் வலையத்திலும் இனிமேல் சிந்திப்போம். உங்கள் அறிமுகங்கள் நன்றாக இருந்தன. எனது வலையத்தையும் படிப்பதையிட்டுமகிழ்ச்சி.

    ReplyDelete
  16. அழகாய்த் தொடங்கி நிறைவு செய்திருக்கிறீர்கள் பிரபா.இனி உங்கள் பதிவுகளோடு தொடர்வோம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றி. வலைச்சரத்தின் முதல் நாள்,.... என தொடர்ந்து எழுது வந்ததால்... அவ்வாறு தலைப்பு இறுதி நாளில் வந்து விட்டது. சுட்டலுக்கு நன்றி, திருத்தி விடுகிறேன். நன்றி உலகநாதன்,சகா...

    சந்தோஷமாய் இந்த வாரத்தினை நிறைவு செய்கிறேன்.

    பிரபாகர்.

    ReplyDelete
  18. உங்களுடன் இனிதே கழிந்தது வலைச்சரம்

    அசத்தலான வாரமாய் அமைந்தது .

    ReplyDelete
  19. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ!!ஏராளமான புதிய பதிவர்களை அறிமுகம் செய்ததில் மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும்....

    ReplyDelete
  20. வலைச்சரத்தில் என் அறிமுகத்தை இப்போதுதான் பார்த்தேன்...நன்றி.நன்றி..சார்

    ReplyDelete