அன்பின் சக பதிவர்களே
கடந்த வாரத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருமை நண்பர் பிரபாகர் ஏற்ற பணியினைச் செவ்வனே செய்து முடித்து மன நிறைவுடன் விடைபெறுகிறார். அவர் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் முப்பது பதிவர்களை - இதுவரை யாரும் அறிமுகப் படுத்தாத பதிவர்களை அறிமுகப் படுத்தவும் மற்றும் தினம் ஒரு தகவல் தரவும் திட்ட மிட்டு - அதன் படி தகவல்களும் அறிமுகங்களும் அளித்து விடை பெறுகிறார்.
அவர் ஏழு இடுகைகளில் ஏறத்தாழ 45 பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறார். அனைவருமே புதிய பதிவர்கள் - நல்ல இடுகைகள் இடுபவர்கள். தனக்கு ஆசானாக விளங்குபவருக்கும், தன்னை வலைப்பூ ஆரம்பிக்க ஊக்கம் கொடுத்தவருக்கும், அவ்வப்பொழுது இடுகைகளைத் தவறாது படித்துத் தட்டிக் கொடுக்கும் நண்பர்கள் இருவருக்கும் நன்றி பாராட்டியது ஒரு நல்ல செயல். ஏறத்தாழ 190 மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.
நண்பர் பிரபாகரை வாழ்த்தி வழியனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
பிப்ரவரி முதல் தேதி முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க இணக்கம் தெரிவித்திருந்த நண்பர் சில தவிர்க்க இயலாத காரணங்களினால் பொறுப்பேற்க இயலாத நிலையில், மீண்டும் ஒரு முறை பொறுப்பேற்க வருகிறார் திருப்பூரைச் சார்ந்த நண்பர் லோகு. இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு முறை பொறுப்பேற்று எழுதியவர். அதனால் இப்பொழுது அறிமுகப்படுத்த வில்லை.
நண்பர் லோகுவினை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteநல்லது ஆர்வமாயிருக்கிறேன்..:))
ReplyDeleteவாருங்கள் லோகு.
ReplyDeleteவாங்க....வாங்க...
ReplyDeleteதிருப்பூரைச் சார்ந்த நண்பர் லோகு.
ReplyDeleteநம்ம ஊரு..:))
வாங்க வாங்க நண்பரே
பதிவர்களுக்கு எதிராக நான் வழக்கு தொடர போகிறேன்.... என்னுடைய பதிவ யாரும் பார்க்க வாற இல்ல ...
ReplyDeleteவாங்க லோகு.
ReplyDeleteவாங்க லோகு, வாழ்த்துக்கள்.
ReplyDelete