மீண்டும் ஒரு முறை வலைச்சரத்தில் எழுதும் பேறு பெற்றேன். இந்த வாரம் எழுதியிருக்க வேண்டிய பிரபல பதிவரும், சக நண்பருமான ஒருவர், தவிர்க்க முடியாத சில காரணங்களால் எழுத இயலாமல் போனது. எனவே மாற்று ஆட்டக்காரனாக இங்கே நான் மீண்டும் களமிறங்கி இருக்கிறேன். இவ்வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கு நன்றிகள்.
வலைச்சரத்தில் எனது முந்தைய பங்களிப்பை காண இங்கே சொடுக்குங்கள். இனி இன்றைய அறிமுகங்களை பார்ப்போம்.
*******
கிரிக்கெட்: பெரும்பான்மை இந்தியர்களின் மதம் என்று போற்றப்படும் விளையாட்டு. கிரிகெட்டை கண்டறிந்த ஐரோப்பிய நாடுகளை காட்டிலும், நம் ஆசிய துணைகண்டப் பகுதியில் மிகுந்த ஆர்வத்தோடு ரசிக்கப்படுகிறது, விளையாடப்படுகிறது. வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் மறக்க செய்து, நம் நாட்டில் அனைவரையும் ஒன்று படுத்தும் காரணிகளில் கிரிக்கெட்டும் ஒன்று என்பதில் மிகையில்லை. அனைத்து நிலைகளில் இருப்பவர்களும், பெண்களும் அதிக ஆர்வத்துடன் கிரிக்கெட் நிகழ்வுகளை பின் தொடர்கிறார்கள்.
" கிரிக்கெட் வர்த்தக காரணங்களுக்காக ஊதி பெரிதாக்கப்பட்ட விளையாட்டு " என்ற எதிர்மறை விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் விமர்சிப்பவர்கள் கூட அவ்விளையாட்டின் மீது ஆர்வத்தோடும், அது குறித்த செய்திகளை அறியவும் விளைகிறார்கள்.
கிரிக்கெட் விமர்சனத்திற்கு ஆங்கிலத்தில் இருப்பது போல் தமிழில் இணையதளங்கள் இல்லை என்ற குறையை போக்குகின்றன நாம் இன்று பார்க்கப்போகும் வலை தளங்கள். ஒரு தேர்ந்த விமர்சகரை போல் கிரிக்கெட் ஆட்ட நுணுக்கங்களையும், ஆட்ட நிகழ்வுகளையும் அழகு தமிழில் வர்ணிக்கும் தளங்கள் சில
CT : கிரிக்கெட் தமிழ்:
எவனோ ஒருவன் என்ற பெயரில் எழுதி வரும் தோழர் கவின் குமார் அவர்களின் தளம். முற்றிலும் கிரிக்கெட் ஆட்டத்திற்கான தளம். கிரிக்கெட் தொடர்பான சுவையான தகவல்கள், செய்திகள், நகைச்சுவைகள், புகைப்படங்கள் என வண்ணமயமான தளம். ஆட்ட செய்திகளோடு மட்டுமல்லாமல் தோல்விக்கான காரணங்கள், அணித்தேர்வு போன்ற விடயங்களை கூட இத்தளம் ஆராய்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் படிக்க வேண்டிய தளங்களில் ஒன்று. இதன் சிறப்பான இடுகைகளில் சில
கிரிக்கெட் ஜோக்ஸ்
சில சுவையான தகவல்கள்
இந்தியா தோல்வி : யார் தவறு
T20 பெண்கள் உலக கோப்பை
*******விளையாட்டு உலகம்
கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து என ஏனைய விளையாட்டு செய்திகளையும் அளித்தாலும், இத்தளத்தில் கிரிக்கெட்டே பிரதானமாக உள்ளது. கிரிக்கெட் தொடர்பான அனைத்து செய்திகளையும் தமிழில் தரும் தளம் இது. செய்திகளோடு கிரிக்கெட் தொடர்பான முக்கிய விடயங்களையும் அலசுகிறது. தினம் தினம் கிரிக்கெட் செய்திகளை சுடச்சுட வெளியிடும் இத்தளத்தை கிரிக்கெட்டுக்கான சிறந்த தமிழ் தளம் எனலாம். மிக சிறப்பான தளம். இதன் சீரிய இடுகைகளில் சில:
கிரிக்கெட்டின் "காந்தி'
2009-ம் ஆண்டு தரவரிசை: காம்பீர் நம்பர்-௧
அதிக போட்டிகளில் வென்று இந்தியா சாதனை
கிரிக்கெட்டின் வைரம் சச்சின்
**********லோஷனின் களம்:
வலைச்சர ஆசிரியரானதுக்கு நல்வாழ்த்துக்கள் .
ReplyDeleteஆஹா மொத பால்லயே சிக்ஸரா..கலக்குங்க. வாழ்த்துக்கள்..:)
ReplyDeleteவாழ்த்துக்கள்....
ReplyDeleteவாழ்த்துக்கள் அசத்தலான இரண்டாவது இன்னிங்ஸுக்கு...
ReplyDeleteபிரபாகர்.
வாழ்த்துக்கள் மச்சான்.. மீண்டும் ஒரு முறை ஆசிரியர் பணி பெற்றமைக்கு...
ReplyDeleteஆரம்பமே அசத்தலா:)
ReplyDeleteகிரிக்கெட்டுக்கென இம்புட்டு வலைப்பூக்களா சூப்பர் அறிமுகம்.
ReplyDeleteமுத்லநாள் வாழ்த்துக்கள்!!கிரிக்கெட்டுக்கு இவ்வளவு வலைத்தளங்கள் இருக்கா..அறிமுகத்திற்க்கு நன்றி!!
ReplyDeleteஒவ்வொரு முறையும் வித்தியாசமான அணுகுமுறையோடு என்னை ஆச்சரியப்பட வைக்கிறீர்கள் லோகு.. வாழ்த்துகள்..
ReplyDeleteBest wishes!
ReplyDelete
ReplyDelete@ Starjan ( ஸ்டார்ஜன் ):
நன்றி!
@ஷங்கர்.. :
நன்றி!
@Sangkavi :
நன்றி!
@பிரபாகர் :
நன்றி!
@Anbu :
நன்றி!
@வானம்பாடிகள்:
நன்றி!
@புதுகைத் தென்றல்:
நன்றி!
@Mrs.Menagasathia:
நன்றி!
@கார்த்திகைப் பாண்டியன்:
நன்றி!
@Chitra :
நன்றி!
ஆகா.. நன்றிகள் :)
ReplyDeleteஅவசர ஆட்டத்திலும் சிக்சர்?
அதுக்கு வாழ்த்துக்கள்..
அருமை அருமை - புதுமையான அறிமுகம்
ReplyDeleteநல்வாழ்த்துகள் லோகு