அனைவருக்கும் வணக்கம்,
வாழ்வில் நாம் கடக்கும் தருணங்களை எப்பாடு பட்டாலும், திரும்ப அனுபவிக்க இயலாது. ரயில் பயணத்தில் கடக்கும் காட்சிகள் போல் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் இந்த அவசர வாழ்க்கை முறையில், நாம் கடந்து வந்து தருணங்களை திரும்பி பார்க்கவும், மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் புகைப்படங்கள் தான் ஒரே வழி.
மகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படங்களை பார்க்கும் போது, நாம் மீண்டும் அந்த மகிழ்ச்சியை உணர்கிறோம். கால ஓட்டத்தில் பிரிந்த நண்பர்கள்/ உறவினர்களின் நினைவுகளை அவர்களின் புகைப்படங்கள் தேக்கி வைத்திருக்கின்றன. அதனால் தான் சுப நிகழ்ச்சிகளை புகைப்படமாக்குவதை நம் வழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
"புகைப்பட கலையின் நீட்சி தான் திரைப்பட ஒளிப்பதிவு. இரண்டுக்கும் இடையே அடிப்படைக் கூறுகளும் ஒன்று தான். ஒரு புகைப்பட கலைஞன் எந்தக் கல்வி நிறுவனங்களுக்கும் சென்று படிக்காமலேயே சிறந்த ஒளிப்பதிவாளராக ஆகமுடியும். எனவே புகைப்படம் எடுப்பதில் தேர்ச்சி பெறுங்கள். " என்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஸ் சிவன்.
'புகைப்பட கலை என்பது மூன்றாவது கண்' என்பார்கள். புகைப்பட வசதியோடு அலைபேசிகள் வந்துவிட்ட நிலையில், நாம் அனைவருமே புகைப்படங்களை எடுக்கிறோம். ஆனால் ஒரு காட்சியை, அதன் அழகு சிதையாமல், பார்ப்பவர்களும் காட்சியை உணரும் வகையில் எடுக்க புகைப்பட நுணுக்கங்கள் தெரிந்த தேர்ந்த புகைப்பட கலைஞர்களாலேயே இயலும்.
அப்படி சிறந்த புகைப்பட நுணுக்கம் கற்ற தமிழ் பதிவர்கள் இங்கே ஏராளம், அவற்றில் சிலவற்றை இன்றைய இடுகையில் காண்போம்.
வலைப்பதிவின் தலைப்பே அழகு. புகைப்பட ஆர்வத்தோடு, இயற்கை நலனிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஆர்வம் கொண்ட இவரது படங்களும், சமூக அக்கறையை பிரதிபலிக்கின்றன. இயற்கை அழகை மட்டுமல்லாமல், அவற்றை கெடுக்கும் காரணிகளையும் படங்களை வெளியிட்டுள்ளார். கலையோடு, சமூக அக்கறையும் சேரும் இத்தளம் சிறப்பானது. அவற்றில் சில இடுகைகள் இங்கே:
******************************************************
வித்தியாசமான பெயர் கொண்ட இந்த தளமும், ஒரு மிகச்சிறந்த புகைப்பட தளம். ஆச்சர்யமூட்டும் கோணங்களில், நேர்த்தியாக எடுக்கப்பட்ட படங்களின் தோரணம் இந்த தளம். புகைப்படங்கள் மட்டுமின்றி அவற்றிற்கு பொருத்தமான கவிதைகளும் இடம் பெற்றிருப்பது சிறப்பு. இத்தளம் காண்பவர் கண்களுக்கு விருந்து என்பது மிகையில்லை. ஏராளமான புகைப்படங்கள் கொண்ட இத்தளத்திலிருந்து சில இடுகைகள்:
எங்கள் திருப்பூரை சார்ந்த, அண்ணன் முரளி ஒரு தேர்ந்த புகைப்பட கலைஞர். அதுமட்டுமின்றி சிறந்த கவிஞர், கதாசிரியர், பன்மொழி திரைப்பட ஆர்வலர், கணிப்பொறி வல்லுநர். இவர் சமீபத்தில் துவங்கிய புகைப்படம் வலைப்பதிவு முற்றிலும் படங்களால் ஆனது. இவருக்கு பிடித்த, இவர் பிடித்த புகைப்படங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. வித்தியாசமான படங்கள். கண்டு மகிழுங்கள்.
******************************************************
இன்றைய அறிமுகங்களும், உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்திருக்கும் என நம்புகிறேன். வலையுலகில் வித்தியாச முயற்சி செய்யும் பதிவுகளுக்கும் ஊக்கம் அளியுங்கள். உங்கள் தனித்திறமைகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
நல்ல அறிமுகம்...
ReplyDeleteநல்வரவு, அறிமுகங்களுக்கு நன்றி
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் நண்பரே. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநண்பர் முரளியின் பக்கம் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.. மற்ற அறிமுகங்களுக்கு மிக்க நன்றி...:))
ReplyDeletenice sharing
ReplyDeletethanks valaisaram
நன்றி லோகு. ஆனால் இதெல்லாம்//முரளி ஒரு தேர்ந்த புகைப்பட கலைஞர். அதுமட்டுமின்றி சிறந்த கவிஞர், கதாசிரியர், பன்மொழி திரைப்பட ஆர்வலர்//
ReplyDeleteஎன்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே?
:-)
நல்ல அறிமுகம் வாழ்த்துக்கள் அறிமுகங்களுக்கு தொடருவோமே..
ReplyDeletegood blogs. Thanks
ReplyDeleteதேவையான அறிமுகம்.
ReplyDeleteஅன்பின் லோகு
ReplyDeleteபுகைப்படக்கலை - தளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட - இதுவரை அறிமுகப்படுத்தப்படாத தளங்கள் -
நன்று நண்று - நல்வாழ்த்துகள் லோகு
புகைப்படம் குறித்து அறிமுகம் அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல அறிமுகம்.நன்றாகயிருந்தது புகைப்பட கலை பற்றிய அறிமுகம்.நன்றி.
ReplyDeleteநல்ல அறிமுகம் ,நன்றிகள்
ReplyDeleteஅன்பு நண்பர்கள்
ReplyDeleteபாண்டியன், விஜீ ஐயா,
(ஜோசெப் விஜூ) ஆகியோரின் இன்றைய வரவு எனக்கு மிக்க மகிழ்வூட்டியது.
குழலின்னிசை நன்றி நாதம் இசைக்கின்றது.
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr