07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 1, 2010

கிரிக்கெட் உலகம்

அனைவருக்கும் வணக்கம், 


 மீண்டும் ஒரு முறை வலைச்சரத்தில் எழுதும் பேறு பெற்றேன். இந்த வாரம் எழுதியிருக்க வேண்டிய பிரபல பதிவரும், சக நண்பருமான ஒருவர், தவிர்க்க முடியாத சில காரணங்களால் எழுத இயலாமல் போனது. எனவே மாற்று ஆட்டக்காரனாக இங்கே நான் மீண்டும் களமிறங்கி இருக்கிறேன். இவ்வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கு நன்றிகள். 


வலைச்சரத்தில் எனது முந்தைய பங்களிப்பை காண இங்கே சொடுக்குங்கள். இனி இன்றைய அறிமுகங்களை பார்ப்போம். 
*******


கிரிக்கெட்:  பெரும்பான்மை இந்தியர்களின் மதம் என்று போற்றப்படும் விளையாட்டு. கிரிகெட்டை கண்டறிந்த ஐரோப்பிய நாடுகளை காட்டிலும், நம் ஆசிய  துணைகண்டப் பகுதியில் மிகுந்த ஆர்வத்தோடு ரசிக்கப்படுகிறது, விளையாடப்படுகிறது. வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் மறக்க செய்து, நம் நாட்டில் அனைவரையும் ஒன்று படுத்தும் காரணிகளில் கிரிக்கெட்டும் ஒன்று என்பதில் மிகையில்லை. அனைத்து நிலைகளில் இருப்பவர்களும், பெண்களும் அதிக ஆர்வத்துடன் கிரிக்கெட் நிகழ்வுகளை பின் தொடர்கிறார்கள். 



" கிரிக்கெட் வர்த்தக காரணங்களுக்காக ஊதி பெரிதாக்கப்பட்ட விளையாட்டு " என்ற எதிர்மறை விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் விமர்சிப்பவர்கள் கூட அவ்விளையாட்டின் மீது  ஆர்வத்தோடும், அது குறித்த செய்திகளை அறியவும் விளைகிறார்கள். 


கிரிக்கெட் விமர்சனத்திற்கு ஆங்கிலத்தில் இருப்பது போல் தமிழில் இணையதளங்கள் இல்லை என்ற குறையை போக்குகின்றன நாம் இன்று பார்க்கப்போகும் வலை தளங்கள். ஒரு தேர்ந்த விமர்சகரை போல் கிரிக்கெட் ஆட்ட நுணுக்கங்களையும், ஆட்ட நிகழ்வுகளையும் அழகு தமிழில் வர்ணிக்கும் தளங்கள் சில

CT : கிரிக்கெட் தமிழ்:

 எவனோ ஒருவன் என்ற பெயரில் எழுதி வரும் தோழர் கவின் குமார் அவர்களின் தளம். முற்றிலும் கிரிக்கெட் ஆட்டத்திற்கான தளம். கிரிக்கெட் தொடர்பான சுவையான தகவல்கள், செய்திகள், நகைச்சுவைகள், புகைப்படங்கள் என வண்ணமயமான தளம். ஆட்ட செய்திகளோடு மட்டுமல்லாமல் தோல்விக்கான காரணங்கள், அணித்தேர்வு போன்ற விடயங்களை கூட இத்தளம் ஆராய்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் படிக்க வேண்டிய தளங்களில் ஒன்று.  இதன் சிறப்பான இடுகைகளில் சில 

கிரிக்கெட் ஜோக்ஸ்

சில சுவையான தகவல்கள் 

 இந்தியா தோல்வி : யார் தவறு

 T20 பெண்கள் உலக கோப்பை

*******




விளையாட்டு உலகம்

கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து என ஏனைய விளையாட்டு செய்திகளையும் அளித்தாலும், இத்தளத்தில் கிரிக்கெட்டே பிரதானமாக உள்ளது. கிரிக்கெட் தொடர்பான அனைத்து செய்திகளையும் தமிழில் தரும் தளம் இது. செய்திகளோடு கிரிக்கெட் தொடர்பான முக்கிய விடயங்களையும் அலசுகிறது. தினம் தினம் கிரிக்கெட் செய்திகளை சுடச்சுட வெளியிடும் இத்தளத்தை கிரிக்கெட்டுக்கான சிறந்த தமிழ் தளம் எனலாம். மிக சிறப்பான தளம்.  இதன் சீரிய இடுகைகளில் சில: 

கிரிக்கெட்டின் "காந்தி'

2009-ம் ஆண்டு தரவரிசை: காம்பீர் நம்பர்-௧ 

அதிக போட்டிகளில் வென்று இந்தியா சாதனை

கிரிக்கெட்டின் வைரம் சச்சின் 

**********


லோஷனின் களம்:

சகோதரர் லோஷன்: இவருக்கு அறிமுகம் தேவை இல்லை,  கிரிக்கெட்டின் அன்றன்றைய நிகழ்வுகளை அன்றைக்கே முந்தி தருவதில் வல்லவர். பெரும்பாலும் அந்நிய மொழி கலக்காமல், அற்புதமான எழுத்து நடையில், புன்னகை தரும் நகைச்சுவை தெளித்து தருகிறார்.  கிரிக்கெட் பிரியர்கள் படிக்க வேண்டிய தளம். அவரது சில இடுகைகள். 

இந்தியா vs ஆஸ்திரேலியா & சச்சின் vs பொன்டிங் 

ICC 2009 விருதுகள்..

ICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை

***********
இன்றைய அறிமுகங்கள், சுவாரஸ்யமானதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.  உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள். விளையாட்டை விளையாட்டாக பாருங்கள். கிரிக்கெட் தவிர்த்து நலிந்து போன விளையாட்டுக்களுக்கும் ஆதரவு கொடுங்கள். இந்த மாத இறுதியில் இருந்து (Feb 28 - Mar 13, 2010) டெல்லியில் ஹாக்கி- உலக சாம்பியன் போட்டிகள் நடக்க இருக்கின்றன. கிரிக்கெட்டை காட்டிலும் பரபரப்பாக இருக்க கூடிய நம் தேசிய விளையாட்டையும் கண்டு களியுங்கள். Chak De India!!

13 comments:

  1. வலைச்சர ஆசிரியரானதுக்கு நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  2. ஆஹா மொத பால்லயே சிக்ஸரா..கலக்குங்க. வாழ்த்துக்கள்..:)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அசத்தலான இரண்டாவது இன்னிங்ஸுக்கு...

    பிரபாகர்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மச்சான்.. மீண்டும் ஒரு முறை ஆசிரியர் பணி பெற்றமைக்கு...

    ReplyDelete
  6. ஆரம்பமே அசத்தலா:)

    ReplyDelete
  7. கிரிக்கெட்டுக்கென இம்புட்டு வலைப்பூக்களா சூப்பர் அறிமுகம்.

    ReplyDelete
  8. முத்லநாள் வாழ்த்துக்கள்!!கிரிக்கெட்டுக்கு இவ்வளவு வலைத்தளங்கள் இருக்கா..அறிமுகத்திற்க்கு நன்றி!!

    ReplyDelete
  9. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான அணுகுமுறையோடு என்னை ஆச்சரியப்பட வைக்கிறீர்கள் லோகு.. வாழ்த்துகள்..

    ReplyDelete

  10. @ Starjan ( ஸ்டார்ஜன் ):
    நன்றி!

    @ஷங்கர்.. :
    நன்றி!

    @Sangkavi :
    நன்றி!

    @பிரபாகர் :
    நன்றி!

    @Anbu :
    நன்றி!

    @வானம்பாடிகள்:
    நன்றி!

    @புதுகைத் தென்றல்:
    நன்றி!

    @Mrs.Menagasathia:
    நன்றி!

    @கார்த்திகைப் பாண்டியன்:
    நன்றி!

    @Chitra :
    நன்றி!

    ReplyDelete
  11. ஆகா.. நன்றிகள் :)
    அவசர ஆட்டத்திலும் சிக்சர்?
    அதுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. அருமை அருமை - புதுமையான அறிமுகம்

    நல்வாழ்த்துகள் லோகு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது