நன்றி லோகு - வருக வருக கார்த்திகைப் பாண்டியன்
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு அருமை நண்வர் லோகு ஆசிரியப் பொறுப்பேற்று - ஏற்ற பணியினை அருமையாக நிறைவேற்றி - மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவர் சென்ற வாரத்தில் ஐந்து இடுகைகள் இட்டு ஏறத்தாழ நாற்பது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். வித்தியாசமான முறையில், ஆங்கிலம் பேச உதவும் வலைப்பூக்கள், அழகுக்குறிப்பு-மருத்துவக்குறிப்பு போன்ற உடல் நலம் பேணும் வலைப்பூக்கள், பங்கு சந்தை பற்றிய வலைப்பூக்கள், புகைப்படக் கலை பற்றிய வலைப்பூக்கள் மற்றும் கிரிக்கெட் பற்றிய வலைப்பூக்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி அரும்பணி ஆற்றி இருக்கிறார்.
அவரை வாழ்த்தி வழியனுப்புகிறோம்.
அடுத்து நாளை 08.02.2010ல் துவங்கும் வாரத்திற்கு மதுரையைச் சார்ந்த பிரபல பதிவர் - எல்லோருக்கும் அறிமுகமான - அன்பான - பாசக்காரப் பதிவர் கார்த்திகைப் பாண்டியன் ஆசிரியப் பொறுப்பேற்கிறார். பல அலுவல்களுக்கும் இடையில் இப்பொறுப்பையும் ஏற்கிறார்.
இவர் மதுரையில் உள்ள ஒரு புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். பொன்னியின் செல்வன் என்ற பதிவில் கலக்கலாக எழுதி வருகிறார். மதுரைப் பதிவர்கள் குழுமத்திற்கு அமைப்பாளராக இருக்கிறார்.
இவரை வருக வருக - இடுகைகளை அள்ளி இடுக இடுக என வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்.
நல்வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteவாய்ப்புக்கு நன்றி ஐயா..
ReplyDelete//மதுரைப் பதிவர்கள் குழுமத்திற்கு அமைப்பாளராக இருக்கிறார்.//
ஆமா...? இது எப்பல இருந்து?
வாழ்த்துக்கள், சார்.
ReplyDeleteநண்பர் லோகு அவர்களுக்கு மிக்க நன்றி ..:))
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாங்க கா.பா.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் பாண்டியன் டி.ஆர் பற்றி சிறப்பு பதிவு ஏதேனும் உண்டா? இப்படிக்கு இரசிகை...
ReplyDeleteBest wishes to LOGU and KARTHIGAPPAANDIYAN
ReplyDelete//விரிவுரையாளராகப்//
ReplyDeleteபேராசிரியரை... விரிவுரையாளார்ன்னு சொல்லிட்டிங்களே ஐயா:-)