07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 8, 2010

அன்பென்னும் மந்திரச்சொல்..!!!

அன்பென்னும் ஒற்றை வார்த்தைக்குள் இந்த உலகின் அத்தனை உணர்வுகளும் அடக்கம். புராணங்களும், மதங்களும், கடவுள்களும் சொல்ல வரும் ஒரே விஷயம்.. மற்ற உயிர்களிடத்தில் அன்பாயிருங்கள் என்பதுதான். நம் பாரத தேசத்தில், அன்பை தாயின் வடிவமாக, கடவுளின் வடிவமாக என எல்லா விதங்களிலும் கொண்டாடுகிறோம். அதனால்தான் நம்மை எதிரியாய் நினைக்கும் அண்டை தேசத்தை சேர்ந்த குழந்தைக்கும் நம் நாட்டில் இலவசமாக சிகிச்சை செய்யும் மனம் நமக்கு இருக்கிறது.

உலகில் இருக்கும் அத்தனை உயிர்களின் ஆதாரமாய் இருப்பது அன்பு ஒன்றுதானே? எனவே என்னைப் பொறுத்தவரை பிறிதொரு உயிரிடம் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு செலுத்தும் அனைவருமே கடவுள்தான்.

சரி, இன்றைய அறிமுகங்களைப் பார்க்கலாமா?

முரளிகுமார் பத்மநாபன். அன்பே சிவம் என்னும் வலைப்பூவில் எழுதி வருகிறார். பிரியமான மனிதர்.அருமையான கவிதைகளை கிறுக்கல்கள் என்ற பெயரில் எழுதுகிறார். என்னைப்போலவே எஸ்ராவின் ரசிகர். ரசனையில் இவருக்கும் எனக்கும் எக்கச்சக்கமான ஒற்றுமைகள் இருப்பது ஆச்சரியமான விஷயம். அப்பாவைப் பற்றிய இவருடைய இந்தக் கவிதை என்னை மிகவும் பாதித்த ஒன்று.

செ.சரவணக்குமார் பக்கங்கள் என்கிற வலைப்பூவில் எழுதி வருகிறார் நண்பர் செ.சரவணக்குமார். எனக்கிட்ட பின்னூட்டங்கள் வாயிலாகத்தான் இவரைத் தெரியும். எதேச்சையாக ஒரு நாள் இவருடைய வலைத்தளம் கண்ணில் பட்டது. மேலோட்டமாகப் படிக்க ஆரம்பித்தவன் நண்பரின் அம்மா பற்றிய இந்த இடுகையைப் படித்தவுடன் திகைத்து விட்டேன். அன்பின் ஆழத்தை சொல்லும் வலி மிகுந்த வார்த்தைகள். அருமையான நடையில் எழுதி இருக்கிறார்.

மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்த்து வருகிறார் நண்பர் கும்மாச்சி. தன்னுடைய அனுபவங்களை எள்ளல் கலந்த நடையில் சொல்வதுதான் இவருடைய பலம். சமீப காலமாக எக்கச்சக்கமான அரசியல் இடுகைகளை எழுதி வருகிறார். ஒவ்வொரு கேரக்டர்கள் பற்றி இவர் எழுதும் இடுகைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. குருசாமி தாத்தா பற்றிய இந்த இடுகையை படித்துப் பாருங்கள்.

"தினசரி வாழ்க்கை" என்கின்ற பயரில் பதிவுலகில் எழுதி வருகிறார் நண்பர் மேவி.மேலாண்மை பயின்ற இளைஞர். தமிழ் தாய்மொழியாக இல்லாதபோதும் தன்முனைப்போடு கற்றுக்கொண்டு தமிழில் எழுதி வருகிறார். வித்தியாசமான எண்ணங்கள் கொண்டவர். நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்டவரும் கூட. இவர் எழுதிய கண்ணாடி என்கின்ற இந்த இடுகையை வாசித்துப் பாருங்கள்.

அமீரகத்தில் இருக்கிறார் நண்பர் வினோத் கவுதம். "ஜூலை காற்றில்" என்பது இவருடைய தளம். அழகான நடையில் எளிமையாக தான் சொல்ல வந்த விஷயங்களைத் தெளிவாக சொல்லக் கூடியவர். சமீபத்தில் இவர் எழுதிய "கடந்து வந்த மனிதர்கள்" என்கிற இந்து இடுகை எனக்கு ரொம்பவே பிடித்தது.

தமிழின் தற்காலக் கவிஞர்களில் மிக முக்கியமானவர் இசை. இவருடைய கவிதைத் தொகுப்பான "உறுமீன்களற்ற நதி" ஆனந்த விகடனால் சென்ற வருடத்தின் சிறந்த தொகுப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. "டங்கு டிங்கு டு" என்கிற வலைப்பூவில் எழுதி வருகிறார். அவருடைய கவிதைகளில் ஒன்று இங்கே..

புத்தகம்

துணையெழுத்து - என் வாழ்வில் நான் படித்த மிகச்சிறந்த புத்தகம் என்று சொல்லுவேன். ஆனந்த விகடனில் முதல்முறையாக துணைஎழுத்தின் ஒரு கட்டுரையைப் படித்த நாளை என்னால் இன்றும் மறக்க முடியாது. கல்லூரி நாட்களில் எனக்குள் ஒரு கேள்வி அடிக்கடி எழும். எதற்காக பிறக்கிறோம், வாழ்கிறோம், பின்பு இறக்கிறோம் என்று. அத்தனை கேள்விக்கான பதிலையும் "அன்பின் வலி" என்ற ஒரு கட்டுரையில் வெகு சாதாரணமாக சொல்லிச் சென்றிருப்பார் எஸ்ரா. ஒருவருக்கொருவர் மீது செலுத்தும் அன்பே வாழ்வை முழுமையாக்கும் என்பதே இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகளின் சாராம்சம். கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

வெளியீடு - விகடன் பிரசுரம்
விலை - ரூ.110/-

உலக சினிமா

The Road Home

உலகில் ஆதி மனிதன் காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து வரும் உணர்வு - காதல்தான். நாம் பல வகையான காதல் கதைகளைக் கேட்டிருப்போம். நண்பர்களின் காதலுக்கு உதவியும் இருப்போம். ஆனால் நமக்கு வெகு அருகே இருந்தும் அதிகம் அறிந்திராத ஒரு காதல் உள்ளதென்றால் நீங்கள் நம்புவீர்களா? அது நம் பெற்றோரின் காதல் கதை.. தன்னுடைய அப்பா அம்மாவின் கண்ணியமான காதலை நினைத்துப் பார்க்கும் ஒரு மகனின் கதைதான் - The Road Home. 1999 ஆம் வருடம் இந்த சீன மொழித் திரைப்படம் வெளியானது. பௌ ஷி என்னும் எழுத்தாளரின் "Remembrance" என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

இது பற்றிய என்னுடைய இடுகை..

படத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு..

http://en.wikipedia.org/wiki/The_Road_Home_%281999_film%29

26 comments:

  1. அற்புதமான எழுத்து திறமை அறிமுகங்கள்.. மிக்க நன்றி..:)

    ReplyDelete
  2. அன்பின் கார்த்தி - லேபிள் உங்கள் பெயர் போட வேண்டும் - தேடினால் வரவேண்டும் -- போடுக

    பிறகு தமிழ் மனத்தில் இணைக்க வேண்டாமா

    அதனால் தான் மறுமொழிகளே காணோம் - 2 மணி நேரம் ஆகியும்

    நல்ல அறிமுகங்கள் - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  4. @ ஷங்கர்..

    தொடரும் ஆதரவுக்கு நன்றி நண்பா

    @ cheena (சீனா)

    ஐயா லேபில் இணைத்து விட்டேன்.. பதிவு எழுத ஆரமபித்த நேரம்தான் 8 :30 .. உண்மையில் இப்போது 10 :15 மணிக்குத்தான் இடுகையை வெளியிட்டேன்.. நேரத்தையும் மாற்றி விட்டேன்..

    @ Chitra said...

    நன்றி தோழி

    ReplyDelete
  5. அருமையான அறிமுகங்கள் .

    சரவணக்குமார் ஒரு நல்ல இடுகையாளர் .. என் நண்பரும் கூட.

    வாழ்த்துக்கள் கார்த்திகை பாண்டியன் .

    ReplyDelete
  6. வாழ்த்துகள் கா.பா

    நல்ல இடுகை

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள்.
    உண்மையில் மேவீயின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. அற்புதமான அறிமுகங்கள்....

    ReplyDelete
  9. vநல்ல அறிமுகங்கள்.நன்றி நன்றி.

    ReplyDelete
  10. அறிமுகங்களை அறிமுகப்படுத்திய விதம் ஆசிரியரிருக்கே உரியது...இதில் சிலர் நண்பர்கள் மற்றவர்களை இனிமேல் தான் நண்பர்களாக்கனும்.....வாழ்த்துக்கள் பாண்டியன்....

    ReplyDelete
  11. absolute style of yours, karthikai pandiyan. keep going :)

    vidhya

    ReplyDelete
  12. அருமையான அறிமுகங்கள்.. பதிவர்களும், புத்தகம் + படமும்

    ReplyDelete
  13. உங்கள் அறிமுகங்கள் அருமை அண்ணா

    ReplyDelete
  14. //அன்பென்னும் ஒற்றை வார்த்தைக்குள் இந்த உலகின் அத்தனை உணர்வுகளும் அடக்கம்.//

    கடைசியிலே வாழ்க்கையின் நிகரச்சொத்துன்னு நிற்கப்போவது அன்பு மட்டும் தான். இதைப் புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறது பலருக்கு சௌகரியமா இருக்குது என்பது தான் உண்மை.

    கும்மாச்சியின் சமீபத்திய பதிவைப்படித்தேன். அது பற்றி இங்கு குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  15. என்னடா கிறுக்கல் 17 க்கு இன்னைக்கு பின்னுட்டம் வருதுன்னு மைல்டா டவுட் வந்துச்சு, அப்படியே உங்கமேளையும் ..
    நன்றி நண்பா எனக்கான அறிமுகத்திற்கு....

    ReplyDelete
  16. அன்பென்னும் மந்திரச்சொல் - அத்தனையும் அழகு.

    ReplyDelete
  17. முரளி, சரவணகுமார், வினோத் கெளதம் எல்லோரும் எனக்கு முன்பே தெரியும்... மற்றவர்கள் புதியவர்கள். படித்துப் பார்க்கிறேன் கார்த்திகை.

    துணையெழுத்து - எனக்கும் நிறைவைத் தந்த கட்டுரை...

    உலக சினிமா - எஸ்கே.....ப்

    ReplyDelete
  18. வலைத்தளங்களையும் கூடவே புத்தகங்களையும் அறிமுகப்படுத்தி வித்தியாசம் காட்டியதற்கு வாழ்த்துகள். நீங்கள் அறிமுகப்படுத்திய பலர் எனக்கு அறிமுகமில்லை. ஒரு ரவுண்ட் போய் வருகிறேன்.

    ReplyDelete
  19. அருமையான அறிமுகங்கள்...கூடவே புத்தகப்பகிர்வு மற்றும் உலகசினிமா.. அசத்தல்....

    ReplyDelete
  20. கார்த்தி மிக்க நன்றி. என்னுடைய குருசாமி பற்றிய “எங்கிருந்தோ வந்தார்” பதிவை தேர்நதெடுத்து அங்கீகாரம் கொடுத்துள்ளீர்கள். என் எழுத்தில் சுணக்கம் ஏற்படும் பொழுது என்னை ஊக்குவிக்கும் நீர் பல்லாண்டு நலமுடன் வாழ்க

    ReplyDelete
  21. வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி..

    ReplyDelete
  22. எல்லோரையும் நான் google reader ல படிப்பேன் ஆனால் பின்னோட்டம் தான் போட்டது இல்லை .....

    இன்னும் யாரும் அவ்வளவாக தெரிந்து கொள்ளாத புத்தகமாக அறிமுகப்படுத்தினால் நல்ல இருக்கும்


    நீங்க எனது கண்ணாடி சிறுகதையை அறிமுகபடுதியதுக்கு நன்றி

    ReplyDelete
  23. அருமையான பகிர்வு கார்த்திகைப் பாண்டியன்

    என் நண்பர்கள் சரவணகுமாருக்கும் வினோத் கௌதமுக்கும் மற்றைய வலைப்பதிவர்களுக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  24. அறிமுகத்திற்க்கு நன்றி நண்பா..
    மற்ற நண்பர்களையும் படித்துள்ளேன்..
    உங்கள் நடையில் வலைச்சரம் இன்னும் அழகு..

    ReplyDelete
  25. அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பா. விருப்பமான நூல், உலக சினிமா என்று மிக அருமையான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  26. நானும் எஸ்ராவின் தீவிர அபிமானிதான் தலைவரே....
    //அன்பு மனதை முழுதாய் அக்கிரமிப்பதால் அங்கு வெறுப்புக்கு இடமில்லை... உண்மைதானே?//

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது