07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 7, 2010

பெருங்கடலில் சிறுதுளி நான்..!!!

பிரியத்துக்குரிய வலையுலக நண்பர்களே..

அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கம். முதலில் என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

நான் மா.கார்த்திகைப் பாண்டியன். என்னுடைய பெயர்க்காரணத்தை என்னுடைய ஐம்பதாவது இடுகையாக எழுதி இருக்கிறேன். மதுரையில் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன். கணினியில் தமிழில் ஒரு உலகம் தனியாக இயங்கி வருவதே எனக்கு ஜூன் 2008இல்தான் தெரியும். நிறைய பதிவுகளை வாசிக்கத் தொடங்கினேன். பின்னூட்டங்கள் இடுவதற்கு நமக்கென ஒரு தளம் வேண்டுமே என்றுதான் நவம்பர் 2008 முதல் எனக்குப் பிடித்தமான புத்தகமான "பொன்னியின் செல்வன்" என்ற பெயரில் வலைப்பூவை தொடங்கினேன்.

ஆசை மற்றும் ஆர்வம் காரணமாகவும், நண்பர்கள் தந்த உற்சாகத்தாலும் பின்பு பதிவுகளில் நானும் எழுதத் தொடங்கினேன். நான் பதிவெழுத வந்த வரலாற்றை என்னுடைய ஓராண்டு நிறைவு இடுகையாக எழுதி இருக்கிறேன்.

பதிவுகள் எழுதுவதால் என்ன பலன் என்று நிறைய பேர் என்னைக் கேட்டதன் விளைவுதான் இந்த இடுகை. உண்மையில் பதிவின் வாயிலாக எனக்கு அருமையான நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். நட்பு என்பதையும் மீறி நெருக்கமான உறவுகளை பதிவுலகம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது என்பதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி.

இந்த ஒன்றரை வருடங்களில் எனக்கு பதிவுலகம் எத்தனையோ நல்ல விஷயங்களைக் கொடுத்து இருக்கிறது. என்னுடைய ஆதர்ஷ எழுத்தாளரான எஸ்ராவை சந்திக்கும் வாய்ப்பு பதிவுகளின் வாயிலாகவே கிட்டியது. கல்கியில் என்னைப் பற்றிய ஒரு அறிமுகமும் வந்தது. சென்ற வருட இறுதியில் தோழர் மாதவராஜ் தொகுத்த பூக்களிலிருந்து சில புத்தகங்கள் தொகுப்பில் என்னுடைய பயணக்கட்டுரையும், கவிதையும் இடம் பெற்றது மற்றொரு நெகிழ்ச்சி.

என்னுடைய தங்கையின் திருமணத்திற்கு பதிவர் நண்பர்கள் பனிரெண்டு பேர் கிட்ட வந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள். இன்னும் நிறைய பேர் அலைபேசியில் வாழ்த்தினார்கள். இத்தனை அன்பை சம்பாதிக்க முடிந்ததே பதிவுகளால்தானே? அது போதாதா..

இதைப்பற்றித்தான் எழுதுவது என்றில்லாமல் எல்லாவற்றையும் பற்றி எழுதுவேன். இலக்கியத்தில் ஆர்வமுண்டு. அனுபவம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகள் எழுதுவது ரொம்பப் பிடிக்கும். அரசியல் பற்றி மட்டும் எழுதுவதில்லை. என்னுடைய மிக முக்கியமான பொழுதுபோக்கு திரைப்படங்கள்தான் என்பதால் விமர்சனப் பதிவுகள் நிறையவே எழுதுவேன்.

நான் எழுதியவை எல்லாமே எனக்குப் பிடித்த இடுகைகள்தான் என்றாலும், ஒரு சில இடுகைகளை எழுதும்போது நமக்கே ரொம்பப் பிடித்துப் போய்விடும். அது போன்று எனக்குப் பிடித்த சில இடுகைகள்..

ரயில் பயணங்களில்..

காமத்தின் நீண்ட நிழல்..

போதி மரம்..

வினோத மனிதர்கள்..

சமீபத்தில் மதுரைப் பதிவுலக நண்பர்களோடு இணைந்து இரண்டு நல்ல நிகழ்ச்சிகளை நடத்த முடிந்தது. அது பற்றிய இடுகைகள்..

கனவு நிஜமானது - டாக்டர் ஷாலினிக்கு நன்றி..


இனிதே நடந்த பதிவர் பயிலரங்கம்..

சீனா ஐயா வெகு நாட்களாகவே என்னை வலைச்சரத்தின் ஆசிரியராக எழுதும்படி சொல்லிக் கொண்டிருந்தார். நான் எனக்கென சொந்தமாக ஒரு கணினியை வாங்கிய பின்பாகத்தான் எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்து இருக்கிறது. ரொம்ப சந்தோசம். என்னால் முடிந்த அளவுக்கு நான் ரசிக்கும் பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்திட முயல்கிறேன். அத்தோடு நான் விரும்பி படித்த புத்தகம் மற்றும் உலக சினிமாக்கள் பற்றிய விவரங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன்.

உங்கள் ஆதரவுடன் இந்த வலைச்சர வாரம் களைகட்டும் என நம்புகிறேன். நன்றி.

46 comments:

  1. நல்வாழ்த்துகள் கார்த்திக்

    ReplyDelete
  2. வாங்க கார்த்திக்! அசத்துங்க:))

    ReplyDelete
  3. என்னால் முடிந்த அளவுக்கு நான் ரசிக்கும் பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்திட முயல்கிறேன். அத்தோடு நான் விரும்பி படித்த புத்தகம் மற்றும் உலக சினிமாக்கள் பற்றிய விவரங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன்.

    ......... Good idea. Best wishes!

    ReplyDelete
  4. நண்பர் கார்த்திகை பாணியன் அவர்களின் இந்த வார ஆசிரியர் பணி சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. வாழ்த்துகள் கார்த்திகை பாண்டியன்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன் சார் .

    நல்ல அறிமுகம் உங்களை பத்தி

    ReplyDelete
  8. ஆசிரியருக்கே ஆசிரியர் பதவி மீண்டும்.கலக்குங்க கார்த்தி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வாங்க சார் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  10. நிச்சம் புது பதிவர்கள் பலரை அறிமுகப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்....

    ஏனெனின், உங்களின் இயல்பே புதியவர்களை அடையாளம் கண்டு அரவணைப்பதும தான்.

    ReplyDelete
  11. கார்த்தி ! சொல்லவே இலையே!!

    ReplyDelete
  12. என்னால் முடிந்த அளவுக்கு நான் ரசிக்கும் பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்திட முயல்கிறேன். //

    எங்களையெல்லாம் ஆட்டைக்கு சேர்க்கப்படாது!

    ReplyDelete
  13. அத்தோடு நான் விரும்பி படித்த புத்தகம் மற்றும் உலக சினிமாக்கள் பற்றிய விவரங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன்.///

    நல்லா செய்யுங்க!!

    ReplyDelete
  14. புது கம்ப்யூட்டர் வாங்கியாச்சா!!

    ReplyDelete
  15. "பெருங்கடலில் சிறுதுளி நான்..!!!

    சிறுதுளி பெருவெள்ளம்.

    ReplyDelete
  16. வாழ்த்துகள் கார்த்திக்

    ReplyDelete
  17. நட்பு என்பதையும் மீறி நெருக்கமான உறவுகளை பதிவுலகம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது என்பதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி///

    உண்மைதான் கார்த்தி!!!

    ReplyDelete
  18. வாங்க வாத்தியாரய்யா........

    வருக வருக.......

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் அண்ணா....

    கலக்குங்க.....

    ReplyDelete
  20. வாழ்த்துகள்..கலக்குங்க

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் வாத்தியார். கலக்குங்க.

    ReplyDelete
  22. valthukkal boss...kalakkunga

    (sorry tamil la type panna time illai )

    ReplyDelete
  23. வாங்க அண்ணா...

    ReplyDelete
  24. வாங்க கார்த்திகை பாண்டியன்!
    இந்த ஒரு வாரம் உங்களின் கைவண்ணத்தில் மணக்க இருக்கும் வலைச்சரத்திற்கு வாழ்த்துகள். வழக்கம் போல கலக்குங்க

    ReplyDelete
  25. //இத்தனை அன்பை சம்பாதிக்க முடிந்ததே பதிவுகளால்தானே?//

    உண்மை கார்த்திகைப் பாண்டியன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. நல்வாழ்த்துக்கள் பாண்டியன்....அறிமுக உரை நல்லாயிருக்குங்க

    //உண்மையில் பதிவின் வாயிலாக எனக்கு அருமையான நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். நட்பு என்பதையும் மீறி நெருக்கமான உறவுகளை பதிவுலகம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது என்பதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி.//

    ஆமாங்க இது நாம பெருமை படவேண்டிய ஒன்று முகம் அறியாமல் அறிமுகமாகி பின் ஒரு முகமாகும் சுகம் இந்த பதிவுலகில்......

    ReplyDelete
  27. வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் ரொம்ப நன்றி..:-)))

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் தலைவரே... வாங்க.. இந்தவாரமும் இனிமையாய் அமையட்டும்...

    ReplyDelete
  29. ஆரம்பமே அமர்க்களம்.

    ReplyDelete
  30. படிக்க நாங்க இருக்கோம்

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  32. வாழ்த்துகள் கா.பா

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள்ங்ணா! :))

    ReplyDelete
  35. Happy to see you here... do well karthigai...

    ReplyDelete
  36. பின்னூட்டமிட்டு வாழ்த்திய எல்லா நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி மக்களே..:-)))

    ReplyDelete
  37. வாழ்த்துகள் கா.பா.

    //.. நான் எனக்கென சொந்தமாக ஒரு கணினியை வாங்கிய பின்பாகத்தான் எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் ..//

    ட்ரீட் எப்போங்க..

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் வாத்தியாரே!

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள்...கார்த்திக். பெருந்துறைக்காரரா நீங்க..

    ReplyDelete
  40. // திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்) said...
    வாழ்த்துகள் கா.பா.ட்ரீட் எப்போங்க.//

    நீங்க ஊருக்கு வாரப்ப தந்துரலாம் நண்பா..

    //வால்பையன் said...
    வாழ்த்துக்கள் வாத்தியாரே!//

    நன்றி தல

    //கண்ணகி said...
    வாழ்த்துக்கள்...கார்த்திக். பெருந்துறைக்காரரா நீங்க..//

    இல்லைங்க.. அங்க வேலை பார்த்தேன்.. சொந்த ஊரு மதுரைங்க..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது