பிரியத்துக்குரிய வலையுலக நண்பர்களே..
அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கம். முதலில் என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.
நான் மா.கார்த்திகைப் பாண்டியன். என்னுடைய பெயர்க்காரணத்தை என்னுடைய ஐம்பதாவது இடுகையாக எழுதி இருக்கிறேன். மதுரையில் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன். கணினியில் தமிழில் ஒரு உலகம் தனியாக இயங்கி வருவதே எனக்கு ஜூன் 2008இல்தான் தெரியும். நிறைய பதிவுகளை வாசிக்கத் தொடங்கினேன். பின்னூட்டங்கள் இடுவதற்கு நமக்கென ஒரு தளம் வேண்டுமே என்றுதான் நவம்பர் 2008 முதல் எனக்குப் பிடித்தமான புத்தகமான "பொன்னியின் செல்வன்" என்ற பெயரில் வலைப்பூவை தொடங்கினேன்.
ஆசை மற்றும் ஆர்வம் காரணமாகவும், நண்பர்கள் தந்த உற்சாகத்தாலும் பின்பு பதிவுகளில் நானும் எழுதத் தொடங்கினேன். நான் பதிவெழுத வந்த வரலாற்றை என்னுடைய ஓராண்டு நிறைவு இடுகையாக எழுதி இருக்கிறேன்.
பதிவுகள் எழுதுவதால் என்ன பலன் என்று நிறைய பேர் என்னைக் கேட்டதன் விளைவுதான் இந்த இடுகை. உண்மையில் பதிவின் வாயிலாக எனக்கு அருமையான நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். நட்பு என்பதையும் மீறி நெருக்கமான உறவுகளை பதிவுலகம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது என்பதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி.
இந்த ஒன்றரை வருடங்களில் எனக்கு பதிவுலகம் எத்தனையோ நல்ல விஷயங்களைக் கொடுத்து இருக்கிறது. என்னுடைய ஆதர்ஷ எழுத்தாளரான எஸ்ராவை சந்திக்கும் வாய்ப்பு பதிவுகளின் வாயிலாகவே கிட்டியது. கல்கியில் என்னைப் பற்றிய ஒரு அறிமுகமும் வந்தது. சென்ற வருட இறுதியில் தோழர் மாதவராஜ் தொகுத்த பூக்களிலிருந்து சில புத்தகங்கள் தொகுப்பில் என்னுடைய பயணக்கட்டுரையும், கவிதையும் இடம் பெற்றது மற்றொரு நெகிழ்ச்சி.
என்னுடைய தங்கையின் திருமணத்திற்கு பதிவர் நண்பர்கள் பனிரெண்டு பேர் கிட்ட வந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள். இன்னும் நிறைய பேர் அலைபேசியில் வாழ்த்தினார்கள். இத்தனை அன்பை சம்பாதிக்க முடிந்ததே பதிவுகளால்தானே? அது போதாதா..
இதைப்பற்றித்தான் எழுதுவது என்றில்லாமல் எல்லாவற்றையும் பற்றி எழுதுவேன். இலக்கியத்தில் ஆர்வமுண்டு. அனுபவம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகள் எழுதுவது ரொம்பப் பிடிக்கும். அரசியல் பற்றி மட்டும் எழுதுவதில்லை. என்னுடைய மிக முக்கியமான பொழுதுபோக்கு திரைப்படங்கள்தான் என்பதால் விமர்சனப் பதிவுகள் நிறையவே எழுதுவேன்.
நான் எழுதியவை எல்லாமே எனக்குப் பிடித்த இடுகைகள்தான் என்றாலும், ஒரு சில இடுகைகளை எழுதும்போது நமக்கே ரொம்பப் பிடித்துப் போய்விடும். அது போன்று எனக்குப் பிடித்த சில இடுகைகள்..
ரயில் பயணங்களில்..
காமத்தின் நீண்ட நிழல்..
போதி மரம்..
வினோத மனிதர்கள்..
சமீபத்தில் மதுரைப் பதிவுலக நண்பர்களோடு இணைந்து இரண்டு நல்ல நிகழ்ச்சிகளை நடத்த முடிந்தது. அது பற்றிய இடுகைகள்..
கனவு நிஜமானது - டாக்டர் ஷாலினிக்கு நன்றி..
இனிதே நடந்த பதிவர் பயிலரங்கம்..
சீனா ஐயா வெகு நாட்களாகவே என்னை வலைச்சரத்தின் ஆசிரியராக எழுதும்படி சொல்லிக் கொண்டிருந்தார். நான் எனக்கென சொந்தமாக ஒரு கணினியை வாங்கிய பின்பாகத்தான் எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்து இருக்கிறது. ரொம்ப சந்தோசம். என்னால் முடிந்த அளவுக்கு நான் ரசிக்கும் பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்திட முயல்கிறேன். அத்தோடு நான் விரும்பி படித்த புத்தகம் மற்றும் உலக சினிமாக்கள் பற்றிய விவரங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன்.
உங்கள் ஆதரவுடன் இந்த வலைச்சர வாரம் களைகட்டும் என நம்புகிறேன். நன்றி.

நல்வாழ்த்துகள் கார்த்திக்
ReplyDeleteநல்வரவு...:))
ReplyDeleteவாங்க கார்த்திக்! அசத்துங்க:))
ReplyDeleteஎன்னால் முடிந்த அளவுக்கு நான் ரசிக்கும் பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்திட முயல்கிறேன். அத்தோடு நான் விரும்பி படித்த புத்தகம் மற்றும் உலக சினிமாக்கள் பற்றிய விவரங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன்.
ReplyDelete......... Good idea. Best wishes!
நண்பர் கார்த்திகை பாணியன் அவர்களின் இந்த வார ஆசிரியர் பணி சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் !
ReplyDeleteநல்வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துகள் கார்த்திகை பாண்டியன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன் சார் .
ReplyDeleteநல்ல அறிமுகம் உங்களை பத்தி
வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள் சார்.
ReplyDeleteஆசிரியருக்கே ஆசிரியர் பதவி மீண்டும்.கலக்குங்க கார்த்தி.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க சார் நல்வாழ்த்துகள்
ReplyDeleteநிச்சம் புது பதிவர்கள் பலரை அறிமுகப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்....
ReplyDeleteஏனெனின், உங்களின் இயல்பே புதியவர்களை அடையாளம் கண்டு அரவணைப்பதும தான்.
வாழ்த்துகள்
ReplyDeleteகார்த்தி ! சொல்லவே இலையே!!
ReplyDeleteவாழ்த்துக்கள்!!
ReplyDeleteஎன்னால் முடிந்த அளவுக்கு நான் ரசிக்கும் பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்திட முயல்கிறேன். //
ReplyDeleteஎங்களையெல்லாம் ஆட்டைக்கு சேர்க்கப்படாது!
அத்தோடு நான் விரும்பி படித்த புத்தகம் மற்றும் உலக சினிமாக்கள் பற்றிய விவரங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன்.///
ReplyDeleteநல்லா செய்யுங்க!!
புது கம்ப்யூட்டர் வாங்கியாச்சா!!
ReplyDelete"பெருங்கடலில் சிறுதுளி நான்..!!!
ReplyDeleteசிறுதுளி பெருவெள்ளம்.
வாழ்த்துகள் கார்த்திக்
ReplyDeleteநட்பு என்பதையும் மீறி நெருக்கமான உறவுகளை பதிவுலகம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது என்பதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி///
ReplyDeleteஉண்மைதான் கார்த்தி!!!
வாங்க வாத்தியாரய்யா........
ReplyDeleteவருக வருக.......
வாழ்த்துக்கள் அண்ணா....
ReplyDeleteகலக்குங்க.....
வாழ்த்துகள்..கலக்குங்க
ReplyDeleteவாழ்த்துக்கள் வாத்தியார். கலக்குங்க.
ReplyDeletevalthukkal boss...kalakkunga
ReplyDelete(sorry tamil la type panna time illai )
வாங்க அண்ணா...
ReplyDeleteவாங்க கார்த்திகை பாண்டியன்!
ReplyDeleteஇந்த ஒரு வாரம் உங்களின் கைவண்ணத்தில் மணக்க இருக்கும் வலைச்சரத்திற்கு வாழ்த்துகள். வழக்கம் போல கலக்குங்க
//இத்தனை அன்பை சம்பாதிக்க முடிந்ததே பதிவுகளால்தானே?//
ReplyDeleteஉண்மை கார்த்திகைப் பாண்டியன் வாழ்த்துக்கள்
நல்வாழ்த்துக்கள் பாண்டியன்....அறிமுக உரை நல்லாயிருக்குங்க
ReplyDelete//உண்மையில் பதிவின் வாயிலாக எனக்கு அருமையான நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். நட்பு என்பதையும் மீறி நெருக்கமான உறவுகளை பதிவுலகம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது என்பதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி.//
ஆமாங்க இது நாம பெருமை படவேண்டிய ஒன்று முகம் அறியாமல் அறிமுகமாகி பின் ஒரு முகமாகும் சுகம் இந்த பதிவுலகில்......
நல்வரவு..!
ReplyDeleteவாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் ரொம்ப நன்றி..:-)))
ReplyDeleteவாழ்த்துக்கள் தலைவரே... வாங்க.. இந்தவாரமும் இனிமையாய் அமையட்டும்...
ReplyDeleteஆரம்பமே அமர்க்களம்.
ReplyDeleteபடிக்க நாங்க இருக்கோம்
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்
ReplyDeleteவாழ்த்துகள் கா.பா
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteவாழ்த்துக்கள்ங்ணா! :))
ReplyDeleteHappy to see you here... do well karthigai...
ReplyDeleteபின்னூட்டமிட்டு வாழ்த்திய எல்லா நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி மக்களே..:-)))
ReplyDeleteவாழ்த்துகள் கா.பா.
ReplyDelete//.. நான் எனக்கென சொந்தமாக ஒரு கணினியை வாங்கிய பின்பாகத்தான் எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் ..//
ட்ரீட் எப்போங்க..
வாழ்த்துக்கள் வாத்தியாரே!
ReplyDeleteவாழ்த்துக்கள்...கார்த்திக். பெருந்துறைக்காரரா நீங்க..
ReplyDelete// திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்) said...
ReplyDeleteவாழ்த்துகள் கா.பா.ட்ரீட் எப்போங்க.//
நீங்க ஊருக்கு வாரப்ப தந்துரலாம் நண்பா..
//வால்பையன் said...
வாழ்த்துக்கள் வாத்தியாரே!//
நன்றி தல
//கண்ணகி said...
வாழ்த்துக்கள்...கார்த்திக். பெருந்துறைக்காரரா நீங்க..//
இல்லைங்க.. அங்க வேலை பார்த்தேன்.. சொந்த ஊரு மதுரைங்க..