பெண்பதிவர்:"சீதா பாரதி"
➦➠ by:
ஜெரி ஈசானந்தன்.
Beloved friends,here iam very proud to introduce such a beautiful and brilliant poetess seetha bharathi. I witness with her soul stirring verses,and all leads you to plunge into the pool of ecstasy,and mesmeric mood.
---jerry eshananda------
---------------------------------------------------------------------------------------------------------------
மேற்கண்ட ஆங்கில வரிகள் என் புலமையை காட்ட எழுதவில்லை,சந்தோஷ தர்ணத்தில்,மலை உச்சியில் இருந்து கத்த சொன்னால், உணர்ச்சிப்பெருக்கில் கத்துவோமே,அதைத்தான் இங்கே செய்து விட்டேன்.
வற்றிப்போன ஹார்மோன்களையும்,அரை வினாடியில் சுரக்கச்செய்யும் அருமருந்து -காதல்.
துவண்டு கிடக்கும் மனசை துள்ளி எழுப்பும் பீஜ மந்திரம் - காதல்.
இப்படி காதலை ப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்,அது தரும்....வலி,வேதனை,அவமானம்,வெற்றி,பிரிவு, வசந்தம்,சோகம்,என எத்தனையோ வாழ்வியல் பரிமாணங்களில் நம்மை அமிழ்த்தும் "கருணா சாகரம்"- தான் இவரது வலைப்பூ.
யாருமற்ற தனிமையில் பூத்துக்குலுங்கும் நந்த வனத்தில் தென்றலை தழுவியபடி நீங்கள் நடந்தால் எப்படியிருக்கும்?
மெல்லிய குளிரில்,இதமான வாடைக்காற்றில் பௌர்ணமி வெளிச்சத்தில்,உடலை போர்த்தியிருக்கும் கம்பளி ஆடை தரும் கதகதப்பில்,இளைய ராஜா பாடலை கேட்டுக்கொண்டே நடந்தால் எப்படியிருக்கும்?
இன்னும் இது போன்ற எத்தனையோ இனிமைகளை இங்கே இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள் .இந்த இனிமைகள் அனைத்தையும் இவரது வலைப்பூவிற்கு சென்றால்,வாசிப்பு என்ற ஒற்றை சுகானுபவத்தில் இதனை நீங்கள் எட்ட முடியும்.
கண்களுக்கு உறுத்தாத,எரிச்சல் தராத வலையமைப்பு.
கவிதைகளுக்கேற்ற புகைப்படங்கள்,சுகமாய் தாலாட்டும் வரிகள்,...இப்படி வலைப்பூவில் நேர்த்தி மிளிர்கிறது.
உங்கள் கணினி இருக்கும் அறையின் மின் விளக்கை அனைத்து விடுங்கள்,பின் ஒவ்வொரு கவிதையாய் சுவாசித்து ப்பாருங்கள்,விண்வெளியில் நட்சத்திர கூட்டங்களுக்கு இடையே மிதப்பீர்கள்.
நண்பர்களே, உங்களது வாழ்த்துக்கள் இந்த பெண் பதிவர் -சீதா பாரதியை உற்சாகப்படுத்தட்டும்.இவரது கனவும் மெய்ப்படட்டும்.
தொடர்ந்து ..வாருங்கள், நாளும் ...அன்பில்......தொடர்வோம்
|
|
//மேற்கண்ட ஆங்கில வரிகள் என் புலமையை காட்ட எழுதவில்லை,சந்தோஷ தர்ணத்தில்,மலை உச்சியில் இருந்து கத்த சொன்னால், உணர்ச்சிப்பெருக்கில் கத்துவோமே,அதைத்தான் இங்கே செய்து விட்டேன்.//
ReplyDeleteஇவ்வளவு ரசித்துப் போற்றும் ரசிகர் ஒருவரின் பெருமைக்குரிய அறிமுகம் சீதாபாரதி அவர்களுக்கும் பொக்கிஷமானதுதான்....
அருமையான தொகுப்பு... மீண்டும் ஓர் அற்புதமான அறிமுகம்.... இவரையும் தொடர்கிறேன்...
நல்ல அறிமுகம். சுருக்கமாகச் சொன்னால் இவர் மற்றொரு ஹேமா. அவர் கல்லூரிப் பருவத்தில் இவர் இப்போது முயற்சித்துக்கொண்டுருக்கிறார். அதென்னவோ காதல், பெண்கள் என்றால் பெரும்பாலும் பின்புலத்தை கருப்பாக வைத்துக்கொண்டு ஏன் கண்களை சோதிக்கிறார்கள்?
ReplyDeleteஏந்கனவே ப்ரியமுடன் வசந்த் ஒரு புதிய பாணியை உருவாக்கிவிட்டுச் சென்றார். நீங்கள் வேறொரு தளத்தில் சிறப்படையச் செய்து கொண்டுருக்கிறீர்கள்?
அன்பு மாப்ள பிரபுவுக்கு நன்றிகள் பல.
ReplyDeleteகலக்கிறீங்க... பகிர்வுக்கு நன்றி..கண்டிப்பா படிக்கறோம்
ReplyDeleteவருகைக்கு நன்றி ஜோதிஜி,தொடர்ந்து வாருங்கள்.
ReplyDeleteசீதாபாரதியைப் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி ஜெரி ஈசானந்தா
ReplyDeleteநன்றிங்க!
ReplyDeleteஇதுவரை நான் படித்ததில்லை!!!
ReplyDeleteஅன்பு நண்பர் அசோக் வருகைக்கு நன்றிகள் பல....
ReplyDeleteநன்றி தேனம்மை,,,,அழகான பெயர், வருகைக்கு நன்றிங்க..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎன்னுடைய வலைச்சரத்தையும் படிக்கவும்!
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2009_02_08_archive.html
அறிமுகங்கள் எல்லாமே வித்தியாசம் + அருமை, தொடருங்கள் ஜெரி. :))
ReplyDeleteசீதா பாரதிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎதைக் குறைசொல்வது
ReplyDeleteதொலைத்ததையா
தொலைந்தததையா?///
சீதாவின் கவிதை அருமை!!
சீதாபாரதியை அறிமுகப்படுத்தி விட்டீர்கள்!
ReplyDeleteபல புதிய கவிஞர்களுக்குப் பொறாமை வரும் ஜெரீ!!(எனக்கே வருதே!!) ஹி ஹி!!
மேற்கண்ட ஆங்கில வரிகள் என் புலமையை காட்ட எழுதவில்லை,சந்தோஷ தர்ணத்தில்,மலை உச்சியில் இருந்து கத்த சொன்னால், உணர்ச்சிப்பெருக்கில் கத்துவோமே,அதைத்தான் இங்கே செய்து விட்டேன்.
ReplyDelete///
சரி ஓகே!! புரியுது!!!
//உங்கள் கணினி இருக்கும் அறையின் மின் விளக்கை அனைத்து விடுங்கள்,பின் ஒவ்வொரு கவிதையாய் சுவாசித்துப் பாருங்கள்,விண்வெளியில் நட்சத்திர கூட்டங்களுக்கு இடையே மிதப்பீர்கள்.//
ReplyDeleteஅறிமுகமே அழகான கவிதை.
வாழ்த்துக்கள் திரு.சீதாபாரதிக்கும், தங்களுக்கும்....
டாக்டர் தேவா,தங்களின் வலைச்சரத்தையும் படிக்கிறேன்,லிங்க் கொடுத்து உதவிய கொடை வள்ளலுக்கு நன்றி.
ReplyDeleteபலாப்பட்டறை சங்கர் பொய் இப்போ புது கெட்டப்பில் கலக்கல் சங்கரா, வருகைக்கு நன்றி சங்கர்.
ReplyDelete/பல புதிய கவிஞர்களுக்குப் பொறாமை வரும் ஜெரீ!!(எனக்கே வருதே!!) ஹி ஹி!!//
ReplyDeleteடாக்டர் நீங்களும் பெரிய கவிஞர் தான் ஒத்துக்கறேன்,அதுக்குன்னு சும்மா கெடக்குற, கவிஞர்கள ,பொறாமை அது இதுன்னு சொல்லி உசுப்பேத்தி விடாதீக.
/பல புதிய கவிஞர்களுக்குப் பொறாமை வரும் ஜெரீ!!(எனக்கே வருதே!!) ஹி ஹி!!//
ReplyDeleteடாக்டர் நீங்களும் பெரிய கவிஞர் தான் ஒத்துக்கறேன்,அதுக்குன்னு சும்மா கெடக்குற, கவிஞர்கள ,பொறாமை அது இதுன்னு சொல்லி உசுப்பேத்தி விடாதீக.
//
நம்ம மனசு பொறாமை பிடித்த மனசாயிருக்கே!! ஹி!! ஹி!!!
This comment has been removed by the author.
ReplyDeletewow! excellent intro... i've been drenching in her poetry too - simple, straight and heavy to hold, so good :)!
ReplyDelete/மேற்கண்ட ஆங்கில வரிகள் என் புலமையை காட்ட எழுதவில்லை,சந்தோஷ தர்ணத்தில்,மலை உச்சியில் இருந்து கத்த சொன்னால், உணர்ச்சிப்பெருக்கில் கத்துவோமே,அதைத்தான் இங்கே செய்து விட்டேன்.
ReplyDelete///
சரி ஓகே!! புரியுது!!!
சரி உங்களுக்கு புரிஞ்சது,எனக்கும் புரிஞ்சதுனாலும்,எல்லாருக்கும் புரியணும்னு,எனக்கு புரிஞ்சத,நான் இங்க புரியாதது மாதி எழுதி,திரும்ப நீங்க,ஒண்ணுமே,புரியல்லைன்னு எழுதி,பின்ன அதுக்கு,நான் உடனே,திரும்ப புரியுறது மாதி எழுதி.........எதுக்கு ..டாக்டர் ...பாவம் ..படிக்கிறவங்க பொழச்சு போறாங்க,விட்டுருவோம்.
இருந்தாலும் ஆங்கிலத்தில் உங்களுக்கு எழுதத் தெரியுது!!!!
ReplyDeleteநல்ல அறிமுகம். நீங்கள் துவக்கத்தில் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு சரியே :).
ReplyDeleteதுபாய் ராஜாவின் அன்புக்கு நன்றி....கவிதையை,கவிதையால் சொன்னால் தானே இனிமை.
ReplyDeleteஒரு நல்ல வலைப்பதிவரை அறிமுகப் படுத்திய உங்களுக்கு நன்றிகள் பல,பல.
ReplyDeleteஒவ்வொரு வரிகளும் முத்துக்கள். . அறிமுகத்துக்கு நன்றி.
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றிகள் பல.
ReplyDelete//உங்கள் கணினி இருக்கும் அறையின் மின் விளக்கை அனைத்து விடுங்கள்,பின் ஒவ்வொரு கவிதையாய் சுவாசித்து ப்பாருங்கள்,விண்வெளியில் நட்சத்திர கூட்டங்களுக்கு இடையே மிதப்பீர்கள்.
ReplyDelete//
kosu thollai thanga mudiyala
light off panni padichaen
This comment has been removed by the author.
ReplyDeleteஜெரி - அறிமுகத்திற்கு மிக்க நன்றி...
ReplyDeleteவருகை புரிந்த, மறுமொழி அளித்த அனைவருக்கும் அன்பான நன்றிகள் பல..தொடர்ந்து வாங்க.. சந்திப்போம்.. :)
அருமையான அறிமுகம் ஈசானந்தா சார் .
ReplyDeleteபுதியதாய் ஒரு அறிமுகம்.
ReplyDeleteநன்றி ஜெரி.தொடருங்கள்.
அறிமுகத்திற்கு நன்றி பாஸ்.
ReplyDeleteமுற்றிலும் புதிய அறிமுகம்.
ReplyDeleteநன்றி - அவசியம் தொடர்கிறோம்.
அன்பின் தெகா,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,தொடர்வோம்
ReplyDeleteவாங்க சுடுதண்ணி,வருகைக்கு நன்றி,"அடிக்கடி வாங்க,சுடுதண்ணில,லெமன் டீ போட்டு குடிப்போம்.."
ReplyDeleteவாங்கஅபுல் பசர்,,வருகைக்கு நன்றி...
ReplyDelete/ ஒவ்வொரு வரிகளும் முத்துக்கள். . அறிமுகத்துக்கு நன்றி.//
ReplyDeleteவாங்க சித்ரா,எல்லோரும் நலம் தானே,,வாழ்த்துக்கு நன்றி.
பத்மாவின் வருகை மிகுந்த சந்தோசம்....தொடர்வோம்.
ReplyDeleteவலைப்பூவில் சிறகடித்து பறக்கும் வண்ணத்து பூச்சியாரே[ சூர்யா] நலமா? வருகைக்கு நன்றி. சென்னை நண்பர்களை கேட்டதாக சொல்லவும்.
ReplyDeleteவாங்க மீன் துள்ளியான்..."சும்மா பெயர கேட்டாலே ...நாக்குல...எச்சி ஊருதுல"...அடிக்கடி வாங்கப்பு
ReplyDeleteஅன்பின் சீதா பாரதி,உங்களை அறிமுகப்படுத்தியது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.உங்கள் மறு மொழிகளில் பெயர் குட்டி பையா,என்று ஆங்கிலத்தில் வருகிறது, தயவு செய்து சீதா பாரதி என்று தமிழில் திருத்தினால் எல்லோருக்கும் குழப்பம் வராது,[உங்களுக்கு விருப்பம் இருந்தால் ...]
ReplyDeleteஇந்த வாழ்த்துகள் கிடைத்த உற்சாகத்தில் நீங்கள் நிறைய எழுதினால் அதுவே இந்த பதிவின் வெற்றி. நாளும்...அன்பில்..தொடர்வோம்.
நன்றி ஸ்டார் ஜன்.
ReplyDeleteஹாய் ஹேமா,நலமா?உங்களுக்கு போட்டியா இப்ப எங்க ஊர்ல ஒரு ஆள களத்தில இறக்கியிருக்கோம்..
ReplyDeleteஅல்லாஹ் அக்பர், வருகைக்கு நன்றி.
ReplyDeleteஹாய் ஜமால்,சௌக்கியமா?திரும்பவும் நாம் தொடர்வது மகிழ்ச்சி....வருகைக்கு நன்றி..
ReplyDeleteடிஎஸ்பி..மாமூல் வாழ்க்கை எப்படியிருக்கு?
ReplyDeleteவாங்க தண்டோரா,வணக்கம்,இப்படி ..டி.எஸ்.பி.....டி .எஸ்.பின்னு சொல்லி ...ஆள..உசுப்பேத்தி,இப்ப இந்த ஒரு வாரமா "சிரிப்பு போலீஸ் "நிலைமைக்கு வந்தாச்சு.
ReplyDeleteஜெரி புதுப்பதிவு எப்போ?
ReplyDeleteசுட சுட வந்துட்டே இருக்கு தேவா
ReplyDeleteஅன்பின் ஜெரி
ReplyDeleteஅருமையான அறிமுகம்
மறைந்த புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா ஜோ என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய வரிகள் நினைவிற்கு வருகின்றன.
நல்வாழ்த்துகள் ஜெரி
அறிமுகத்திற்கு நன்றி!
ReplyDeleteவேறு சில காரணங்களுக்காக இந்த புகைப்படத்தை இந்த பதிவில் இருந்து நீக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். நன்றி.
ReplyDelete