அனைத்து பதிவர்களுக்கு, பதிவுலகின் கடைசி வாசகருக்கும் எனது அன்பு நிறைந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள். என் பெயர் முரளிகுமார். அன்பேசிவம் என்கிற தலைப்பில் பதிவெழுதி வருகிறேன். புதிதாக படிப்பவர்களுக்கான அறிமுகம் இது. ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு கொஞ்சம் போரடிக்கலாம் (ஓடிடுங்க). அன்பின் சீனா ஐயாவின் அனுமதியுடன், இந்த வாரம் வலைச்சரத்தில் எழுத இருக்கிறேன்.
பொதுவாகவே எங்கு என்ன பேசினாலும் காதுகொடுத்து கேட்பது என் வழக்கம், நமக்கு தேவையான விஷயம் எதுவும் கிடைத்துவிடாதா என்று காதை கூர்மையாக்கி காத்துக்கொண்டிருப்பவன். அதுபோன்ற ஒரு நாளில்தான் வலைப்பதிவு பற்றிய ஒரு சிறு அறிமுகம் கிடைத்தது. கிட்டதட்ட எட்டு மாதங்கள் நானே எழுதி நானே படித்தும் இருந்திருக்கிறேன். பிறகு மெல்ல ஓட்டு, தமிழிஷ், தமிழ்மணம் பற்றிய அறிமுகங்களின் பிறகு இன்று நானும் சிலரால் படிக்கப்படுகிறேன். மேலும் நான் எழுத வந்த கதையை நண்பர் பரிசல்காரன் கிருஷ்ணகுமார் அவர்கள் அழைத்த தொடர் பதிவில் எழுதியிருக்கிறேன்.
எனக்கு புத்தகம், எழுத்து இவற்றிற்கு இணையாக பிடித்தமான விஷயங்கள் இசையும், திரைப்படங்களும், புகைப்படமும் மற்றும் ஓவியம் வரையவும் பிடிக்கும். பிடித்தமான துறையிலேயே பணிபுரியும் வாய்ப்புபெற்றவர்கள் கொடுத்துவைத்தவர்கள். எனக்கு அப்படி கொடுத்துவைக்கவில்லை என்றாலும் கணிணி சார்ந்த துறையிலே வேலைசெய்வது (கணிணி விற்பனை) என் விருப்பங்கள் அனைத்திற்குமே பின்புலமாக இருபதாலும், என் நண்பனுடன் இணைந்து இந்த தொழில் செய்துவருவதாலும், நான் இன்னமும் ஆசிவதிக்கபட்டவனாகவே இருக்கிறேன். என்னுடைய இன்னொரு வலைப்பூ, புகைப்படங்கள் . இந்த வலைப்பதிவை, நான் பிடித்த புகைப்படங்களின் மற்றும் எனக்கு பிடித்த புகைப்படங்களின் தொகுப்பாக செய்துவருகிறேன்.
இன்று நிறைய நண்பர்கள் கேட்கிறார்கள், எப்படி உன்னால இவ்ளோவும் முடியுது, எப்ப பாரு படம் பார்க்கிற! எதையாவது எழுதிட்டே இருக்க? எப்டிடா உனக்கு நேரம் கிடைக்குது என்று. உண்மையை சொன்னால் சத்தியமாக எனக்கு தெரியவில்லை. நானும் எந்த ஒரு விஷயத்திற்க்கும் நேரத்தை குறைசொல்லும் சாதாரணமானவந்தான். இருந்தும் இதையெல்லாம் செய்ய எனக்கு நேரம், யோசித்தலில் எனக்கு இது பிடித்திருக்கிறது. சில புத்தகங்களை படிக்க, சில பதிவுகளை எழுத, சில திரைப்படங்களை பார்க்க நிறைய இரவுகளை விட்டுகொடுத்திருக்கிறேன். விரும்பி செய்யும் எதுவும் எனக்கு (நமக்கு) சுமையாக இருப்பதில்லை. ஆக எதையும் விரும்பி செய்யுங்கள். எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. நூறு பதிவுகளுக்குமேல் எழுதியதில். ஒருவழியாக நூறு பதிவுகளை எழுதிமுடித்ததை பெருமையோடு சொல்லிக்கொண்ட பதிவு இது.
என் பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவுகள் என்றால் இந்த இரண்டு சிறுகதைகளையும் சொல்வேன். பட்டாம்பூச்சி பார்த்தல், தோழர் மாதவராஜ் அவர்களின் உதவியோடு பூக்களிலிருந்து புத்தகங்கள் என்கிற தொகுப்பில் சிறுகதைகளின் புத்தகத்திற்கு தேர்வு செய்யப்பட்டது, இந்த கதை. இன்னொன்று இறக்காத இரவுகள், பட்டாம்பூச்சி பார்த்தல் கதையைவிட அதிக வலியோடு எழுதியது எனக்கு மிகவும் பிடித்த என் எழுத்துக்களில் ஒன்று இந்த கதை.
இதுதான் நான், இவ்வளவுதான் நான். இனி என்னால் முடிந்தவரை நல்ல பதிவுகளை, பதிவர்களை அறிமுகம் செய்கிறேன், புதியவர்களை அறிமுகம் செய்கிறேனா, தெரியாது. பெரும்பாலும் என் நண்பர்களை முன் வைப்பதையே செய்ய இருக்கிறேன். ஆக நண்பர்களே, தொடர்ந்து படிங்க. உங்கள் வாழ்த்துக்களையும் வரவேற்பிற்புகளையும் எதிர் நோக்கி, நான்
நான் எப்போதும் சொல்வதுபோல, மனிதன், தானாய் வளரும் சாதாரண் காட்டுச்செடி அல்ல, கை தட்டதட்ட வளரும் ஒரு அதிசயச்செடி. ஆக, கை தட்டுங்கள் சேர்ந்தே வளருவோம்.
ஹலோ, ஹலோ மக்கள்ஸ்,
ReplyDeleteஇந்த நேரம் வசதியா இருக்கு, ஆக டெய்லி இந்த டைம் பதிவு போடறேன், எல்லாரும் மன்னிச்சுக்கோங்க, அப்படியே காலையில வந்து படிச்சிட்டு கமெண்டுங்க, ஒக்கே?
வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteஓடிட்டேன் :)
விரும்பி செய்யும் எதுவும் எனக்கு (நமக்கு) சுமையாக இருப்பதில்லை.
ReplyDelete......... true. Best Wishes!
வாழ்த்துக்கள் !
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteமனிதன், தானாய் வளரும் சாதாரண் காட்டுச்செடி அல்ல, கை தட்டதட்ட வளரும் ஒரு அதிசயச்செடி. ஆக, கை தட்டுங்கள் சேர்ந்தே வளருவோம்.
ReplyDeleteஅழகு...
சக மனிதனை ஊக்குவிக்க இதை விட அழகான வார்த்தைகள் கிடையாது. வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் முரளி குமார்
ReplyDeleteஅன்பின் முரளி
ReplyDeleteகை தட்டத் தட்ட வளரும் அதிசயச் செடி - தட்டுவோம் - வளரட்டும் நன்கு
நல்வாழ்த்துகள் முரளி
அன்பின் முரளி
ReplyDeleteகை தட்டத் தட்ட வளரும் அதிசயச் செடி - தட்டுவோம் - வளரட்டும் நன்கு
நல்வாழ்த்துகள் முரளி
வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteவாழ்த்துக்கள்..........
ReplyDelete:-)
நானும் ஓடிட்டேன்...
நல்வரவு.
ReplyDeleteஜோரா கைதட்டியாச்சுப்பா!
ReplyDeleteஅட்டகாசமான அறிமுகம் .வாழ்த்துக்கள் முரளி தூள் கிளப்புங்க
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவிஜய்
வாழ்த்துகள் தல.. அடிச்சு ஆடுங்க..:-)))
ReplyDeleteகிளைமாக்ஸ் தத்துவம் நல்லாருந்தது.. ஹிஹி.! வாழ்த்துகள்.
ReplyDelete//(ஓடிடுங்க)//
ReplyDeletedone...
best wishes... fine writin as usual... (inime intha pakkam vara eppo time kidaikkumo... =))
வாழ்த்துக்கள்.. ஜோரா கைதட்டியாச்சு..
ReplyDelete{{{{{{{ ஹலோ, ஹலோ மக்கள்ஸ்,
ReplyDeleteஇந்த நேரம் வசதியா இருக்கு, ஆக டெய்லி இந்த டைம் பதிவு போடறேன், எல்லாரும் மன்னிச்சுக்கோங்க, அப்படியே காலையில வந்து படிச்சிட்டு கமெண்டுங்க, ஒக்கே? }}}}}}}}}}}
ம்ம் கலக்குங்க .
மீண்டும் வருவான் பனித்துளி !
//எப்படி உன்னால இவ்ளோவும் முடியுது, எப்ப பாரு படம் பார்க்கிற! எதையாவது எழுதிட்டே இருக்க?//
ReplyDeleteநானும் நினைத்ததுண்டு....
உங்கள் பணி சிறப்படைய வாழ்த்துகிறேன். அறிமுகம் அழகு...
நீங்கள் இந்த வார ஆசிரியர் ஆனதில் மிக்க மகிழ்ச்சி. நல்லா எழுதிருக்கீங்க. தொடருங்கள்
ReplyDeleteநன்றி வெயிலான்
ReplyDeleteநன்றி சித்ரா
நன்றி நேசமித்ரன்
நன்றி அப்பாதுரை
நன்றி ராமசாமி கண்ணன்
நன்றி தமிழ் உதயம்
நன்றி லக்ஷ்மணன்
நன்றி சீனா ஐயா
நன்றி சே.குமார்
நன்றி கனிமொழி
நன்றி துளசிகோபால்
நன்றி அன்புடன் அருணா
நன்றி பத்மா
நன்றி விஜய்
நன்றி கார்த்திகைபாண்டியன்
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி கலகல்ப்ரியா
நன்றி ராஜலக்ஷ்மி பக்கிரிசாமி
நன்றி பனித்துளி சங்கர்
நன்றி அமைதி சாரல்
நன்றி பாலாசி
உங்களுடைய இதே ஆதரவும் கைதட்டலும் தொடர்ந்து கிடைத்தால் எட்டும் உயரம் கண்ணில் தெரிகிறது. மிக்க நன்றி நண்பர்களே!
/-- இன்னமும் ஆசிவதிக்கபட்டவனாகவே இருக்கிறேன். --/
ReplyDeleteஆசிர்வதிக்கப் பட்டவனாகவே இருக்கிறேன்....
கண்டு புடிச்சிட்டோமுல்ல...
வாழ்த்துக்கள் முரளி... நல்லா செய்யுங்க...
கலக்குங்க முரளி..:))
ReplyDeleteநானும் கொஞ்சம் கை தட்டிக்கிறன்...
ReplyDeleteகை தட்டதட்ட வளரும் ஒரு அதிசயச்செடி. ஆக, கை தட்டுங்கள் சேர்ந்தே வளருவோம்.
ReplyDeleteகலக்குறீங்க ... வாழ்த்துக்கள் .. வணங்குகிறேன் ...
விரும்பி செய்யும் எதுவும் எனக்கு (நமக்கு) சுமையாக இருப்பதில்லை. ஆக எதையும் விரும்பி செய்யுங்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் முரளி.
நமக்கு கொடுக்கல் வாங்கல சிக்கல் செஞ்சா பிடிக்காது?
ReplyDeleteஅய்யா கைதட்டலானந்தா அவர்களே எனக்கு எங்கே கைதட்டல்?
நன்றி சொன்ன பெயர் லிஸ்டின் எனது பெயரைக் காணொமே?
வாழ்த்துக்கள் முரளி குமார்
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!!
ReplyDelete