Tuesday, March 16, 2010

இங்க வந்து சம்பாதிச்சவங்க

     வேற என்னங்க சொல்றது,  சம்பாதிச்சேங்கிறதவிட எளிதான வார்த்தைகள் இல்லை.  கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்பது மாதிரியாய், நான் எழுதுவதை நானே படித்துவிட்டு உட்கார்ந்திருப்பேன். இவங்கல்லாம்தான் கொஞ்சம் கொஞ்சமா என்னை படிக்க ஆரம்பிச்சு, சின்ன சின்னதாய் தவறுகளை புரியச்செய்து தட்டிக்கொடுத்து, கைதட்டி வளர்த்துவிட்டவர்கள். வந்த வழியை சரியா திரும்பிப்பார்ப்பதுதானே முறை. இதோ என் குளத்தில் கல்லெறிந்தவர்கள். வெறும் பதிவர்களாக அறிமுகமாகிய இவர்கள் அனைவருமே இன்று என் நண்பர்கள்.


http://balasee.blogspot.com/ நண்பர், இவரும் பக்கத்து ஊரு பங்காளிதான், இவர் அறையிலிருந்து எட்டிபார்த்தால் டாஸ்மாக், இருந்து இவர் தண்ணியடிப்பதில்லை. இதை இங்கே சொல்லியே ஆகனுமான்னா இல்லை, ஆனா அந்தமாதிரி ஒரு கண்ணியம்  இவர் எழுத்துக்களில் இருக்கும். வரம்புமீறாத எழுத்துக்கள், பாலாசியுனுடைய எழுத்துக்கள்.  தீபாவளி குறித்த இவரது ஒரு கவிதை தவிர தன் முதல் காதலையும் கவிதையாய் பவானீ என்று கொசுவத்தி சுத்தியிருக்கிறார்.


நெய்தல் தற்போது ஷீலா தமிழ்செல்வி .  சந்திரசேகர், நண்பன். சில நிமிடங்களில் நடந்தேறிவிட்டது எங்களின் சந்திப்பு. சென்னையில் நடந்த சிறுகதை பட்டறையில் சந்தித்தோம், இவரது  இன்னமும் அழுத்தமான உள்ளங்கை ரேகை போல பதிந்திருக்கிறது, இவருடனான உறவு. தமிழக அரசுத்துறையில் பணிபுரிகிறார். தொல்பொருள்துறை. இவரும் அதிகம் எழுதுவதில்லை. வெகு அரிதாக எழுதினாலும் அதிக கவனத்திற்குரியது இவரது எழுத்துக்கள். சிறிய உதாரணம் இந்த இரு கவிதைகள் சிதைவுகளின் நிழல் , கவிதை செய்தல்


அகல்விளக்கு – ராஜா, கிட்டதட்ட நாங்க ரெண்டு பேரும் ஒரே தொழில், எங்கள் எழுத்துக்களும் நிறைய ஒத்துபோயிருக்கும். ஈரோட்டுக்காரர்.   இவருடைய இந்த ஒரு சோறுபோதும் இவரது எழுத்துக்கு. எனக்கு மிகவும் பிடித்த இவரது ஒரு கவிதை  மழையாய் நீ மெளனமாய் நான்.


சிந்தன், என் தம்பி. முற்போக்கு சிந்தனைவாதி. துணைக்குவர வேண்டாம், என்னை தடுக்காமல் இருங்கள், என்னால் சமுதாயத்திற்கு செய்யப்படவேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்று சொல்லும் பக்குவபட்ட மனசுக்காரன். காதல்கவிதைகள் வெகு அழகாக இவருக்கு எழுதவரும். இப்பொழுது கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட்டு அதை எளிதாக விவாதங்களுக்கு உடபடுத்தி எழுதிவருகிறார். ஒத்தசிந்தனையுடைவர்கள் அவசியம் பகிர்ந்துகொள்ளுங்கள், உங்கள் கருத்துக்களை அவருடன்.

தமிழ் பிரியன் –  இவரையும் முதலில் சென்னை சிறுகதை பட்டறையில்தான் சந்தித்தேன். தொடர்ந்து வாசித்து வருகிறேன். மன்னிக்கவும் நண்பரே! அதன்பின் உங்களுடன் தொடர்பிலிருக்க முடியவில்லை. ஒரு தொடர்பதிவில் இவரது எழுத்தை வெகுவாக ரசிக்க முடிந்தது.



திருச்சொல், திருநாவுக்கரசு, நண்பர். ஒரே ஊராய் இருந்தாலும் வெகு சமீபத்திலேயே எங்கள் அறிமுகம் நடந்தது. இவரது கவிதைகள் வெகு இயல்பாக இருக்கும். என்னைப்போலவே சினிமா பைத்தியம். இவரோடு சேர்ந்து இன்னும் நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருக்கும்.  நிறைய கவிதைகள எழுதுகிறார், எனக்கு பிடித்த இவரது இரு கவிதைகள், பறவையின் கதறல்,  இன்னொன்று முடிவில்லா ப்ரியங்கள்.
இவர்கள் போக வெயிலான், பரிசல்காரன், செந்தில் பேரரசன், சாமிநாதன்,  செல்வம்,  லோகு  இப்படி இன்னும் நிறைய பேர் இருக்காங்க, அறிமுகம் தேவைபடாதவர்கள், இவர்கள். இன்னும் பெயர் மறந்த, முகமறியாத என் அனைத்து பதிவுலக நணபர்களுக்கு என் நன்றிகளை இந்த பதிவின் மூலமாக  சொல்லிக்கொள்கிறேன்.

ஆக இன்னைக்கு இவ்ளோதான், மீதி நாளைக்கு. பொண்ணுகிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க, ஆனா நாளைக்கு பொண்ணோட புதனும் சேர்ந்தே கிடைக்கும். ஆம், நாளை பெண் பதிவர்கள், என் தோழிகள்.

20 comments:

  1. அனைவருக்கும் என் இரவு வணக்கம், காலை சந்திப்போம்.

    ReplyDelete
  2. சுவாரிஸ்யம் மிக்க புதிய நண்பர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  3. ஒரு சில நண்பர்கள் எனக்கு புதியவர்கள்.. அறிமுகத்துக்கு நன்றி முரளி..:-))

    ReplyDelete
  4. அறிமுகங்கள் அருமை..:) நாளை காலை மீண்டும் வருகிறேன்..:)

    ReplyDelete
  5. vaazhthukkal Murli. kalakkunga.

    ReplyDelete
  6. உங்களுக்கும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அன்பின் முரளி

    அருமை அருமை - நட்பின் இலக்கணமாக நட்புகளை அறிமுகப் படுத்தியது நன்று - அனைஅவரது வீட்டிற்கும் சென்று வருகிறேன் - முரளி அனுப்பிச்சார்னு சொல்லிட்டு வரேன் -

    நல்வாழ்த்துகள் முரளி

    ReplyDelete
  8. அன்பின் முரளி

    பாலாசியின் தீபாவளிக்கும் பவானிக்கும் ஒரே சுட்டி கொடுக்கப்பட்டிருக்கிறதா - கவனியுங்க்ளேன்

    ReplyDelete
  9. வணக்கம் நண்பா... எதிர்பாரா மற்றொரு மகுடம் உங்களிடமிருந்து....

    அடடா.... டாஸ்மாக்க கரைட்டா ஞாபகம் வச்சிருக்கீங்களே....

    நான்கு புதிய நண்பர்களை அறிந்துகொண்டேன்... நன்றி....

    ReplyDelete
  10. இந்த தலைப்பு எனக்கு மிகப்பொருத்தம்....

    ReplyDelete
  11. /ஆனா நாளைக்கு பொண்ணோட புதனும் சேர்ந்தே கிடைக்கும்./
    பொன்னா??பொண்ணா???சரி! சரி!

    ReplyDelete
  12. தலைப்பு மிக பொருத்தம் முரளி... :-)

    ReplyDelete
  13. நல்ல அறிமுகம் .அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. நல்ல பகிர்வு முரளி நன்றி

    ReplyDelete
  15. நன்றி வால்பையன்
    நன்றி சங்கவி
    நன்றி கார்த்திகைபாண்டியன்
    நன்றி ஷங்கர்
    நன்றி அக்பர்
    நன்றி அனு
    நன்றி நேசமித்ரன்
    நன்றி சித்ரா
    நன்றி கோபி
    நன்றி சீனாசார்
    நன்றி பாலாசி
    நன்றி அருணாமேடம்
    நன்றி கனிமொழி
    நன்றி பத்மா
    நன்றி லக்‌ஷ்மனன்


    எல்லோருக்கும் என் நன்றிகள், தொடர்ந்து படிங்க. உங்க கருத்துக்கள், என்னை இன்னும் உயரம் போய் சேர்க்கட்டும். :-)

    ReplyDelete
  16. நல்ல பகிர்வு நன்றி முரளி

    ReplyDelete