சேட்டைக்காரன்: சொக்கா! ஆசிரியர் பொறுப்பை அசடுவழியாம அழகாச் செய்துமுடிக்க அருள்புரிய மாட்டியா? ஒரு நாளா, ரெண்டு நாளா?ஆறு நாளாச்சே! ஆறு நாளாச்சே!! இன்னிக்குன்னு பார்த்து எனக்கு பதிவு எழுத வரலே! பதிவு எழுத வரலே! அது சரி, என்னைப்பத்தியே ஒழுங்கா அறிமுகம் பண்ணிக்கத் தெரியலே, நான் எங்கே மத்த பதிவாளருங்களை அறிமுகப்படுத்தறது! மொக்கை தான்; மொக்கையே தான்!
சொக்கர்: பதிவரே!
சேட்டைக்காரன்: யாருய்யா அது?
சொக்கர்: அழைத்தது நான் தான்
சேட்டைக்காரன்: ஏன் அழைச்சீங்க? யாருங்க நீங்க?
சொக்கர்: கேட்ஜெட்டும் டெம்ப்ளேட்டும் அனைத்தும் கூட்டி, ஒருங்குறித்தமிழிலே தட்டச்சிட்டு வலையினிலே இடுகையிடும் பதிவர் நான்!
சேட்டைக்காரன்: நம்ம ஜாதியா? வலைச்சரம் பற்றி நீங்களும் கேள்விப்பட்டாச்சா? என் வயித்துலே அடிக்கிறதுக்குன்னே வந்திருக்கீங்க...!
சொக்கர்: பதிவரே! வலைப்பதிவர்களின் பட்டியல் மட்டும் கிடைத்து விட்டால், வாரம் பூராவும் பதிவு போட முடியுமல்லவா?
சேட்டைக்காரன்: ஆஹா! அந்தப் பட்டியல் மட்டும் கிடைச்சா ஒரு நாளைக்கு பத்து பேர் வீதம் எழுபது பேரைப் பத்தி எழுதிருவேனே!
சொக்கர்: கவலைப்படாதே! அந்தத் தகவல்களை நான் உனக்குத் தருகிறேன்.
சேட்டைக்காரன்: தகவலை நீங்க சொல்லறீங்களா? உங்க கிட்டேயிருந்து சுட்டதைப் போயி நான் அறிமுகம்னு பதிவு போடுறதா? இத பாருங்க, நான் சொந்தமா பதிவு போட்டாலே சுட்டுப் போடறேன்னு பேசிக்கிட்டிருக்காங்க! கொஞ்சம் மொக்கை போடறேன்; இருந்தாலும் பரவாயில்லை, பதிவருன்னு ஒத்துக்கிட்டிருக்காங்க! அதையும் கெடுக்கலாமுன்னு பார்க்கறீங்களா?
சொக்கர்: பரவாயில்லை!
சேட்டைக்காரன்: காப்பி, பேஸ்ட் பண்ணலாங்கறீங்களா?
சொக்கர்: என் அனுபவத்தின் மீது உனக்கு சந்தேகமிருந்தால், என்னைப் பரீட்சித்துப்பாரேன் உனக்குத் திறமையிருந்தால்....
சேட்டைக்காரன்: என்னது, என் கிட்டேயே மோதிப்பார்க்கறீங்களா? இத பாருங்க, நான் பார்க்கிறதுக்குத் தான் ஒல்லி; பதிவு போடறதுலே கில்லி! தயராயிருங்க!
சொக்கர்: உம்! கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?
சேட்டைக்காரன்: ஊஹூம்! நீ கேட்காதே! எனக்குக் கேட்க மட்டும் தான் தெரியும்; அதான் வலைப்பதிவு வைச்சிருக்கேன்.
சொக்கர்: கேளும்!
சேட்டைக்காரன்: பிரிக்க முடியாதது எது?
சொக்கர்: சபரி அர்தநாரியும் தமிழ் அறிவியலும்
சேட்டைக்காரன்: பின்னிப் பெடலெடுப்பது?
சொக்கர்: பிரசன்னாவின் தமிழ்க்கொத்து
சேட்டைக்காரன்: சேர்ந்தே இருப்பது?
சொக்கர்: வின்சென்ட்டும் சுற்றுச்சூழல் அக்கறையும்
சேட்டைக்காரன்: செமத்தியாய் இருப்பது?
சொக்கர்: சே.குமாரின் கிறுக்கல்கள்
சேட்டைக்காரன்: ஜேஜே என்றிருப்பது?
சொக்கர்: ஜெய்லானியின் இடுகைகள்
சேட்டைக்காரன்: மருத்துவத் தகவல்களுக்கு?
சொக்கர்: Dr.எம்.கே.முருகானந்தன்
சேட்டைக்காரன்: மனதில் நிற்பது?
சொக்கர்: மாதவனின் வலைப்பதிவு
சேட்டைக்காரன்: தளராத எழுத்துக்கு?
சொக்கர்: தாராபுரத்தான்
சேட்டைக்காரன்: தொய்வில்லா சிந்தனைக்கு?
சொக்கர்: தொடரும் சம்பவம்
சேட்டைக்காரன்: ஏராளமாய்ச் சிரிக்க?
சொக்கர்: A.சிவசங்கரின் ஆயிரத்தில் ஒருவன்
சேட்டைக்காரன்: இலக்கியம் படிக்க?
சொக்கர்: பகலவன் பதிவுகள்
சேட்டைக்காரன்: கருத்துள்ள கவிதைக்கு?
சொக்கர்: காதல் கவி
சேட்டைக்காரன்: காதல் கவிதைக்கு?
சொக்கர்: கவிதை காதலன்
சேட்டைக்காரன்: சுலபக்கணிதத்துக்கு?
சொக்கர்: செல்வகுமாரின் மின்னல் கணிதம்
சேட்டைக்காரன்: நம்பிக்கைக்கு?
சொக்கர்: அந்தோணி முத்து
சேட்டைக்காரன்: பீறிடும் சிந்தனைக்கு?
சொக்கர்: பிரபாகரனின் தத்துப்பித்துவங்கள்
சேட்டைக்காரன்: ஆன்மீகத்துக்கு?
சொக்கர்: செங்குட்டுவன்
சேட்டைக்காரன்: பாய்ந்தோடும் பதிவுகளுக்கு?
சொக்கர்: பனித்துளி சங்கர்
சேட்டைக்காரன்: எண்ணங்களுக்கு?
சொக்கர்: ஏகாந்தபூமி
சேட்டைக்காரன்: கணினிக்கு?
சொக்கர்: சுப.தமிழினியன்
சேட்டைக்காரன்: ஹைக்கூவுக்கு?
சொக்கர்: அஹமது இர்ஷாத்
சேட்டைக்காரன்: ஐயா, ஆளை விடுங்க! எனக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான்!
சொக்கர்: ஹா..ஹா..ஹா!
சேட்டைக்காரன்: ஐயா! நீர் பதிவர்
சொக்கர்: நீர்?
சேட்டைக்காரன்: இல்லை, நான் பதிவர் இல்லை! இப்போது நீங்கள் சொன்ன பெயரையும் அவர்களின் வலைப்பதிவு சுட்டியையும் ஒரு நோட்-பேடில் குறித்துக்கொடுங்கள்! வலைச்சரத்தில் எவ்வளவு பின்னூட்டம் போட்டாலும் அதை அப்படியே உங்களுக்கு ஃபார்வார்டு செய்து விடுகிறேன்.
சொக்கர்: எனக்கு அனுப்ப வேண்டாம்! எல்லாவற்றையும் நீயே வைத்துக்கொள்!
சேட்டைக்காரன்: அது சரி, பின்னூட்டம் போட்டால் நான் வாசித்துக்கொள்ளுகிறேன். வேறு ஏதாவது போட்டால்....
சொக்கர்: அதெல்லாம் போட மாட்டார்கள்! அது வலைச்சரம்; சேட்டைக்காரன் இல்லை. வெற்றியுடன் திரும்பி வா!
அன்புடையீர்,
இரண்டாவது நாள் இடுகை எப்படி இருக்கிறது? :-)
வலையுலகம் என்னும் பெருங்கடலில், நான் இங்கு குறிப்பிட்டிருக்கிற வலைப்பூக்களின் எண்ணிக்கை சிறுதுளியளவே என்றாலும், மேலும் பல பூக்களைப் பற்றி இனிவரும் நாட்களில் எழுதுவேன். உங்களது கருத்துக்களைத் தயங்காமல் எழுதவும்.
ஒரு மகிழ்ச்சியான செய்தி! வலைச்சரத்தில் எனது மூன்றாவது தினமாகிய நாளை, வரலாற்றில் "ஹவுஸ் ஃபுல்" போர்டு போட்டதன் காரணமாக இடம்பெறாமல் போன "சோற்றுப்புதூர் சொறிகால் வளவன்" தனது பரிவாரங்களோடு உங்களைச் சந்திக்க வரவிருக்கிறார்.
நாளை சந்திப்போமா?
சேட்டைக்காரன்

(காட்சி முடிந்தது)

நல்லாருக்கு சேட்டை :-)))
ReplyDeleteதமிழ்மணத்துல சேர்த்து ஓட்டு போட்டுட்டேன்! படிச்சிட்டு கருத்து போடறேன்!
ReplyDeleteபிரபாகர்...
திருவிளையாடல் தருமி பகுதியினை எள்ளளவும் பிசகாமல் அழகாய் உபயோகப்படுத்தி அசத்தலான பல புதியவர்களின் அறிமுகங்கள்! ரொம்ப நல்லாருக்கு!
ReplyDeleteசொறிகால் வளவன் பராக்!!! காத்திருக்கிறோம் உங்களின் சேட்டையினைக்கான!
பிரபாகர்...
Nice Post
ReplyDeleteஅடடடா அட்டகாசம் போங்க .நல்ல விதத்தில் அறிமுகங்கள் .
ReplyDeleteவாழ்த்துக்கள்
சொக்கனே சொல்லிவிட்டார்
ReplyDeleteஅருமையான அறிமுகப் படலம்
மீண்டும் ஒரு அசத்தல் சேட்டை....
ReplyDeleteசேட்டைக்கார தருமியே, ஆயிரம் பொற்காசுகளும் உமக்குத்தான். பாராட்டுக்கள்!
ReplyDeleteசேட்ட, பொளந்து கட்டிட்ட , நடத்து நடத்து ............
ReplyDeleteசூப்பரா இருக்கு.
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
”உன் திறமையை மெச்சினோம் தருமியாகிய சேட்டையே, உமக்கு என்ன பரிசு கொடுத்தாலும் தகும்” - பாண்டிய நாடைத் தவிர!!!
ReplyDeleteநல்ல பல வலைப்பூக்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி.
வெங்கட் நாகராஜ்
திருவிளையாடல் முறை புதுமை. அதில் என்னையும் குறிப்பிட்டது குறித்து சந்தோஷம். கலங்குங்க சேட்டை
ReplyDeleteசபாஷ்.
ReplyDeleteவித்தியாசமான முயற்சி!
ReplyDeleteகலக்கலா வந்திருக்கு!
திருவிளையாடல் வசனங்களை மிக நேர்த்தியாக உபயோகித்த உங்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அதில் அடியேனும் இருப்பது கண்டு வாழ்த்துக்களுடன் நன்றியும் கூறிக்கொள்ளுகிறேன்.
ReplyDeleteகேள்வி பதில் முறையிலேயே அறிமுகங்கள். வித்தியாசமான பகிர்வு... அதில் என்னையும் ஹைக்கூவாக்கி அழகுபடுத்திட்டீரே அருமை.. நன்றி.. வாழ்த்துக்கள்....
ReplyDelete:))))) அருமை
ReplyDeleteஹைய்யோ!!!!!!!!!!!!!
ReplyDeleteபின்னிப்பெடலெடுத்துட்டீர்! நல்லா இரும்.
ஆஹா அருமை அருமை., தருமியே வெற்றி வெற்றி உனக்குதான். வென்றுவா நண்பா வென்றுவா..
ReplyDeleteஆரம்பமே அசத்தல்.., இனி வாரமும் சரவெடிதான். நல்லாருக்கு தருமி..சே சே சேட்டை.
ReplyDeleteவித்தியாசமான முறையில் அறிமுகங்கள். நல்லது. இதில் பல சீனியர்களின் பதிவுகள் இல்லை. கவனிக்கவும்.
ReplyDeleteஅறிமுக படுத்தும் பாணி நன்றாக
ReplyDeleteஇருக்கு நண்பா!!
கலக்கல் சேட்டை... அறிமுகங்கள் சிறப்பு....
ReplyDeleteபுதிய அறிமுகங்களுக்கு நன்றி..
ReplyDeleteஅட்டகாசம் சேட்டை.
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் அசத்துங்கள்.
சொக்கர் கிட்ட இப்பவே பொலம்ப ஆரம்பிச்சாச்சா?
ReplyDeleteஅறிமுகமும் அசத்தல்
அறிமுகப்படுத்தும் விதமும் அசத்தல்.
ம்ம்ம் கலக்குங்க அண்ணாத்தை ..
நிறைய பதிவார்கள எனக்கு அறிமுகம் பண்ணிருக்கீங்க...
ReplyDeleteஇரண்டாம் பதிவு இரட்டைக்குதிரை சவாரி மாதிரி இருக்கு...
மூணாவதுக்கு waiting...
ALL THE BEST
இதுதான் சேட்டைக்காரனின் தனித்துவம். வெரி குட்.
ReplyDeleteசாதாரணமாக வலைப்பூக்களை அறிமுகப்படுத்தும் படலம். அதை எழுதியுள்ள விதம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்!
ReplyDeleteவலைச்சரத்தின் வெற்றி இதுதான்.
அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteசூப்பரா இருக்கு.
ReplyDeleteகலக்கல் போங்க!
ReplyDeleteசேட்டை கலக்கல்ஸ் ஆரம்பம். சூப்பர். உங்க பதிவில் இடம் பெற்றிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் :)
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !
ReplyDeleteஇன்றைய உங்களின் திருவிளையாடல் பதிவின் வாயிலாக என்னை மீண்டும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல . தொடரட்டும் உங்களின் ஆசிரியர் பணி மிகவும் சிறப்பாக வாழ்த்துக்கள்
சேட்டையின் திருவிளையாடலில் , அருமயான அறிமுகங்கள்
ReplyDeleteஆரம்பமே அசத்தலா இருக்கு சேட்டை,வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅசத்தல். ம்..ம் அசத்துங்க.
ReplyDeleteஇன்றைய பொழுது இனிதே கழிந்தது. நாளைக்கு எந்த நக்கீரன் கிட்ட மாட்டப்போறீங்களோ...
ReplyDeleteசேட்டைக்காரன் திருவிளையாடல் நல்ல இருக்கு.
ReplyDeleteஉங்களை பத்தியும் ஒரு intro கொடுங்க அண்ணாச்சி.
மிக அழகிய முறையில் பதிவுகளை தொடர்பு படுத்தி இருக்கிறீர்கள். என்னுடைய ஆச்சரியம் மாபெரும் கலைஞர்களான சிவாஜியையும் நாகேஷையும் வைத்து ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய அந்த எழுத்து வடிவம் இத்தனை ஆண்டுகளாக எத்தனைவிதமான கற்பனைகளுக்கு இடமளிக்கிறது என்பதுதான். எவ்வளவு அற்புதமான எழுத்துக்கலைஞன் அந்த ஏ.பி.நாகராஜன்....தங்களின் சரளமான தமிழ்நடைக்கு வாழ்த்துக்கள்.என்னுடைய வலைப்பூவுக்கு;http://amudhavan.blogspot.com
ReplyDeleteஅப்படிப்போடு... சேட்டையா! கொக்கா!!! கலக்கலா இருக்குதுங்க... தொடரட்டும் உங்கள் சேட்டை...
ReplyDeleteஐயா, நக்கீரன் வரமாட்டாரு;
ReplyDeleteஅதான் நாங்க வந்திட்டமில்ல!
இடுகை நல்லாயிருக்கில்ல!!
கலக்கிட்டீங்க சேட்டை...
ReplyDeleteவித்தியாசமா சிந்திக்கிறீங்க... செம மண்டைக்காரப் பயபுள்ளையா இருப்பீக போல... பட்டைய கிளப்புங்க - சேட்டை.
ReplyDeleteகலக்கியிருக்கீங்க சேட்டை!!
ReplyDeleteஉங்கள் பாணி தனி தான்.
அருமை கண்முன்னே வந்துடுச்சு காட்சி வித் இந்த வசனம்..
ReplyDeleteஇவர்களுக்கெல்லாம் என்னால் செய்ய முடிந்தது என்ன?
ReplyDelete@அமைதிச்சாரல்
@பிரபாகர்
@T.V.ராதாகிருஷ்ணன்
@padma
@goma
@Sangkavi
@Chitra
@மங்குனி அமைச்சர்
@புதுகைத் தென்றல்
@வெங்கட் நாகராஜ்
@ஜெய்லானி
@வானம்பாடிகள்
@வால்பையன்
@வின்சென்ட்
@அஹமது இர்ஷாத்
@☀நான் ஆதவன்☀
@துளசி கோபால்
@Starjan ( ஸ்டார்ஜன் )
@மின்மினி
@மஞ்சூர் ராசா
@சைவகொத்துப்பரோட்டா
@க.பாலாசி
@கண்ணகி
@அக்பர்
@எனது கிறுக்கல்கள்
@பருப்பு The Great
@kggouthaman
@r.selvakumar
@இராமசாமி கண்ணன்
@Priya
@Dr.P.Kandaswamy
@அஷீதா
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
@Jaleela
@Mrs.Menagasathia
@மாதேவி
@ksurendran
@முகுந்த் அம்மா
@Amudhavan
@ராசுக்குட்டி
@NIZAMUDEEN
@ஸ்ரீராம்
@Thekkikattan|தெ.கா
@ச.செந்தில்வேலன்
@முத்துலெட்சுமி/muthuletchumi
பொறுமையாக இடுகையைப் படித்து, பின்னூட்டமிட்டு வாழ்த்தியமைக்காக எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். உங்கள் ஆதரவை நாடும்....
சேட்டைக்காரன்
கலக்கிட்டீங்க சேட்டை..
ReplyDeleteஇப்பதான் நீங்க அறிமுகப்படுத்திய சில பதிவர்களின் தளத்தில், மேய்ந்துகொண்டு இருக்கிறேன்..
தகவலுக்கு நன்றி..
முற்றிலும் புதிய பாணியில்..
ReplyDeleteரொம்ப அருமைங்க:))!
கலக்கிட்டீங்க சேட்டைசார்..
ReplyDeleteவெற்றியுடன் திரும்பி வாருங்கள்!
ReplyDeleteவெற்றி உனதே!
kalakkal arimugam....nanri
ReplyDeleteபோட்டு தாக்கிடிங்க தலை!
ReplyDeleteஇவ்வளவு அழகா திருவிளையாடல் உரையாடலை பயன்படுத்தி இருக்கிறது
ரொம்ப சிறப்பா இருக்கு!
முயற்சி செய்கிறேன் எனது சிந்தனைகளை சிறப்புடன் வெளிக்கொணர!
அறிமுகத்திற்கு நன்றி!
கலக்கிட்டீங்க சேட்டை.. மிக்க நன்றி..! அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)
ReplyDelete