Wednesday, May 12, 2010

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்

பெயர்: சோற்றுப்புதூர் சொறிகால் வளவன்
முகவரி: c/o. விசித்திரகுப்தன், கிங்கரன் அபார்ட்மெண்ட்ஸ்,
ஐயோ காலனி, எமலோகம்-000000
தொலைபேசி: அவுட் ஆஃப் ஆர்டர்

(சொறிகால் வளவன் துணைவியார் உலக்கைநாயகியுடன், அரியணையில் வீற்றிருக்க, காவலாளி வருகிறான்.)

காவலாளி: வேந்தே! அண்மையில் பூலோகத்தில் ஜலதோஷம் காரணமாக அகாலமரணமடைந்த சப்பைமூக்கன் என்ற வலைப்பதிவர் தங்களிடம் ஆஸ்தான விதூஷகனாகச் சேர்வதற்காக ஊத்தப்பத்தோடு, மன்னிக்கவும், விண்ணப்பத்தோடு வந்திருக்கிறார்!

சோ.சொ.வளவன்: வரச்சொல்!

சப்பைமூக்கன்: மன்னர் வாழ்க! மகாராணி வாழ்க!

சோ.சொ.வளவன்: சப்பைமூக்கனே! எம்மைக் காண வந்த காரணம் யாதோ? பொற்கிழி கிடைக்கும் என்றெண்ணி வந்திருந்தால், வந்தவழியே போய்விடு! நானே மகாராணியின் பழைய காஞ்சீவரம் புடவையைக் கிழித்துத் தான் பொன்னாடையாகப் போர்த்திக் கொண்டிருக்கிறேன்.

சப்பைமூக்கன்: அதெல்லாம் ஒன்றுமில்லை மன்னா! பூலோகத்தில் வெங்கட் நாகராஜ் எழுதிய "அண்டங்காக்கையை வென்ற பல்லவன்" என்ற இடுகையைப் படித்தது முதல் அவரை நேரில் சென்று சந்திக்க விரும்பினேன். அதற்குள்ளாகவே இங்கு வர நேர்ந்ததால், யாராவது ஒரு "காமெடி மன்னனை" நேரில் பார்க்கலாமே என்று உங்களைப் பார்க்க வந்துவிட்டேன்.

சோ.சொ.வளவன்: அது போகட்டும்! பூலோகத்தில் எனது வீரவரலாற்றை சேட்டைக்காரன் எழுதி முடித்து விட்டானா?

சப்பைமூக்கன்: இல்லை மன்னா! உங்கள் வரலாறு உங்களைப் போலவே அரைகுறையாகவே இருக்கிறது. மீதமிருப்பதை பேசாமல் மங்குனி அமைச்சர் போன்றவர்கள் பொறுப்பில் விட்டு விடலாம் என்று தோன்றுகிறது.

(அமைச்சர் திருவாழத்தான் அதிர்ச்சியில் எழும்பி நிற்கிறார்!)

சோ.சொ.வளவன்: அமைச்சர் திருவாழத்தாரே! சப்பைமூக்கன் குறிப்பிடுவது உம்மையல்ல. உம்மை விட்டால் வேறு மங்குனி அமைச்சரே இல்லை என்ற மமதையா உமக்கு? இந்த மங்குனி அமைச்சர் "நோகியா கேமரா மொபைல் பரிசு" என்று ஒரு அறிவுப்போட்டி வைத்திருந்தார் தெரியுமா? உமக்கும் அறிவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

தளபதி அடங்காவாயர்: மன்னா! சமீபத்தில் "கட்டபொம்மன்" என்ற பெயரில் கூட ஒருவர் வலைப்பதிவு தொடங்கியிருப்பதாக நமது ஒற்றன் மெய்யாமொழி தகவல் அனுப்பியிருக்கிறான்.

சோ.சொ.வளவன்: அப்படியா? சப்பைமூக்கனே! எங்கள் தளபதியின் வீராவேசமான பேச்சைப் போல குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கிற நகைச்சுவைப் பதிவர்கள் எவரேனும் உள்ளனரா?

சப்பைமூக்கன்: ஒன்றா இரண்டா? அதிலும் பதிவர் வெங்கட் "நானும் என் விசிறிகளும்" என்று தமிழும் ஆங்கிலமும் கலந்து ஒரு ’கலக்கல்’ கவிதை போட்டிருந்தாரே! செம நக்கல்!

அடங்காவாயர்: ஹிஹிஹி! அதைப் படித்துச் சிரித்ததில் நமது ஆஸ்தான புலவர் அவியலூர் அடுப்பங்கவிஞரின் கடவாய்ப்பற்கள் கூடக் கழன்று விழுந்துவிட்டன. ஏன் சப்பைமூக்கனே, புலவன் புலிகேசி எப்படியிருக்கிறார்?

சப்பைமூக்கன்: புலவன் புலிகேசிக்கென்ன, அருமையாக எழுதிக்கொண்டிருக்கிறாரே? அண்மையில் கூட ஒரு அற்புதமான புனைவை அளித்திருந்தார்.

அவியலூர் அடுப்பங்கவிஞர்: வலைப்பதிவுகளில் நல்ல கவிதைகளை யார் எழுதுகிறார்கள்?

சப்பைமூக்கன்: கவிஞர்களுக்கா பஞ்சம்? உதாரணத்துக்கு மே தினத்தை முன்னிட்டு கக்கு.மாணிக்கம் எழுதிய உழைப்பவர் வளம் பெறட்டும் கவிதை ஒன்று போதாதா?

சோ.சொ.வளவன்: சி.கருணாகரசு அன்னையர் தினம் குறித்து எழுதிய குறுங்கவிதையும் அருமையாக இருந்ததே!

அரசி உலக்கைநாயகி: சமையல் குறித்து யாரெல்லாம் எழுதுகிறார்கள்?

சப்பைமூக்கன்: மகாராணி! மாதேவி எழுதிய "தேங்காய்த் துருவல் ரவா கிச்சடி" இடுகையைப் படிக்கவில்லையா?

அடங்காவாயர்: ராணியார் படிக்காவிட்டால் என்ன? என் மனைவி குக்கரசி படித்து, கானமயிலாட கண்டிருந்த வான்கோழி போல அவளும் அன்றே கிச்சடி செய்து விட்டாள்! தேங்காய் துருவித் துருவி என் கைகள் கடுத்து விட்டன.

சோ.சொ.வளவன்: இதையெல்லாம் ராணியாரின் முன்னிலையிலேயே சொல்ல வேண்டுமா? நீர் தளபதி, தேங்காய் துருவலாம்! நான் மன்னன் அல்லவா? சப்பைமூக்கனே! தயவு செய்து மகாராணியார் முன்னிலையில் பெண் பதிவாளர்களைப் பற்றிப் பேசாதே! என் மீது இரக்கம் காட்டு!

சப்பைமூக்கன்: மன்னா, இன்று நான் நிறுத்தலாம்! ஆனால், சேட்டை ஒரு பெரிய பட்டியலே தயார் செய்து கொண்டிருக்கிறானே?

அமைச்சர் திருவாழத்தான்: ஏன் சப்பைமூக்கனே! எமது ஆஸ்தான நர்த்தகி வரலட்சுமி போன்ற அழகான பெண்களைக் குறித்து எவரேனும் எழுதுகிறார்களா?

சப்பைமூக்கன்: அமைச்சரே, சிங்கக்குட்டி தெற்காசியப் பெண்கள் குறித்து எழுதிய பிகரு பிகருதான், அது சூப்பர் பிகரு தான் பதிவைப் படியும்!

சோ.சொ.வளவன்: யோவ் அமைச்சரே! உம்மால் சோற்றுப்புதூர் சாம்ராஜ்யமே சுக்குநூறானது போதாதா? இங்கு வந்துமா?

அடங்காவாயர்: அது போகட்டும்! இப்போதெல்லாம் பலர் வேடிக்கையாகக் காணொலிகள் சேர்த்துக் கலக்குகிறார்கள் என்று கேள்விப்பட்டேனே?

சப்பைமூக்கன்: சந்தேகமில்லாமல்! சமீபத்தில் கூட சதீஷ் "அழகிய பெண்ணுக்கு யானை மசாஜ் செய்யும் வீடியோ 18+," என்று ஒரு அசத்தலான இடுகையைப் போட்டிருந்தாரே?

சோ.சொ.வளவன்: ஹிஹி! அதை நான் கூட பார்த்தேன்! வர வர பதிவர்களெல்லாம் பெரிய குறும்புக்காரர்களாகி விட்டார்கள்.

அடங்காவாயர்: ஆம் அரசே! அண்மையில் ஸ்ரீராம் "கொலைகாரப் பாவிகள்" என்று ஒரு இடுகை போட்டிருந்தாரே? நமது ஆஸ்தான புலவரின் நெடிலடி கழலடி நேரிசை வெண்பாவைப் படித்துக் கூட நான் இவ்வளவு சிரித்ததில்லை.

அரசி உலக்கைநாயகி: பதிவர்கள் சிரிக்கவும் வைக்கிறார்கள்; கண்ணீரும் சிந்த வைக்கிறார்கள். அதிலும் காரணமின்றி பிரிந்து சென்ற தோழியைப் பற்றி எல்.கே(LK)எழுதிய "பிரிந்தது ஏனோ ?" கவிதை மிகவும் உருக்கமாக இருந்தது.

சப்பைமூக்கன்: அடுப்பங்கவிஞரே! ’மனவிழி’ சத்ரியன் எழுதிய "விழிப்பயன்" கவிதையை வாசித்தீர்களோ?

சோ.சொ.வளவன்: உக்கும்! எங்கள் ஆஸ்தான புலவர் வாசிக்கவும் மாட்டார்; யோசிக்கவும் மாட்டார்! உணர்ச்சிமயமாக எதையாவது எழுதியிருக்கிறாரா இதுவரை?

சப்பைமூக்கன்: மன்னா! நாடோடி சென்னையில் பெட்டியைப் பறிகொடுத்த அனுபவத்தை எவ்வளவு உணர்ச்சிமயமாக எழுதியிருந்தார்?

சோ.சொ.வளவன்: ஹும்! இப்போதெல்லாம் திருட்டு பயம் மிகவும் அதிகரித்து விட்டது போலும். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு என்று புரிவதே இல்லை!

சப்பைமூக்கன்: மன்னா! அதை விடவும் எந்தத் தளத்தில் எந்த வைரஸோ என்று தான் பதிவர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். கிருஷ்ணா எழுதிய "வலையில் நுழைந்த வைரஸ் " இடுகையைப் படித்தபோது, எனது அடிவயிற்றில் உங்கள் ஆஸ்தான நர்த்தகி வரலட்சுமி அடவு பிடித்து ஆட்டம் போடுவது போல இருந்தது.

அமைச்சர் திருவாழத்தான்: இப்போது தமன்னா தான் உச்ச நடிகையாமே? அவர் படங்களைப் பற்றி எழுதுகிறார்களா?

சப்பைமூக்கன்: எழுதாமல் இருக்க முடியுமா? தமன்னா நடித்த ’சுறா’ வெளியாகியிருக்கிறது. இதைப் பற்றி படுசுட்டித்தனமாக பவன் எழுதிய இடுகையை ஒரு தடவை படித்து விடுங்கள் அமைச்சரே!

அரசி உலக்கைநாயகி: ஐயோ, சிரிப்புப்போலீஸ் "சுறா சில சுரீர் கேள்விகள் "னு ஒரு இடுகை போட்டிருந்தாரே, எங்கள் மன்னரைப் போர்க்கோலத்தில் பார்ப்பது போல அவ்வளவு வேடிக்கையாக இருந்தது.

அடங்காவாயர்: இத்தோடு நான் நீச்சல்காரன் எழுதிய 'சூறா'வளி பஞ்ச் இடுகையையும் படித்தேனே? ஹா..ஹா..ஹா!

சோ.சொ.வளவன்: உம்! பதிவர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்று சொல்லும்!

சப்பைமூக்கன்: அதெல்லென்ன சந்தேகம்? நம் சிகாகோ பதிவர் ரேகா ராகவன் கூட தனது ஐம்பதாவது பதிவில் நான்கு அருமையான குட்டிக்கவிதைகளை எழுதி அசத்தியிருக்கிறாரே?

சோ.சொ.வளவன்: கேட்கவே மறந்து விட்டேனே? எப்படி இருக்கிறார் இம்சை இளவரசர்?

சப்பைமூக்கன்: ஹாஹா! 'அய்யாவாவது ஆட்டுக்குட்டியாவது, ’ என்று ஒரு பதிவு போட்டு விட்டு சமீபத்தில் தான் தாயகம் திரும்பியிருக்கிறார்.

சோ.சொ.வளவன்: ஆஹா! நான் மட்டும் பூலோகத்தில் இருந்திருந்தால் அவரை வரவேற்க எனது ரதகஜதுரகபதாதிகளுடன் சென்றிருப்பேனே! பித்தனின் வாக்கை மீண்டும் கேட்க என் மனம் துடுப்பாட்ட ரசிகனைப் போலத் துள்ளிக் கொண்டிருக்கிறதே!

சப்பைமூக்கன்: ஹாஹா! நல்ல வேளை, நினைவூட்டினீர்கள்! ரிஷபன் அண்மையில் எழுதிய "ஆட்டக்காரன்," கவிதையைப் படித்தீர்களா இல்லையா?

சோ.சொ.வளவன்: அனைத்தையும் படித்து வருகிறேன். வேறு என்ன செய்வது சப்பைமூக்கனே? எனது வரலாற்றைத் தொகுப்பதாக நூறு வராகன் முன்பணம் வாங்கிக்கொண்டு சேட்டையும் தலைமறைவாகி விட்டான். அவனைச் சுட்டுத்தள்ள ஒரு ZK-447 துப்பாக்கி வாங்க முன்பணம் கொடுத்தேன். வராகனும் போய் விட்டது; வர வேண்டிய gun-ம் வரா’gun’ ஆனது தான் மிச்சம்!

சப்பைமூக்கன்: மன்னா, உங்களுக்கு இருக்கிற செல்வாக்கைப் பயன்படுத்தி, எமதர்மராஜனிடம் சொல்லி, சேட்டையை இங்கேயே வரவழைத்து விடுங்களேன்! அப்புறம் எப்படி அவன் தட்டிக்கழிக்க முடியும்?

சோ.சொ.வளவன்: ஆஹா! சப்பை மூக்கா! அமைச்சர் திருவாழத்தானை விடவும் அதிபுத்திசாலித்தனமான யோசனையைத் தெரிவிக்கிறாயே? இப்போதே சேட்டைக்காரனை உடனடியாக இங்கு கொண்டு வர ஏற்பாடு செய்கிறேன்.

சப்பைமூக்கன்: நீங்கள் சொன்னால் எமதர்மராஜன் கேட்பாரா மன்னா?

சோ.சொ.வளவன்: என்ன அப்படிக் கேட்டு விட்டாய்? நான் சொல்வதைக் கேட்காவிட்டால் எமது ராஜநர்த்தகியை அங்கு அனுப்பி ஒரு நடனம் ஆடச்சொன்னால் போதும். இங்கிருப்பவர்கள் அனைவருமே பாஸ்போர்ட் இன்றியே பாதாள லோகம் போய் விடுவார்கள்.

சப்பைமூக்கன்: அப்படியே செய்யுங்கள் மன்னா! ஆனால் ஒன்று, வருகிற பதினாறாம் தேதி வரை சேட்டையை தொந்தரவு செய்யாதீர்கள்! அவன் ஒரு முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கிறான்.

சோ.சொ.வளவன்: சேட்டை வேலையே செய்ய மாட்டான்; இதில் முக்கியமான வேலை வேறா? அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறான் அவன்?

சப்பைமூக்கன்: வலைச்சரத்தில் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறான்

சோ.சொ.வளவன்: இதற்கெல்லாம் நேரமிருக்கிறது! எனது வீரவரலாற்றை முடிக்க மட்டும் நேரமில்லையா? வரட்டும், அடுப்பங்கவிஞரை வைத்து அவன் மீது ஒரு பொருத்தமாக ஒரு விருத்தம் எழுதி அவனை வருத்தத்தில் ஆழ்த்துகிறேன்.

சப்பைமூக்கன்: திருத்தமில்லாமல் எழுதச் சொல்லுங்கள் மன்னா!

(காட்சி நிறைவு)

அன்புடையீர்,

வலைச்சரத்தில் எனது மூன்றாவது நாளுக்கான இடுகை இத்துடன் (ஒருவழியாக) முடிந்தது. இது குறித்த உங்களது கருத்துக்களை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். ரொம்ப ஓங்கிக் குட்டிராதீங்க...ப்ளீஸ்!

நாளைக்கு உங்கள் அனைவரையும் சந்திக்க 'ஆந்தைக்குளம்’ ஐயாக்கண்ணு வரவிருக்கிறார். அவருடன் அவரது பிரதான சீடர்களான களக்காடு கருமுத்துவும், சிவந்திப்பட்டி சுடலையாண்டியும் வருகிறார்கள். எச்சரிக்கை!

நன்றி! வணக்கம்!!

சேட்டைக்காரன்

55 comments:

  1. முதல் வாழ்த்து:). எவ்வளவு அறிமுகம். என்ன உழைப்பு. ஹேட்ஸ் ஆஃப் சேட்டை:)

    ReplyDelete
  2. அப்பாடி எவ்வளவு அறிமுகங்கள்!. அசத்துங்கள்.

    ReplyDelete
  3. அசத்தல் சேட்டை. கலக்கறீங்க.

    ReplyDelete
  4. சுறுசுறுப்பா அதுக்குள்ள அடுத்ததா...சேட்டை..தூள் பண்றீங்களே...அது சரி..ஒரே நாள்ள இவ்வளவு பேரை அறிமுகம் செவது ஒரு ரெகார்டோ..? எவ்வளவு லிஸ்ட்டுல வச்சிருக்கீங்க...? "எங்கள்" அறிமுகத்துக்கு நன்றி..!

    ReplyDelete
  5. அன்பின் சேட்டை

    வலைச்சரத்தில் கலக்க முடியுமா என அழைத்திருந்தேன் - கலக்குறீங்க சும்மா - தூள் போங்க - கடும் பணிச்சுமை - ரசிச்சுப் படிக்கணும் - ஒவ்வொரு இடமாப் போகணும் - படிக்கனூம் - மறு மொழி இடனூம் - 10 நாள் ஆபீஸ் லீவு போட்டு இந்த வேலையச் செய்யுறேன்.

    வாழ்க வளமுடன்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  6. சேட்டை நண்பா!

    என்ன சொல்ல! எல்லாம் என் ஆசான் முதல் பின்னூட்டத்திலேயே முத்தாய்ப்பாய் சொல்லிவிட்டாரே!

    உங்களுக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் உங்களின் ஆஸ்தான கதாபாத்திரங்களை வைத்து கலக்குகிறீர்கள்.

    வாழ்த்துக்கள் என் நண்பா!

    பிரபாகர்...

    ReplyDelete
  7. சேட்டை எப்படி உங்களால் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது? அருமையா இருக்கு நீங்கள் தொகுத்தளிப்பவை எல்லாமே. உங்களை பாராட்டாதோரும் உண்டோ இவ்வுலகில் என்றாகும் அளவுக்கு நகைச்சுவையின் உச்சிக்கு போய்க்கொண்டிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    //நம் சிகாகோ பதிவர் ரேகா ராகவன் // என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இங்கு எனது மகள் வீட்டுக்கு ஒரு மூன்று மாத வாசத்திற்காக வந்திருக்கிறேன். ஜூலை பதினேழு முதல் மீண்டும் சென்னை பதிவர்தான்.

    ரேகா ராகவன்
    (சிகாகோவிலிருந்து)

    ReplyDelete
  8. பட்டைய கெளப்புங்க.. அறிமுகங்கள் அருமை..

    ReplyDelete
  9. நன்றி சேட்டைக்காரன்..

    அருமையான அறிமுகம்..,
    கலக்கலா எழுதியிருக்கீங்க..
    என் சக பதிவர்கள் அனைவருக்கும்
    வாழ்த்துக்கள்...!!

    ReplyDelete
  10. உழைப்புக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  11. ஏகப்பட்ட அறிமுகங்கள்!!

    ReplyDelete
  12. சேட்டை அசத்துங்கள்

    ReplyDelete
  13. உங்கள் நடைதான் அருமை
    பக்கா பக்கா அறிமுகங்கள்
    நன்றி

    ReplyDelete
  14. பதிவர்கள் அத்தனை போரையும் இப்போவே அறிமுகப் படுத்துட்டீங்களே ...... இன்னும் அடுத்து வர நாட்களுக்கு என்ன செய்ய போறீங்க? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... just kidding!
    Good one! Best wishes!

    ReplyDelete
  15. பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை ...மற்ற பதிவர்களின் அறிமுகம் சூப்பர். வாழ்த்துக்கள்!!!!!!!!!!

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் அறிமுக பதிவர்களுக்கு

    சபாஷ் சேட்டைக்காரனுக்கு

    விஜய்

    ReplyDelete
  17. //முதல் வாழ்த்து:). எவ்வளவு அறிமுகம். என்ன உழைப்பு. ஹேட்ஸ் ஆஃப் சேட்டை:)
    //

    ரிப்பீட்ட்ட்ட்

    ReplyDelete
  18. //தொலைபேசி: அவுட் ஆஃப் ஆர்டர்//

    யெப்ப்ப்ப்ப்பா

    ReplyDelete
  19. மிக்க நன்றி சேட்ட,

    அருமையா எழுதிருக்க , வாழ்த்துக்கள்
    மீண்டும் நன்றி

    ReplyDelete
  20. கலக்கல் அறிமுகங்கள் சேட்டை. என்னுடைய வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. உங்கள் கடுமையான உழைப்பு தெரிகிறது.

    நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  21. அடேங்கப்பா!!! எத்தனை அறிமுகங்கள்!!
    தொடருங்கள் சேட்டை, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. நிறைய பதிவுகள் படிச்சு எவ்வளவு அறிமுகங்கள். அசத்தறீங்க சேட்டைக்காரன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. கலக்கிடீங்க போங்க.. இதற்குப்பின்னால் உங்க கடுமையான உழைப்புத்தான் தெரியுது. நகைச்சுவையில் பின்னி எடுக்கிறீங்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. நகைச்சுவையான எழுத்து நடை கொடுத்த சுவாரஸ்யத்தில் கொடுத்த லிங்க்குக்குள் செல்ல மறந்து விடுகிறேன்!

    ReplyDelete
  25. கலக்கலுங்க...சேட்டை....

    ReplyDelete
  26. அனைவரையும் கௌரவப் படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது...உங்கள ஆசிரியரப் போட்டாலும் மத்தவங்களப் பத்தி எழுதி அவங்களையும் இன்னும் நெறைய பேருக்கு அறிமுகப்படுத்தம் உங்கள் மெனக்கெடலுக்கு ஒரு சல்யுட்

    ReplyDelete
  27. உண்மையிலேயே ரெம்ப‌ உழைச்சிருக்கீங்க‌.... எவ்வ‌ள‌வு இடுகைக‌ளை அறிமுக‌ ப‌டுத்தியுள்ளீர்க‌ள்.. வாழ்த்துக்க‌ள்.. தொட‌ர‌ட்டும் சேட்டை.

    ReplyDelete
  28. வித்தியாசமாத் தொகுத்திருக்கீங்க. ரொம்ப மெனக்கெட்டு இருக்கீங்கன்னு தெரியுது. மகிழ்ச்சி.

    ReplyDelete
  29. அன்பு சேட்டை

    வலைச்சரத்தில் நாங்கள் எத்தனையோ பேர் எழுதியிருந்தாலும் உங்களது அசத்தலான வித்தியாசமான அணுகுமுறையை யாராலும் யோசிக்கக்கூட முடியவில்லை என்பதே உங்களின் வெற்றி.

    தொடரட்டும் உங்களது சாதனைகள்

    ReplyDelete
  30. வால்பையன் said...

    நகைச்சுவையான எழுத்து நடை கொடுத்த சுவாரஸ்யத்தில் கொடுத்த லிங்க்குக்குள் செல்ல மறந்து விடுகிறேன்!//

    repeatey..

    ReplyDelete
  31. சேட்டை சேட்டைதான்...சும்மா பூந்து விளையாடுறிங்க...கலகல்ப்பான வலைச்சரம்...

    ReplyDelete
  32. அறிமுகங்களுக்கு நன்றி.

    அறிமுகப் படுத்தியிருக்கும் விதம் அத்தனை கலகலப்பு:)!

    ReplyDelete
  33. //பருப்பு The Great said...

    அனைவரையும் கௌரவப் படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது...உங்கள ஆசிரியரப் போட்டாலும் மத்தவங்களப் பத்தி எழுதி அவங்களையும் இன்னும் நெறைய பேருக்கு அறிமுகப்படுத்தம் உங்கள் மெனக்கெடலுக்கு ஒரு சல்யுட் //

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  34. கலக்கறீங்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  35. ஏராளமான பதிவுகளை புதுமையாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள். அவற்றை அறிமுகப்படுத்திய கதாபாத்திரங்கள் மூலம் உங்கள் கற்பனை வளம் கண்ணில் தெரிகிறது. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  36. முதலில் வாழ்த்துகள்.
    சேட்டையானாலும் தெரிவுகள் திறமையானவர்கள்.பலரது பக்கங்கள் அறிந்திருந்தாலும் சிலரது பக்கங்கள் எனக்குப் புதிது.நன்றி அறிமுகங்களுக்கு.

    ReplyDelete
  37. //பெயர்: சோற்றுப்புதூர் சொறிகால் வளவன்
    முகவரி: c/o. விசித்திரகுப்தன், கிங்கரன் அபார்ட்மெண்ட்ஸ்,
    ஐயோ காலனி, எமலோகம்-000000
    தொலைபேசி: அவுட் ஆஃப் ஆர்டர்
    // ஐயோ முகவரியே டெரரா இருக்கு...

    நகைச்சுவையுடன் அசத்தல் அறிமுகங்கள்....நகைச்சுவை பதிவர் சேட்டை வாழ்க!!

    என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்துவதற்க்கு மிக்க நன்றி சேட்டை,நாளைய பதிவுக்கு வெயிட்டிங்...

    ReplyDelete
  38. //ஐயோ, சிரிப்புப்போலீஸ் "சுறா சில சுரீர் கேள்விகள் "னு ஒரு இடுகை போட்டிருந்தாரே, எங்கள் மன்னரைப் போர்க்கோலத்தில் பார்ப்பது போல அவ்வளவு வேடிக்கையாக இருந்தது.//

    சூப்பர். நன்றி நண்பா.

    ReplyDelete
  39. வலை கட்டி வெள்ளாடறீங்க சேட்டை! பிரமாதம்! - கே.பி.ஜனா

    ReplyDelete
  40. பலர் தலைகீழாக நின்று யோசித்தாலும் எழுத்தில் கொண்டுவர முடியாத நகைச்சுவையை, உட்கார்ந்து யோசித்தே கொண்டு வருகிறீர்கள் சேட்டை! அருமையான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  41. அறிமுக படலம் அருமை.

    ReplyDelete
  42. கலக்கு கலக்குன்னு கலக்கியிருக்கீங்க...

    ReplyDelete
  43. nandri settai. chennai vandapuram detailed comments podaren intha vara valaisarathuku

    ReplyDelete
  44. முடியல.....யப்பா...முடியல.. :)))))))

    எப்படிப்பா இப்புடி!

    ReplyDelete
  45. சேட்டைக்காரன் ஸார்..

    முதலில் வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள்..!

    அதென்ன இத்தனை பதிவர்களின் அறிமுகம்..? இதில் சிலரை மட்டுமே நான் படித்திருக்கிறேன்.. இப்போதுதான் சிலரை பார்க்கிறேன்..!

    நல்லதொரு அறிமுகத்திற்கு மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  46. தங்களின் படிப்பு,
    தொகுப்பு, சிரிப்பு
    அனைத்தையும் வெளிக்காட்டும்
    இடுகை - மிக சுவாரஸ்யம்.

    ReplyDelete
  47. அதெப்படி சேட்டை... உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது... கலக்கறீங்க போங்க... உங்களோட கதாபாத்திரங்களை வைச்சுட்டே சும்மா ஜமாய்க்கறீங்க... பாராட்டுகள்..

    ReplyDelete
  48. அப்பாடி எவ்வளவு அறிமுகங்கள்!. அசத்துங்கள்.

    ReplyDelete
  49. அன்புடையீர், எனது ஒவ்வொரு இடுகைக்கும் பெருமளவில் பின்னூட்டமிட்டு, எனது முயற்சிகளை அன்போடு அங்கீகரிக்கிற உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்! சரியான இலக்கில் சென்று கொண்டிருப்பதை உங்களின் கருத்துக்களின் வாயிலாக அறிந்து, மீதமுள்ள பணியையும் அவ்வண்ணமே செய்ய விழைகிறேன்! ’நன்றி’ தெரிவிப்பதற்காக தமிழில் சற்றே நீளமான வார்த்தை இருந்திருக்கக் கூடாதா? :-)

    மீண்டும் மீண்டும் அதே மூன்றெழுத்துச் சொல்: "நன்றி!"

    சேட்டைக்காரன்

    ReplyDelete
  50. நகைச்சுவையுடன் சிறிதும் வேற்றுமை எதுவும் காண இயலாத அளவில் உங்களின் அறிமுகங்கள் அனைத்தும் அழகாக அமைத்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது . சற்று அதிக வேலைப்பளு அதுதான் அதிக தாமதமாகிவிட்டது மன்னிக்கவும் .

    ReplyDelete
  51. அடேங்கப்பா! எத்தனை பதிவர்கள்.

    உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிரது சேட்டை.

    (சாரி ஃபர் த லேட் :))

    ReplyDelete
  52. சேட்டை கலக்கறீங்க அருமை

    ReplyDelete
  53. The Best One =))

    ReplyDelete
  54. உங்கள் அன்புக்கும் அறிமுகத்துக்கும் மிக்க நன்றி.

    முன்பு இந்த இடுகை வந்த போதே படித்து பின்னூட்டம் கொடுத்த நினைவு இருக்கிறது.

    ReplyDelete