ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணுவின் பிரதான சீடர்களான களக்காடு கருமுத்துவும், சிவந்திப்பட்டி சுடலையாண்டியும் நுழைந்தபோது, ஐயாக்கண்ணு கணினிக்கு முன்னால் கண்கள் சிவந்தபடி அமர்ந்திருந்தார்.
"வாங்கலே!" என்று வரவேற்ற ஐயாக்கண்ணு," என்னலே கம்பூட்டர் இது? காலையிலேருந்து 'டைப்' அடிக்கேன்; ஒரு எழுத்துக் கூட திரையிலே தெரிய மாட்டேக்கு!" என்று சீறினார்.
"எதுக்கும் ஒருவாட்டி கம்ப்யூட்டரை 'ஆன்’ பண்ணிட்டு டைப் பண்ணிப் பாருங்க அண்ணாச்சி!" என்று சுடலையாண்டி தெரிவித்த ஆலோசனையைப் பின்பற்றியதும், கணினி உயிர்பெற்றது.
"என்ன அண்ணாச்சி திடீர்னு கம்பவுண்டரெல்லாம் வாங்கிட்டீய?" என்று வியப்புடன் கேட்டார் கருமுத்து.
"அது கம்பவுண்டரு இல்லே மக்கா! கம்பூட்டரு! அத மட்டுமா வாங்கிருக்கேன், இப்பம் நம்ம வீட்டுலே இன்டெர்வெல்லும் வந்திருச்சில்லா?" என்று பெருமையாகச் சொன்னார் ஐயாக்கண்ணு.
"அண்ணாச்சியோவ், அது இன்டெர்வெல் இல்லை; இன்டெர்நெட்!" என்று திருத்தினான் சுடலையாண்டி.
"ஏதோ ஒண்ணு! எல்லாம் நம்ம சேட்டையாலே வந்த வெனை மக்கா! வலைச்சரத்துலே யார் யாரைப் பத்தியோ எளுதுதான்; என்னப் பத்தி எளுதுலேன்னு சொன்னதுக்கு, வலைப்பூ வச்சிருந்தாத் தான் எளுதுவேமுண்ணு சொல்லுதான்!"
"அதுக்கென்ன அண்ணாச்சி, பாளையங்கோட்டை பஸ் ஸ்டாண்டுக்குப் போனா எல்லாப் பூவும் கிடைக்குமில்லா? நான் போயி ரெண்டு மொளம் வாங்கியாறட்டுமா?" என்று கருமுத்து தனது பொது அறிவை(?!) வெளிப்படுத்தினான்.
"கோட்டிப்பய மக்கா! வலைப்பூவுண்ணா தலையிலே வைக்கிற பூவில்லே! கம்ப்யூட்டரும் இருந்து இன்டெர்நெட்டும் இருந்தாத் தான் அந்தப் பூவை வச்சிக்க முடியும்!" என்று விளக்கினார் ஐயாக்கண்ணு. " நானும் எளுதப்போறேனில்லா? லேய் சொடலை, நீ ஒருத்தன் தாம்லே இதெல்லாம் படிக்கே, ஐயாக்கண்ணு பேருலே ஒரு வலைப்பூவை ஆரம்பிச்சிரு!" என்று கருமுத்துவையும் சுடலையாண்டியையும் வரவழைத்த காரணத்தை விளக்கினார்.
"அண்ணாச்சி! அது எப்பம் வேண்ணாலும் ஆரம்பிக்கலாம்! நான் ஒரு லிஸ்ட் போட்டு வச்சிருக்கேனில்லா? அங்கிட்டுப் போயி யார் யாரு என்னென்ன எழுதுதாகன்னு பாத்திரலாம். ஒரு ஐடியா கிடைக்கணுமில்லா?" என்று சுடலையாண்டி யோசனை கூறவும் ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு அகமகிழ்ந்தார்.
"இதுக்குத் தாம்லே எட்டாம் கிளாஸ் படிச்சவன் கூட இருக்கணுமுங்கிறது," என்று உற்சாகமானார். "வாசிச்சுக் காட்டு மக்கா! அப்படி என்ன தான் எழுதுதாகன்னு பார்த்திருவோம். இது யாரோட வலைப்பதிவுலே மக்கா?"
"பெயர் சொல்ல விருப்பமில்லை!" என்று பதிலளித்தான் சுடலையாண்டி.
"விருப்பமில்லேண்ணா பொறவு எதுக்குலே வந்தே?" என்று இரைந்தார் ஐயாக்கண்ணு.
"அண்ணாச்சி, கோபிக்காதீக, இத நான் சொல்லலே! பெயர் சொல்ல விருப்பமில்லைங்கிறது இந்தப் பதிவரோட பேரு! "அந்த நாளும் வந்ததே," ன்னு அவரு பள்ளித்தோழர்களை சந்திச்சதை ரொம்ப அழகா உயிரோட்டமா எழுதியிருக்காரு!"
"லேய், பள்ளியோடத்துக்கும் எனக்கும் என்னலே சம்பந்தம்? மேலே சொல்லு...!" என்றார் ஐயாக்கண்ணு.
"அரைக்கிறுக்கன்!" என்றான் சுடலையாண்டி.
"எவம்லே அரைக்கிறுக்கன்?" ஐயாக்கண்ணுவுக்குக் கோபம் வந்தது. "அருவாளக் கோரப் போட்டு வச்சிருக்கேன், தெரியுமில்லா?"
"அண்ணாச்சி! இப்பமும் உங்களைச் சொல்லல்லே! இந்தப் பதிவரோட பெயரு அரைக்கிறுக்கன்! "கிரிக்கட்= மதம்= அபின்"னு இந்த விளையாட்டோட இன்னொரு பக்கத்தைப் பத்தி ஒரு பதிவு போட்டிருக்காரு!"
"நான் கிட்டிப்புள்ளு கூட வெளாடினது கிடையாது. அடுத்தது யாரு?" என்று அவசரப்படுத்தினார் ஐயாக்கண்ணு.
"வெட்டிப்பயல்!" என்றான் சுடலைமுத்து.
"லேய் கருமுத்து! உன்னியத்தாம்லே சொல்லுதான்!" என்று சிரித்தார் ஐயாக்கண்ணு.
"அண்ணாச்சி! ஏன் இப்படி? இந்தப் பதிவரோட பேரு "வெட்டிப்பயல்" என்றான் சுடலையாண்டி. "2006-லேருந்து எளுதிட்டிருக்காரு! குறைவா இருந்தாலும் நிறைவா இடுகை போடுதாரு!."
"சரி, மேலே சொல்லு!" என்றார் ஐயாக்கண்ணு.
"ஜில்தண்ணி!"
"பானையிலே வெட்டிவேர் போட்டு வச்சிருக்கேம். போயிக் குடிச்சுப்புட்டு வா!" என்றார் ஐயாக்கண்ணு.
"இல்லே அண்ணாச்சி! இந்தப் பதிவர் பேரே ஜில்தண்ணி!" என்றான் சுடலையாண்டி. 'கழுத கழுத’ ன்னு ஒரு கவிதை எழுதியிருக்காரு!
"மக்கா! எனக்கு கவிதையெல்லாம் என்னத்தலே தெரியும்? கழுத வேண்ணா பார்த்திருக்கேம்! நா உன்னியச் சொல்லல்லே! அடுத்தது யாரு?" ஐயாக்கண்ணு கடுப்பாகிக்கொண்டிருந்தார்.
"டோரிக்கண்ணு!" என்றான் சுடலையாண்டி.
"ஆரு நம்ம பனவொடலிச்சத்திரம் பால்பாண்டியா?" என்று கேட்டார் ஐயாக்கண்ணு.
"இல்லே அண்ணாச்சி! இந்தப் பதிவரோட பேரு "டோரிக்கண்ணு" என்றான் சுடலையாண்டி. "கொஞ்சநாளாத் தான் எழுதுதாரு!"
"லேய்! நீ மனசுலே எதயோ வச்சுக்கிட்டு இந்த மாதிரியே பெயரா சொல்லுதேன்னு படுது எனக்கு!" என்றார் ஐயாக்கண்ணு. "சரிசரி, அப்புறம்?"
"வச்சுட்டான்யா ஆப்பு….!" என்றான் சுடலையாண்டி.
"ஏம்லே? யாரு வச்சாக ஆப்பு?" என்று அதிர்ந்தே போய்விட்டார் ஐயாக்கண்ணு. இன்னும் ஒரு பதிவு கூடப் போடவில்லை; அதற்குள்ளாகவேயா?
"அண்ணாச்சி! இந்த வலைப்பூவோட பேரு "வச்சுட்டான்யா ஆப்பு….!" ," என்று விளக்கினான் சுடலையாண்டி. "நம்ம நாட்டைப் பிடிச்சு உலுக்கிட்டிருக்கிற லஞ்ச லாவண்யத்தைப் புட்டுப் புட்டு வைக்கிற வலைப்பதிவு!"
"ஓஹோ! அடுத்தவரு?"
"தெக்கிகாட்டான்! அண்ணாச்சி, நானே சொல்லுதேன்! இதுவும் பதிவரோட பேரு தான்! இப்பம் "என் வீட்டு சிட்டுக்குருவி" ன்னு அருமையா எழுதியிருக்காருல்லா?"
"பயபுள்ளைக எப்படியெல்லாம் பேரு வச்சிருக்காக?" என்று வியந்தார் ஐயாக்கண்ணு.
"அண்ணாச்சி! இத பாருங்க! பயபுள்ளை -ன்னே ஒருத்தர் பதிவு வச்சிருக்காரு! நல்லாவே எழுதுவாராட்டிருக்கு!" என்றான் சுடலையாண்டி. "அடுத்த பெயரைச் சொல்லட்டுமா?"
"சொல்லு! சொல்லு!!" என்று கேட்டார் ஐயாக்கண்ணு.
"பட்டாபட்டி!" என்றான் சுடலையாண்டி. "உஷ்.. கண்ணக்கட்டுதே.."ன்னு ஒரு இடுகை எழுதியிருக்காரு அண்ணாச்சி! படிச்சீங்கன்னு வையிங்க! சிரிச்சுச் சிரிச்சு வகிறு வலிச்சிருமில்லா?"
"லேய், நம்மளைப் பார்த்தே ஊரு சிரிக்கி! நாம எங்கேலே அடுத்தவுக சிரிக்கிறாப்புலே எளுதுகுது? அடுத்தது யாருன்னு சொல்லு!" என்று தலையைச் சொரிந்தபடியே கேட்டார் ஐயாக்கண்ணு.
"மசக்கவுண்டன்!" என்றான் சுடலையாண்டி. "கொங்குநாட்டுச்சிங்கம் அண்ணாச்சி! "கல்யாணம் பேசி முடித்தல்" னு அவுக அத்தை கல்யாணக்கதையை அளகா எளுதிட்டிருக்காக!"
"நீ சொல்லுகதப் பார்த்தா எல்லாருமே ரொம்ப நல்லாத்தான் எளுதுதாகன்னு நினைக்கேன்! நான் கூட இவுகளும் நம்ம சேட்டை மாதிரி பினாத்துதாகளோன்னு முதல்லே நினச்சிட்டேனில்லா?" என்று ஆதங்கப்பட்டார் ஐயாக்கண்ணு.
"அண்ணாச்சியோவ்! பினாத்தல் சுரேஷ்-ன்னே ஒரு பதிவர் இருக்காரு!" என்று சிரித்தான் சுடலையாண்டி. "இன்னிக்கு நேத்திக்கு இல்லை; 2004-லேருந்தே எழுதிட்டிருக்காக! ரொம்ப அனுபவசாலி!"
"நான் ஒண்ணு சொல்லுதேன், கேட்பீயளா?" என்று அதுவரையிலும் மவுனமாயிருந்த கருமுத்து பேச ஆரம்பித்தார். "அண்ணாச்சி! நீங்களும் இந்த மாதிரி அக்குறும்பா பெயரை வச்சுக்கோங்க!"
"என்ன பெயர் வைக்கலாமுண்ணு நீயே சொல்லு மக்கா!" என்றார் ஐயாக்கண்ணு.
"பனங்காட்டான்!" என்றார் கருமுத்து.
"பனங்காட்டான்-னுற பேருலே ஏற்கனவே ஒரு பதிவர் இருக்காரு," என்றான் சுடலையாண்டி. "இப்போ கூட விஜயும் நித்தி செல்லமும் ன்னு ஒரு இடுகை போட்டிருக்காரு!"
"அப்படீன்னா டக்கால்டி-ன்னு பெயரு வையிங்க!" என்றார் கருமுத்து.
"டக்கால்டீன்னா என்னா மக்கா?" என்று வினவினார் ஐயாக்கண்ணு.
"அது மெட்ராஸ் பாசை அண்ணாச்சி!" என்றார் கருமுத்து.
"அப்பம் மெட்ராஸிலே பாசை தமிளில்லியா?" என்று அப்பாவித்தனமாய்க் கேட்டார் ஐயாக்கண்ணு.
"அண்ணாச்சி! ஒரு நிமிஷம்!!" என்று இடைமறித்தான் சுடலையாண்டி. "டக்கால்டி-ங்கிற பேரிலேயும் ஒருத்தர் எழுதிட்டிருக்காரு தெரியுமா?"
"லேய் கருமுத்து! நீ சொல்லுற பேரெல்லாம் ஏற்கனவே இருக்கு மக்கா! இப்பம் நான் சொல்லுதேன் பாரு," என்று கண்ணை மூடிக்கொண்டு யோசித்த ஐயாக்கண்ணு," இந்தப் பெயரை வைக்கலாமா? வெளியூர்க்காரன்!"
"அண்ணாச்சி!" சுடலையாண்டி அதிர்ந்தே விட்டான். "வெளியூர்க்காரன்-னு சொன்னா சும்மா அதிருமில்லா? அவரோட சைந்தவியோட இரண்டாவது பகுதியைக் கூட சமீபத்துலே போட்டிருக்காரு!"
"என்ன மக்கா? பேசாம பருப்புன்னு பெயரை வையி....!" என்றார் ஐயாக்கண்ணு.
"லேட் பண்ணிட்டீங்களே அண்ணாச்சி! பருப்பு-The Great-ங்கிற பேருலே ஒருத்தர் ஏப்ரல் மாசத்துலேருந்து தான் எழுத ஆரம்பிச்சிருக்காரு! நல்லா வருவாரு!"
"அண்ணாச்சி! நான் இன்னொரு பெயர் சொல்லுதேன்!" என்று மோட்டைப் பார்த்து யோசித்த கருமுத்து பிறகு ஞானோதயம் வந்தவர் போல," கண்டுபிடிச்சிட்டேன். ஜொள்ளுப்பாண்டி! எப்படியிருக்கு?" என்று கூவினார்.
"கருமுத்தண்ணே! ஜொள்ளுப்பாண்டி-ன்னு ஒருத்தர் ஏற்கனவே நாலு வருசத்துக்கும் மேலே பட்டை கிளப்பிட்டிருக்காருல்லா?" என்று வாய்விட்டுச் சிரித்தான் சுடலையாண்டி.
"சரி, பேசாம குப்பைத்தொட்டி-ன்னு பெயரு வை!" என்றார் ஐயாக்கண்ணு.
"அண்ணாச்சி, என்ன வெளையாடுதீகளா? குப்பைத்தொட்டிங்கிறது 'நான் ஆதவன்’ நடத்திட்டிருக்கிற வலைப்பூ அண்ணாச்சி! அவரு கூடவெல்லாம் போட்டி போடுவீகளா? எவ்வளவு அருமையா எளுதுறாக தெரியுமா?" என்று கூறினான் சுடலையாண்டி.
"சொடலை! அண்ணாச்சிக்கு ரொம்பப் பிடிச்ச பேரா நான் சொல்லுதேன்!" என்று பெரிய கொலம்பஸ் போல பெருமிதத்துடன் கூறினார் கருமுத்து. "ஆடுமாடு!"
"ஆடுமாடு-ங்கிற பெயரிலேயும் ஒருத்தர் எழுதிட்டிருக்காக!" என்றான் சுடலையாண்டி. 'பிறந்ததும் மறந்ததும்’ னு ஒரு பதிவு போட்டிருந்தாக!! படிக்க படிக்க மனசு கனத்துப்போச்சு!"
"அப்படீன்னா 'கோழி’ன்னு வையீ!" என்று சலிப்புடன் சொன்னார் ஐயாக்கண்ணு.
"கோழி என்ன, கோழிபையன்-னு பெயர் வச்சுக்கிட்டு ஒரு நாமக்கல்காரரு அட்டகாசமா வலைப்பூ நடத்திட்டிருக்காரு அண்ணாச்சி!" என்று சிரித்தான் சுடலையாண்டி.
"சரி மக்கா, கடைசியா ஒரு பெயரு சொல்லுதேன்!" என்றார் ஐயாக்கண்ணு. "எறும்பு! இந்தப் பெயரிலே யாராவது எழுதுறாகளா?"
"ஆமா அண்ணாச்சி!" என்று புன்னகைத்தான் சுடலையாண்டி. "எறும்பு நம்ம ஊர்க்காரவுக தானாட்டிருக்கு! அம்பாசமுத்திரம், பாபநாசம் பத்தி படத்தோட எளுதியிருந்தாகளே!"
"இன்னொரு பேரு சொல்லு...," என்று எதையோ பேச வந்த கருமுத்தை ஐயாக்கண்ணு கையமர்த்தினார்.
"மக்கா! போதும்லே! ஒரு விசயம் நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன்! பேரு எப்படி வச்சுக்கிட்டாலும் எல்லாரும் நல்லா எளுதுறாக! நம்ம சொடலை மாதிரி பயலுக்கே தெரிஞ்சிருக்குன்னா, நாலெழுத்துப் படிச்சவகளும் இவுக எல்லாரையும் வாசிச்சுக்கிட்டுத் தானே இருப்பாக? இவ்வளவு நல்லா எளுதுற ஆளுகளோட எளுத்தையெல்லாம் நல்லாப் படிச்சிட்டுத் தாம்லே நாம வலைப்பூவெல்லாம் ஆரம்பிக்கணும்! நெருப்புன்னா வாய் வெந்திராதில்லா? என்ன பெயரு வச்சிருக்காகங்கிறது முக்கியமில்லே! என்ன எளுதுறாகங்கிறது தான் முக்கியம்! இவுக எளுதினதெல்லாத்தையும் ஒண்ணு விடாமப் படிச்சிருதேன்! இப்போதைக்கு அது போதும் மக்கா! வலைப்பூவெல்லாம் பொறவு பாத்துக்கிடலாம்!" என்று உறுதியாகக் கூறினார் ஆந்தக்குளம் ஐயாக்கண்ணு.
ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணுவின் வலைப்பூ ஆசை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
அன்புடையீர்!
வலைச்சரத்தில் நான்காம் நாள் காப்பி ஆற்றிய, மன்னிக்கவும், கடமை ஆற்றிய மனநிறைவோடு, இன்றைய இடுகை குறித்த உங்களது மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புள்ள சகோதரிகளே! பியாரி பெஹனோ! டியர் சிஸ்டர்ஸ்!
என்ன இந்த 'சேட்டை’ கண்ணுலே ஒரு பெண் பதிவர் கூட படலியா என்று யோசிக்கறீங்களா? நாளைக்கு வெள்ளிக்கிழமை -'மகளிர் சிறப்பு இடுகை’.
தமிழ் என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருகிற ஒரு முன்னோடி பெண் சிந்தனையாளரை நாளைய தினம் பேட்டி காணப்போகிறேன். அவசியம் என்னோடு நீங்களும் வாருங்கள்!
மீண்டும் நாளை உங்களை "ஞானப்பழத்தோடு" சந்திக்கிறேன்.
நன்றி! வணக்கம்!!
சேட்டைக்காரன்

//வலைப்பூ வச்சிருந்ததான் எழுதவேமுண்ணூ சொல்லுதான்!//
ReplyDeleteசிரிக்க ,சிரிக்க வைத்து,ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு மூலம் பதிவர்கள் அறிமுகம் அருமை.
அடப்பாவிமக்கா.. எப்படிய்யா புதுசு புதுசா யோசிக்கிற :))))))))
ReplyDeleteஆஹா செமய்யா செம
ReplyDelete:)
ஆந்தைக்கண்ணு அய்யாக்குளம்.. இல்லல்ல, ஆந்தைக்குளம் அய்யாக்கண்ணு கலக்கிட்டார். அவருக்கும் ஒரு வலைப்பூவை வெச்சிவிட்ருங்க :-)))))))
ReplyDeleteஅற்புதம் சேட்டை.
ReplyDeleteதொகுத்துத் தந்த விதம்
ReplyDeleteஅழகு அருமை.
என்னாடா பொண்ணுங்க பதிவே காணோமேன்னு இப்போ தான் நினைச்சேன். நாளைக்கா?, சரி சரி.
ReplyDeleteஆந்தைகளும் அய்யாகண்ணு சீயகிரமே வலைப்பூ ஆரம்பிக்க வாழ்த்துக்கள்.
சூப்பரோ சூப்பர் சேட்டை, இது வரைக்கும் இத மாதிரி பதிவப்பாத்ததில்லே, ரொம்ப நல்லா வந்திருக்கு.
ReplyDeleteகொங்கு நாட்டுச்சிங்கமாமில்ல, ரொம்ப டேங்க்ஸ், ஆனா சிங்கத்துக்கு பல்லெல்லாம் போயிடுச்சு, சேட்டை!
"வச்சுட்டான்யா ஆப்பு…." -ஐ அறிமுகபடுத்தியர்த்ற்கு நன்றிகள். நல்ல நகைச்சுவையுணர்வு உங்களுக்கு. தொடருங்கள்.
ReplyDelete- நாகர்கோவில் ராம்
என்ன பெயரு வச்சிருக்காகங்கிறது முக்கியமில்லே! என்ன எளுதுறாகங்கிறது தான் முக்கியம்"//
ReplyDeleteநல்லாச் சொன்னீங்க சேட்டை...இந்த வாரம் பதிவர் அறிமுகம் எவ்வளவு செஞ்சீங்கன்னு கடைசியா மொத்தக் கணக்கு ஒண்ணு கொடுத்திடுங்க...!! நிச்சயம் ரெகார்ட்தான்.....! ஆனால் ஒண்ணு இவ்வளவு ஒரே சமயத்தில் கொடுத்தால் எப்படிப் போய் பார்க்கறது..?
ஐயாக்கண்ணு பாவம் சார்..
ReplyDeleteஅவருக்காக.. என்னோட மூளைய கசக்கி( சிரிக்காதிங்க பாஸ்..!!!), சிலபேர் சொல்றேன்.
ஓ.கேன்னா, பணத்த டீ.டீ யாவோ..அமெரிக்க டாலராகவோ அனுப்பலாம்.. ( ஆமாங்க... எனக்கே எனக்குத்தான்..ஹி..ஹி )
1.. சின்ன பட்டாபட்டி
2..சிங்காரப் பட்டாபட்டி..
3. டுபாக்கூர் பட்டாபட்டி..
போதுனு நினைக்கிறேன்...
//
அறிமுகம், அருமை சேட்டை.. கலக்குங்க...
உங்கள் நகைச்சுவை நடை பிடித்திருக்கிறது. அருமை. ஆனால் கதையில் கவனமாகயிருந்த நீங்கள் கருத்தில் கோட்டைவிட்டது போல சில மொக்கை பதிவுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteஇன்றைய பதிவை வாசித்து மகிழ்ந்தபின் நாளைய ஞானப்பழம் உண்டு மகிழக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteஅசத்தீட்டீஹ
சேட்டையின் நான்காம் நாள் வேட்டை ..சிரித்து விழ வைக்கீறீங்கோ.
ReplyDeleteசேட்டை நண்பா!
ReplyDeleteஎன் அபிமான அய்யாக்கண்ணு கலக்கிவிட்டார்! நீங்கள் தான் வலையின் நகைச்சுவைப்புயல்...
மகளிர் ஸ்பெஷலுக்காக வெயிட்டிங்!
பிரபாகர்...
நல்லா எழுதறீங்க பாஸ்.. சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிருச்சி..
ReplyDeleteஎன்னையும் என் கவிதையையும்(அதான் கழுத கழுத)அறிமுகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி தல
ReplyDeleteவலைச்சரத்தில் பின்ரீங்க போங்க!!
:)
@சேட்டைக்காரன
ReplyDeleteநல்லா இருக்கு, எல்லா அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்..!!
அறிமுகப்படுத்திய விதமும்.. சூப்பரு... :D :D
ஹ்ம்ம்.. நான் கேட்க நினைதேன்.. அதுக்குள்ள பதில் சொல்லிடீங்க..
மேலும் தொடர வாழ்த்துக்கள்..
//"கோட்டிப்பய மக்கா! வலைப்பூவுண்ணா தலையிலே வைக்கிற பூவில்லே! கம்ப்யூட்டரும் இருந்து இன்டெர்நெட்டும் இருந்தாத் தான் அந்தப் பூவை வச்சிக்க முடியும்!" என்று விளக்கினார் ஐயாக்கண்ணு. " //
ReplyDeleteகலக்குதீகளே!!
ஞானப்பழம் கொடுக்கப்போகும் சேட்டைக்கு வாழ்த்துக்கள்.
சேட்டை - எப்பா - உழைப்பு உழைப்பு - ஏற்ற பொறுப்பினை நல்ல முறையில் நிறைவேற்ற கடும் உழைப்பு - வாழ்க சேடடை
ReplyDeleteநகைசுவை சற்றும் குறையாமல் அறிமுகங்களை அள்ளித் துளிக்கும் பாங்கு பாராட்டுக்குரியது சேட்டை
நல்வாழ்த்துகள் சேட்டை
நட்புடன் சீனா
kalkal
ReplyDeleteஅப்ப அக்குறும்புன்னுயாரும் இல்லயாங்க ஐயாக்கண்ணு ? :)
ReplyDeleteசும்மா அதிருதில்ல..
ReplyDeleteசேட்டையின் ஆரம்பம்முதல் நான்காம் நாள்வரை அசத்தலலோடு அரட்டையும் குறையவேயில்லை.
ReplyDeleteஅப்படிபோடு போடு
நல்ல எழுத்துநடை
வசீகர நகைச்சுவை
அருமை அருமை
சேட்டை தொடரட்டும்..
யாரையும் விட்டு வைக்கல போலருக்கே... உங்க உழைப்பிற்கு வந்தனங்கள்... மடலுக்கு நன்றி.. இன்னிக்கு கொஞ்சம் டைம் இருக்கும்.. வந்து படிச்சுக்கறேன்.. :)
ReplyDeleteஇப்படியா போவுது
ReplyDeleteநல்லாருக்கு சேட்டை.
பிரம்மாண்டம் சேட்டை:).
ReplyDelete@@@கோமதி அரசு
ReplyDelete//வலைப்பூ வச்சிருந்ததான் எழுதவேமுண்ணூ சொல்லுதான்!//
சிரிக்க ,சிரிக்க வைத்து,ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு மூலம் பதிவர்கள் அறிமுகம் அருமை.//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்
நல்ல நகைச்சுவை தொகுப்பு...அடுத்தவன புகழ்வதற்கு ஒரு மனசு வேணும்...மிக்க நன்றி என்னையும் சபையில் அறிமுகப்படுத்தியதற்கு....
ReplyDeleteநல்ல பல வலைப்பதிவர்களை, தினமும் கலக்கலாக அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. கலக்கலைத் தொடருங்கள்.
ReplyDeleteவெங்கட் நாகராஜ்
//எதுக்கும் ஒருவாட்டி கம்ப்யூட்டரை 'ஆன்’ பண்ணிட்டு டைப் பண்ணிப் பாருங்க அண்ணாச்சி!"
ReplyDelete"இப்பம் நம்ம வீட்டுலே இன்டெர்வெல்லும் வந்திருச்சில்லா?" //
ஆரம்பத்துலையே சிரிக்க வச்சுட்டீங்க அண்ணாத்தை..
இந்த பதிவு மூலமா நா நெறைய பதிவர்களா தெரிஞ்சுகிட்டேன்..
அவங்க பதிவுகளையும் ஒனொன்ன பாத்துட்டு இருக்கேன்..
ரொம்ம்பவே நல்ல இருக்கு.
டாங்க்ஸ் அண்ணாத்தை.
ம்ம் கலக்குங்க
ஏ மக்கா! இவ்வளவு ப்ளாக் - ஐயும் படிச்சுபுட்டு 'இதப் படி, அதப் படி' ன்னு சொல்லி சொல்லி தாரய, உனக்கு எங்க இருந்தாக்கும் இவ்வளவு நேரம் கிடைக்கு? நமக்கு ஒம் ப்ளாக் - ஐ படிக்கத்தான நேரம் இருக்கு.
ReplyDeleteதினமும் உரையாடல் பாணிதான் என்றாலும், அதையும்கூட விதம்விதமா, வித்தியாசமா,எல்லாரும் ரசித்து மகிழும்விதமா, தொய்வில்லாம எழுதும் திறமை கண்டு வியக்கிறேன். மகிழ்வான வாழ்த்துகள் சேட்டை!!
ReplyDeleteஅதோட எவ்ளோ அறிமுகங்கள்!!
அப்ப நாளைக்கு ஔவையாரம்மா வர்றாங்களா? :-))
நன்றி சேட்டைக்காரன்
ReplyDeleteஐயாக்கண்ணு சூப்பரப்பூ...
ReplyDeleteநல்லா இருக்கு சூப்பரா இருக்குன்னு சொல்லி சொல்லி போர் அடிச்சு போச்சு :))))))))))))
ReplyDeleteசேட்டைன்னா கொஞ்சம் சேட்டை இல்ல செம சேட்டைதான்.ரொம்ப நல்லா இருக்குங்க .நல்லா enjoy பண்ணி ரசித்து படித்தேன்
ReplyDeleteபேருல சேட்டை வச்சிக்கிட்டு இந்த சேட்டை இல்லைன்னா எப்படி.
ReplyDeleteசூப்பர் சேட்டை. அறிமுகங்கள் அருமை.
ஐயாக்கண்ணு & co-வின் அறிமுகங்களும் அரட்டையும் அசத்தல்:)))!
ReplyDeleteஇதுக்குமுன்ன்னால எல்லாரும் பாராட்டிட்டாக...
ReplyDeleteஅதையெல்லாத்தியும் நான்... ரிப்பீட்ட்...
அட்டகாசம்... கலக்கிட்டீங்க போங்க சேட்டை.
ReplyDeleteகலக்கல் தான் போங்க... நெறைய புது வலைபூக்களை அறிமுக படுத்தி இருக்கீக... நன்றி
ReplyDeletesmart said...
ReplyDeleteஉங்கள் நகைச்சுவை நடை பிடித்திருக்கிறது. அருமை. ஆனால் கதையில் கவனமாகயிருந்த நீங்கள் கருத்தில் கோட்டைவிட்டது போல சில மொக்கை பதிவுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.
//
வருகைக்கு நன்றி ஸ்மார்ட்..அடிக்கடி வாங்க..
பின்னூட்டமிட்டு, உற்சாகப்படுத்திய அன்புள்ளங்களுக்கு எனது பணிவான நன்றி கலந்த வணக்கங்கள்! :-)
ReplyDeleteசேட்டைக்காரன்