Tuesday, May 18, 2010

செல்லக் கிளிகளாம் பள்ளியிலே...

மரத்தடி வகுப்புன்னா எனககு நெம்ப இஷ்டம்... ஏன்னு கேக்குறீங்களா.. அப்பதானே லாப்பையும் க்ளாஸ் ரூமையும் விட்டு வெளி உலகத்தைப் பார்க்கலாம்...தமிழ் வகுப்பு ., மாரல் சைன்ஸ் (இப்ப எல்லாம் பள்ளிகள்ள இந்த வகுப்பு இருக்கா என்ன..) எல்லாம் UT தான் அட UNDER TREE பா..அப்பத்தானே காக்கா., குருவி., இலை தழை மரம்., தூரத்துல போற ஹனிபா மிஸ். வயல்வெளி(கிறிஸ்டியன் காலேஜ் பா.. எனவே எங்களை மாதிரியே பயிர்களையும் பருவத்தே பயிர் செய்வாங்க. பெல்லடிக்கப் போற அய்யனார் (எங்க வகுப்புத்தோழியோட அப்பா.......அப்ப ..உஸ்..) அண்ணே எல்லாரையும் பார்க்கலாம்..

இந்த சுதந்திரத்தை இந்த ப்லாக்கும் கொடுக்குது.... நண்பர்கள் ., சகோதர சகோதரிகள்னு. ஒரே உறவுக் கூட்டம்.. மரத்தில் பறவைகள் அடைவது போல ஒரு சந்தோசம்.

அதுல என் முதல் தம்பியைப் பத்தி பெருமையாக் குறிப்பிடுறேன் இவருடைய கவிதைகள் பிரசித்தம் மேலும் இரண்டு உருப்படியான வலைத்தளங்களும் வைத்து உள்ளார் ..அகசூல் தமிழ் டாக்டர் .,என்று ஆனால் இங்கு நான் அவருடையகவிதையை போடல ..வலைத்தளத்தில் என்முதல் அன்புத் தம்பி பெற்றெடுத்த கவிதை மத ஒற்றுமைக்கு ஏற்ற ஒரு நிகழ்வை போடுறேன்..

அடுத்து நண்பர் நேசனோடது நேசன் எவ்வளவோ கவிதைகள் எழுதி இருந்தாலும் எனக்குப் பிடித்த கவிதையல்லா கவிதை...அவர் பதிவு இது..
காலேஜு படிக்கிறதே ஒரு டிகிரி வாங்கி கண்ணாலம் கட்டிக்கிடத்தான் ,, ஆனா இந்தத் தம்பி பொண்ணு பார்க்கறப்போ பண்ணிய ரகசியக் கூத்துத்தான் கவிதையே தெரியுமா..

இன்னொரு தம்பி விருது கொடுக்கப் பிறந்த வள்ளல் ஒருத்தர் ஒரு விருது கொடுக்கலாம் ரெண்டு விருது கொடுக்கலாம் ஆனால் மூன்று விருது கொடுத்த வள்ளல் காமன்மேன் இவர். ரமேஷின் எத்தனையோ கதைகள் கட்டுரைகள் இருந்தாலும் என்னைக் கவர்ந்தது இது

கண்ணைக் கட்டிக் காதல் காட்டில் விட்டும் தப்பிப் பிழைத்த பெண்ணின் கதைஇது..

என் தோழி ஹேமாவின் அதிர வைத்த கவிதை இது,.. மாற்றங்கள்..
தம்பி பிரபுவின் இந்த இடுகை படிங்க சிரிச்சிக்கிட்டே இருப்பீங்க ..

என் அன்பிற்குரிய முதல் தங்கை மேனகாவின் அனைத்து இடுகைகளும் எனக்குப்பிடிக்கும்

சசிகுமார் என்றாலே சந்தோஷந்தான் வந்தேமாதரம் பார்த்துதான் நாங்க
கையெழுத்தது போடவே கத்துக்கிட்டமாக்கும்.. இந்தியாவோட பழங்காலக் காசு எல்லாம் பாருங்கப்பு இவரோட டுடே லொள்ளுக்கு நான் பரம விசிறி

ஒ நண்பனே வெற்றியில் மட்டுமல்ல.. விபத்தில் கூட இவர் நண்பந்தான்.. இந்த நண்பனின் நண்பர்களும் பற்றிய இடுகை இது
.
டிஸ்கி:- என்னது இது பள்ளிகூடம் காலேஜுன்னுட்டு இப்படி கலந்து கட்டி இருக்கேன்னு பார்க்குறீங்களா.. ஏங்க அக்கா தம்பிங்க., தங்கச்சிங்க நண்பர்கள் எல்லாம் ஒரே காலேஜு்ல படிக்கிறது இல்ல .. அது போலத்தான் இது... இது எப்பிடி இருக்கு..? போய் கமெண்டுப் போடுங்கண்ணா எஸ்ஸாகிறாம...

46 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. இதோ "நம்ம கல்லூரி" நண்பர்களை பாத்துட்டு வரேன் அக்கா.

    ReplyDelete
  3. இந்த சுதந்திரத்தை இந்த ப்லாக்கும் கொடுக்குது.... நண்பர்கள் ., சகோதர சகோதரிகள்னு. ஒரே உறவுக் கூட்டம்.. மரத்தில் பறவைகள் அடைவது போல ஒரு சந்தோசம்.


    ..... ரொம்ப பழகிய சந்தோஷத்துடன், அருமையான அறிமுகங்கள்...... வாழ்த்துக்கள், அக்கா!

    ReplyDelete
  4. அருமையான சந்தோஷ அறிமுகங்கள்.

    வாழ்த்துக்கள் அக்கா!

    ReplyDelete
  5. கண்ணைக் கட்டிக் காதல் காட்டில் விட்டும் தப்பிப் பிழைத்த பெண்ணின் கதைஇது..


    நன்றி தேனம்மை அவர்களே.

    ReplyDelete
  6. மரத்தடி நிழல் வகுப்புகளை ஞாபகம் படுத்திவிட்டீர்கள். இதயத்தில் சாரல் அடிக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. தேனம்மை லேட்டா வந்துட்டேன் .பாராட்டுக்கள் .அறிமுகம் எல்லாம் அருமை தேனு ...
    நடத்துங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ///மரத்தடி வகுப்புன்னா எனககு நெம்ப இஷ்டம்... ஏன்னு கேக்குறீங்களா.. அப்பதானே லாப்பையும் க்ளாஸ் ரூமையும் விட்டு வெளி உலகத்தைப் பார்க்கலாம்...//////

    இப்பொழுதும் மரத்தடி தேடுகிறது இந்த குட்டி மனசு . மிகவும் அருமை உங்களின் அறிமுகங்களின் படைப்புகள் . வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  9. பள்ளி காலத்தை நினைவூட்டிட்டீங்க!!! எல்லாத்தையும் படிச்சிட்டு வரேன்..

    ReplyDelete
  10. அருமை வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  11. மிக்க நன்றீ சீனா சார் அவர்களே

    ReplyDelete
  12. சீக்கிரம் வாங்க சை கொ ப

    ReplyDelete
  13. நன்றிடா சித்து..:)

    ReplyDelete
  14. உங்களுக்கும் மரத்தடி வகுப்பு உண்டா.. கார்த்திக்

    ReplyDelete
  15. நன்றி பத்மா.. லேட்டஸ்டாதான் வந்து இருக்கீங்க

    ReplyDelete
  16. பனிதுளி சங்கர்.. குட்டி மனசுன்னு சொல்லி சின்ன வயசுக்குக் கூட்டிட்டுப் போயிட்டீங்க

    ReplyDelete
  17. ஜெய்லானி உங்க ஸ்கூல்லயும் இது உண்டா

    ReplyDelete
  18. ஒரே உறவுக் கூட்டம்.. மரத்தில் பறவைகள் அடைவது போல ஒரு சந்தோசம்.]]

    உண்மை.

    இது போன்ற பள்ளிகளில் பயின்றதில்லை, இங்கே வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    ReplyDelete
  19. நம்ம எல்லாம் ஒரு குடும்பம்னு நிரூபிச்சிட்டீங்க அக்கா :)
    வெரி ஸ்வீட் ஆஃப் யூ அவர் டியர் அக்கா...

    உங்க பஞ்ச் டயலாக்கை உங்க அனுமதியுடன் ஒருதடவை நான் பயன்படுத்திக்குறேன் அக்கா....

    "வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்"

    :) :) :)

    ReplyDelete
  20. என் சகோதரியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் பெருமிதம் கொள்ளும் முதல்வனாக நான் இருப்பேன்.

    வாழ்த்துக்கள் honey அக்கா

    விஜய்

    ReplyDelete
  21. நல்ல அறிமுகங்கள்!! தலைப்பும் உங்க கவிதையைப் போலவே சூப்பர்ர்ர்...என்னையும் அறிமுகப்படுத்தி பிடிக்கும் சொன்னதற்க்கு மகிழ்ச்சியும்,நன்றியும் அக்கா....

    ReplyDelete
  22. நன்றி ஜமால்.. உண்மை

    ReplyDelete
  23. நன்றி பிரபு.. நெம்ப சந்தோசம்,,ஹிஹிஹி:)

    ReplyDelete
  24. நன்றீ விஜய்.. என் அன்புத் தம்பி,,!!

    ReplyDelete
  25. நன்றீ விஜய்.. என் அன்புத் தம்பி,,!!

    ReplyDelete
  26. நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete
  27. நன்றீ நிஜாமுத்தீன்

    ReplyDelete
  28. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் வலிமை நம்முள் பெருகட்டும்

    ReplyDelete
  29. எங்கள் துயர நிகழ்வோடேயே இந்த வாரம் கழிந்துகொண்டிருக்கிறது.
    அதனால் நேற்று என்னை நீங்கள் அறிமுகம் செய்தும் நான் பார்க்கத் தவற விட்டிருக்கிறேன் தேனுவக்கா.
    மன்னிப்போடு உங்கள் பணி தொடர வாழ்த்திக் கொள்கிறேன்.உங்களுக்கான கை தட்டல் என்றும்.

    உங்கள் பதிவுகளில் உங்களைப்பற்றி அறிந்துகொண்டதால் உங்களை ஒருமையில் தேனு என்றழக்க முடியவில்லை.அதனாலேயே தேனுவக்கா என்றழைக்கத் தொடங்கிவிட்டேன்.நன்றி வருவேன்.

    ReplyDelete
  30. அறிமுகங்கள் அருமை அக்கா. சென்று பார்க்கிர்றேன்.

    ReplyDelete
  31. அறிமுகங்களுக்கு நன்றி.

    நல்லா எழுதறீங்க.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. நல்ல அறிமுகங்கள் தேனக்கா.

    ReplyDelete
  33. நன்றி நேசன்...:)

    ReplyDelete
  34. நன்றி ஹேமா...எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள்

    ReplyDelete
  35. நன்றி அக்பர்..

    ReplyDelete
  36. நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete
  37. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    ReplyDelete