வாங்க! வாங்க!! எல்லோரும் நல்லாயிருக்கீங்களா??
இன்னைக்கு நம்ம வலையுலகில, காமிக்ஸ் கதைகளைப் பத்தி எழுதுற நம்ம நண்பர்களைப் பற்றிப் பார்ப்போம். சிறு வயசுல நம்ம எல்லோரும் எதோ ஒரு வகையில காமிக்ஸ் கதைகளைப் படித்திருப்போம். இப்போ அந்த கதைகளைத் தேடிப்பிடிச்சு படிக்க நமக்கு நேரம் இல்லாமப் போயிருக்கலாம்.
நம்ம தேடி, அதில் சிறந்ததை தேர்ந்தெடுக்கிற நேரத்தை மிச்சம் பண்ற வகையில வேற யாராவது படிச்சு, நம்க்குப் பரிந்துரை செய்தால் எப்படி இருக்கும். அந்த வேலையை செய்கிற காமிக்ஸ் ரசிகர்களின் பதிவுகளைப்பத்தி தான் நாம இன்னைக்கு பார்க்கப்போறோம்.
எனக்கு முதன்முதலில் அறிமுகமான காமிக்ஸ் ரசிகர் இலுமினாட்டி. இவரின் பதிவுகளைப் பார்த்த பிறகு தான் நான் காமிக்ஸ் குறித்து எழுதும் பதிவர்களைத் தேடிப் பிடிச்சேன். அதுக்கு நான் இலுமினாட்டிக்கு நன்றி சொல்லனும். இவரு காமிக்ஸ் மட்டுமில்ல கொரியப் படங்கள் மற்றும் வேற்றுமொழிப் படங்கள் பற்றி பதிவு எழுதுவதில் வல்லவர்.
காமிக்ஸ் கிசுகிசுவில் பட்டையைக் கிளப்புறவர் காத்தவ். இவரின் இந்த பூங்காவனம். படிச்சுப்பாருங்க... காமிக்ஸ் உலகத்தை மிக ரசனையான எழுத்துக்களால், நமக்கு காட்டியிருப்பார்.
ஒலக காமிக்ஸ் ரசிகன்-னு இவரு புனைப்பெயரில் எழுதுகிறார். இவருடைய இணையத்தள முகவரியை மொக்கைகாமிக்ஸ்-னு வைத்துவிட்டு... பதிவுகள் அனைத்தும் தலை சிறந்த காமிக்ஸ்கள் பற்றி இருக்கிறது.
பெயரே தமாசா இருக்குல்ல... இந்த புலா சுலாகி தளத்தில் காமிக்ஸ் கதைகளையே பதிவாக இடுவர்.
இவர் வருடத்திற்கே ஐந்து அல்லது ஆறு பதிவுகள் மட்டுமே இடுபவர். காமிக்ஸ் கதைகள் பற்றி அலசி ஆராய்பவர். இவரது காமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்! தளத்தையும் படித்து இன்புறலாம்.
இவர் காமிக்ஸ் பிரியன் எனும் பெயரில் ஆங்கில காமிக்ஸ் கதைகளையும் தனது க.கொ.க.கூ = கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
காமிக்ஸ் பெயர்கள் மட்டுமல்ல... இவர்களின் தளங்கள் பெயரும், பதிவுகளின் தலைப்புகளின் பெயரும் வித்தியாசமாகவே இருக்கிறது. லக்கி லிமட் எனும் புனைப்பெயரில் Browse Comics என்ற தளத்தில் இவர் அறிமுகப்படுத்தும் காமிக்ஸ் கதைகளையும் படிக்கலாம்.
இந்த காமிக்ஸ் உலகம் வலையுலகில் மிகப் பெரியதாக அவதாரம் எடுத்து வருகிறது. அதில் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்துவது சற்று சிரமமே. கீழ்காணும் காமிக்ஸ் ரசிகர்களின் பதிவுகளையும் படித்துப் பாருங்கள். நகைச்சுவை பொங்கும்.
காமிக்ஸ் காதலன்-பொக்கிஷம்
பயங்கரவாதி டாக்டர் செவன் - காமிக்ஸ் தீவிரவாதி -அ.கொ.தீ.க
லக்கி லுக் - தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் - இது நமது வலையுலக ஜாம்பவான்களில் ஒருவரான செந்தழல் ரவியின் தளம். லக்கிலுக் எனப்படும் யுவகிருஸ்ணா மற்றும் பாலா இவருடன் சேர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகின்றனர்.
நன்றி நண்பர்களே! மீண்டும் நாளை வேறு சில பதிவுகளின் தொகுப்போடு சந்திப்போம்!
வித்யாசமான அறிமுகம்
ReplyDeleteivanka ellorum superaa ezhuthuraanga. arimukaththukku nanri
ReplyDeleteரைட்டு.. கலக்கல்
ReplyDeleteஓக்கே!!
ReplyDelete:-))
//அதுக்கு நான் இலுமினாட்டிக்கு நன்றி சொல்லனும்.//
ReplyDeleteயோவ்,நீரு எனக்கு நன்றி சொல்றது இருக்கட்டும்.என்னைய எத்தன பேரு இனிமே கெட்ட வார்த்தையில வையப் போறானோ?நீரு ஆர்வக் கோளாறுல அறிமுகப்படுத்திட்ட....
அங்கன வந்தா இல்ல தெரியும் சேதி...ஐயையோ...எத்தன கமெண்ட் வரப்போகுதோ....
//இவரு காமிக்ஸ் மட்டுமில்ல கொரியப் படங்கள் மற்றும் வேற்றுமொழிப் படங்கள் பற்றி பதிவு எழுதுவதில் வல்லவர்.//
அடப் பாவிகளா,என் ப்ளாக் என்டர்டைன்மென்ட் ப்ளாக்ப்பா..அப்டின்னாவா,மியூசிக்,படம்,புக்ஸ்,காமிக்ஸ் பத்தி எல்லாம் மொக்க போடுறது.
அப்புறம் ரோசு,அறிமுகத்துக்கு நன்றி....
ReplyDeleteமேல உள்ளது சும்மா குசும்பு...என்னய பத்தி தெரியாதா? :)
உண்மைய சொல்லணும்னா படம் பத்தி நெறைய எழுத தான் ஆரம்பிச்சேன்.அப்புறம்,என் முதல் காதலான காமிக்ஸ் இழுத்துக்கிச்சு....இன்னும் கொஞ்ச நாள் படத்த பத்தி தான் எழுதவும் போறேன்,அப்பப்போ காமிக்ஸோட... :)
அப்புறம்,இங்கயும் போய் பாருங்க.இவங்க என்னய விட காமிக்ஸ் பத்தி நல்லா எழுதுறவங்க.என்னது நானுங்களா?நான் சும்மா மொக்க போடுவேனுங்க... :)
ReplyDeleteராணி காமிக்ஸ்:
http://ranicomics.blogspot.com/
Comicology:
http://www.comicology.in/
கவிதைகளின் தலைவன் ஆன
கனவுகளின் காதலர்:
http://kanuvukalinkathalan.blogspot.com/2010/04/blog-post_21.html
இந்த தளத்தை பின் தொடர்ந்த நாள் முதல் இன்று நீங்கள் அறிமுகப்படுத்திய இந்த காமிக்ஸ் தளங்கள் அறிமுகம் செய்வது இது தான் முதல் முறை? சரிதானே? எனக்கு தேவைப்படக்கூடியது. இது போல் குழந்தைகளுக்கென்று இத்தனை தளங்கள் இருக்கிறது என்பதை உணர்த்திய உங்களுக்கு நன்றி.
ReplyDeleteநானும் கூட ஒரு காலத்தில் காமிக்ஸ் ரசிகையாய் இருந்தேன்:)! அதுகுறித்து ஒரு பதிவு கூட போட்டிருந்தேன். இங்கே நீங்கள் தந்திருக்கும் சுட்டிகளுக்கு நன்றி:)!
ReplyDelete//லக்கி லுக் - தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் - ஆமாம் இது நமது வலையுலக ஜாம்பவான்களில் ஒருவரான லக்கிலுக் எனப்படும் யுவகிருஸ்ணாவின் தளம். பலர் இவருடன் சேர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகின்றனர்//
ReplyDeleteஇது என்னுடைய தளம் என்பது ஒரு தகவலுக்காக தெரிவித்துக்கொள்கிறேன். லக்கி நான் பாலா எல்லோரும் இணைந்து உருவாக்கியது.
நானும் சில தளங்கள் படிப்பதுண்டு.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி!
இலுமியின் பகிர்வால் இப்பதிவை காண முடிந்தது. காமிக்ஸ் பற்றிய பதிவுகளுக்கும் மற்றும் சம்பந்தமான தளங்களிற்கும் சிறந்த அறிமுகம். எல்லோரும் தங்கள் இளபிராய கால காமிக்ஸ் அனுபவங்களை பகிர்வதுடன் நின்று விடாமல், உங்கள் வீடுகிளில் இருக்கும் இரண்டு சிறுவர்களுக்கு அதை அறிமுகபடுத்தி வையுங்கள்.
ReplyDeleteஅது தமிழ் காமிக்சாக இருந்தாலும் சரி, வேறு மொழியானாலும் சரி. அந்த படிப்பு ஆர்வத்தை அப்படியாவது நாம் நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல உதவும்.
பதிவிற்கு நன்றி வலைச்சரம்.
அறிமுகங்களுக்கு நன்றி ரோஸ்விக்
ReplyDeleteதாமதமானாலும் வாழ்த்துகள் ரோஸ்விக். cant help it. sorry
ReplyDeleteஇங்கு என் பின்னூட்டம் கண்டு ரஃபிக் ராஜா நான் எழுதிய பதிவினைத் தேடிப் படித்து கருத்து அளித்திருக்கிறார்! அவருக்கு என் நன்றிகள். அந்தப் பதிவின் சுட்டியை இங்கே பகிர்ந்து கொள்கிறேனே: கட்டிப் போட்ட கதைகள் .
ReplyDeleteநன்றி LK.
ReplyDeleteநன்றி ரமேஷ்.
நன்றி பட்டு.
நன்றி ஜெய்லானி.
என்னால முடிஞ்சதை செஞ்சிட்டேன் இலுமி. நீ அடிவாங்குனாலும் சரி... அவார்ட் வாங்கினாலும் சரி... எனக்கு சந்தோசம் தான்... :-)
ReplyDeleteஆமா, நீ காமிக்ஸை காதலிக்கிறது அவங்க அப்பா, அம்மாவுக்கு தெரியுமா?? ஒன்னும் பிரச்சனையில்லையே! :-))) (சும்மா, நானும் உனக்கு மொக்கை போட்டேன்)
நன்றி ஜோதிஜி.
ReplyDeleteஎனக்கு முன்பு யாரும் அறிமுகப்படுத்தினார்களா என்று தெரியவில்லை. இந்த அறிமுகம் பயனுள்ள வகையில் இருந்தால் மகிழ்ச்சி.
நன்றி ராமலக்ஷ்மி. மீண்டும் இந்த அறிமுகங்கள் மூலம் ரசித்து படிப்பீர்கள். மகிழ்ச்சி.
ReplyDeleteமன்னிக்கனும் ரவி. என்னுடைய தவறான புரிதல் அது. இப்போதே மாற்றிவிடுகிறேன்.
ReplyDeleteசுட்டியமைக்கு அன்பும், நன்றிகளும்.
நன்றி NIZAMUDEEN.
ReplyDeleteநன்றி Rafiq Raja.
நன்றி தேன் அக்கா.
நன்றி பாலா அண்ணா. (No Problem at all. I understood you are busy. cool. cheers :-))
நன்றி ராமலக்ஷ்மி. பரவாயில்லையே! உடனே நண்பர் வந்து படித்து கருத்துரைத்திருக்கிறார். சுட்டியை இங்கு பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி.
//நீ அடிவாங்குனாலும் சரி... அவார்ட் வாங்கினாலும் சரி... எனக்கு சந்தோசம் தான்... :-)
ReplyDelete//
நாம என்ன வாங்குனா என்ன ரோசு...நமக்கு பிடிச்ச விசயத்த பகிர்ந்துக்கிற போது,அதில கிடைக்குற ஆனந்தம் இன்னும் அதிகமாகும்...அதுக்காக நான் எழுத ஆரம்பிச்சதுதான் காமிக்ஸ் பதிவுகள்... அது மத்தவங்களுக்கு போய் சேந்தா போதும்.
அப்புறம்,காமிக்ஸ் னா சின்னப் பசங்களுக்குன்னு ஒரு தப்பான எண்ணம இங்க இருக்கு.அது தப்பு.
அப்பிடி சொல்ற ஆளுங்க காமிக்ஸ் பத்தி முழுசா தெரியாதவங்களா தான் இருப்பாங்க.காமிக்ஸ் ஒரு கடல்ங்க...
ஐரோப்பா ல காமிக்ஸ் circulation எவ்ளோ தெரியுமா?கூகுள் பண்ணி பாருங்க.தெரியும்...வெறும் சின்ன பிள்ளைங்க விஷயமா மட்டும் இருந்தா அவ்ளோ விக்குமா?
ஆனா ரோசு,காமிக்ஸ் பத்தி ஒரு பதிவும்,அதை எழுதுரவங்கள பலர் கிட்ட கொண்டு போய் சேர்க்கணும்ங்கற உங்க எண்ணமும் என்ன சந்தோசப்பட வைக்குது.
ரோசு,உமக்கு ஒரு salute.... :)
எனக்கும் காமிக்ஸ் புடிக்கும் நண்பா! ஆனா, வாழ்க்கை சூறாவளியா எங்கெங்கோ சுத்தி அடிக்குது. அதுனால படிக்க நேரம் இல்லை. :-)
ReplyDelete