உள்ளூர் சினிமா பார்த்தே போரடிச்சுப் போச்சா உங்களுக்கு. கவலையே வேண்டாங்க. உலக சினிமாவை நமக்கு அறிமுகப்படுத்துறதுக்கு, நம்ம பதிவர்கள் நிறையப் பேரு இருக்காங்க. கலைக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லைங்க. அதுலயும் சினிமாக் கலைக்கு காட்சிகள் மட்டுமே போதுமானது.
நான், மங்குனி அமைச்சர், பட்டாபட்டி (யோவ் தனியா என்னைய மட்டும் சொல்லிக்கிற பயமா இருக்குயா... அதுனால அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க...) மாதிரி ஆளுங்க எல்லாம் ஒரே இங்கிலிஷ் படம் பார்த்தாலும் மூனு வேற வேற கதைகள் சொல்லுவோம். நம்ம ஞானம் அப்புடி... :-))) இப்ப கொஞ்சம் முன்னேறிட்டம்னு வைங்க...
நம்ம உலகத்துல எத்தனை மொழிகளில் இந்த சினிமா வாழ்கிறது... ஒவ்வொரு தேசத்திலும் சினிமாக் கலைஞர்களும், ரசிகர்களும் நிறைய வாழ்ந்துகிட்டு தான் இருக்காங்க. ஒரு மொழி சார்ந்த படம், தன் தேசத்தையும் தாண்டி பலரால் ரசித்துப் பார்க்கப்படுகிறதென்றால் அது மிகப் பெரிய வெற்றியடைந்த படமாகத் தான் இருக்க முடியும்.
அப்படி தேசம் தாண்டி, மொழி தாண்டி ரசிக்கப்பட்ட படங்களை நம் பதிவர்கள் அறிமுகப்படுத்துவது நமது தேடல் வேலையை எளிமை படுத்திவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
பதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள் பிச்சைப்பாத்திரம் என்ற தனது வலைத்தளத்தில் உலக சினிமாக்களையும் நமக்கு அறிமுகம் செய்கிறார்.
இவர் பெயரைப் பார்த்தாலே பயமா இருக்குது. கருந்தேள் கண்ணாயிரம்... :-) இவரது கருந்தேள் பதிவுகள் எல்லாமே நமக்கு ஏதாவதொரு மொழி படத்தை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.
நிலா முகிலன் இவர் பலவகையான பதிவுகளை எழுதுபவர். இவரது உலக சினிமா அறிமுகங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
அக்கரைச்சீமை- யில இருந்துகிட்டு நமக்குக் காணக்கிடைக்காத படங்களாப் பார்த்து நமக்கு அறிமுகப்படுத்துவார் நண்பர் ஹாலிவுட் பாலா. படத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் திரட்டி தருவதில் வல்லவர்.
நண்பர் கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் தமது கீ த ப் பி ரி ய ன் எனும் தளத்தில் நமக்கு பல வேற்றுமொழி திரைப்படங்களை அறிமுகம் செய்கிறார்.
அண்ணன் பட்டர்பிளை சூர்யா தமது வண்ணத்துப்பூச்சியார் எனும் தளத்தில் பல நாடுகளில் வெளிவந்த திரைப்படங்களை தொகுத்து அளிக்கிறார்.
வலையுலகில் பத்து லட்சம் ஹிட்ஸ்களைத் தாண்டிய, (யூத்) கேபிள் சங்கர் தனது வலைத்தளத்தில் இந்திய பிற மொழிப் படங்களையும், உலக சினிமாக்களையும் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார்.
நண்பர் ஜாக்கிசேகர் தமது பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.... என்ற தளத்தில் வயதிற்கேற்ப உள்ள திரைப்படங்களைப் பட்டியலிடுகிறார்.
நாகரத்னா பதிப்பக உரிமையாளரும், நமது பதிவுலக நண்பருமான குகன் அவர்கள் தனது குகன் பக்கங்கள் என்ற வலைத்தளத்தில் குறும்படங்களையும், வேற்றுமொழிப் படங்களையும் நமக்கு அறிமுகம் செய்கிறார்.
தடாகம் எனும் தளமும் நமக்கு பலவகையான திரைப்படங்களை நமக்கு அறிமுகம் செய்கிறது.
தான் பார்த்த வேற்று மொழி படங்களை தனது சினிமாவும்... நானும் என்ற தளத்தில் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் அஷ்வின்.
BABYஆனந்தன் தமது பதிவுகளிலும் உலக சினிமாக்களை நமக்கு அறிமுகம் செய்கிறார்.
சினிமா - கனவில் உறையும் உலகம்.. என்ற வலைத்தளத்தில் நண்பர் Saravana Kumar MSK தான் ரசித்த தமிழ் சினிமாக்களோடு வேற்று மொழி படங்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
எனக்குத் தெரிந்த உலக சினிமா குறித்து பதிவிடும் தளங்களை இங்கு குறிப்பிட்டுள்ளேன். இன்னும் தங்களுக்குத் தெரிந்த தளங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே.
மீண்டும் நாளை சந்திப்போம்... :-)
//மீண்டும் நாளை சந்திப்போம்... :-) //
ReplyDeleteநாளைக்கு கண்டிப்பா வரனும் சொல்லிட்டேன்..
அண்ணே யூத் கேபிளு மொக்கை படங்களுக்கும் விமர்சனம் எழுதும் ஒரே ஆளு....
ReplyDelete//அண்ணே யூத் கேபிளு மொக்கை படங்களுக்கும் விமர்சனம் எழுதும் ஒரே ஆளு....//
ReplyDeleteஇதை நான் வழி மொழிகிறேன்
:))))
ReplyDeleteமீண்டும் நாளை சந்திப்போம்
ReplyDeleteமக்களை கவர்ந்த சினிமா... சினிமா கவர்ந்த தளங்கள்...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்...
வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி.
நண்பர் ஜெய் "பிறமொழி படங்கள்" அவரது வலைத்தளம்
ReplyDeletehttp://worldmoviesintamil.blogspot.com
இவர் கொஞ்சம் வித்தியாசம், பீல் குட் படங்கள், சிறந்த திரைக்கதை, அப்புறம் நெறைய பேருக்கு தெரியாத நல்ல படங்களை விரிவாக எழுதுவதில் படா சோக்கான ஆளுப்பா.இப்போ புதுசா
ஒரு ஆராய்ச்சியே பண்ணி பதிவு போட்டுருக்கார் படிங்க...
:))))
ReplyDeleteநன்றி பட்டாபட்டி.
ReplyDeleteவர்றதுக்கு நான் ரெடி. நீ தான் எங்க இருக்கேன்னு தெரியலை ராசா... இடத்தை சொல்லு. மீட் பண்ணுவோம்.
நன்றி கே.ஆர்.பி.செந்தில்
ReplyDeleteநன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
நன்றி LK
நன்றி மணிஜீ...... (நீங்க சிங்கை வந்தால் இன்றே சந்திக்கலாம். :-))
நன்றி தமிழ் உதயம்.
நன்றி butterfly Surya.
நன்றி Phantom Mohan.
ReplyDeleteநண்பர் ஜெய் புதிதாக எழுத ஆரம்பித்திருப்பதால் அவரை புதியவர்கள் வரிசையில் அறிமுகப்படுத்தியுள்ளேன். பார்க்கவும் - http://blogintamil.blogspot.com/2010/06/new.html
தங்களின் பகிர்தலுக்கும் நன்றி. :-)
நன்றி ஜெய்லானி. (எதுக்கு தலைவா சிரிச்சிட்டு போயிருக்கீங்க?? :-))
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்...என்னிய விட்டுட்டீங்களே... ஒளக ஜினிமா எல்லாம் நானும் எளுதினேனே... வ்வ்வ்வ்வ்.... :)))))))))))))))))))
ReplyDeleteயோவ்,என்னையா என்னைய ஆட்டையில இருந்து தூக்கிட்டீங்க ? :)
ReplyDeleteமகேஷ் அண்ணா... தொடர்ந்து அறிமுகப்படுத்தனும்... நீங்கள் இப்போது வேறு தளத்தில் இயங்குகிறீர்கள்... (அப்பாடியோவ்... எப்புடியெல்லாம்
ReplyDeleteசமாளிக்க வேண்டியதிருக்கு)
:-) நன்றி அண்ணே!
யோவ் ILLUMINATI. எனக்கு அந்த கொரியன் பிகரைத் தரமாட்டேன்னு சொன்னீல்ல அதுக்குத்தான் இந்த பழிவாங்கல்...
ReplyDelete(உன்னைய எத்தனை எடத்துல மேடைக்கு கூப்பிடுறது...) கீழ நின்னு வர்ற பொன்னாடையை வாங்கி வைய்யிய்யா... :-)))))))
யோவ் retired கேசு ரோசு,
ReplyDeleteஉமக்கு எதுக்குய்யா கொரிய பீசு? பல் விழுகப்போற நேரத்துல அந்தப் பல்ல வச்சு 'பல்'லாங்குழி விளையாடவா?போய்யா போய் உன் பேரக் குழந்தைய படிக்க வைய்யு.. :)