வணக்கம்,
தவிர்க்க முடியாத சில காரணங்கள் நேற்றைய அறிமுகங்களை வெளியிட முடியவில்லை.
பதிவுலகில் பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. பின்னுட்டம் அதிகம் வந்தால் சிறந்த பதிவு, சிறந்த பதிவர் என்ற நிலை. நிச்சயமாக இல்லை. சில சிறந்த பதிவுகள் ஈ ஓட்டுகிறது.. சில மொக்கைபதிவுகளில் ஈ மொய்க்கிறது. இதையே நம்ம சூப்பர் ஸ்டார் பாணியில் சொன்னால்
"கண்ணா கூட்டத்துக்கு வற்ற எல்லா மக்களும் ஓட்டுபோடுவாங்கன்னு நினைக்கிற அரசியல்வாதியும், பாலோவரா இருக்கற எல்லா மக்களும் பின்னுட்டம் போடுவாங்கன்னு நினைக்கிற பதிவரும்....
இன்றைய அறிமுகங்கள்
பிரபஞ்சப்ரியன்
ஒரு சூப்பர் வலைப்பூ. டார்வின் என்னும் குடும்பஸ்தன் என்ற பதிவை படித்தாலே தெரியும்.
டார்வின் கோட்பாடுகள் பற்றிய சர்ச்சைகள் ஒருபுறமிருக்க அவரைப்பற்றியும் அவரது வாழ்க்கைப்பற்றியும் ஒரு பெரிய அலசல் அலசப்பட்டிருக்கிறது. படிக்க படிக்க சுவராஸ்யம். பின் மரடோனா பற்றிய பதிவு தூள். மேலே சொன்னதுபோல சிறந்த பதிவுகள் சீண்டப்படாமல் இருக்கிறது. இனியாவது சீண்டுவோம்.
தீராத விளையாட்டுப்பிள்ளை
இவர் புதிய பதிவர் அல்ல. ஆனால் அவ்வளவு அறியப்படாத பதிவர். அறிப்படவேண்டிய பதிவர். பல விசயங்கள் பற்றி எழுதுகிறார். அவரின் ஆக்டோபஸ் பால் உடன் ஒரு நேர்காணால் பதிவு படித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
மதுரை சரவணன்
கல்விதுறையில் இருக்கும் சரவணனின் வலைப்பூ. சமுக அக்கறையும், இளைய தலைமுறைக்கு உற்சாகமும் கொடுக்கும் கவிதைகள் நிறைய எழுதுகிறார். அவரின் மாணவர்களை அடிப்பது சரியா தவறா என்றது சமூககண்ணோத்துடன் ஒரு எழுதப்பட்டுள்ளது. இது போன்ற நல்ல பதிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
பிருந்தாவனம்
புத்தம் புது பதிவர். நம்ம நோக்கமே இதுதானே. ஆனால் பிருந்தாவனம் என்ற பெயரில் இன்னொரு பதிவரும்(கோபி) இருக்கிறார். இந்த பிருந்தாவனம் என்றபெயரில் என்னத்தான் இருக்கோ தெரில. இவரின் எந்திரன் ரஜினி படம் பற்றிய பதிவை நான் இங்கு சொல்லியே ஆகவேண்டும். சொல்லாம போகவே முடியாது ஏன்னா அவர் எழுதியருக்கிறதே இந்த ஒருபதிவுதான். இனிமேலும் பல பதிவுகள் எழுத உற்சாகமூட்டுவோம்.
ரிஷபன் மீனா
மீண்டும் ஒரு உபயோகமான பதிவு. பட்டைய கணக்கராக இருக்கிறார். அதன் பிரதிபலிப்பு பதிவுகளிலும் தெரிகிறது. சென்செக்ஸ் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை விரிவாக சொல்லிருக்கும் பதிவு இதைப்பற்றி அறியாதவர்களுக்கு மிகவும் உபயோகமானது. மேலும் சில சுவராஸயமான பதிவுகளை எழுதியிருக்கிறார். அதிகம் எழுது மறுக்கிறார். துறைசம்பந்தமான பதிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பதிவர்
கவிஞர் அறிவுமதி
கவிஞர் அறிவுமதியின் கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்களை சில நண்பர்கள் சேர்ந்து பகிர்கிறார்கள். அறிவுமதியின் எழுத்துக்கள் அத்தனை சுவாரஸ்யம். மக்கள் தொலைக்காட்சி மூன்று ஆண்டுகள் நிறைவுக்காக கவிஞர் எழுதிய கவிதை அருமை. இலக்கியவாதிகள் அடைக்கலம் புக ஒரு அருமையான வலைப்பூ
ஆக்டோபஸ் பேட்டி அருமை. அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteபுதிய பதிவர்களின் அறிமுகங்கள் அருமை..!!
ReplyDeleteவலைச்சரத்தில் மூன்றாம் நாளை கானேமே ஏன் பாஸ்..? புதன் ஆகாதோ..?
ReplyDelete@ ஜெய்லானி = இதான் படிக்காமலே பின்னுட்டம் போடக்கூடாதுன்னு சொல்றது... முதல் வரியே அதைத்தானே சொல்லிருக்கேன்....:))
ReplyDeleteபுதிய பதிவர்களின் அறிமுகங்கள் அருமை..!
ReplyDeleteபுதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteமதுரை சரவணன் சமுதாயக் கண்ணோட்டம் கொண்டவர்..அவருக்கு பாராட்டுக்கள்
அசத்துறீங்க போங்க.
ReplyDeleteஇன்னும் எதிர்பார்க்கிறேன்.
அசத்துறீங்க சிஷ்யா.. அருமை அறிமுகங்கள்.
ReplyDeleteநண்பர் நாஞ்சில் பிரதாப் அவர்களுக்கும், வலைச்சர ஆசிரியர்க் குழுவுக்கும், பிரபஞ்சப்ரியனை அறிமுகப்படுத்தி ஊக்குவித்தமைக்கு நன்றிகள் பல. இதையும் பாருங்க....
ReplyDeletehttp://prabanjapriyan.blogspot.com/2010/07/blog-post_14.html
This comment has been removed by the author.
ReplyDelete@@@நாஞ்சில் பிரதாப்-//
ReplyDelete@ ஜெய்லானி = இதான் படிக்காமலே பின்னுட்டம் போடக்கூடாதுன்னு சொல்றது... முதல் வரியே அதைத்தானே சொல்லிருக்கேன்....//
படிச்சேன்..தலைப்ப மட்டும் பாத்துட்டு நடுவில கானேமேன்னுதான்..
வெறுமனே வாசகி மட்டும் தான். நல்லதோ அல்லதோ depending on mood தான் பின்னூட்டம்எல்லாம். புது பதிவர்களை எழுதத் தூண்டுவது வரவேற்கத்தக்கது.
ReplyDeleteஅன்பின் பிரதாப்
ReplyDeleteபல புதிய அறிமுகங்கள் - நன்று நன்று - அனைவரும் அங்கும் சென்றும் படிக்கின்றனர்.
நல்வாழ்த்துகள் பிரதாப்.
நட்புடன் சீனா
எல்லாம் எனக்கு புதியது... அறிமுகத்துக்கு நன்றி தல..
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி பிரதாப்.
ReplyDeleteஅன்புடன் கபிலன்..
மதுரை சரவணனின் சில பதிவுகளை படித்து உள்ளேன். மற்றவர்கள் புதியவர்கள்.
ReplyDeleteஅருமை பிரதாப். Thanks
ReplyDeletearumayana arimugam
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் பாஸ்
ReplyDeleteஅருமையான அரிமுகங்கள்..அனைத்து பதிவுகளையும் படிக்க போகிரேன்.நன்றி
ReplyDeleteநல்ல அறிமுகம்.....வாழ்த்துகள்
ReplyDeleteதாங்கள் சொல்வது உண்மை நண்பா..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ஆக்டோபஸ் பால் நல்லா இருக்கு ...!!
ReplyDeleteஇந்த பிருந்தாவனம் என்றபெயரில் என்னத்தான் இருக்கோ தெரில.--//
ReplyDeleteஅடப்பாவி நாஞ்சில் என்னையும் நக்கல் விடுறியா?
தெரிந்தவை இரண்டு தெரியாதவை இரண்டு...
ReplyDelete// ஜாக்கி சேகர் said...
ReplyDeleteஅடப்பாவி நாஞ்சில் என்னையும் நக்கல் விடுறியா?//
எப்படி ஜாக்கி ஜி கரீட்டா புடிச்சீங்க....:))
மிக்க நன்றி. புதியவர்களும் நல்ல அறிமுகம். வாழ்த்துக்கள்
ReplyDeleteமாப்ஸ்...... நேற்று முழுதும் உனக்கு 103 டிகிரி ஜுரம் இன்றும் அது போலவே இருந்தும் நீ வலைச்சரத்தில் எழுதியிருப்பது எனக்கு நெகிழ்ச்சியாய் இருக்கிறது மாப்ஸ்
ReplyDeleteஒவ்வொரு அறிமுகமாக படிக்கிறேன் மாப்ஸ்!
என்னது 103 டிகிரி ஜுரமா. காய்ச்சலுக்கே காய்ச்சல் வந்த என்ன செய்றது.
ReplyDelete// அக்பர் said...
ReplyDeleteஎன்னது 103 டிகிரி ஜுரமா. காய்ச்சலுக்கே காய்ச்சல் வந்த என்ன செய்றது.//
அப்ப என்னை காயச்சி எடுக்கற பதிவர்னு சொல்றீங்க....அதுவும் கரிட்டுதான்... எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா.... நல்லாருங்க தல நல்லருங்க...:))
இது சீரியசான கமெண்ட் அல்ல, ஸ்மையிலி போட்ருக்கேன்
:))