Friday, July 16, 2010

வலைச்சரத்தில் ஐந்தாம் நாள் - வெள்ளி

வணக்கம்

வலைப்பூ ங்கறது கேர்ள் பிரண்ட் மாதிரி, இல்லாதவங்க மத்தவங்ககிட்ட இருக்கறபார்த்துட்டு நமக்கும் ஒண்ணும் இருந்தா நல்லாருக்குமேன்னு தோண வைக்கும். அதை அதை வச்சிட்டுறவனுக்குத்தான் அதிலுள்ள கஷ்டங்கள் தெரியும். தொண்டைல மாட்டுன முள்ளு மாதிரி முழுங்கவும் முடியாம துப்பவும் முடியாமல் கஷ்டப்படறது.


இன்றைய அறிமுகங்கள்

உன்னைப்போல் ஒருவன்

என்னடா சினிமாபேரை போடுறான்னு நினைக்ககூடாது. வலைப்பூ பெயர்தான். கவிதை, சினிமா, செய்திகள் என பலவிசயங்களை எழுதுகிறார் திரு சீனிவாசன். அவரின் வலைப்பூவில் வெளியான
ஜீரோவில் தொடங்கிய ஹீரோக்கள் வலைப்புதிவு ஒவ்வொருத்தரும் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு. ஒரு எனர்ஜீ டானிக் பதிவு. கட்டாயம் படிக்கவும் இது ஒரு வேண்டுகோள்.


வயக்காடு

மீண்டும் ஒரு சவாரஸ்யமான வலைப்பூ. நவநீதனின் ஹைக்கூ கவிதைகள் என்னைக்கவர்ந்தவை. அதிகம் எழுத மறுக்கிறார். மேல் படிப்புக்காக ஜப்பான் செல்லும்போது ஏற்பட்ட பிரச்சனைகளை சுருக்கமாக அவர் எழுதியிருக்கும் விதம் அருமை. சில நகைச்சுவைபதிகளும் எழுதியிருக்கிறார். எல்லாப்பதிவுகளும் சுவராஸ்யமாக இருக்கிறது. முன்பு அதிகம் படிப்பதுண்டு. இப்போது இல்லை, காரணம் அவர் அதிகம் எழுதுவதில்லை.

எழுத்தில் எண்ணங்கள்

வெளிநாட்டில் வசிக்கும் கரிகாலன் என்றபெயரில் எழுதுகிறார். சிலபேர் வலைப்பூ ஆரம்பித்து சில முத்துக்களை கொட்டிவிட்டு பேசாமல் இருந்துவிடுவர். அப்படித்தான் இவரும். எழுதிய எல்லாப்பதிவுகளும் அருமை. ஆனால் அதிகம் எழுதமறுக்கிறார். அவர் எழுதிய
தமிழ் மெல்ல சாகும் என்ற நகைச்சுவையுடன் கூடிய பதிவு யதார்த்த நிலையை காண்பிக்கிறது. ஒரு சுவராஸ்யமான வலைப்பூ.

தமிழ் தலைமகன்

அபுதாபில் இருக்கும் அமீரகப்பதிவர் வில்சனின் வலைப்பதிவு. கடல் ஆரயாச்சியாளர் என்று தன்னைப்பற்றி கூறுகிறார். அப்படி கடல்ல என்னத்தான் ஆராய்ச்சி பண்ணுவாங்களோ தெரில. அவரிடம் இருந்து துறைசார்ந்த பதிவுகளை எதிர்பார்க்கிறோம். கடவுள் பற்றிய பல சர்ச்சைகள் இருக்க அவரின்
கடவுள் இருக்கிறார் என்றப்பதிவின் மூலம் வித்தியாசமான தன் கருத்தை பதிக்கிறார். இவரும் அதிகம் எழுத மறுக்கிறார். பல சுவராஸ்யங்கள் இவரின் ஒளிந்துள்ளன. விடாதீங்க ஒரே அமுக்கா அமுக்கிடுவோம். அமீரகப்பதிவரா கொக்கா..?


இன்றைய பதிவர்

பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி

கவிஞர் யுகபாரதியின் வலைப்பூ. தனது கவிதைகள் மட்டுமன்றிய தனது சில கட்டுரைகள், தன் எண்ணங்களையும் பதிவு செய்கிறார். சமீபத்தில் அவர் எழுதிய எழுதியுள்ள நான் மகான் அல்ல என்ற படத்திற்கான ஒரு பாடலை தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நல்ல கவிதைகள் விரும்பி படிப்பவர்களுக்கான ஒரு தளம்.

மீண்டும் சில அறிமுகங்களுடன் நாளை சந்திக்கிறேன்.

11 comments:

  1. எச்க்குஸ்மி...1,2,3... சும்மா டெஸ்ட்டிங்...

    ReplyDelete
  2. தெரியாத பதிவர்கள்...தெரிந்து கொண்டேன்

    யுக பாரதியின் பதிவிற்க்கும் நன்றி

    வாழ்த்துக்கள்,தொடருங்கள்

    ReplyDelete
  3. அனைவரும் நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  4. @நாஞ்சில், சார் உங்களோட எழுத்து மாதிரி தெரியலையே... எங்களுக்கு நாஞ்சில் எக்ஸ்பிரஸில் எழுதிகிறது போல் வேண்டும் :)

    ReplyDelete
  5. அனைவருக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. அன்பின் பிரதாப்

    அனைத்து அறிமுகங்களுமே புதியவை - சென்று பார்க்க வேண்டும் - பார்ப்போம்.

    நல்வாழ்த்துகள் பிரதாப்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  7. அறிமுகங்களுக்கு நன்றி பிரதாப்.

    ReplyDelete
  8. அனைவரும் நல்ல அறிமுகங்கள்...
    வாழ்த்துக்கள்...
    தொடருங்கள்.

    ReplyDelete
  9. யுகபாரதி.... சென்று பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  10. இது வரை தெரியாத பதிவர்கள் படிச்சுடுவோம். நன்றி

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்கள்.. எல்லோரையும் சென்று பார்க்கவேண்டும். கவிஞரின் வலைப்பூவை அவசியம் காணவேண்டும். நன்றி பிரதாப்.

    ReplyDelete