Friday, August 13, 2010

பதிவுலக அர்ஜூனன்கள் - வலைச்சரம் - 5ஆம் நாள்

துரோணரிடம் வில் வித்தைப் பயிற்சியில் இருக்கும் போது, அர்ஜூனனுக்கு மரம், கிளை, இலை, பழம் எதுவும் தெரியவில்லை. மாறாக, குறிவைத்து அடிக்க வேண்டிய கிளி மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. அதுபோல, பதிவர்களில், ஒரு குறிப்பிட்ட வகைப் பதிவுகளை மட்டுமே எழுதுபவர்களை இன்று பார்(படி)ப்போம்.

குழந்தைக்கு மாண்டிசோரி முறையில் கல்வி கற்றுத்தருகிறார் இவர். அந்த வகையில், தன் குழந்தைக்கு சொல்லித்தரும் அனைத்தையும் பதிவுகளாக இடுகிறார். என் மகனுக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் போது, கடினமாக இருந்தால், இவர் எந்த முறையில் தன் குழந்தைக்கு அதை சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்று பார்ப்பேன்.


ஓரிரு கவிதை எழுதுவதற்குள் மூச்சு முட்டிவிடுகிறது. இவர் கவிதையை மட்டுமே தன் வலைத்தளத்தில் எழுதுகிறார். அனுபவங்களை அழகான வார்த்தைகளில் சொல்வது கவிதை எனக் கொண்டால், இதனைக் கவிதை எனச் சொல்ல இயலாது. காரணம், 22 வயது இளைஞனுக்கு இல்லாத ஒரு அனுபவம். இந்த வயதில் காதலியைப் பற்றி எழுதாமல் யாரைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று பாருங்கள்.



கவிதையைப் பற்றி எழுதினால், இவரின் எதாவது ஒரு கவிதையை எடுத்துக்காட்டாமல் எழுத இயலாது. சூரியனுக்கே டார்ச்சா ? என்ற ரகத்திலிருந்தாலும், இந்தக் கவிதையை படித்துப் பாருங்கள். மிக எளிய வார்த்தைகள். என் அலுவலகத்தில் இதைப் படித்து விட்டு நானும் என் நண்பனும் சிலாகிக்க, இன்னொருவர் வந்து படித்துவிட்டு “இதுல அப்படி என்ன இருக்கு” என்று சொல்லிவிட்டு போனார்.

சேது எக்ஸ்பிரஸ் பார்த்து, அதில் பயணம் செய்பவர்களை நோக்கி கை அசைத்து, ரயில் வரும் முன் தண்டவாளத்தில் வைத்த 5 பைசாவை, கடந்து சென்றவுடன் நசுங்கிய பைசாவை எடுத்து சேகரித்து வைத்த நியாபகங்கள் என்று ஒரு ரயிலின் பெயர் எவ்வளவு நியாபகத்தைக் கிளறுகிறது !. அவசர வாசிப்பில், மிக எளிமையான கவிதையாகத் தெரியும். இரண்டாம் வாசிப்பில், அசைபோட நேரம் கிடைக்கும் போது மீண்டும் படித்தால் பல அர்த்தங்கள் புரியும்.



கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி அவர்கள் பல துறை சார்ந்த பதிவுகளிட்டிருக்கிறார் என்றாலும், இவரது, அறிவியல் பதிவுகள் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும், முக்கியமான தகவல்களை எளிதாகவும் விளக்கி இருக்கிறார். சில பதிவுகளின் தலைப்புகள்,

அணு நீர்மூழ்கிக் கப்பல்
செயற்கை உயிர்?
சந்திரயான் - 100 கி.மீ சுற்றில்
ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?


மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பகுதிகளைத் தவிர, ஒரு தரவிறக்கம் செய்யக்கூடிய மென்புத்தகத்தில் மேலும் பல அறிவியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அருமையான தொகுப்பு அது.



தமிழ் புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை மட்டுமே பதிவுகளாகக் கொண்டு இயங்கும் வலைத்தளம்.


ஒரு ரகசியம். யாரிடமும் சொல்லாதீர்கள். நாளை, புதையல் வேட்டைக்குத் தயாராக இருங்கள்.

21 comments:

  1. வாசகர் அனுபவம் நல்ல தளம். பத்ரி, பாரா போன்ற பிரபல தளங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். இறகுகள் கவிதைகள் அருமை. மொத்தத்தில் நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  2. எனது அண்ணனும் தம்பியுமா சந்தோஷம் மக்கா

    நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  3. பத்ரி பற்றி சொல்லவும் வேண்டுமா?

    பாரா சூரியனுக்கே டார்ச் லைட்டா?

    சிவாஜி தான் ஆச்சரியமாய் இருக்கும். காலை வேலையில் அந்த படமே பலதையும் கிளறுது. இறந்த காதல் வரிகளைப் போல அவவ்போது திடீர் என்று எட்டிப் பார்க்கும், ஆனால் வரிகளை ரசிக்க முடிகிறது. எதார்த்தத்தில் எந்த நாதாரியும் காதலை சரியான முறையில் காதலாக பார்ப்பவர் யாருமில்லை குமார். இங்க எல்லாமே காமக்காதல் தான்.

    ஆனால் மொத்தத்தில் நீங்க விஞ்ஞான சமூக கவிதையான ரசனையாளர்.

    தொடருங்கள்
    தொடர்ந்து வருகின்றேன்.

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள்.

    ஒரு சின்னக் கருத்து
    ஜீ ≠ ஜூ

    ReplyDelete
  5. அன்பின் பின்னோக்கி

    அருய்மை அருமை அர்ஜூனன்கள் அருமை - அத்தனையும் நான் படிக்கத் தவறியவை. படித்து விடுகிறேன் - அழகிய வெண் முத்துகளால் கோர்க்கப் பட்ட சரம். நன்று நன்று

    நல்வாழ்த்துகள் பின்னோக்கி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  6. அன்பின் பின்னோக்கி

    //அவசர வாசிப்பில், மிக எளிமையான கவிதையாகத் தெரியும். இரண்டாம் வாசிப்பில், அசைபோட நேரம் கிடைக்கும் போது மீண்டும் படித்தால் பல அர்த்தங்கள் புரியும்.// - உண்மையான விமர்சனம்

    நல்வாழ்த்துகள் பின்னோக்கி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  7. அன்பின் பின்னோக்கி

    அத்தனை அறிமுகங்களூக்கும் சென்று படித்து ரசித்து மகிழ்ந்து மறு மொழியும் இட்டு விட்டேன்

    நல்வாழ்த்துகள் பின்னோக்கி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  8. நன்றிகள்

    @ஸ்ரீராம் - உங்களுக்குத் தெரியாத வலைத்தளங்களே இல்லை போல :)

    @நேசமித்ரன் - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

    @ஜோதிஜி - முற்றிலும் உண்மை நீங்கள் சொன்னது. நான் பகிர்ந்துகொள்ளும் வலைத்தளங்கள், என் அடிப்படை ரசனை (வரலாறு, அறிவியல்) தளங்களைப் பின்பற்றியே இருக்கும்.

    @நீச்சல்காரன் - நீங்கள் சொன்னது சரி. திருத்த முயல்கிறேன்.

    @சீனா சார்- நீங்கள் படிக்காத தளங்களை பகிர்ந்துகொண்டது மனநிறைவை அளிக்கிறது.

    ReplyDelete
  9. நல்ல தொகுப்புக்கள்:) நன்றி

    ReplyDelete
  10. Anne.,
    Vaarthaigal illai..
    Rommba santhoshama irukku.. :-)

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்கள் பின்னோக்கி; நிறைய உழைத்துள்ளீர்கள் என்பது தெரிகிறது

    ReplyDelete
  12. சிறந்த அறிமுகங்கள்.

    ReplyDelete
  13. நன்றி பின்னோக்கி!

    **

    ரயில் வரும் முன்

    தண்டவாளத்தில் வைத்த 5 பைசாவை,

    கடந்து சென்றவுடன் நசுங்கிய பைசாவை

    எடுத்து சேகரித்து வைத்த நியாபகங்கள் என்று

    ஒரு ரயிலின் பெயர்

    எவ்வளவு நியாபகத்தைக் கிளறுகிறது !.

    **

    இந்த கவிதை ரொம்ப நல்லாருக்கு பின்னோக்கி! :-)

    ReplyDelete
  14. வித்தியாசமான அறிமுகங்கள், அனைத்தும் அருமை
    வாழ்த்துக்கள் -சம்பத்-

    ReplyDelete
  15. நல்ல அறிமுகங்கள் பின்னோக்கி; நிறைய உழைத்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.

    ReplyDelete
  16. வாசகர் அனுபவம் மிக அற்புதம்.

    மிக நல்ல தளம் என்று நினைத்துக் கொண்டுருப்பேன். இணைத்துக் கொள்ள வழியிருக்காது.

    மின் அஞ்சல் வசதியும் இருக்காது. வேறு எந்த வழியில் இவர்களை அடுத்த முறையும் கோட்டை விட்டு விட்டு தவித்துக் கொண்டுருப்பேன்.

    நல்ல ரசனையாளர் நீங்க குமார்.

    மீண்டும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. அறிமுகங்கள் அனைத்தும் சிறப்பு . வாசித்துவிடுகிறேன் அனைவரையும் விரைவில் . தங்களின் ஆசிரியர் பணி சிறப்பாக அமைவதற்கு என் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  18. அருமையான பதிவுகளைப் பகிர்ந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  19. நல்ல விசயங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....வேட்டைக்கு தயார்...

    ReplyDelete
  20. ungka பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.அறிமுகப்படுத்துன தளத்துக்கு இனி தான் போகனும்

    ReplyDelete
  21. நன்றிகள்

    @ரசிகன்
    @சிவாஜி - அடிக்கடி எழுதுங்கள். நிறைய எதிர்பார்க்கிறோம்.
    @மோகன்குமார்
    @சத்ரியன்
    @பா.ரா - உங்களின் கவிதைக்கு முன் மற்றதெல்லாம் நிற்க இயலாது :)
    @ஸ்ரீஜா
    @சே.குமார்
    @பனித்துளி சங்கர்
    @அமுதா
    @மதுரை சரவணன்
    @சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete