கோஹினூர் வைரம் பற்றிய இந்தக் கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. எத்தனைப் போராட்டங்கள் இந்த வைரத்திற்காக ?. அற்புதமான, காணக்கிடைக்காத பல படங்களுடன், மிகவும் விறுவிறுப்பான பதிவு, 4 பாகங்களாக.
ஆதிச்சநல்லூர் - இந்தப் பெயர் மொகஞ்சதாரோ, ஹராப்பாவுக்கு முந்தைய நாகரீகம் என்று கூறப்படுகிறது. இங்கு, மண்ணுக்கு அடியில் எடுத்த புதையலைப் பற்றியும் அதைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவ செய்திகளையும் படித்துப்பாருங்கள்.
புதையல்கள் நிலத்துக்கு அடியில் மட்டும் இருப்பதில்லை. கடவுளை தரிசிக்க கோயிலில் வரிசையில் நிற்கும் போது, சுவற்றில் கையை வைத்து சாய்ந்து நிற்கிறோம். ஆனால் அந்த கல் சுவர் ஒரு புதையல் என்பது நமக்குத் தெரிவதில்லை. ஆனால், இவர்கள் அந்தக் கல்லில் எழுதப்பட்ட செய்திகள் என்ன என்று சொல்லுகிறார்கள். மிக சுவாரசியமாக எழுதப்பட்ட பதிவு.
இது மட்டுமல்ல, இந்த வலைத்தளமே ஒரு புதையல் தான். படிக்கப் படிக்க எவ்வளவு தகவல்கள்.
எல்லா புதையல்களும் கண்டுபிடிக்க கடினமானதாக இருப்பதில்லை. இந்த சிலையின் பிரம்மாண்டத்தை, ஒரு சின்ன புகைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார், பாருங்கள்.
பல்லவர்கள் எவ்வாறு பாறையைக் குடைந்து கோயில்கள் கட்டினர் ? அதற்கு அவர்கள் உபயோகித்த கருவிகள் என்ன ?. இன்னும் அந்த கருவிகள் இருக்கிறதா ?. பதில் தெரிய படித்துப் பாருங்கள்.
புதையல்னு சொன்னதும் முதல்ல வந்துட்டேன். ஒவ்வொன்றாய் படிக்கிறேன்...
ReplyDeleteஇன்று அறிமுகங்கள் அதிகம்... வந்துதான் பார்க்க வேண்டும்.
ReplyDeleteநண்பர் பின்னோக்கி,
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியில் ஒரு நாளைக்கு ஒரு சுவை - தொகுப்புக்கள் அபாரம். சாதாரணமாக வலைப்பூக்களில் சில பின்னூட்டங்களை தொடர்ந்து சென்றால் சித்தப்பு, மாம்ஸ், எதைப்பார்த்தாலும் சூப்பரப்பு, கலாய்ப்பு (இருக்க வேண்டியதுதான் ஆனால் அதுவே முழுமையாக எழுதுவதும், பின்னூட்டமிடுவதும் லோக்கல் மொழியிலேயென்றால் அலுப்புத்தட்டுகிறது) என்ற வலை இலக்கணங்களுக்கு (சிலர் நினைத்துக் கொண்டிருப்பது) மாறுபட்டு அனைவரும் படிக்க வேண்டிய புதையல்களாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி - வாழ்த்துக்கள் - சம்பத்-
தினமும் வித்தியாசம் .. வாழ்த்துக்கள்
ReplyDeleteஜெயமோகன் போன்றவர்களின் தளங்களுக்கு அறிமுகம் தேவை இல்லைதான்.எனினும் நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியில் உள்ள கட்டுரை அற்புதமான எல்லோரும் படிக்கவேண்டிய கட்டுரை.வரலாறு டாட் காம் மலாக்கா போன்றவர்களின் தளங்களும் அதிகம் பேரிடம் போகவேண்டிய தளங்களே.நன்று!
ReplyDeleteகாலையில் உள்ளே இணைய தொடர்பு படுத்தி எடுத்த காரணத்தால் முந்திக் கொள்ள முடியவில்லை. நீங்கள் இன்று அறிமுகப் படுத்திய தளங்கள் இன்னும் உள்ளே நுழைய முடிய நேரமில்லை. அதற்கு முன் சற்று நேரத்திற்கு முன் நண்பர் அழைத்துச் சொன்ன வார்த்தைகள்.
ReplyDeleteஇன்று வலைச்சரத்தைப் பாருங்கள். பத்துப் பேரை வைத்துக் கொண்டு ஆஹா ஓகோன்னும் புகழ்ந்து குப்பைகளை கோபுரத்தில் வைத்து அழகு பார்க்கும் பதிவுலகில் பின்னோக்கியின் ஆர்வம் வியப்புக்குரியது.
வேறென்ன வேண்டும் உங்கள் பணியை பாராட்ட.
தொடருங்கள்.
இணையப் புதையல்களை அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஸ்ரீ....
அற்புதமான புதையல்தான் ...
ReplyDeleteநன்றிகள்
ReplyDelete@கலாநேசன் - ஆர்வமுடன் வந்த உங்களை ஏமாற்றவில்லை என நினைக்கிறேன்
@ஸ்ரீராம் - பொறுமையாக படியுங்கள்.
@சம்பத் - தங்களின் வருகைக்கும் விருப்பத்திற்கும்.
@LK - தொடர் வாசிப்பிற்கு
@போகன் - ஜெயமோகன் எழுதிக் குவித்துள்ளவற்றில் ஒளிந்திருந்ததை ரசித்ததற்கு நன்றிகள்.
நன்றிகள்
ReplyDelete@ஜோதிஜி - இணையம் அடிக்கடி முரண்டு பிடிக்கிறதே. ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள்.
@ஸ்ரீ - புதையலைக் கண்டு மகிழ்ந்ததற்கு
@கே.ஆர்.பி. செந்தில் - தொடர்ந்து படியுங்கள்.
இணையம் அடிக்கடி முரண்டு பிடிக்கிறதே
ReplyDeleteகொமாரு உங்களுக்கு மட்டுமல்ல.
இங்கு தூக்கி ஓடச்சுடுலாம்ங்ற அளவுக்கு ஒரு வாரமாக நாதாரிங்க பாடு படுத்துறாங்க.
எப்ப கேட்டாலும் நாளைக்கு நாளைக்கு.
உண்மையிலேயே வித்தியாசமான தொகுப்பு. இப்படித்தான் இருக்கவேண்டும் அறிமுகங்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே இன்றைய பதிவின் வாயிலாக பல சிறந்த தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் அமைந்தது . பகிர்வுக்கு நன்றி . வைரம் பற்றிய சுட்டியில் ஒன்று வேலை செய்யவில்லை சற்று சரி பார்க்கவும் .புரிதலுக்கு நன்றி .
ReplyDeleteநன்றி
ReplyDelete@ராம்
@பனித்துளி சங்கர் - மீண்டும் பார்த்தேன். சரியாகவே இருக்கிறது. நீங்கள் பார்த்தபோது எதாவது ப்ளாக்கரில் பிரச்சினை இருந்திருக்கலாம். மீண்டும் சோதனை செய்து பாருங்கள். சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்.
அருமையான தகவல்கள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி